காகித `மேப்’பை பெரிதாக்கி பார்க்கலாம்!

வரைபடம் (மேப்) மாணவர்கள், வழிப்பயணம் மேற்கொள்பவர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் பயன்படும். இவை கையடக்கமாக இருந்தால் வசதியாக இருக்கும். ஆனால் அவ்வளவு சிறிதாக இருக்கும்போது நமக்கு தேவையான பகுதியை பெரிதாக்கிப் பார்க்க முடியாது. கணினிகளில் மட்டுமே பெரிதாக்கிப் (ஜூம்) பார்க்கும் வசதி இருக்கிறது.

தற்போது சாதாரண காகிதத்தில் இருக்கும் வரைபடத்தையும் பெரிதாக்கிப் பார்க்கும் வகையில் இங்கிலாந்தில் புதுமையான மேப் வடிவமைத்திருக்கிறார்கள்.

அதாவது இந்த காகிதமானது ஏற்கனவே மடித்து வைக்கப் பட்டிருக்கும். அதில் பகுதிபகுதியாக விவரங்கள் அச்சிடப்படும். நாம், மடிப்பை விரிக்கும்வோது அந்தப் பகுதியை மட்டும் பெரிதாகப் பார்க்க முடியும்.

சாதாரண காகிதக் கலைப்பொருள் தயாரிப்பு முறைதாங்க. கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு புதுமையா வடிவமைச்சிருக்காங்க!.

<span>%d</span> bloggers like this: