கண்ணாடி தேவையில்லை : தூரப் பார்வைக்கு தீர்வு!

தூரப் பார்வையால் அவதிப்படுபவர்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. கண்ணாடி கான்டாக்ட் லென்ஸ் லேசர் சிகிச்சை எதுவும் வேண்டாம். புதுமையான முறையில் தீர்வுகாண வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கண் ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. 551 இளைஞர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் தூரப்பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களும் இயல்பானவர்களுக்கும் இடையே உள்ள டி.என்.ஏ. வேறுபாடுகளை ஆராய்ந்ததில் தூரப்பார்வைக்கான ஜீன்கள் இனம் காணப்பட்டன. இவற்றுக்கு ஹெபாடோசைட் குரோத் பேக்டர் (எச்.ஜி.எப்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து தூரப் பார்வைக்கு தீர்வு காண முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது புதிய மருந்து தயாரிக்க உதவுவதோடு உலக கண் மருத்துவத்துறையில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆய்வாளர் பால் பெய்டு கூறும்போது “பொதுவாக பார்வையைப் பாதிப்பதில் ஜீன்களும் சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஜீன்களின் பங்கை அறிந்துவிட்டதால் அவற்றின் போக்கை திசைதிருப்பிவிடுவதன் மூலம் பார்வை பாதிப்பில் இருந்து விடுபட முடியும். இந்த முறையில் தற்போது தூரப்பார்வைக்கு மட்டுமே கண்ணாடி லேசர் சிகிச்சை இல்லாமல் தீர்வு காண முடியும்” என்றார்.

%d bloggers like this: