Daily Archives: பிப்ரவரி 22nd, 2010

ப்ப்ப்பூ…! (உப்பு)

* உப்பு பெறாத விஷயம் இல்லே *
* உஷாராக இருக்க வேண்டிய எச்சரிக்கை *
* உப்பில்லா பண்டம் குப்பையிலே… என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.
* உப்பை குறையுங்க; இல்லே, தீராத தொல்லை தான் என்று பயமுறுத்திவிட்டனர் டாக்டர்கள்.
உப்பு பற்றி உப்பு பெறாத விஷயம் என்று யாரும் நினைக்கத் தயாரில்லை. ஆனால், உடம்புக்கு வராத வரை உப்பு பற்றி கவலைப்படுவதும் இல்லை. சிலரை பார்த்தால், தட்டில், அரை ஸ்பூன் உப்பை போட்டு வைத்திருப்பர். தேவைப்படும் போது, இவர்களே, சாம்பார் முதல் தயிர் சாதம் வரை சேர்த்துக்கொள்வர்.
கொழுப்பு தேவை; அதிகமானால் ஆபத்து; எண்ணெய் தேவை; அதிகமானால் ரத்த அழுத்தம் தான். இனிப்பு தேவை; அதிகமானால் ஷுகர். இப்படித்தான் உப்பு தேவை தான்; அதிகமானால் ரத்த அழுத்தம் எகிறிவிடும்; மாரடைப்பு வருமோ என்ற பீதி கிளம்பும்.
அப்படி என்ன தான் இருக்கு?
சோடியம் – குளோரின் ஆகிய இரண்டு ரசாயனங் களும் சேர்ந்தது தான் உப்பு; இயற்கை கனிமங்களில் ஒன்று ; சோடியம் குளோரைடு கலவைகளில் ஒன்று. வெண்மை நிறம் கொண்டது சோடியம்; குளோரினோ, பச்சை மஞ்சள் கலந்தது; தண்ணீரில் கரைந்து விடும்; காற்றில் வாயுவாகி விடும்.
பல்வேறு உப்புகள் உள்ளன:
* சோடியம் பைகார்பனேட்: பேக்கிங் சோடா என்பது இது தான். சுத்தம் செய்ய பயன்படுவது. மருத்துவ குணங்கள் கொண்டது.
* சோடியம் நைட்ரேட்: உரம், வெடிக்கு பயன்படுவது.
* சோடியம் ஹைட்ராக்சைடு: பேப்பர் , சோப்பு, சில உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காஸ்டிக் சோடா எனப்படுவது.
வேணும்… ஆனா வேணாம்
உடலில் உப்பு தேவை; அதிக அளவில் உப்பு , வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதை ஈடு செய்ய வேண்டி உப்பு கரைசல் தேவை. உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது வாந்தி, மயக்கம் வருகிறது. அதை தீர்க்க அதிக அளவில் தண்ணீர், எலக்ட்ரால் கரைசல் குடிக்க செய்கின்றனர் டாக்டர்கள்.
உடலில் அதிக உப்பு சேர்ந்தாலும் தொல்லை தான். அதிக உப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்; அடிக்கடி சிறுநீர் போவர். சிறுநீர் மூலம் தான் அதிகப்படியான உப்பு வெளியேற்றப்படுகிறது.
உப்புல சூப்பர் பலன்
* வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை கரைத்து தொண்டையில் நிறுத்தி கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு போய்விடும். புண் இருந்தாலும் போய் விடும்.
* தேய்க்கும் பற்பசையில் உப்பு உள்ளது; அதுபோல சோப்பிலும் உள்ளது. உடலில் உள்ள எரிச்சல், தோல் பிரச்னை இதனால் போய் விடும். பல் பாதுகாப்புக்கு உப்பு முக்கியம்.
எவ்ளோ ஓகே
நாம் குடிக்கும் தண்ணீரில் உப்பு உள்ளது. அதனால், உணவில் சேர்ப்பது உட்பட ஒருவரின் உப்பு தேவை ஒரு டீஸ்பூன் தான் என்பது தான் நிபுணர்களின் கருத்து.
உப்பு போட்டாலே, உணவு அயிட்டங்களுக்கு தனி சுவை வந்து விடும் தான்; ஆனால், அதற்காக நாற்பதை தாண்டியும் உப்பை குறைத்துக் கொள்ளாமல் இருந்தால் தொல்லை தான்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பினால் இவை ஏற்படுகிறதா என்று சர்வதேச சர்ச்சை நீடித்தாலும், உப்பை குறைத்தால் இதய நோய் கட்டுப்படுகிறது என்பது உண்மை .
பிரஷர் குறையும்
“லப் டப்’ என்று இதயத்துடிப்பு கேட்கிறதே, அப்போது இதயம் சுருங்கி, விரியும். அப்போது ஏற்படும் அழுத்தம் தான் “சிஸ்டாலிக்’ என்று அழைக்கப்படுகிறது.
மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவது அந்த அழுத்தம் மூலம் தான்.
இதயத்துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மட்டும் தான் இதயம் ஓய்வெடுக்கிறது. இந்த இடைவெளியில் ஏற்படும் அழுத்தம் தான் ரத்த அழுத்தம் “டயஸ்டாலிக்’ என்று பெயர்.
ரத்த அழுத்தம் 130/85 என்பது நார்மலானது; சுருங்கி விரியும்போது எடுக்கப்படுவது தான் முதலானது; அதை டாப் நம்பர் என்பர்; அதுபோல, இரண்டாவது குறிக்கப்படுவது தான் டயஸ்டாலிக்.
மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, உப்பு குறைக்கப்பட்டாலே, ரத்த அழுத்த அளவு தானாகவே குறைந்து விடும்.
எதை கைவிடணும்?
* பிரஷ் பழங்கள், காய்கறிகளை சாப்பிட பழகலாம்; உப்பு குறைத்து உணவு சாப்பிட பழக வேண்டும்.
* பாட்டில் பானங்களை கண்டிப்பாக கைவிட வேண்டும். அதில் உப்பு அதிகம்.
* பாக்கெட்டில் அடைக் கப்பட்ட உணவு, நீண்ட நாள் பாதுகாப்புக் காக சோடியம் பயன் படுத்தப்படுகிறது. உப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஊறுகாய், உப்பு போட்ட நொறுக்குகளை மறந்து விட வேண்டும்.

பிக்கப்-டிராப்-எஸ்கேப் : காதலர்களின் புது மொழி இது

* கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண் டம் அருகே உள்ள அருமனையில், காதல் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி பேராசிரியை ஷர்மின் (24), காதலனால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டார். கல்வி தகுதி குறித்து, காதலன் பொய் சொன்னதால் காதலுக்கு, “குட் பை’ சொன்ன பேராசிரியையின் உயிரை பறித்ததன் மூலம், “காதல் பரிசு’ வழங்கியுள்ளார் விபரீத காதலர்.

* சென்னையில் காதல் தோல்வியால், இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியை சுவர்தினி(24) கல்லூரியின் ஐந்தாவது மாடிலிருந்து குதித்து மரணத்தைத் தழுவினார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாலும், காதலன், “குட் பை’ சொன்னதாலும் அவரது உயிர் பறிபோயுள்ளது.

* சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி ரேவதியை ஒருதலையாக காதலித்தார் மாணவர் ஒருவர். காதலுக்கு மாணவி எதிர்ப்பு தெரிவிக்க, “விடுவேனா பார்’ என்ற நோக்கில், அந்த மாணவியின் காதை பிளேடால் அறுத்துவிட்டு, மாணவர் தப்பி ஓடினார்.

*முத்துக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் 15 நாளில் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார் என நடிகை கனகா காதல் தோல்வி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

* திருச்சி பெண் டாக்டர் ஒருவர் மூன்று கணவர்கள், நான்கு நண்பர்கள் என பட்டியல் போட்டு காதலித்து, ஏமாற்றி, காதலர் தினத் தன்று போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். காதல் என்ற பெயரில், தனது, “செக்ஸ்’ ஆசையை தீர்த்துகொள்வது அவரது பழக்கம் என்று பெண் டாக்டரின் கணவர்கள் தொடர் “ஸ்டேட் மென்ட்’ விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய, “காதல்’ விவகாரங்கள் இவை. இவை தவிர, காதலை மையப்படுத்தி, தினந்தோறும் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. உண்மையான காதலுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், நடக்கும் இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விபரீத காதல் குற்றங்கள் குறித்து, மன நல மருத்துவர்கள் கூறியதாவது: காதல் என்பது இருவரும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறி, புரிந்து கொண்டு, திருமணத்தில் முடிந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. காதல் புனிதமானது, தெய்வீகமானது என்று இப்போதுள்ள இளைய தலைமுறையிடம் சொல்லிப் பாருங்கள். என்ன, “காமெடி-கீமடி’ பண்றீங்களா, என்ற கேலியான பதில் தான் கிடைக்கும். “பிக்கப்-டிராப்-எஸ்கேப்’ தான் இந்தக் கால, “காதல் ஸ்டைல்’ என்று சொல்லும் நிலைக்கு காதல் தரம் தாழ்ந்துள்ளது. கிராமங்களைவிட, நகரங்களில் தான் காதல் பிரச்னைகள் விசுவரூபம் எடுக்கின்றன.

வக்கிரத்துடன் உருவாக்கப்படும் திரைப்படங்களினாலும், காதலில் விழுந்து பல இளசுகள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர்; சிக்கல்களிலும் மாட்டிக் கொள்கின்றனர். இதை தவிர்ப்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் 17 வயதிலிருந்து 25 வயது வரை, பெற்றோரின் கவனம், பிள்ளைகள் மீது அதிகம் இருக்க வேண்டும். கவனிக்க நேரமில்லை என்று காரணம் கூறி, பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. காதல் தோல்வியால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு குற்றங்களை செய்ய வைக்கிறது; தற்கொலைக்கும் தூண்டுகிறது. இதைத் தவிர்க்க, மனநல மருத்துவர்களிடம், “கவுன்சிலிங்’ பெறுவது நல்லது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நூறாண்டு வாழ வழி செய்யும் மருந்துகள் விரைவில் அறிமுகம்

நூறாண்டு வாழ வகை செய்யும் மாத்திரைகள் விரைவில் சந்தைக்கு வர உள்ளன.

மரணம் இல்லா பெரு வாழ்வு வாழ்வது குறித்து நம்நாட்டு யோகிகளும் சித்தர்களும் பல்வேறு வழிவகைகளை கூறியுள்ளனர். ஆனால், கோடியில் ஒருவர் கூட இந்த முறையை பின்பற்றவில்லை. மக்களிடத்திலிருந்து விலகி தனிமை குகைகளில் வசிக்கும் ஒரு சிலர் மட்டுமே இந்த முறையை பின்பற்றி நூறாண்டுகளை தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.நடைமுறைக்கு இது ஒத்து வராத காரணத்தால் வெளிநாட்டு விஞ்ஞானிகள் பலர் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது ஆயுளை நீட்டிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர் நிர் பார்சிலாய் தலைமையிலான குழுவினர் மனித ஆயுளை நீட்டிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். நமது மரபணுவில் உள்ள மூன்று ஜீன்கள் நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இந்த ஜீன்கள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுக்கின்றன. மற்றொரு ஜீன் நீரிழிவு நோயை தடுக்கிறது, என்பதை ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்களின் மரபணுவை பரிசோதித்த போது ஒரு சில ஜீன்கள் ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கிறது, என்பதும் தெரிய வந்துள்ளது.எனவே, இந்த ஜீன்களை ஊக்குவிக்கும் மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இவர்கள் கண்டுபிடித்த சில மருந்துகளை செலுத்தி பார்த்ததில் மேற்கண்ட மூன்று ஜீன்களும் ஊக்கமடைவது தெரியவந்துள்ளது. எனவே, இந்த மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள பிரபல ஆய்வகங்களில் நடந்து வருகிறது. எனவே, நூறாண்டை கடந்து வாழ வைக்கும் மாத்திரை மூன்றாண்டுகளில் சந்தைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

காதல் ஒரு பார்வை

`எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’

-இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!   காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.   பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி.

காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது.   கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.   குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை அதிதீவிரமான காதலர்கள் எனலாம். இவர்களுக்கு காமம் என்பது ஒரு விஷயமாகவே இருக்காது. அது போலவே எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.   பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.   சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை முடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். இவர்களிடம் காமம் என்பது குறைவாகவே இருக்கும். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள்.   டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.   இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர்.   காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். நிறம், உயரம், உருவம் என எதுவுமே காதலுக்குத் தடையில்லை என்பது அனுபவஸ்தர்கள் சொல்லும் கருத்து. உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு ரசனையாளர் உண்டு! காதலை வேலைவெட்டி இல்லாதவர்களின் விளையாட்டு.. அதெல்லாம் ச்..சும்மா என்று சொல்பவர்களும் உண்டு

நோயைத் தீர்க்க உதவும் `தட்டச்சு’!

ஆபத்துக் காலங்களில் சிலருக்கு பேசவே வராது. நாக்கு குளறுபடி செய்யும். காக்காய் வலிப்பு, முடக்குவாதம் மற்றும் கோமா நிலையை அடைந்தவர்கள் இத்தகைய பாதிப்படைவதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களின் நிலையை கண்டறிய பல்வேறு உபகரணங்கள் இருந்தாலும் தற்போது புதிதாக வந்துள்ளது தட்டச்சு முறை. இது நோயாளிகளின் நினைவுகளை கணினியில் தட்டச்சு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பேசுவதன் முலமே தட்டச்சு செய்வது பிரபலமாக இருந்து வருகிறது. அது தொழில் உலகம் சார்ந்ததாக உள்ளது. ஆனால் இந்த நினைவலை தட்டச்சு முறை மருத்துவ துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

நோய் உடைய ஒருவரை பேச வைத்து தட்டச்சு செய்யப்பட்டது. பிறகு பேசாமல் வெறும் நினைவுகள் முலம் ளையில் ஏற்படும் மின்தூண்டல்களுக்கு ஏற்ப தட்டச்சு பதிவு செய்யப்பட்டது. இறுதியில் நினைவுகளை வரிவடிவமாக கொண்டுவரும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. மின் தூண்டல்கள் எண்களாக உள்வாங்கப்பட்டு, எழுத்துக்களாக மாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

இந்த தொழில்ட்பத்தால் பல வியாதிகளின் தன்மை, பலன்களை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும் முக்கியமான விவரங்களையும் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறவும் வசதியாக இருக்கும் என்று தெரிகிறது.

குழந்தைகளைக் குதூகலபடுத்தும் ஆடைகள்

குழந்தைகளின் கள்ளமில்லாச் சிரிப்பும், அவர்கள் செய்கின்ற குறும்புகளும் எல்லோராலும் ரசிக்கபடுபவை. புதிதாக நடைபழகும் சமயங்களில் அவர்களின் `தத்தக்கா… பித்தக்கா…’ நடையில் மனதை பறிகொடுப்பவர்கள் ஏராளம். அந்தச் செல்லங்களின் ஆடை விஷயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கவனமுடன் இருப்பது அவசியம். குழந்தைகள் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், புத்துணர்ச்சி தரும் வண்ணங்களால் ஆன உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு விஷயத்தைம் கற்றுக்கொள்ளும் பருவமாகவும் இருப்பதால், பல வண்ணங்களால் ஆன உடைகளை அணிவிக்கும்போது, அதன் முலம் அவர்கள் வண்ணங்களை பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

குழந்தைகளின் ஆடைகளை பொறுத்தவரை, வித்தியாசமான வடிவமைப்பிலும், வண்ணங்களிலும் ஏராளமான வகைகள் உள்ளன. ராக், கவுன், ஷார்ட்ஸ், பர்முடாஸ், டி-சர்ட், சட்டை, ஜீன்ஸ், சுடிதார், சோளி, கம்மீஸ், ஸ்கர்ட், கார்கோ, பைஜாமா, குர்தா, ஷெர்வானி இப்படிக் குழந்தைகளுக்கான ஆடைகளின் வகைகள் நீண்டுகொண்டே போகின்றன. வெறும் ஆடைகள் மட்டுமல்லாது பெரியவர்களைபோலவே நகைகள், தொப்பி, கண்ணாடி, பெல்ட், ஷூ, ஹேர் கலரிங் என ஆடைக்கு அழகு சேர்க்கும் விஷயங்களும் குழந்தைகளுக்காக உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ள ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். தவிரவும், தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகையர்கள் அணிந்திருக்கும் ஆடைகளைபோலவும் அணிய விரும்புகின்றனர். பெண் குழந்தைகளை பொறுத்தவரை, மிகவும் புகழ்பெற்ற பொம்மையான `பார்பி’யை போல் உடை உடுத்துவதை பெரிதும் விரும்புகின்றனர். இந்தவகை பொம்மைகள் அணிந்திருக்கும் ஆடைகள் மிகவும் லேசாகவும், மிருதுவாகவும் இருப்பது குறிபிடத்தக்கது.

குழந்தைகளின் வயதை பொறுத்து, அவர்களுக்கான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்று முதல் 4 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு மிக எளிதாக இருக்கும் உடைகளை மட்டுமே அணிவிக்க வேண்டும். 5-வது மாதத்தில் குழந்தைகள் தவழத் தொடங்கி விடுவதால், அவர்களின் ஆடைகளில் பெல்ட், கொக்கி போன்ற உலோகங்களால் ஆன எதுவும் இருக்கக் கூடாது. தவழும்போது இவை காயத்தை உண்டாக்கி விடக்கூடும்.

10-ம் மாதத்தில் குழந்தைகள் நடக்கத் தொடங்கி விடுகின்றன. எனவே, ஆடைகள் நீளமாக இல்லாமலும், நடைபழகுவதற்குத் தொந்தரவு செய்யாமலும் இருக்க வேண்டும். 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பூக்கள் வைத்த ஆடைகள் நன்றாக இருக்கும். 6 வயது முதல் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு ஆடைகள் எடுக்கும்போது, அவர்களையே தேர்வு செய்யச் சொல்லலாம். அதன் முலம் அவர்களின் விருப்பத்தையும், கற்பனை சக்தியையும் தெரிந்து கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கான ஆடைகள் பெரும்பாலும் மென்மையான காட்டன் துணியால் தயாரிக்கபடுகின்றன. மேலும், சிந்தடிக், சில்க், பாலியஸ்டர், கம்பளி, டெனிம் போன்ற துணி வகைகளாலும் தயாரிக்கபடுகின்றன. முடிந்தவரை குழந்தைகளுக்கு மென்மையான துணியால் தயாரிக்கபட்ட ஆடைகளை மட்டுமே அணிவிக்க வேண்டும். கடினமான துணிகளால் ஆன ஆடைகளை அணிவிக்கும்போது, அவை குழந்தைகளின் சருமத்தில் உராய்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்பு உண்டு.

ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு இயல்பு உண்டு. பெரும்பாலும் அடர்த்தியான வண்ணங்கள் மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே, குழந்தைகளுக்கான ஆடைகள் அடர்த்தியான வண்ணங்களில் அமைவது சிறப்பு. அதேநேரம் பார்பவர்களின் கண்களை கூசச் செய்யும் வண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலும் பச்சை, மஞ்சள், சிவப்பு, ஸ்கை புளூ, வெள்ளை, கடல் நீலம் போன்ற வண்ணங்கள் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணங்களாகும். எனவே, குழந்தைகளுக்கான ஆடைகளைத் தேர்வு செய்ம்போது இந்த வண்ணங்களை நினைவிற்கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இதுதவிர, பெண்குழந்தைகள் பேபி பிங்க், பர்பிள் போன்ற வண்ணங்களையும், ஆண் குழந்தைகள் பிரவுன், க்ரே போன்ற வண்ணங்களையும் விரும்புகின்றனர்.

குழந்தைகளுக்கான ஆடைகளில் நெய்யபட்டவை, பின்னலாடை என இரண்டு வகைகள் உண்டு. இதில், பின்னலாடையே குழந்தைகளுக்கு ஏற்றதாகும். குழந்தைகளைக் கவருவதற்காக ஆடைகளில் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் படங்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள் ஆகியவற்றின் படங்களும் அச்சிடபடுகின்றன. மேலும், சக்திமான், சிலந்தி மனிதன் போன்ற சாகசக் கதாபாத்திரங்களின் படங்களும் அச்சிடப்படுகின்றன.

குழந்தைகளின் ஆடைகளைத் துவைப்பதற்கு முன், பைகளில் ஏதாவது இருக்கிறதா என சோதித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பொருள் இருக்கும் பட்சத்தில், துவைக்கும்போது அதில் உள்ள சாயம் துணிகளில் படிந்து விடும். அதேபோல் துவைக்கும் முன் `ஜிப்’பை முடிவிட வேண்டும். அடர்த்தியான வண்ணங்களாலான ஆடைகளுடன், அடர்த்தி குறைந்த ஆடைகளைச் சேர்த்து துவைக்கக் கூடாது. ஏனெனில், அதிக அடர்த்தியான வண்ணங்கள், அடர்த்தி குறைந்த வண்ணமுடைய ஆடைகளில் படிந்து, ஆடையின் அழகை கெடுத்துவிடும். அதேபோல் ஆடைகளை உலர்த்தும்போது, உட்பக்கமாகத் திருப்பி உலர்த்தினால், வண்ணங்கள் மங்காமல் இருக்கும்.

டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு

பிரமாண்டமான டைனோசர்கள், மனிதன் போல மாநிறமா? பச்சைத்தவளை போல பசுமையா, எருமை போல கறுத்திருக்குமா?

இதுவரை இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்தது. கற்பனைப் படைப்பான ஜுராசிக் படம் பார்த்தவர்களுக்கு வேண்டுமானால் தற்போது ஒரு வண்ணம் நினைவில் தோன்றி மறையலாம். இனி அப்படி இல்லை. அதன் வண்ணத்தை ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

டைனோசர்கள் மண்ணோடு மண்ணாகி பல லட்சம் முதல் கோடிக்கணக்கான ஆண்டுகளாகிறது. ஆனாலும் இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் பிரமிக்கத்தக்க உடலமைப்பைக் கொண்டதாக இருப்பதால் அதைப் பற்றிய ஆய்வுகள் எப்போதுமே விறுவிறுப்பாக நடக்கிறது. சமீபத்தில் டைனோசர் களின் நிறத்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

சீனாவின் நான்ஜிங் என்ற இடத்தில் உள்ள ஆய்வகத்தில் ஏறத்தாழ முழுமையான பாகங்களைக் கொண்ட டைனோசரின் எலும்புக்கூடு இருக்கிறது. இங்கு பெய்ஜிங், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உயிரினங்களின் சிறகுகள் பற்றி ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது டைனோசரின் இறக்கைகள் பற்றிய சில உண்மைகள் வெளிப்பட்டன.

தேரோபாட் வகை டைனோசர்களின் துணை இனமான சைனோசரோப்டரிக்ஸ் இன டைனோசர்களில் ஆரம்ப காலங்களில் இறகுகள் இருந்த இடத்தில் மேலெழுந்த துடுப்பு போன்ற அமைப்பே இருந்திருக்கிறது. காலப்போக்கில் பரிணாம மாற்றத்தால் அவை சிறகுகளுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது. அதாவது பறக்க முடியாத இறக்கை போன்ற அமைப்பை பெற்றது. பிற்காலத்தில்தான் பறவைகளுக்கு இருப்பது போன்ற சிறகுகள் உருவாகி இருக்கின்றன. இந்த சிறகுகள் அவை பறப்பதற்கும், சீதோஷ்ண நிலையோடு போராடவும் உதவிகரமாக இருந்துள்ளன.

மேலும் இவற்றின் வால்பகுதி, ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்த பட்டைகள் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதற்கான தடயங்களும் கிடைத்திருக்கிறது. ஒரு சில வண்ண இறகுகள் கிடைத்துள்ளன. உடலில் சில இடங்களில் சாம்பல் நிறமும் காணப்பட்டிருக்கலாம். தாடைப்பகுதியில் சிவப்பு வண்ணம் இருந்திருக்கும்.

இனி டைனோசரை வரையும்போது படத்தில் உள்ளபடி உண்மையான வண்ணத்தில் வரையலாம்!

பகவானை சுலபமாக அடையலாமா?

வேத சாஸ்திர புராணங்களைப் படிக்க வேண்டியது அவசியம். எதற்காகப் படிக்க வேண்டும்? “நான் எல்லாவற்றையும் படித்து பாண்டித்யம் பெற்றுவிட்டேன்’ என்று சொல்லிக் கொள்ளவா? அப்படியில்லை… எல்லாவற்றையும் படித்து அவைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிலுமே நம் புத்தியை நல்வழிப்படுத்துவதற்கான மார்க்கங்கள் தான் சொல்லப்பட்டிருக்கிறது.
மனம், வாக்கு, காரியம் இவைகளால் தான் மனிதன் பல பாவங்களைச் செய்கிறான். புத்தி நல்வழியில் போனால் பாவம் செய்ய மாட்டான். புத்தி நல்வழியில் போக வேண்டுமானால் பக்தி மார்க்கம் தேவை; அது எங்கே கொண்டு போய் சேர்க்கும்? பகவானிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். பகவானை அடைந்து விட்டால் போதுமே! மீண்டும் இங்கே வர வேண்டாமே!
ஆக, பக்தி என்பதும், பக்தி மார்க்கம் என்பதும் பிறருக்கு இடையூறின்றி பகவானை அடைந்து நலம் பெறுவது. இது அவ்வளவு சுலபமானதா என்றால், சுலபமானது தான். ஆனால், மனதில் வைராக்கியம் என்ற ஒன்று இருக்க வேண்டும்.
கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாமென்று போகிறான். போகும் வழியில் எத்தனையோ விஷயங்கள் இவன் மனதை வேறு பக்கம் இழுக்கிறது. வழியில் ஒருத்தன் வித்தை காட்டுகிறான். ஒரு இடத்தில் கழைக் கூத்தாடி சாகசம் செய்கிறான். மற்றொரு இடத்தில், “ரிகார்டு டான்ஸ்’ நடக்கிறது.
கோவிலுக்குப் போகிறவனுடைய புத்தி, சுவாமி தரிசனத்தில் நிற்க வேண்டும். நடுவிலுள்ள எதிலாவது மனம் போனால், சுவாமி தரிசனம் செய்தும் பலன் கிடைக்காது. இதுபோன்ற விஷயத்தில் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மனிதனுக்கு குறிக்கோள் என்று ஒன்று இருக்க வேண்டாமா? அதை அடைய வேண்டாமா? மனிதனுக்குப் பொதுவான குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்? நிறைய சம்பாதித்து, நன்றாக சாப்பிட வேண்டும் என்பது மட்டும் தானா குறிக்கோள்… சம்பாதிப்பதும், சாப்பிடுவதும் இருக்கவே இருக்கிறது. இந்த ஜீவன் விடுதலை பெற்று நற்கதி அடைய வேண்டும் என்பது தானே குறிக்கோளாக இருக்க வேண்டும்… அதற்கு பக்தி மார்க்கம் ஒன்று தானே சிறந்த மார்க்கம்.
அந்த மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டாமா? நல்வழி காட்டவும் நாலு பேர் உண்டு; தவறான வழி காட்டவும் நாலு பேர் உண்டு. நாம் யாரை அண்ட வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
நல்லவர்களை அண்டினால் நமக்கு நல்லது; அயோக்கியர்களிடம் போனால், அவர்களுக்கு நல்லது. நாம் தான் ஏமாறாமல் இருக்க வேண்டும். புத்தியைக் கொண்டு பிழைத்துக் கொள் என்றனர். பிழைக்க தெரிந்து கொள்ள வேண்டும். மனம் பகவானிடம் போக வேண்டும்.