அதிகமாக டி.வி.பார்த்தால்…!

தொலைக்காட்சிப் பெட்டி. உலக நடப்புகளை நமது இல்லத்துக்கே கொண்டு வந்த பெருமைக்குரிய சாதனம்.

ஆனால் அது சமீப காலமாக இருந்த இடத்திற்கே மரணத்தைக் கொண்டு வரும் சாதனமாகி இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது.

அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? ஆனால் உண்மைதான். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள இதயம் மற்றும் நீரிழிவு மையம் இது தொடர்பான ஆய்வை நடத்தியது. 11 ஆயிரம் டி.வி.

ரசிகர்களை சுமார் 6 ஆண்டு காலம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது.

ஆய்வு புள்ளி விவரப்படி 18 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். 9 சதவீதம் பேர் புற்றுநோயாலும், 11 சதவீதம் பேர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

ஆக மொத்தம் 38 சதவீதம் பேர் விரைவில் மரணத்தை தழுவினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் சுமார் 4 மணி நேரம் டி.வி. பார்ப்பவர்கள்.

ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் டன்ஸ்டன் கூறியதாவது:- `தொடர்களை விடாமல் பார்ப்பதன் மூலம் (குறிப்பாக பெண்கள்) நிறையபேர் ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரங்களை செலவிடுகிறார்கள்.

மனிதனின் 97 சதவீத நேரம் (வேலை உட்பட) இருந்த இடத்திலேயே கழிகின்றன. நடைபயிற்சி செய்யும்போது மட்டுமே நிற்கிறோம். இதனால் இதயவியாதிகள், குளூக்கோஸ் வளர்சிதை மாற்றக் கோளாறு, நீரிழிவு, பக்கவாதம் போன்ற தீவிரமான வியாதிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன.

`சிட்டிங் கில்ஸ்’ எனப்படும் இந்த பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட நீரிழிவு பற்றிய ஆய்வு முடிவும் இதே கருத்தையே வலியுறுத்துகிறது.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

வேறென்ன சொல்ல? உஷாராக இருங்கள் டி.வி. ரசிகர்களே!

%d bloggers like this: