உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு

சம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில்
காட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும். சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.

குழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே! ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்தது.

அனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட் என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள் ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில் காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள் பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

%d bloggers like this: