சிலந்தி மனிதன் போல சுவரில் நடக்க உதவும் ஷூ’

ஸ்பைடர் மேன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிலந்தி மனிதனான ஸ்பைடர்மேன் அநாயசமாக சுவர் விட்டு சுவர் தாவிச் செல்லும் காட்சியை குழந்தைகள் பிரமிப்புடன் ரசிப்பார்கள். அதுபோல் உண்மையிலேயே சுவரில் தாராளமாக நடந்து செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் ஆம் விஞ்ஞானிகள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்காக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கருவி ஷூவின் நவீன வடிவம்போல உள்ளது. துணையாக குச்சியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை விரும்பாதவர்கள் குச்சியின்றியும் நடக்கலாம். அவர்களுக்கு ஒருவித உபகரணம் வழங்கப்படும்.

இந்த ஷூவை மாட்டிக் கொண்டு சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) போல நீங்களும் சுவரில் நடக்கலாம். இந்த ஷூ இரு அடுக்குகளைக் கொண்டிருக்கும். அடியில் உள்ள அடுக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். ஷூவின் அடியில் உள்ள தகட்டில் ஏராளமான ண்துளைகள் இருக்கும். நாம் நடக்க ஆரம்பிக்கும்போது ஏற்படும் அழுத்தம் முதல் அடுக்கில் உள்ள நீரை மேலேறச் செய்யும். இதனால் கீழடுக்கில் ஏற்படும் வெற்றிடம் சுவருடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இது மனிதனை தாங்கி நிறுத்தும். இதனால் நாம் சுவரில் நடந்து செல்ல முடியும்.

அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகம் இதை வடிவமைத்துள்ளது.

%d bloggers like this: