மருத்துவக் காப்பீடு… அறிய வேண்டிய விஷயங்கள்!

மருத்துவக் காப்பீடு என்பது ரிஸ்க்’ சார்ந்த பாலிசி என்பதால் என்பதால் பலரும் அதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று தள்ளிப்போடும் நிலை இருக்கிறது.

ஆனால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மன அழுத்தம் ஆரோக்கியமற்ற உணவு முறை போதுமான உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் மருத்துவமனைக்கு நடக்கும் நடை கூடிக் கொண்டே இருக்கிறது. மருத்துவ பில்’கள் உங்கள் சட்டைப் பையைக் காலி செய்துவிடும்.

சரியான பொருளாதார நிலையைப் பராமரிப்பதற்கு மருத்துவக் காப்பீடு அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவக் காப்பீடு பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சுருக்கமாக உங்களுக்காக… ஒற்றை பாலிசியால் மட்டும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் சமாளிக்க முடியாது. அவ்வளவாகத் தீவிரமான வியாதியாக இல்லாவிட்டாலும் தற்போது 2 லட்ச ரூபாய் வரையிலும் கூட செலவாகிறது. எனவே நீங்கள் குழு கம்பெனி திட்டத்தில் இருந்தாலும் இன்னொரு மருத்துவக் காப்பீடு பெறுவது பயனுள்ளது. தற்போது பல புதுமையான வருமான வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. ஒரு பேமிலி புளோட்டர்’ என்பது நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் பட்ஜெட்’டை பொறுத்து 5 முதல் 10 லட்சத்துக்குக் காப்பீடு பெறலாம். குறிப்பிட்ட காப்பீட்டு பாலிசி பல் மருத்துவம் மருந்துகள் நர்ஸ் கவனிப்பு நீண்ட கால கவனிப்பு ஆகியற்றுக்கு உத்திரவாதம் அளிக்கிறதா என்று தெளிவாக ஆராயப்பட வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதற்கு அளவற்ற வகையில் தொகையைத் திரும்பிப் பெறுவது மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின் சிறப்புக் கவனிப்பு போன்ற ஆட்- ஆன்’ வசதிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். பாலிசியின் சீலிங்’ வயது என்னவென்று பார்க்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் 70 வயதை எல்லையாகக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் காப்பீட்டுடன் ரிட்டர்னை’யும் அளிக்கும் புதுமையான திட்டங்கள் இருக்கின்றன. இவை இரட்டைப் பலன்கள் கொண்டவை. இந்தத் திட்டங்களில் ஒருவர் பணிபுரியும் வரை சேரும் தொகையிலிருந்து ஓய்வுக் காலத்தில் ரிட்டர்னை’ பெறலாம். வயது கூடக் கூட பிரீமிய தொகை அதிகரிக்கும் என்பதால் இளம் வயதிலேயே காப்பீடு மேற்கொள்வது நல்லது.

%d bloggers like this: