Daily Archives: பிப்ரவரி 14th, 2010

ஒரே டாலர்; ஒரு மில்லியன் டாலர்!

இயற்கை மட்டும் அதிசயங்களைப் படைத்தால் போதுமா? இயற்கையை வெல்லும் ஆற்றல் படைத்த மனிதன் சாதனை செய்ய வேண்டாமா? மனிதர்கள் செய்த சாதனை முயற்சிதான் இந்த பொற்காசு.

தங்கத்தால் செய்யப்பட்ட இது அதிசய நாணயமாக கருதப்படுகிறது. கனடா ஒரு சாதனை முயற்சியாக உருவாக்கி இருக்கும் இந்த பொற்காசு ஒரு மில்லியன் டாலர் (சுமார் 4.7 கோடி ரூபாய்) மதிப்புடையது. அம்மாடியோவ்…!

ஊதிய உயர்வு வேணுமா? ‘பாஸ்’ உடன் ‘டீ’ குடிங்க

ஊதிய உயர்வு வேண்டுமா… அப்படியானால், “பாஸ்’ உடன் டீ, காபி குடியுங்கள்; அவருக்கு விருப்பமான கோப்பையில் “டீ’ தந்தால், “இன்கிரீமென்ட்’ உடனே கிடைக்கும்.இது இங்கல்ல; பிரிட்டன் நாட்டில்.

பிரபல “கிளிப்பர்’ டீ கம்பெனி, சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. 1,000 பேரிடம் நடந்த இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:தங்கள் நிறுவனத் தலைவர் அல்லது பாஸுடன் தான் சேர்ந்து டீ அல்லது காபி அருந்துவதாக 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலர், தங்கள் பாஸுக்கு டீ பிடிக்குமா, காபி பிடிக்குமா என்பது தங்களுக்குத் தெரியும் என்கின்றனர்.பாதிக்கு மேற்பட்டோர், தங்கள் அலுவலகங்களுக்கு காபி அருந்துவதற்கான கோப்பையோடு வருவதாகத் தெரிவித்தனர். இவர்களில் ஆண்கள், தங்கள் கோப்பையை எடுத்துக் கொண்டு தனியாகத்தான் வருவர். ஆனால், பெண்கள் தங்கள் கோப்பை அடுத்தவர்களின் கோப்பையை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, விதவிதமான சுத்தமான கோப்பைகளை எடுத்து வருவர்.

தங்கள் கோப்பைகளில் குடித்தால் மட்டுமே சுவை இருப்பதாக 18 சதவீதம் பேர் கூறியுள்ளனர். பாரம்பரியமான கப் மற்றும் சாஸரை வெறும் 1.7 சதவீதம் பேர் மட்டுமே விரும்புகின்றனர்.எல்லாம் “பாஸ்’ மனது திருப்தியாக இருக்கவே இப்படி செய்கின்றனர். அவர் மனதில், தங்களை பற்றி நல்ல கருத்து ஏற்படவே விரும்புகின்றனர். இவ்வாறு அந்த ஆய் வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு டென்ஷன் வந்தால்??

1. குழந்தைகளுக்கு டென்ஷன் கோபம் வந்தால் தொட்டதற்கெல்லாம் நைய் நையின்னு அழுதுகொண்டு இருப்பார்கள்

2. குழந்தைகள் கையில் கிடைக்கும் பாத்திரம் எல்லாம் தூக்கி நம்ம மேல அடிப்பார்கள்.

3. குழந்தைகளுக்கு கண்ணுக்கு எட்டிய பொருளை எடுத்து கொட்டி விட முடிய வில்லை என்றால் இன்னும் டென்ஷன் ஆகும்

4.முதல் முதல் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு போகவே பிடிக்காது, அந்த டென்ஷனை எப்படி காண்பிப்பது என்று தெரியாது உடனே வாந்தி வருது, வயிறு வலிக்குது என்று சொல்வார்கள்

5. கொஞ்சம் பெரிய குழந்தைகள் ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு கோபம் வந்தால் ஒரே எதற்கெடுத்தாலும் சத்தம் போடுவார்கள்

6. சில பிள்ளைகள் எப்ப பார்த்தாலும் கண் சிமிட்டி கொண்டே இருப்பார்கள் அப்ப அவர்களுக்கு டென்ஷான இருக்கு என்று தான் அர்த்தம் இது டாக்டர் சொன்னது.

7. அடுத்து அடுத்து ஒரு வயது வித்தியாசம் உள்ள இரண்டு பிள்ளைகள் உள்ள வீட்டில் விருந்தாளிகள் வந்தால் என்ன  கேள்வி கேட்டாலும், சின்னவன்னுக்கு பதில் பெரிய பிள்ளையே பதில் சொல்லி கொண்டு இருக்கும், அப்படி இருக்கும் போது சின்னதுக்கு ரொம்ப கோபம் வரும் அண்ணா மேல் ஆனா வெளியில் காண்பிக்க மாட்டார்கள்.

அப்போது சின்ன பையன் எப்பா பார்த்தாலும் கண் சிமிட்டி கொண்டே இருப்பான், அதுவும் டென்ஷன் தான். அதற்கு சின்னவனை பதில் சொல்லவைத்து பேச விடனும், அப்படி செய்தால் தான் அந்த டென்ஷன் போகும்.

8. இரண்டு முன்று குழந்தைகள் உள்ள் வீட்டில் கத்தி, கத்திரிக்கோல், மற்றும் கூர்மையான பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து

வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.

அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.

இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.

ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது.

உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.

மேனியை அழகாக்கும் மேற்கத்திய உடைகள்

உணவு, தொழில்நுட்பங்கள், பழக்க வழக்கங்கள் மட்டுமின்றி, உடையிலும் மேற் கத்தியக் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. இந்தியாவிலுள்ள கோவா, பாண்டிச் சேரி போன்ற கடற்கரை நகரங்களில் மேற்கத்தியக் கலாச்சாரம் விரவிக் காணப்படுகிறது. காரணம், அங்கு ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுலா பயணிகளாக வந்து தங்கு கின்றனர். அவர்களை பின்பற்றி அங்கு வாழும் மக்களும், அவர்களை போன்றே உடை அணிகின்றனர். சுற்றுலா பயணிகள், அங்கு வாழும் மக்களின் உடைகளை விரும்பி அணிகின்றனர். இதனால், இருநாட்டுக் கலாச்சாரங்களும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரப்பபடுகின்றன.

மேற்கண்ட நகரங்கள் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இடம் என்பதாலும், அந்த நகரங்களில் மேற்கத்தியக் கலாச்சாரம் காணப்படுகிறது. அவர்கள் வீட்டிலிருந்தாலும் அல்லது வெளியிடங்களுக்குச் சென்றாலும் மேற்கத்திய பாணியிலான உடைகளையே பெரும்பாலும் விரும்பி அணிகின்றனர்.

பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு பொருத்தமாக இருக்கும் உடைகளையே தேர்வு செய்து அணிகின்றனர். அதேபோல் தாங்கள் இந்த சமுகத்தில் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதைம் ஆராய்ந்து பார்த்து, அதற்குத் தகுந்தாற் போன்ற உடைகளை அணிகின்றனர். கல்லூரிகளை பொறுத்தவரை, சீருடை அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே, கல்லூரிகளிலும் மேற்கத்திய உடைகளின் தாக்கம் அதிகரித் துள்ளது. ஜீன்ஸ் பேண்டுடன் டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட், குர்தா, சட்டை போன்ற உடைகளை அணிவதையே பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், சென் னையை பொறுத்தவரை மேற்கத்திய உடைகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

சட்டை


ஜீன்ஸ் பேண்ட் அல்லது சாதாரண பேண்ட், முழங்கால் வரையுள்ள பர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றோடு சட்டைகளை பெண்கள் அணிகின்றனர். ஸ்லீவ்லெஸ் சட்டைகளும் பெண்களால் விரும்பி அணியபடுகின்றன. விதவிதமான வண்ணங்களாலான சட்டை கள் கிடைத்தாலும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்கள் சேர்க்கபட்டிருக்கும் சட்டைகள் அதிகமாக விரும்பபடுகின்றன. இந்த இரண்டு வண்ணங்களும் பெண்களுக்கு தனி ஸ்டைலைத் தருகின்றன.

ஷிபான், காட்டன், சில்க், பாலியஸ்டர், கம்பளி போன்ற துணிகளில் இவை தயாரிக்க படுகின்றன. சட்டைகளுடன் ஸ்டோல், டை, ஸ்கார் போன்றவற்றைம் பெண்கள் அணிகின்றனர். பெண்களுக்கென்று தனியாக சட்டைகள் தயாரிக்கபட்டாலும், சில சமயங்களில் ஆண்களுக்கான சட்டைகளும் பெண்களால் விரும்பி அணியபடுகின்றன.

டிரஸ் சர்ட்


இவை அளவில் சற்று பெரியதாக இருக்கும். பெரும்பாலும் சுடிதார் பேண்ட் அல்லது ஜீன்ஸ் பேண்டுடன் அணியபடும். டைட்டாக இல்லாமல் சற்றுத் தளர்வாக இருக்கும். சில சட்டைகளில் எம்ராய்டரி, கிளிட்டர் போன்ற வேலைபாடுகள் காணப்படும். ஆனால் அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய சட்டைகளில் இதுபோன்ற வேலைபாடுகள் நன்றாக இருக்காது. பொதுவாக ஊதா நிற ஜீன்ஸ் பேண்டுக்கு வெள்ளை நிற சட்டை பொருத்தமாக இருக்கும்.

ட்ரவுசர்


முதன்முதலில் 16-ம் நுற்றாண்டில் தான் ட்ரவுசர் பயன்பாட்டுக்கு வந்ததாகச் சொல்ல படுகிறது. முதலில் ஆண்களே அணியக்கூடிய உடையாகக் கருதபட்ட ட்ரவுசர், நாளடைவில் பெண்களாலும் அணியபட்டது. ஸ்லாக்ஸ், பேண்ட் என்று பல பெயர்களில் இவை அழைக்கபட்டன. ஸ்லிம் பிட், பூட் கட், ஸ்ட்ரெய்ட் பிட், ஸ்கின் டைட் என பலவிதமான ட்ரவுசர்கள் பயன்பாட்டில் உள்ளன. உயரமானவர்களுக்கு பூட் கட்டும், உயரம் குறைந்தவர்களுக்கு ஸ்ட்ரெய்ட் பிட்டும் பொருத்தமாக இருக்கும்.

ட்ரவுசர் வாங்கும்போது பெரும்பாலும் டைட்டாக இல்லாமல், சற்றுத் தளர்வாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் தங்களின் உயரம், எடை ஆகியவற்றிற்கு பொருத்தமாக இருக்கும் ட்ரவுசர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். சுடிதார் ட்ரவுசர்கள் கம்மீசுடன் சேர்த்து அணியபடுகின்றன. லெதர், வெல்வெட், காட்டன், சில்க், காட்டன் சில்க் போன்ற துணிகளில் இவை தயாரிக்கபடுகின்றன.

சூட்


ஆண்களால் அதிகமாக அணியபடும் சூட், 19-ம் நுற்றாண்டிலிருந்து தான் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தபட்டது. அதற்கு முன்னர் 16-ம் நுற்றாண்டில், இங்கி லாந்தைச் சேர்ந்த அரச குடும்பங்களில் மட்டுமே அணியபட்டது. பின்னர் அங்குள்ள நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் ஜாக்கெட், பெரிய கோட், டை ஆகியவற்றை அணிந்தனர். தற்போது அனைவராலும் அணியபடும் உடைகளில் ஒன்றாக சூட் மாறிவிட்டது.

`சூட்’டை பொறுத்தவரை ஊதா, கறுப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே எடுப்பாக இருக்கும். தற்போது வேலைக்கான நேர்முகத்தேர்வு, திருமணம், அலுவலகம், வேலை தொடர்பான பார்ட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு `சூட்’கள் அணியபடுகின்றன. டார்க் கலர் சூட் அணியும்போது லைட் கலர் சட்டை அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

ஸ்கர்ட்


சட்டை அல்லது டி-சர்ட்டுக்கு பொருத்தமாக இவற்றை அணியலாம். அதிக உயரம் உடையவர்கள் பெரிய ஸ்கர்ட் அணிந்தால் நன்றாக இருக்கும். பிரிண்டட், பிளெய்ன் என இருவிதமான ஸ்கர்ட்டுகள் தயாரிக்கபடுகின்றன. `ஏ’ லைன் ஸ்கர்ட் அனைவருக்கும் பொருந்தி போகக்கூடிய ஒன்றாகும். இதனுடன் சிறிய ஜாக்கெட் மற்றும் ஹை-ஹீல்சை அணிந்து கொண்டால் பொருத்தமாக இருக்கும். ஷார்ட் ஸ்கர்ட்டுகள் பெருமளவில் அனைவராலும் பயன்படுத்தபடுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் சீருடையாக ஷார்ட் ஸ்கர்ட் பயன்படுத்தபடுவது குறிப்பிடத்தக்கது. கோடைகாலத்தில் அணிந்து கொள்ள இதுபோன்ற ஸ்கர்ட்டுகள் ஏற்றதாக இருக்கும்.

அணிவதற்கும், துவைப்பதற்கும் எளிதாக உள்ள டெனிம் ஸ்கர்ட்டுகள் பரவலாக பயன்படுத்தபடுகின்றன. `சலாம் நமஸ்தே’ என்ற இந்தி படத்தில் ப்ரீத்தி ஜிந்தா டெனிம் ஸ்கர்ட் அணிந்து நடித்திருப்பார். அந்தபடம் வெளியான பின், இளம்பெண்கள் மிகவும் விரும்பத்தக்க உடைகளுள் ஒன்றாக `டெனிம் ஸ்கர்ட்’ மாறிவிட்டது. குளிர்காலங்களில் இந்த ஸ்கர்ட்டுடன் ஸ்வெட்டர் அணிந்து கொள்வதும் உண்டு. ஸ்கர்ட் வாங்கும்போது உருவத்திற்கு ஏற்றதாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஓவர் கோட்


சட்டை, டி-சர்ட் அல்லது சூட் ஆகியவற்றிற்கு மேலே கோட் அணியபடுகிறது. முதன்முதலில் ராணுவ வீரர்களே `கோட்’டை பயன்படுத்தி வந்தனர். தற்போது கோட் அணிந்து கொள்வது பேஷனாகி விட்டது. வடஇந்தியாவில் குளிர் அதிகமாக இருபதால், அங்கு `கோட்’டின் பயன்பாடு அதிகமாக உள்ளது. தென்இந்தியாவை பொறுத்தவரை குளிர் காலங்களில் மட்டுமே அதிகமாக கோட் அணியும் பழக்கம் உள்ளது.

பெரும்பாலும் கம்பளியால் தயாரிக்கபட்ட `கோட்’டே அனைவராலும் பயன்படுத்த படுகிறது. சில சமயங்களில் வேறு துணிகளிலும் கோட் தயாரிக்கபடுகிறது. ஸ்டைல், கிளாசிக், நார்மல் என பலவிதங்களில் கோட்டுகள் கிடைக்கின்றன. தற்போது இந்திய உடைகளில் ஒன்றாகவே கோட் கருதபடுகிறது. கோட் வாங்கும்போது, அணிவதற்கும், துவைப்பதற்கும் எளிதாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

டெனிம்


ஜீன்ஸின் மற்றொரு பெயர் தான் `டெனிம்’. ஆரம்பத்தில் ஆண்களுக்கு மட்டுமே விதவிதமாக வடிவமைக்கபட்ட டெனிம்கள், தற்போது பெண்களுக்கும் விதவிதமான வகைகளில் கிடைக்கின்றன. பிரிண்டட், எம்ராய்டரி செய்யபட்ட டெனிம்கள், பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன. உடைகள் மட்டுமின்றி கைபை, தொப்பி, பெல்ட் போன்றவைம் டெனிம் துணிகளில் தயாராகின்றன. அனைத்து காலச்சூழ்நிலைக்கும் ஏற்ற உடைகளில் இதுவும் ஒன்றாகும்.

டி-சர்ட்


இளவயதினர் மட்டுமின்றி, வயதானவர்களைக் கூட அழகாகக் காட்டக்கூடிய உடை டி-சர்ட். பெண்களுக்கென லாங் ஸ்லீவ், ஷார்ட் ஸ்லீவ், ஸ்லீவ்லெஸ் என வித்தியாசமான டி-சர்ட்டுகள் கிடைக்கின்றன. டி-சர்ட்டுடன் ஸ்டோல், ஸ்கார் போன்றவற்றைம் சில பெண்கள் அணிந்து கொள்கின்றனர். பிரிண்டட், எம்ராய்டரி, பிளெய்ன் என நாம் விரும்பும் வகைகளில் டி-சர்ட்டுகள் தயாரிக்கபடுகின்றன.

சோலார் செல்லாக வளரும் புகையிலை!

புகையிலை ஒரு போதைப் பொருள். பலரின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் இதை, முற்றிலும் பயன்தரும் வகையில் மாற்றிவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

ஆமாம். புகையிலைச் செடி வளர்ந்ததும் சோலார் செல்லாக மாறிவிடுகிறது என்றால் ஆச்சரியம்தானே! இந்த புதிய விஞ்ஞான முறையால் அது சாத்தியமாகி இருக்கிறது.

பொதுவாக தாவரங்கள் சூரிய ஒளியை நன்றாக கிரகிக்கக் கூடியவை. இதன் முலமே ஒளிச் சேர்க்கை செய்து தங்களுக்கான உணவை தயாரிக்கின்றன. இப்படி திறந்தவெளி சோலார் கருவிகளாக விளங்கும் தாவரங்களை பயன்படுத்திக் கொள்ள விஞ்ஞானிகள் திட்டம் தீட்டினார்கள். அதன் விளைவுதான் இந்தப் புதிய முறை.

இதற்காக சில வைரஸ்களை, புகையிலைச் செடியில் செலுத்தி ஆய்வு செய்தனர். இதனால் அதில் ஏற்பட்ட மாற்றங்கள், செடியில் படும் சூரிய ஒளியை ஆற்றல் மிக்க எலக்ட்ரான் களாக மாற்றுகிறது.

பிறகு செடியின் இலைகளை பிழிந்து சாறு எடுக்கிறார்கள். இந்தச் சாற்றை கண்ணாடி, பிளாஸ்டிக் போன்றவற்றில் `ஸ்பிரே’ அடித்து பூசிவிட்டால் போதும், சோலார் செல்கள்போல செயல்படத் தொடங்கிவிடும். பிரான்ஸ் ஆய்வாளர்கள் இதை உருவாக்கி உள்ளனர்.

எளிய வழியில் சோலார் கருவி ரெடி. புகையிலை புகையா இலையாக மாறினால் சரி!

காதலர் தின சிறப்பு இடுகை

அன்று முகூர்த்தநாள்.

அந்த சப்ரிஜிஸ்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள், சான்றிதழ் வாங்க வந்தவர்கள்… என்று பலரும் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று கொடிருந்தனர்.

திடீரென்று அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு 8 பேர் வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களின் தோற்றத்தையும், அணிந்திருக்கும் ஆடையையும் பார்த்தால் கல்லூரியில் படிப்பவர்கள் போல் தெரிந்தது.

அவர்களுடன் வந்த பெண்ணும் மாணவிதான் என்றாலும், கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதை துப்பட்டாவால் மறைக்கும் முயற்சியில் அவள் பலதடவை தோற்றுபோய் இருப்பது, அந்த மஞ்சள் கயிறு கிடந்த கோலத்திலேயே தெரிந்தது. அவளது கையில் இரு மாலைகளும் இருந்தன.

அப்போதுதான், அந்த மாணவர்களில் ஒரு ஜோடி, வீட்டை விட்டு ஓடிவந்து, கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அந்த காதல் திருமணத்தை பதிவு செய்ய இப்போது இங்கே வந்திருப்பதும் தெரிய வந்தது.

அந்த மாணவியைச் சுற்றி 7 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருடனும் அந்த மாணவி பேசிக் கொண்டிருந்தாள்.

இதனால், யார் அவளது காதலன்… சாரி கணவன் என்பது தெரியவில்லை. சப்ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், சிறிதுநேரத்தில் வெளியே வந்தனர். அப்போது, மாணவியின் கையில் ஒரு மாலையும், இன்னொரு மாணவன் கையில் இன்னொரு மாலையும் இருந்தன.

`ஓ… இவர்கள் இருவரும்தான் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்’ என்று, அங்கே வந்தவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த காதல் ஜோடியை க்ளோஸ்-அப் ஆக பார்த்தபோது பகீர் என்றது. காதல் திருமணம் செய்து கொண்ட மாணவன் உள்ளிட்ட அத்தனை மாணவர்களுக்கும் மீசை அப்போது தான் அரும்பி இருந்தது. அந்த மாணவியின் முகத்தில் பயமறியா குழந்தைத்தனம் நன்றா கவே தெரிந்தது. எப்படியும் அவர்கள் கல்லூரி யில் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு தான் படிப்பார்கள் என்பதும் உறுதியாக தெரிந்தது.

சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், அந்த மாணவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற மும்முர ஆலோசனையில் இறங்கினர். மாணவியோ அப்பாவியாய் அவர்களுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் ஏதோ முடிவெடுத்தவர்கள், அங்கிருந்து புறபட ஆயத்தமானார்கள். திருமணம் செய்து கொண்ட மாணவி, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை அவசரம் அவசரமாக சுடிதாருக்குள் மறைத்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அவர்கள் காலி செய்திருந்தனர்.

அடுத்ததாக அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஆனதா? மீண்டும் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது, தாலியை மறைத்துக்கொண்டு, திருமணத்தை அந்த மாணவி மறைக்கிறாளா?

– இதெல்லாம், அந்த காதல் ஜோடிக்கும், அவர்களது திருமணத்தை திட்டம்போட்டு அரங்கேற்றம் செய்து வைத்த மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம்.

இப்போதெல்லாம் காதல் என்பது இன்றைய இளசுகள் மத்தியில் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

`காதலிக்க பெண் வேண்டுமா? பீச் பக்கமோ, பார்க் பக்கமோ, பஸ் ஸ்டாட் பக்கமோ போ’ என்று நண்பர்கள் அட்வைஸ் கூறும் அளவுக்கு காதல் காட்சிகள் மலிவாகி வருகின்றன.

சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், கல்லூரியில் படிப்பவர்களில் பெண்கள் பாய் பிரண்டோ, ஆண்கள் கேர்ள் பிரண்டோ கண்டிபாக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்பட்டு வருகிறது. சினிமாவில் நடிகர்-நடிகைக்குள் `கெமிஸ்ட்ரி’ ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்கிறார்களே, அதுபோன்றதுதான் இதுவும்!

இப்படி பலருக்குள் `காதல் கெமிஸ்ட்ரி’ ஒர்க்அவுட் ஆவதால்தான், ஆரம்பத்தில் கூறிய காதல் ஜோடிகளின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மைனரில் இருந்து மேஜருக்கு புரமோஷன் ஆகிவிட்ட தைரியத்தில் இதுபோன்ற முடிவுகளை இன்றைய இளசுகள் அவசரபட்டு எடுக்கிறார்கள். கூடவே, திருமணம் செய்துகொள்ளும்வரை வழிகாட்டவும், ஆலோசனை சொல்லவும் நபர்கள் இருப்பதால், தாங்கள் எடுக்கும் முடிவு தவறானது என்பதைக்கூட அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.

காதலித்தாயிற்று… ஓடிபோய் திருமணமும் செய்தாயிற்று… அதன்பிறகு படிப்பு என்ன ஆகும்? குடும்ப சூழ்நிலைகள் எப்படி தடம்புரண்டு போகும்? தங்களது எதிர்காலம் எப்படி ஆகும்? அவசரபட்டு கரம்பிடித்த இளம் கணவனால் தனக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது பற்றி யோசிக்கவும், அந்த ஓடிபோகும் அவசரகதியில் அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.

ஒருவேளை அப்படி அவர்கள் யோசித்து இருந்தால், ஓடிபோகும் திட்டத்தை ஒத்தி வைத்திருக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கும்.

காதல் என்கிற பெயரில் நடைபெறும் இந்த கலாச்சார – குடும்ப சீரழிவை தடுக்க என்ன செய்யலாம்?

முதலில், இருபது வயதுக்குள் காதலிக்கும் (?!), காதலனுடன் செல்ல தயார் நிலையில் இருக்கும் இளம்பெண்களிடம் சில கேள்விகள் : நீங்கள், உங்களவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ஆண், கடைசி வரையில் உங்களை கண் கலங்காமல் காப்பாற்றுவான் என்ற உறுதிமொழியை கொடுக்க முடியுமா? பெற்றோர் எதிர்பார்கள் என்பதற்காக, இபோது நீங்கள் ஓடத் தயாராக இருக்கும் ஆணுக்காக, உங்கள் குடும்பம் எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று சாபமிட தயாராக இருக்கிறீர்களா? காதலனுடன் தாலி கட்டி குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டால், பெற்றோர் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்வார்கள் என்று நண்பனோ, நண்பியோ சொன்னதை எதை வைத்து ஏற்றுக் கொண்டீர்கள்? படிக்கிற வயதில் காதல் தேவை தானா? அது, படிப்பை பாதிக்காதா? என்று எப்போதா வது யோசித்தது உண்டா? படிக்கின்ற வயதில் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டு, அதன்பின் எழும் சமுதாய விமர்சனங்களையும் மீறி, உங்களால் படித்து, சிறந்த தேர்ச்சி பெற்று சாதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா? ஒருவேளை, காதல் திருமணத்திற்கு பின்னரும் நீங்கள் படிப்பை தொடர விரும்பி னால், அதற்கு உதவி செய்பவர் உங்கள் காதல் கணவனா? அல்லது நண்பர்களா? வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டால், உங்கள் வீட்டில் உங்களுக்கு அடுத்ததாகவோ அல்லது முன்போ திருமணத்திற்கு காத்திருக்கும் சகோதரிகள் மீதான சமுதாய பார்வை எப்படி இருக்கும் என்பதை ஒரு கணமாவது யோசித்தது உண்டா?

– இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் `ஆம்` என்று பதில் சொன்னால், ஓடிபோக வேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விடுவீர்கள்.

இனி, காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி, தனிக்குடித்தனம் நடத்த தயாராக இருக்கும் காதலர்களிடம் சில கேள்விகள்…நீங்கள் விரும்பிய பெண்ணை எதற்காக வாழ்க்கைத் துணையாக்க விரும்பினீர்கள்? அவள் அழகை பார்த்தா? அறிவை பார்த்தா? அல்லது குடும்ப பொருளாதார நிலையை பார்த்தா? கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே, கணவன் என்கிற அந்தஸ்தை பெறுவது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சினைக்குரியதாக இருக்காதா என்று யோசித்தது உண்டா? எந்த தைரியத்தில் 20 வயதைக்கூட நெருங்காத பெண்ணை தொட்டு தாலிகட்ட தூக்கி சாரி… அழைத்துச் செல்கிறீர்கள்? இருபது வயதுக்குள் திருமணம் செய்து குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய சூழலில் உங்கள் படிப்பைத் தொடர யார் உதவுவார் என்று ஒருமுறையாவது யோசித்தது உண்டா? உங்களுக்கும் ஒரு தங்கை இருந்து, அவளும் ஒருவனோடு ஓடிபோக தயாராக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? முன் பின் தெரியாத ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடபோய், உங்கள் வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் ஏற்படும் பகை உணர்ச்சிகளை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா? காதலியாக இருக்கும் பெண்ணை, உங்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவும் நபர்கள், உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை போக்க முன் வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

-நீங்களும் இப்படியெல்லாம், ஒருமுறையாவது யோசித்து பார்த்தால் நிச்சயம் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவளை இழுத்துக்கொண்டு ஓட மாட்டீர்கள்.

கல்லூரியில் படிக்கும்போது வரும் காதல் வெறும் இனக் கவர்ச்சிதான். அங்கே காமமும், அவள் எப்படியாவது நமக்கு வேண்டும் என்ற வெறியும்தான் அதிகமாக இருக்குமே தவிர, உண்மையான அன்பு இருக்கவே இருக்காது.

அதனால், இருபதுக்குள் காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டவே வேண்டாமே!

நன்றி-தினதந்தி

அதிகமாக டி.வி.பார்த்தால்…!

தொலைக்காட்சிப் பெட்டி. உலக நடப்புகளை நமது இல்லத்துக்கே கொண்டு வந்த பெருமைக்குரிய சாதனம்.

ஆனால் அது சமீப காலமாக இருந்த இடத்திற்கே மரணத்தைக் கொண்டு வரும் சாதனமாகி இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது.

அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? ஆனால் உண்மைதான். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள இதயம் மற்றும் நீரிழிவு மையம் இது தொடர்பான ஆய்வை நடத்தியது. 11 ஆயிரம் டி.வி.

ரசிகர்களை சுமார் 6 ஆண்டு காலம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது.

ஆய்வு புள்ளி விவரப்படி 18 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். 9 சதவீதம் பேர் புற்றுநோயாலும், 11 சதவீதம் பேர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

ஆக மொத்தம் 38 சதவீதம் பேர் விரைவில் மரணத்தை தழுவினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் சுமார் 4 மணி நேரம் டி.வி. பார்ப்பவர்கள்.

ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் டன்ஸ்டன் கூறியதாவது:- `தொடர்களை விடாமல் பார்ப்பதன் மூலம் (குறிப்பாக பெண்கள்) நிறையபேர் ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரங்களை செலவிடுகிறார்கள்.

மனிதனின் 97 சதவீத நேரம் (வேலை உட்பட) இருந்த இடத்திலேயே கழிகின்றன. நடைபயிற்சி செய்யும்போது மட்டுமே நிற்கிறோம். இதனால் இதயவியாதிகள், குளூக்கோஸ் வளர்சிதை மாற்றக் கோளாறு, நீரிழிவு, பக்கவாதம் போன்ற தீவிரமான வியாதிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன.

`சிட்டிங் கில்ஸ்’ எனப்படும் இந்த பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட நீரிழிவு பற்றிய ஆய்வு முடிவும் இதே கருத்தையே வலியுறுத்துகிறது.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

வேறென்ன சொல்ல? உஷாராக இருங்கள் டி.வி. ரசிகர்களே!