வியாதிகள் இல்லாத சிறுவர் உலகம்!

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். இந்தப் பொன்மொழியை மெய்யாக்க இருக்கிறது ஜீன் மருத்துவம். ஆம் எதிர்கால சந்ததிகளை நோயின்றி மலரச் செய்ய முடியும் என்பது ஜெனிட்டிக் துறையின் தாரக மந்திரம்.

ஆனால் இயல்புக்கு மாறான மாற்றங்களை ஏற்படுத்த கடுமையான விதிமுறைகளும் தடையும் அமலில் இருக்கிறது. இருந்தாலும் பரம்பரை வியாதிகளின்றி குழந்தைகள் பிறக்க ஜீன் மருத்துவத்தை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி கிடைத்திருக்கிறது.

பரம்பரை வியாதிகள் குழந்தைகளின் எமன். நோயுடன் பிறக்கும் குழந்தைகள் மற்றவர்களைப் போல இயல்பாக செயல்பட முடியாமல் போவதோடு பிறரின் கேலிக்கும் ஆளாகிறார்கள். இதனால் அந்தக் குழந்தையும் பெற்றோர்களும் மன நிம்மதியை இழக்கிறார்கள்.

இதுபோன்ற பரம்பரை வியாதி மற்றும் கொடிய நோய்களால் பல குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் இதை தடுக்கும் வகையில் ஜீன் மருத்துவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பரம்பரை வியாதிகளை குணப்படுத்தி நலமான சந்ததியை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இதையடுத்து கவுன்சைல் என்ற அமைப்பு இதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. உமிழ் நீர் பரிசோதனை மூலம் ஜீன்களை ஆராய்ந்து வகைப்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள். ஒரு தம்பதிக்கு 698 அமெரிக்க டாலரில் (32 ஆயிரம் ரூபாய்) ஜீன் பரிசோதனை செய்யப்படுகிறது.

தண்டுவட பாதிப்பு செல்களின் வளர்ச்சி குறைபாடு மற்றும் சைசிக் பைப்ராசிஸ் டாய்சாக்ஸ் உள்ளிட்ட பரம்பரை வியாதிகளுக்கு இந்த முறையில் தீர்வு காணலாம். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடியும் என்று மருத்துவர் குழுவினர் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் இந்த துறை சார்ந்த சில மருத்துவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

%d bloggers like this: