Advertisements

இண்டர்நெட் டாக்டர் குழு

நம் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள ஒரு மருத்துவரை நாடுவதே எப்போதும் நல்லது. இன்று தகவல் தொடர்பு பெருகியுள்ள நாளில், நாட்டின் எந்த மூலையில் உள்ள டாக்டரையும் ஒருவரால் தொடர்பு கொண்டு, உடல்நலம் குறித்து அறிந்து கொள்ளலாம். சரியாக நம்மைப் பற்றிய குறிப்புகளைத் தந்தால், உடல்நலக் குறைவு, அல்லது நோய்க்கான மருந்து பரிந்துரைகளை ஒருவர் பெற முடியும். ஏன், டாக்டர் ஒருவரே தன் நோயாளியின் நோய் குறித்த தகவல்களை, தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இந்த பிரிவில் உள்ள வல்லுநர் ஒருவருக்கு அனுப்பி அறிவுரை கேட்க முடியும்.
இணையத்தில் இது போன்ற பல தளங்கள் இருக்கின்றன. அடிப்படையில் நம் உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் தளம் ஒன்று இருக்கிறது. இதன் முகவரி http://www.askthedoctor.com /index.php/askthedoctor.html இந்த தளத்தில் மருத்துவ அறிவுரை இலவசமாக வழங்கப்படுகிறது. இது எப்படி செயல்படுகிறது? இந்த தளம் சென்று உங்களுடைய பெயர், இமெயில் முகவரி, உடல்நலம் குறித்த முழு தகவல்கள், உங்களின் கேள்வி இவற்றை நிரப்பி அனுப்பினால், அந்த தளத்திலேயே உங்கள் கேள்வி குறித்து எத்தகைய பதில் கிடைக்கலாம் என்று சுட்டிக் காட்டப்படும். பின் உங்களுக்கான பதில், உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த சேவை இந்த தளத்தின் முதன்மைச் சேவை என்றாலும், வேறு சில பிரிவுகளும் இதில் உள்ளன. இதன் ஹோம் பேஜில், பொதுவாக மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து எழுப்பும் கேள்விகளும், அதற்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன. அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் இங்கு முக்கியத்துவம் கொடுத்துத் தரப்பட்டிருக்கும்.
Topics A to Z: உடல்நலம் குறித்தெல்லாம் கேள்வி இல்லை. மருத்துவத்தில் குறிப்பிட்ட பிரிவில் ஆய்வு மேற்கொள்ள எண்ணமா? இந்த பிரிவில் நீங்கள் விரும்பும் தலைப்பு உள்ளதா எனத் தேடிப் பார்த்து, அது குறித்து பல கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
Drugs A to Z: பலவகையான மருந்து குறித்த தகவல்களை இங்கு பெறலாம். அருகில் இருக்கும் மெனுவில் அடிக்கடி கேட்கப்பட்ட மருந்துகள் பட்டியலிடப்பட்டு தரப்பட்டிருக்கும்.
Diet and Fitness: இங்கு கட்டுப்பாடான உணவு, உடல் நலம் பேணல் குறித்த பல தகவல்கள் தரப்படுகின்றன. உணவு கலோரிகள், உடல் கட்டமைப்பு மற்றும் வளர்த்தல், உணவு உட்கொள்வதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தீகான இடைவெளிகள், வைட்டமின் என இது போன்ற பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
Parenting and Pregnancy: இந்த பிரிவில் குழந்தை உருவாதல் மற்றும் வளர்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.
Sex and Beauty: நாம் மற்றவரிடம், ஏன் டாக்டரிடம் கூடக் கேட்கத் தயங்கும் தகவல்கள் அழகாக இங்கு தரப்பட்டுள்ளன. அத்துடன் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்தும் பல தகவல்கள் இங்கு கிடைக்கின்றன.

Advertisements
%d bloggers like this: