உணர்வுகள் கொந்தளிக்கும்போது…

நமக்குள் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உடலை பாதிக்கின்றன என்பது மருத்துவரீதியாக நிருபிக்கபட்ட உண்மை.

மனிதர்களுக்கு அதிகமாக மனநெருக்கடி, அழுத்தத்தை ஏற்படுத்தும் எட்டு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் தாமஸ் ஹோம்ஸும், டாக்டர் ரிச்சர்ட் ரகேம் பட்டியலிட்டுள்ளனர்:

அவை, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம், வாழ்க்கைத் துணையின் மரணம், உடல்நலக் குறைவு, காயம், திருமணம், விவாகரத்து, பிரிவு, வேலையிழப்பு மற்றும் சிறைத் தண்டனை.

மனம், உணர்ச்சிக் கடலில் தக்கையாய் தந்தளிக்கும்போது ரத்தத்தில் `ஹார்மோன்களும்’, `நிரோ டிரான்ஸ்மீட்டர்களும்’ விடுவிக்கபடுகின்றன. ரத்தத்தில் விடுவிக்கபடும் முன்று முக்கியமான விஷயங்கள் கார்ட்டிஸோல், அட்ரி னலின், நார்அட்ரினலின் ஆகியவை ஆகும்.

கார்ட்டிஸோல், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை விடுவித்து, நோய் எதிர்ப்பு அமைப்பு முறையாக செயல்படுவதைத் தடுக்கிறது.

அட்ரினலின், நார்அட்ரினலின் ஆகியவை, வியர்வை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகிய வற்றை அதிகரித்து, உடம்பை அதிக உஷார்த் தன்மையில் வைக்கின்றன.

நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் கடந்த 2005 -ம் ஆண்டு ஜான்ஸ் ஹாகின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, தீவிர மான உணர்வு ரீதியான நெருக்கடியானது, மாரடைப்பு ஏற்படுத்தும் வேதி பொருளை வெளியிடலாம்.

கேட்கொலமைன்ஸ், எபிநெரீன், நார்ரிபைன்ரீன் ஆகிய வேதிபொருட்கள் இதயத் தசைகளைத் திடீரென ஸ்தம்பிக்க வைக்கலாம் என்கிறார்கள், மேற்கண்ட ஆய்வாளர்கள்.

உணர்வு பிரச்சினையால் ஏற்படும் உடல் பிரச்சினைகள்:

தலைவலி
தூக்கமின்மை
குமட்டல் உணர்வு
வேகமான சுவாசம்
கிறுகிறுபு
அதிர்வு
மார்பு வலி
சீரற்ற இதயத் துடிபு
வயிற்றுபோக்கு
தன்னை அறியாமல் சிறுர் கழித்தல்
மனநலம் நன்றாயிருக்க…

மனநல ஆலோசகர் நமீதா கூறும் அறிவுரை:

உங்களின் மனம் வாடிக் கிடக்கும்போது, வழக்கமாகக் கூடாது என்று தடுக்கப்படும் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் சாக்லேட் கூடச் சாப்பிடலாம். ஆனால் நிதர்சனத்திலிருந்து தப்பிக்கும் வழியாக உணவை பயன்படுத்தத் தொடங்காதீர்கள். கார ணம் உணவு மட்டுமே முழுக்க முழுக்கக் கை
கொடுக்காது.

மனம் சோகமாக இருக்கும்போது உணவைத் துறப்பவர்களும் இருக்கிறார்கள். அதுவும் மோசமானதே. நீங்கள் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கிறீர்கள். அதை முடிந்தவரை சிறப்பாகக் கையாள வேண்டும். உங்கள் உடம்புக்கு அவ்வபோது போதுமான எரிபொருள் கிடைப்பது அவசியம்.

ஒவ்வொரு முன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுங்கள், சரியான அளவு சாப்பிடுங்கள். சுவையான உணவுகள் எல்லாம் ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு நல்ல `சூப்’ உங்களுக்கு இதமளிக்கும். உங்களுக்கு பிடித்தமான காய்கறிச் சமையல் உங்களை நல்லவிதமாக உணர வைக்கும்.

சோகமான நினைவுகளில் இருந்து உங்களைத் திசை திருப்பும் சிறந்த ஒரு விஷயம், தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சி. இதில் சிக்கலான விஷயம், உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பதுதான். நீங்கள் ஒரு வழக்கத்துக்கு வந்துவிட்டால் அது பெருமளவு நன்மை புரியும். இந்த விஷயத்தில் உங்களை நீங்களே வலுக்கட்டாயமாக பிடித்துத் தள்ளாதீர்கள். நீங்களே ரசித்து உடற்பயிற்சி செய்ங்கள். உடம்புக்கும் மனதுக்கும் நல்ல தொடர்பு உண்டு.

%d bloggers like this: