அதிசய கிளிப் பூ!

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.

ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை. அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ. வடிவத்தில் மட்டும் பூப்போல இல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வேறுவேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது. கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

<span>%d</span> bloggers like this: