Daily Archives: பிப்ரவரி 27th, 2010

மருத்துவக் காப்பீடு… அறிய வேண்டிய விஷயங்கள்!

மருத்துவக் காப்பீடு என்பது ரிஸ்க்’ சார்ந்த பாலிசி என்பதால் என்பதால் பலரும் அதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று தள்ளிப்போடும் நிலை இருக்கிறது.

ஆனால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மன அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவு முறை போதுமான உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் மருத்துவமனைக்கு நடக்கும் நடை கூடிக் கொண்டே இருக்கிறது. மருத்துவ பில்’கள் உங்கள் சட்டைப் பையைக் காலி செய்துவிடும்.

சரியான பொருளாதார நிலையைப் பராமரிப்பதற்கு மருத்துவக் காப்பீடு அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவக் காப்பீடு பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சுருக்கமாக உங்களுக்காக… ஒற்றை பாலிசியால் மட்டும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் சமாளிக்க முடியாது. அவ்வளவாகத் தீவிரமான வியாதியாக இல்லாவிட்டாலும் தற்போது 2 லட்ச ரூபாய் வரையிலும் கூட செலவாகிறது. எனவே நீங்கள் குழு கம்பெனி திட்டத்தில் இருந்தாலும் இன்னொரு மருத்துவக் காப்பீடு பெறுவது பயனுள்ளது. தற்போது பல புதுமையான வருமான வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. ஒரு பேமிலி புளோட்டர்’ என்பது நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் பட்ஜெட்’டை பொறுத்து 5 முதல் 10 லட்சத்துக்குக் காப்பீடு பெறலாம். குறிப்பிட்ட காப்பீட்டு பாலிசி பல் மருத்துவம் மருந்துகள் நர்ஸ் கவனிப்பு நீண்ட கால கவனிப்பு ஆகியற்றுக்கு உத்திரவாதம் அளிக்கிறதா என்று தெளிவாக ஆராயப்பட வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதற்கு அளவற்ற வகையில் தொகையைத் திரும்பிப் பெறுவது மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின் சிறப்புக் கவனிப்பு போன்ற ஆட்- ஆன்’ வசதிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். பாலிசியின் சீலிங்’ வயது என்னவென்று பார்க்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் 70 வயதை எல்லையாகக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் காப்பீட்டுடன் ரிட்டர்னை’யும் அளிக்கும் புதுமையான திட்டங்கள் இருக்கின்றன. இவை இரட்டைப் பலன்கள் கொண்டவை. இந்தத் திட்டங்களில் ஒருவர் பணிபுரியும் வரை சேரும் தொகையிலிருந்து ஓய்வுக் காலத்தில் ரிட்டர்னை’ பெறலாம். வயது கூடக் கூட பிரீமிய தொகை அதிகரிக்கும் என்பதால் இளம் வயதிலேயே காப்பீடு மேற்கொள்வது நல்லது.

அதிகரித்து வரும் `அழகு அதிர்ச்சி’-அழகுச் சிசிச்சை ஒரு பார்வை

டீன் ஏஜ் வயதில் அடியெடுத்து வைக்கும் பெண்பிள்ளைகள், முகச்சுருக்கக் கோடுகள், புருவத்தை மென்மையாக்குவது, உயர்த்துவது, சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளை அகற்றுவது, கரும்புள்ளிகளை அகற்றுவது ஆகியவற்றுக்கு அழகுச் சிசிச்சை நிபுணர்களை நாடி வருகிறார்கள். ஆனால் இந்த வழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

`போட்டாக்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கபடும் `பொட்டுலினம் டாக்சின்’ என்பது தீவிர நச்சுத் தன்மை வாய்ந்த வேதிபொருள். இதைச் செலுத்தியும் அழகுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தோல் மருத்துவ நிபுணரும், பிரபல `காஸ்மெட்டிக்’ சிகிச்சை வல்லுநருமான டாக்டர் ராஷ்மி ஷெட்டி, “எனது கிளினிக்குக்கு `போட்டாக்ஸ்’ சிகிச்சைக்காக வருபவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் டீன் ஏஜ் வயதினர். பெரும்பாலும் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள். டீன் ஏஜ் வயதினர் அதிகமாகக் கேட்பது, தாடை அகலத்தைக் குறைக்க வேண்டும், சிரிக்கும்போது கண்கள் குறுகித் தோன்றுவதை மாற்ற வேண்டும் என்று கேட்டுத்தான்” என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், அகன்ற தாடையைச் சரிபடுத்துவதற்கு மெல்லும் தசைகளுக்குள் `போட்டாக்ஸ்’ செலுத்தபடுகிறது. அது முகத்துக்கு அழகான, நீள்வட்ட வடிவத்தை அளிக்கும் என்கிறார்.

சிரிக்கும்போதும் கண்கள் குறுகலாவதைத் தவிர்க்க கண்களுக்குக் கீழே புரதம் செலுத்தபடுகிறது. அதன் முலம், நன்றாகச் சிரிக்கும்போது கூட கண்கள் பெரிதாகவும், பிரகாசமாகவும் இருப்பதை உறுதிபடுத்த முடியும்.

பருத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்த விசாரணையும் அதிகரித்து வருகிறது.

“மிகச் சிறிதளவு, நீர்த்த `போட்டாக்ஸ்’, முகத்தின் வியர்வைச் சுரபிகளுக்குள் செலுத்தபடுகிறது. அதன் முலம் வியர்வைச் சுரபிகள் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுத்து, முகத்துக்கு மென்மையான, `பளிச்’சென்ற தோற்றம் தரபடுகிறது” என்கிறார் ராஷ்மி.

மற்றொரு ஆர்வ ட்டும் விஷயம், இவரிடம் அழகுச் சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாரிசுகள். இந்தியாவில் தங்கி படிக்கும் அவர்கள் இங்கு நிலவும் காலநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடலைச் சீர்திருத்திக்கொள்ள வருகிறார்கள். அவர்கள் அதிகமாகக் கேட்பது, நெற்றிக்கோடுகள், சுருக்கங்களைச் சரிசெய்யும்படி.

தங்களை நாடிவரும் டீன் ஏஜ் பெண்களுக்கு அழகுச் சிகிச்சை செய்வதற்கு முன் அந்த நிபுணர்கள் கூடுமானவரை தவிர்க்கவே முயலுகின்றனர், நிறைய விசாரிக்கின்றனர். ஆரோக்கியமான மாற்றுவழிகளை நாடும்படி அறிவுரை கூறுகின்றனர். அதாவது, சரியான உணவுமுறை, தோல் பராமரிப்பை மேற்கொள்ளும்படி கூறுகின்றனர்.

டீன் ஏஜ் வயதினருக்குத் தான் `போட்டாக்ஸை’ பயன்படுத்த மறுப்பதாகக் கூறுகிறார் மற்றொரு அழகுச் சிகிச்சை நிபுணர் அனில் ஆபிரஹாம்.

“போட்டாக்ஸ் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு எங்களை நாடிவரும் 10 பேரில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 பேர் டீன் ஏஜ் பெண்கள். அவர்களில் சிலருக்கு 13 வயதுதான் ஆகியிருக்கிறது. நான் அவர்களிடம், வெளியே போகும்போது `சன் ஸ்கிரீன்’ பயன்படுத்துமாறும், சமச்சீரான, சத்தான உணவு முறையை மேற்கொள்ளுமாறும், அது அவர்களின் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் அறிவுரை கூறுகிறேன். இந்த இளம்வயதிலேயே அழகு சிகிச்சைக்கு முயற்சிப்பதற்கு பதிலாக `ரெகுலராக’ `மாஸ்சரைசர்’ பயன்படுத்தும்படி எடுத்துச் சொல்கிறேன்” என்கிறார் ஆபிரஹாம்.

`போட்டாக்ஸ்’ பயன்படுத்துவதால் தலைவலி, சுவாசத் தொற்று, `புளூ’ காய்ச்சல், கண்ணிரப்பை தொய்வு, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மயங்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்

பெரிய போல்டர்களை பிரவுஸ் செய்திடுகையில்,  கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்கத் தொடங்கி, சில வேளைகளில் பொறுமையைச் சோதிப் பதாக நீண்ட கடிதம் எழுதி உள்ளார் .இதற்கு கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்து மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கினால், இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என்றும் கேட்டுள்ளார்.
விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனைச் சார்ந்து கண்ட்ரோல்+ஆல்ட்+ டெலீட் என்ற சொல் தொடரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏதேனும் கிராஷ் ஆனாலோ, அல்லது வழக்கத்திற்கு மாறாக இயங்கினாலோ, இதனை இயக்கிப் பார்ப்பதுதான் சிறந்த தீர்வு. இதனைத் திறந்து பார்த்து வேறு ஏதேனும் ஒரு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இயங்குகிறதா என்று கவனிக்கவும்.
பெரிய போல்டர்களைப் பார்க்கும் போது அல்லது கரப்ட் ஆன தம்ப் நெயில் படங்கள் அடங்கிய பைல்கள் இருக்கும் போது, எக்ஸ்புளோரர் சற்று பின் வாங்கும். அப்போது உங்கள் பைல் பிரவுசிங் பணி தடைப்படும். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே செயல்படும் ஒரு யூசர் இன்டர்பேஸ். டெஸ்க்டாப், போல்டர், விண்டோஸ் என அனைத்தையும் நீங்கள் காண ஒரு பாலமாக இயங்குகிறது. எக்ஸ்புளோரர் மெதுவாக இயங்கும்; ஆனால் கிராஷ் ஆகாது. எனவே தான் விண்டோஸ் தானாக ரீஸ்டார்ட் ஆகாமல், உங்களிடம் அந்த வேலையை எதிர்பார்க்கிறது.
எக்ஸ்புளோரரை நிறுத்த விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் செல்லவும். இதில் Processes என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது பார்ப்பதற்குச் சற்று குழப்பமாக இருந்தாலும், இதில் கிடைக்கும் தகவல்கள் எளிமையானவையே. இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். சில புரோகிராம்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். இதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் பார்க்க வேண்டியது Explorer.exe தான். இதனைக் கண்டறிந்த பின், இதன் மீது ஒரு முறை லெப்ட் கிளிக் செய்திடவும். இது ஹைலைட் ஆகும். பின் ரைட் கிளிக் செய்தால் ப்ராசஸ் மெனு கிடைக்கும். அடுத்த ஸ்டெப் எடுக்கும் முன், வேறு விண்டோக்கள் திறக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Explorer.exe என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது எக்ஸ்புளோரர் இயங்குவதை நிறுத்தும். இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் அனைத்தும் மறைந்து போகும். கவலைப்பட வேண்டாம். அதைத்தான் எக்ஸ்புளோரர் செய்கிறது. இனி விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். டாஸ்க் மேனேஜரில் ஒரு பைல் மெனு கிடைக்கும். டாஸ்க் மேனேஜரில் மேலாக உள்ள File என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து New Task என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது Create New Task என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பாக்ஸ், ரன் பாக்ஸ் போல செயல்படும். பாக்ஸில் explorer என்று டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் டெக்ஸ்டாப், அதன் ஐகான்களுடன் காட்டப்படும். ஆஹா! இயங்கி, முடங்கிய ஒரு புரோகிராமினை நிறுத்தி மீண்டும் இயக்கிவிட்டீர்கள். பெரிய அளவில் பைல் பிரவுசிங் செய்து, தளர்ச்சி அடையும் போதெல்லாம், டாஸ்க் மேனேஜர் மூலம் இந்த புத்துணர்ச்சி கிடைக்கும் வேலையை மேற்கொள்ளலாம்.

இதயத்தை பாதுகாக்கும் இயற்கை உணவு!

இன்றைய அவசர உலகில் நமது உடலின் ஆரோக்கியம் நாளுக்குநாள் சீர்கெட்டு வருகிறது என்கிறார்கள் இயற்கை உணவு ஆய்வாளர்கள். இதற்கு ஒரு நல்ல தீர்வையும் அவர்கள் கூறுகிறார்கள்.

மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் இதய சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். இதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்பது அவர்களின் கருத்து.

மேலும் இந்த உணவுத்திட்டம் புற்றுநோய் கோளாறுகளையும் குணமாக்கு
கிறது என்பதையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

1994 -ல் மாரடைப்பு வந்து மீண்ட 605 ஆண்-பெண்களைத் தேர்வு செய்து பாதிப்பேர்களை அமெரிக்க இதயக் கழக சிபாரிசு செய்த உணவுத் திட்டப்படி இறைச்சி ஐஸ்கிரீம் வெண்ணெய் முதலியன சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். இது முழுநலம் தரும் உணவுத் திட்டம்தான். மீதிப்பேர்களை இயற்கை உணவைச் சாப்பிடச் சொன்னார்கள்.

அதாவது இறைச்சி ஐஸ்கிரீம் வெண்ணை முதலியவற்றைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக பழங்கள் காய்கறிகள் தானியங்கள் பீன்ஸ் மீன் ஆலிவ் எண்ணை கடுகு எண்ணை சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆடு மாடு கோழி முதலிய இறைச்சி வகைகள் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

நான்கு ஆண்டுகள் கழித்து (1998இல்) இவர்களைப் பரிசோதனை செய்தபோது இயற்கை உணவுத் திட்டக்காரர்களிடம் 7 பேர் மட்டுமே புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள். ஆனால் அமெரிக்க இதயக்கழக உணவுத் திட்டக்காரர்களில் 12 பேர் புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள்.

இரண்டு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு இயற்கை உணவை நன்கு சாப்பிட வைத்ததில் புற்றுநோய் குறைந்தது.

இதய நோயைத் தடுக்கும் இயற்கை உணவில் புற்று
நோயைத் தடுக்கும் அம்சம் எது என்பதையும் தீவிரமாக ஆராய்ந்தார்கள். மத்திய தரைக்கடல் நாடுகளில் குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களே இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதற்குக் காரணம் இயற்கை உணவில் உள்ள நார்ச்சத்து நச்சுமுறிவு மருந்து மரபணுக்கள் உடைவது (டி.என்.ஏ. உடைவது) முதுமைத் தோற்றம் உண்டாவது போன்ற பிரச்னைகளை தடுக்கும் சி’ வைட்டமின் காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இதயநோய் புற்றுநோய் உட்பட எந்த நோயும் இன்றி வாழ இயற்கை உணவுத் திட்டத்தையே பின்பற்றுவது நலம் என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்!

தக்காளியில் உள்ள வைகேப்பன் பழத்தோல்களில் உள்ள ப்ளேவினாய்ட்ஸ் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெதியேனின் என்ற அமிலம் மீனில் உள்ள டைரேசின் அமிலம் மற்றும் துத்தநாக உப்பு முதலியவையே இத்தகைய உணவில் அதிகம் இருப்பதால் நோயின்றி நீண்ட நாள் ஆயுளைத் தருகிறது.

பிஸ்தா பெரிய `பிஸ்தா’தான்!-உடம்பை தேத்துபா…’

சக்தி வாய்ந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களை, ` என்ன பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. இந்த பிஸ்தாவைவிட, பருப்பு வகையைச் சேர்ந்த பிஸ்தாவுக்கு சக்தி நிறையவே உள்ளது.

இதனால்தான், புதிதாய் திருமணம் ஆனவர்களையும், திருமணம் முடிவானவர்களையும், `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ என்கிறோம்.

இப்படி சிறப்புமிக்க பிஸ்தாவுக்கு என்றே உலக அளவில் ஒரு தினம் கொண்டாடுவது எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.

சிறிய முடப்பட்ட திண்ணமான ஓட்டிற்குள் பச்சை நிறத்தில் காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ’ என்று உலக அளவில் அழைக்கிறார்கள்.

30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்துள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.

கி.மு.7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பிஸ்தா மரத்தை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்துள்ளது. அமெரிக்காவில் 1903 முதல் அங்குள்ள கலிபோர்னியா மாகாண பகுதிகளில் இந்த மரங்கள் அதிக அளவில் பயிர் செய்யபட்டன. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபடுகிறது.

சீனர்களும் பிஸ்தாவின் பலத்தை நிறையவே உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த பருப்பை `மகிழ்ச்சியான பருப்பு’ என்று அழைக்கிறார்கள். பிஸ்தா பருப்பின் வடிவத்தை வைத்தே, அதாவது அதுவாய் திறந்து பல்தெரிய சிரிப்பதுபோல் காணபடுவதால் இந்த பெயரை அவர்கள் அதற்கு சூட்டியுள்ளனர்.

சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். ஆரோக்கியம், சந்தோஷம், ராசியான எதிர்காலம் ஆகியவற்றின் சின்னமாக அவர்கள் பிஸ்தாவை கருதுவதுதான் இதற்கு காரணம்.

கலிபோர்னியாவில் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபட்டாலும், அதை அதிக அளவில் சாப்பிடுபவர்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் சீனர்கள் தான். தனி நபராக எந்த நாட்டினர் அதிக அளவில் பிஸ்தா சாப்பிடுகிறார்கள் என்று கணக்கெடுத்தால், அதில் முதலிடம் பிடிப்பவர்கள் இஸ்ரேலியர். இவர்களது நொறுக்குத் தீனிகளில் பிஸ்தாவும் முக்கிய இடம்பெறுகிறது.

இந்தியாவில் உஷ்ண பொருளாக பிஸ்தாவை பார்ப்பதால், அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவுதான். இந்தியாவில் பிஸ்தாவை அப்படியே சாப்பிடாவிட்டாலும், கேசர் பிஸ்தா சர்பத், ஐஸ் கிரீம், பிஸ்தா குல்பி ஆகியவற்றில் பிஸ்தா பயன்படுத்தபட்டு, இந்தியர்களால் சாப்பிடபடுகிறது.

ரஷ்ய நாட்டினர் கோடைகாலத்தில் பீர் குடிக்கும்போது, அதற்கு சைடு டிஷ் ஆக பிஸ்தா உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரித்துக் கொள்வதற்காக மதுபானத்துடன் சிறிதளவு பிஸ்தாவையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் : தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும்பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

– பிஸ்தா பற்றி மேலும் தெரிந்துகொள்ள .www.pistachiohealth.com என்ற இணையதளத்தை லாக் ஆன் செய்யவும்.

வியாதிகள் இல்லாத சிறுவர் உலகம்!

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். இந்தப் பொன்மொழியை மெய்யாக்க இருக்கிறது ஜீன் மருத்துவம். ஆம் எதிர்கால சந்ததிகளை நோயின்றி மலரச் செய்ய முடியும் என்பது ஜெனிட்டிக் துறையின் தாரக மந்திரம்.

ஆனால் இயல்புக்கு மாறான மாற்றங்களை ஏற்படுத்த கடுமையான விதிமுறைகளும் தடையும் அமலில் இருக்கிறது. இருந்தாலும் பரம்பரை வியாதிகளின்றி குழந்தைகள் பிறக்க ஜீன் மருத்துவத்தை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி கிடைத்திருக்கிறது.

பரம்பரை வியாதிகள் குழந்தைகளின் எமன். நோயுடன் பிறக்கும் குழந்தைகள் மற்றவர்களைப் போல இயல்பாக செயல்பட முடியாமல் போவதோடு பிறரின் கேலிக்கும் ஆளாகிறார்கள். இதனால் அந்தக் குழந்தையும் பெற்றோர்களும் மன நிம்மதியை இழக்கிறார்கள்.

இதுபோன்ற பரம்பரை வியாதி மற்றும் கொடிய நோய்களால் பல குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் இதை தடுக்கும் வகையில் ஜீன் மருத்துவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பரம்பரை வியாதிகளை குணப்படுத்தி நலமான சந்ததியை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இதையடுத்து கவுன்சைல் என்ற அமைப்பு இதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. உமிழ் நீர் பரிசோதனை மூலம் ஜீன்களை ஆராய்ந்து வகைப்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள். ஒரு தம்பதிக்கு 698 அமெரிக்க டாலரில் (32 ஆயிரம் ரூபாய்) ஜீன் பரிசோதனை செய்யப்படுகிறது.

தண்டுவட பாதிப்பு செல்களின் வளர்ச்சி குறைபாடு மற்றும் சைசிக் பைப்ராசிஸ் டாய்சாக்ஸ் உள்ளிட்ட பரம்பரை வியாதிகளுக்கு இந்த முறையில் தீர்வு காணலாம். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடியும் என்று மருத்துவர் குழுவினர் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் இந்த துறை சார்ந்த சில மருத்துவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஜிம்’ போக ஆசையா!

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு ஓடுகிறவர்கள் உண்டு. ஆனால் உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தினமும் தவறாமல் போவது மட்டும் அதிசயத்தை நிகழ்த்தி விடாது.

எல்லா விஷயங்களைம் போல உடற்பயிற்சிக்கும் சில விதிகளும் முறைகளும் இருக்கின்றன. அவற்றைச் சரியாக பின்பற்றவில்லை என்றால் உரிய பலனிருக்காது. சில நேரங்களில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஜிம்’மில் ஏற்படக்கூடிய பொதுவான பாதிப்புகள் குறித்து உடல்தகுதி நிபுணர் அல்தியா ஷா விளக்குகிறார்…

சரியான முறை

அனைத்து பயிற்சிகளும் அதிகபட்ச பலனைத் தரும்படி குறிபிட்ட முறையில் அமைக்கபட்டிருக்கின்றன. ஒருவர் தனது திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளிலேயே கடைசியாக அதிகபட்ச எடையைத் தூக்குவது அதிகமான பலனைத் தரும். ஆனால் சரியான முறையில் எடை தூக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வீணாக போகும். பலனேதும் இருக்காது.

அதிகமாகத் தூக்குவது

உங்கள் தசைகள் தாங்கக்கூடிய அளவை விட அதிகமான எடையைத் தூக்காதீர்கள். படிபடியாக எடையை அதிகரிப்பது தசை பலத்தைக் கூட்டுவதற்கான நல்ல வழியாகும். அத்துடன் நீங்கள் ஒருவருக்கு எடை தூக்க உதவும்போது எடை தூக்குபவருக்கு இடைறாக இல்லாமல் உங்கள் உடம்பை விலக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன்மூலம் எடை தூக்குபவருக்குக் காயம் ஏதும் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

சுத்தமே சுகாதாரம்

ஒரு ஜிம்’ உபகரணத்தை பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்திய பின்பும் அதை ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள். அதன்மூலம் தொற்று வியாதியால் பாதிக்கபடாமலும் அது பரவாமலும் தவிர்க்கலாம். உடற்பயிற்சிக்கூட நடத்தை விதிகளின்படி உடற்பயிற்சி உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பது வலிறுத்தபடுகிறது. குறிப்பாக இதயத் தசைக்கு வலுவூட்டும் எந்திரங்களை பயன்படுத்தும்போது! அம்மாதிரி வலியுறுத்தபட்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. பக்கத்தில் உள்ள உபகரணங்களில் இருந்து கூட நீங்கள் பயன்படுத்த போகும் கருவிக்கு கிருமிகள் பரவக் கூடும் என்பதால் துடைத்துவிட்டு பயன்படுத்துவதே நல்லது.

வெறுங்காலுடன் போகாதீர்கள்

நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத மூடபட்ட பகுதிகள் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலாக அமைகின்றன. எனவே எப்போதும் காலணி அணிந்தே பயிற்சி செய்யு
ங்கள். அதன்மூலம் அத்லெட்ஸ் பூட்’ என்ற பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்த பூஞ்சைத் தொற்றால் கால் விரல்களுக்கு இடையே அரிப்புடன் கூடிய செதில்களும் கொப்புளங்களும் ஏற்படும். காலணி அணிவது ஜிம்’மின் வழுவழுப்பான தரையில் வழுக்கி விழுவதையும் தடுக்கும்.

அடிக்கடி பொது நீச்சல் குளத்தில் குளிபவர்களுக்கு டெர்மட்டிடிஸ்’ என்ற தோல் நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. நீச்சல் குளங்களில் கலக்கபடும் குளோரின் பெரும்பாலான கிருமிகளைக் கொன்றுவிடும். ஆனால் குளோரின் அளவு போதுமானதாக இல்லாவிட்டால் உங்களுக்கு மயிர்க்கால் தொற்று ஏற்படும். அதற்கு எதிர்உயிரி சிகிச்சை அவசியமாகும்.

செல்போனை தவிருங்கள்

உடற்பயிற்சிக்குத்தான் உடற்பயிற்சிக் கூடம். எனவே அங்கே அதில் மட்டும் கவனமாக இருங்கள். ஜிம்’மில் போய் எஸ்.எம்.எஸ்.’ அனுப்புவதும் அரட்டையடிப்பதும் உங்கள் நேரத்தை மட்டும் வீணாக்குவதில்லை. காயமடைம் அபாயத்தைம் ஏற்படுத்துகிறது.

சரி பாருங்கள்

எந்த உபகரணத்தையும் பயன்படுத்தும் முன் அதில் நட்டு’கள் ஸ்க்ரூ’க்கள் எதுவும் லூசாக’ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். எந்திரம் கடகட’வென்று ஆடினாலோ அசைவுகள் அதிகமாக இருந்தாலோ ஜிம்’ நிர்வாகியிடம் தெரிவித்து விட்டு வேறு உபகரணத்துக்கு மாறிக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தின் வண்ணங்கள்! காவி வெள்ளை பச்சை நிறங்கள்
காவி வெள்ளை பச்சை நிறங்களை எங்கு பார்த்தாலும் நமக்குள் ஓர் இதமான உணர்வு பரவும். காரணம் அவை நமது தேசியக் கொடியின் வண்ணங்கள்.

இந்த வண்ணங்கள் உள்ளத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தேசியக் கொடியின் மூவண்ண அடிப்படையிலான காய்கறிகள் பழங்களைச் சாப்பிட்டால் உடல்நலத்தைக் காத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் அவர்கள்.

இவ்வண்ணக் காய்கறிகளும் பழங்களும் வைட்டமின்கள்’ பைட்டோ கெமிக்கல்கள்’ போன்ற ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களைக் கொண்டிருக்கின்றனவாம். மூவண்ண மகிமை’ பற்றிப் பார்ப்போம்…

காவி (ஆரஞ்சு)

இந்த நிறத்தில் உள்ள பழங்கள் காய்கறிகளில் பீட்டா கரோட்டின்’ வைட்டமின் சி’ மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. வயது சார்ந்த பார்வைக் குறைபாட்டைத் தடுக்க இவை உதவுகின்றன. புற்றுநோய் ஆபத்தைத் தடுக்கக்கூடியவையும் கூட. மேலும் இவை கொலஸ்ட்ரால் ரத்த அழுத்த அளவைக் குறைப்பதுடன் மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் காக்கின்றன.

இவ்வகையில் வரும் பழங்கள் காய்கறிகள்:

ஆரஞ்சு: ஆரஞ்சுப் பழம் வைட்டமின் சி’ சத்துச் செறிந்தது. உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஆன்டி ஆக்சிடன்ட்களை’ கொண்டிருக்கும் ஆரஞ்சு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்துக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.

கேரட்: பார்வைத்திறனுக்கு கேரட் மிகவும் அத்தியாவசியமானது. வைட்டமின் சி’ கே’ பொட்டாசியம்’ நார்ச்சத்து மக்னீசியம்’ பாஸ்பரஸ்’ உள்ளிட்ட சத்துகளின் ஆதாரமாக இது உள்ளது.

பப்பாளி: இவற்றில் அதிகமாக போலிக் அமிலமும்’ தனித்தன்மையான புரத செரிமான நொதிகளும் உள்ளன. வைட்டமின் ஏ’ ஈ’ பொட்டாசியம்’ செறிந்த பப்பாளி இயற்கையான மலமிளக்கியாகவும் உள்ளது.

வெள்ளை

வெள்ளை நிற காய்கறி மற்றும் உணவு வகைகள் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கின்றன. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவை சீராகப் பராமரிக்கவும் இவை உதவுகின்றன.

வெங்காயம் பூண்டு: சல்பைடுகள்’ செறிந்த வெங்காயம் பூண்டு ஆகியவை ஆல்லிசின்’ என்ற பைட்டோகெமிக்கலை’யும் கொண்டிருக்கிறது. உடம்புக்குள் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கின்றன. ரத்தக் கொழுப்பு ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால்’ மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன.

முள்ளங்கி: நார்ச்சத்து மிக்க இது ஈரப்பதம் மிக்கது. இயற்கையான மலமிளக்கி. ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் இது தோலுக்கும் கண்களுக்கும் மிகவும் நல்லதாகும்.

பச்சை

சாப்பிடுவதற்குச் சிறந்த பழங்களும் காய்கறிகளும் இவ்வகையில் வருகின்றன. இவை குளோரோபில்’ நார்ச்சத்து போலிக்’ அமிலங்கள் கால்சியம்’ வைட்டமின் சி’ பீட்டா கரோட்டின்’ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

பசலைக் கீரை: இருமபுச் சத்து போலிக் அமிலங்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றன. பிறப்புக் குறைபாடுகளைக் குறைக்க உதவுகின்றன. இதன் அதிகமான கால்சியம் மற்றும் நார்ச்சத்து செரிமானத்துக்கும் தோல் கண்களுக்கும் இதை நல்லதாக்கு கிறது. புரோக்கோலி’: புற்றுநோய்க்கு எதிரான தன்மைகளை இது கொண்டுள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள்’ தாது உப்புகள் வைட்டமின் ஏ’ சி’ ஆகியவற்றால் இது ஆரோக்கியக் கவசமாகத் திகழ்கிறது.

குரங்குகளின் மொழி!’

“வார்த்தையை அளந்து பேசு”. இப்படி யாராவது நம்மைக் கூறினால் கோபம் வந்துவிடும். மனிதர்கள் இடையே புழக்கத்தில் உள்ள பழமொழிதான். ஆனால் நாம் அளந்து பேசுகிறோமா என்பது சந்தேகம்தான்.

நாம் எப்படியோ ஆனால் குரங்குகள் அளவாகத்தான் ஒலி எழுப்புகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவை ஏன் அளந்து ஒலி எழுப்புகின்றன என்பதிலும் வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்கிறதாம். தொடர்ந்து படியுங்கள்.

தைவான் நாட்டில் பர்மோசான் மக்காகு என்ற பகுதியில் உள்ள குரங்குகளை ராம்ப்டன் பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குரங்குகள் 35 விதமான ஒலி சைகைகளை வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்துகின்றன என்று தெரியவந்தது. அவை அனைத்தும் மிகவும் சுருக்கமான சைகை முறைகளாகும். மனிதர்கள் பேசும் வா’ போ’ சாப்பிடு’ அங்கே போவோம்’ என்பது போன்ற சுருக்கமான பாஷை முறை.

குரங்குகள் சில நேரங்களில் நீண்ட நேரம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் விஞ்ஞானிகளுக்குப் புரிந்துவிட்டது. அது காதல் செய்கிறது. இனப்பெருக்க காலம் நெருங்கிவிட்டது என்று’.

மற்ற நேரங்களில் குரங்குகள் சுருக்கமாக ஒலி எழுப்ப ஏதாவது காரணம் உண்டா என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. மரத்துக்கு மரம் தாவி தப்பி ஓடும் ஆற்றல் இருந்தாலும் குரங்குகளுக்கும் எதிரிகள் உண்டல்லவா மற்ற விலங்குகளைவிட தம் இன எதிரிகளிடம் (எல்லாம் உணவு உறைவிட எல்லைக்காக சண்டையாளிகள் ஆனவர்கள்) இருந்து தப்பிக்கவும் அவற்றிடம் இருந்து தப்பிக்கத்தான் இந்த அடக்கமான ஒலி வழக்கம்.

மேலும் ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால் குரங்குகளின் ஒலியும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாம். இதற்கு முன்பாக செய்யப்பட்ட ஆய்வுகளின்படி வரையறை செய்யப்பட்ட வழக்கத்தில் இருந்து அவற்றின் பாஷை’ மிகவும் மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

குரங்குகளின் பாஷை’ புரியாவிட்டாலும் அவை கற்றுத்தரும் பாடம் இதுதான்…

“குரங்கு கூட்டத்தப் பாருங்க…
அது அளவா சத்தம் போடுது யோசிங்க…”

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உத்வேகம்!

நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு உத்வேகம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்
கிறது.

துறைமுகங்கள் மின்சக்தி நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் தொலைத்தொடர்புத் துறை ஆகியவை சிறப்புக் கவனிப்பு’ப் பெறவிருக்கும் ஐந்து பெரும துறைகள்.

இதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத்
தற்போது ஒதுக்கப்படும் நிதியை விட 10 மடங்கு அதிகமாகும்.

உள்கட்டமைப்புத் துறையில் நிறுவனங்கள் வங்கிகள் முதலீடு செய்ய விரும்பும் வகையில் மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. தவிர கண்டிப்பான கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் கூடிய திறன் வாய்ந்த கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை நிறைவேற்றி முடிக்கவும் அரசு திட்டமிடுகிறது.

2014-ம் ஆண்டுவாக்கில் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் அரசின் இலக்கு என்று உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு உள்கட்டமைப்புத் துறையில் அரசு மற்றும் தனியாரின் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக உள்ளது.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உதவுவதற்கு வங்கிகள் காட்டிய தயக்கமும் அரசை யோசிக்க வைத்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையால் பல திட்டங்கள் தாமதாகும் நிலை.

அரசு திரட்டியுள்ள புள்ளிவிவரங்களின்படி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் 15 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி விதிக்கின்றன. கடந்த ஓராண்டில் இது மேலும் ஒரு சதவீதம் உயர்ந்திருக்கலாம் என்று ஓர் அதிகாரி கூறுகிறார்.

மேலும் வங்கிகள் பல்வேறு வகைப்பட்ட வட்டி விகிதங்களை விதிக்கின்றன. அதனால் திட்டக் கட்டுமானப் பணியின்போதே கடுமையான வட்டி விதிக்கப்படும் ஆபத்தும் ஏற்படுகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிலையான வட்டி விகிதங்களை வங்கிகள் விதிப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது’ என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.