உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உத்வேகம்!

நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு உத்வேகம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்
கிறது.

துறைமுகங்கள் மின்சக்தி நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் தொலைத்தொடர்புத் துறை ஆகியவை சிறப்புக் கவனிப்பு’ப் பெறவிருக்கும் ஐந்து பெரும துறைகள்.

இதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குத்
தற்போது ஒதுக்கப்படும் நிதியை விட 10 மடங்கு அதிகமாகும்.

உள்கட்டமைப்புத் துறையில் நிறுவனங்கள் வங்கிகள் முதலீடு செய்ய விரும்பும் வகையில் மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டிருக்கிறது. தவிர கண்டிப்பான கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் கூடிய திறன் வாய்ந்த கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை நிறைவேற்றி முடிக்கவும் அரசு திட்டமிடுகிறது.

2014-ம் ஆண்டுவாக்கில் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் அரசின் இலக்கு என்று உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைக்கு உள்கட்டமைப்புத் துறையில் அரசு மற்றும் தனியாரின் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக உள்ளது.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உதவுவதற்கு வங்கிகள் காட்டிய தயக்கமும் அரசை யோசிக்க வைத்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையால் பல திட்டங்கள் தாமதாகும் நிலை.

அரசு திரட்டியுள்ள புள்ளிவிவரங்களின்படி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் 15 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி விதிக்கின்றன. கடந்த ஓராண்டில் இது மேலும் ஒரு சதவீதம் உயர்ந்திருக்கலாம் என்று ஓர் அதிகாரி கூறுகிறார்.

மேலும் வங்கிகள் பல்வேறு வகைப்பட்ட வட்டி விகிதங்களை விதிக்கின்றன. அதனால் திட்டக் கட்டுமானப் பணியின்போதே கடுமையான வட்டி விதிக்கப்படும் ஆபத்தும் ஏற்படுகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிலையான வட்டி விகிதங்களை வங்கிகள் விதிப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது’ என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

%d bloggers like this: