துயரத்தில் இருப்பவர்களுக்கு…

இழப்பைச் சந்தித்து துயரத்தில் வாடியிருப்பவர்களுக்கு எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்… துயரத்தில் இருபவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், அவர்கள் கூறுவதை அமைதியாகக் கேளுங்கள். எவர் ஒருவராலும் ஓர் இழப்புக்கு மாற்றாக இருக்க முடியாது, அதை மாற்றவும் முடியாது என்பதை உணருங்கள். காலம்தான் எல்லாவற்றைம் குணபடுத்த வேண்டும். உங்களின் சொந்தக் கதைகளை எடுத்து விடாதீர்கள். மிகவும் பொறுமையாகவும், புரிதலோடும், இதமாகவும் இருங்கள். `நீங்கள் எந்தளவு வருத்தபடுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன்’ என்று கூறாதீர்கள். சம்பந்தபட்டவர் விரும்பாவிட்டால், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள். வழக்கமானவர்கள் வந்து சென்றபிறகு செல்லுங்கள். மறைந்தவரின் நினைவுநாட்களை ஞாபகபடுத்தி, அப்போது ஆதரவாக இருங்கள். `இழப்பு’ குறித்து ஞாபகபடுத்து கிறோமோ என்று கவலைபட வேண்டாம். சம்பந்த பட்டவர் ஏற்கனவே அந்த நினைவில் தான் இருப்பார். இழப்புக்குள்ளானவர் ஈடுபடக்கூடிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்து, உதவுங்கள்.

%d bloggers like this: