Daily Archives: பிப்ரவரி 17th, 2010

எம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை

வரும் ஜூன் மாதம் வெளியிடப்பட இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பினைக் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது. உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இதுவரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆபீஸ் 2010 – 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)
ஆபீஸ் 2010 –64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.
ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 ஏத் ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும்.
ஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும். ஆனால் பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலா னவர்கள் ஒவ்வொரு முறை ஆபீஸ் தொகுப்பு வெளியாகும் போதும், புதிய திறன் கொண்ட ஹார்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? என்று கேட்கின்றனர். இதை மனதில் வைத்து, கூடுமானவரை ஆபீஸ் 2007 இயங்கிய அதே ஹார்ட்வேர் தேவைகளுடன், ஆபீஸ் 2010 தொகுப்பும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

சுவையான `கேக்’

‘ மனிதர்கள் அவ்வப்போது சில பிரம்மாண்டங்களை செய்வார்கள். அமெரிக்காவில் மெக்சிகோ நகரில் சமீபத்தில் நடந்த ஒரு பாரம்பரிய பண்டிகையில் பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவில் `ரோஸ்கா டி ரேயஸ்’ என்ற தித்திப்பான கேக் தயாரித்து மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு ரெஸ்டாரன்ட் அமைப்பாளர்களும் பங்கேற்று உதவுவார்கள்.

இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கேக் உலக சாதனையாக அமைந்துவிட்டது. இது 10 மெட்ரிக் டன் எடை கொண்டது. இதை தயாரிக்க 6 கோடி ரூபாய் செலவானது.

பலர் தாங்களாக ஸ்வீட் தயாரித்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்காக தயாரிக்கப்பட்டதுதான் இந்த ரோஸ்கா என்று இதன் தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டைவிட ருசியாக இருந்ததாக கேக்கை ருசி பார்த்தவர் கூறினார். பிரம்மாண்ட ருசியோ!

அதிசய `கல் கார்

‘ இது ஒரு அதிசய கார். முழுக்க முழுக்க கல்லால் உருவாக்கப்பட்டது. பந்தய கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் எப் 1 மெக்லாரன்-மெர்சிடிஸ். இது வெறும் பார்வைக்காக மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல. மெதுவான வேகத்தில் இயக்க முடியும்.

வட அல்பேனியாவைச் சேர்ந்த ஆல்பிரட் என்ற சிற்பிதான் இதை உருவாக்கி உள்ளார். இந்த கார் முன்று வகையான கற்களால் தயாரிக்கப்பட்டது. எடை 6 டன். இதை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் மொய்க்கிறது.

கற்காலத்துக்குப் போக முடியாவிட்டாலும், கற்காரில் ஒரு ரவுண்டு வரலாம் வாறீங்களா!

எதைத்தின்னா பித்தம் தெளியும் நிலை கூடாது

* “நீங்க 8 மணி நேரம் தூங்கறதே இல்லையா…அந்த “டிவி’ பேட்டில சொன்னாரே கேட்கலையா, முதல்ல அதை செய்யுங்க!’
* “நான் அந்த பாரின் மேகசின்லே படிச்சேன்; சூப்பரா போட்டிருக்காங்க, அதை பாலோ பண்ணா ஒபிசிட்டி வரவே வராதாம்!’
* “காய்கறி, பழங்களை தான் சாப்பிடறேன்; அப்படியும் குண்டு கரைய மாட்டேங்குதே; என்னத்த செய்ய…’
* “காலைல எழுந்து ஒரு மணி நேரம் நடக்கிறேன்; போதாக்குறைக்கு அருகம் புல் ஜூஸ் குடிக்கிறேன்; ஆனா தொப்பை கரைய மாட்டேங்குதே…!’
இப்படி எல்லாம் பேசுவதும், புலம்புவதும் இப்போதெல்லாம் வாடிக்கை தான். அதற்கேற்ப, ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்களின் அதிரடி ஆய்வு முடிவுகள், நூற்றுக்கணக்கான வெப்சைட் தகவல்கள், “டிவி’ பேட்டிகள் , பத்திரிகை தகவல்கள்.
நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைப் பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடைபிடிக்கும் விஷயங்களை நாம் கடைபிடித்தால் எக்குத்தப்பாக தான் இருக்கும்.
அதுபோல, யார் சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றி, உணவில், பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. பாட்டி வைத்தியத்தை இப்போது பலரும் வாய்க்கு வந்தபடி சொல்லி மக்களை குழப்பியும் வருகின்றனர் என்பதும் வேதனையான விஷயம்.
எது முழு ஆரோக்கியம்
எது முழு ஆரோக்கியம்? தினமும் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதா? அதிக காய்கறி , பழங்களை சேர்த்துக் கொள்வதா? 8 மணி நேரம் தூங்குவதா? ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதா?
“ஆம், ஆனால் இல்லை’ என்கிறார் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர் சூசன்லவ்; “எல்லாம் சரி தான்; ஆனால், முழு ஆரோக்கியம் என்று ஆளாளுக்கு ஏதாவது செய்வதும், கடைபிடிப்பதும் தான் தவறாக இருக்கிறது. ஒவ்வொருவரும் முழு ஆரோக்கியத்துடன் தான் இருக்கின்றனர்; அவர்கள் உணவு, பழக்க வழக்கத்தில் தடம் மாறுவதை திருத்திக்கொண்டால் போதும்; மற்றபடி, அதிகபட்ச மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வாழ்கின்றனர். அதனால், ஆபீஸ் வேலை போல, உடற்பயிற்சி செய்வதும், காய்கறி, பழங்களை நேரம் தவறாமல் சாப்பிடுவதும் மட்டும் ஆரோக்கியத்தை தராது’ என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஆறில் மட்டும் உஷார்
தூக்கம், மன அழுத்தம், தவிர்ப்பு, சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவு ஆகிய ஆறு மட்டும் சேர்ந்தது தான் முழு ஆரோக்கியமான வாழ்க்கை என்கிறார், அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் அலிஸ் டோமர்.
“இந்த ஆறு விஷயங்களை அதிகபட்சமாக கடைபிடிக்க முயற்சிக்க வேண்டாம்; குறைந்த அளவிலும் பின்பற்ற வேண்டாம்; ஆனால், கூடாமல், குறையாமல் சீரான முறையில் கடைபிடித்தாலே போதும்; ஒருவரின் வாழ்க்கை சூப்பர்’ தான் என்பது இவரின் கருத்து.
இழுக்குதே உறக்கம்
உதாரணமாக, தூக்கத்தை எடுத்துக்கொண்டால், 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதையே அமெரிக்க நிபுணர்கள் இன்னும் ஏற்கவில்லை. “ஒருவர் 5 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலோ, 7 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலோ தான் சிக்கல்; ஒவ்வொருவரின் உறக்க முறையும் வித்தியாசமானது; ஆனால், போதுமான அளவுக்கு தூக்கம் இருந்தாலே போதும்; வலுக்கட்டாயமாக திணிக்கவோ, உறக்கத்தை குறைக்கவோ கூடாது’ என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.
பாத்திரம் கழுவுங்க
நீங்க வீட்டை சுத்தம் செய்ய மனைவிக்கு உதவுவீர்களா? பாத்திரம் கழுவி தருவீர்களா? தோட்டத்தையாவது சுத்தம் செய்வீரா? சரி, இதை விடுங்க, கார், பைக்கையாவது விடுமுறையில் சுத்தம் செய்வீங்களா?
இப்படி வீட்டு வேலையில் ஒத்துழைப்பதே உடற்பயிற்சி தான். அதை விட்டு “ஜிம்’முக்கு சென்று உடல் குண்டு குறைய வேண்டும் என்று வியர்வை சிந்துவது சரியா? என்று கூட பலருக்கு தோன்றலாம்.
“ஆம், இதெல்லாம் கூட பயிற்சி தான்; இதனால் தான் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; நன்றாக தூக்கம் வரும்; நல்லா சாப்பிட தோன்றும். இதெல்லாம் தெரியாமல் காசு கொடுத்தால் தான் உடற்பயிற்சி என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது’ என்று சொல்கின்றனர்; யார் தெரியுமா? கலிபோர்னியா பல்கலைக்கழக வாழ்வியல் நிபுணர் பெர்ரட் கூனர். ஹூம், அவங்களுக்கு தெரியுது; நமக்கு புரிய மாட்டேங்குதே.
ஆரோக்கிய வாழ்வுக்கு “டிப்ஸ்’
நமது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக அவசியம். தண்ணீர் குடிப்பது குறித்த சில புதுமையான தகவல்கள்…
*தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.
*குளித்த பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
*சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஜீரணத்திற்கு நல்லது.
*தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, நள்ளிரவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

கூகுள் லேப்ஸ் – புதிய அம்சங்கள்

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.
ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.
Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.
Undo Send: இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.
Snake: கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக – கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.
Attachment Detector: அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.
Hide Unread Counts: நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.
Vacation Time : வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.
You Tube Preview: உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.
Insert Image: இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.