கண்ணே நலமா?


முதுமையில் வர வேண்டிய பார்வைக் குறைபாடு இன்று இளம் வயதிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டு வந்தால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

பொதுவாக ஒருவரது தெளிவான பார்வைக்கு… தினசரி மல்டி வைட்டமின் 500 மில்லிகிராம் வைட்டமின் சி 400 வைட்டமின் இ சர்வதேச யூனிட்கள் 15 மில்லிகிராம் பீட்டா கரோடீன் 80 மில்லிகிராம் துத்தநாகம் 2 மில்லிகிராம் செம்பு பி காம்ளெக்ஸ் மற்றும் 400 மைக்ரோகிராம் போலிக் அமிலம் 2500 மில்லிகிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

– இவையெல்லாம் தேவைபடுகிறது.

கண் பார்வைக்கு வெளிச்சம் அத்தியாவசியம் என்றாலும், நீண்ட நேரம் வெளிச்சத்தில் இருந்தால் கண் பார்வை பாதிக்கபடும் என்பதும் உண்மையே. வைட்டமின் சி, வைட்டமின் இ, கரோடீனாயிட் உள்ளிட்ட உயிர்வளியேற்ற எதிர்ப்பி ஊட்டச் சத்துக்கள் சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும்.

விழித்திரையை பாதுகாப்பதில் கரோடீனாயிட்களுக்கு பெரும் பங்கு உண்டு. தினசரி 10 மில்லிகிராம் அளவு இயற்கையாக உருவாகும் 600-க்கும் அதிகமான கரோடீனாயிட்களுள் லூடீன் குறிப்பிடத்தக்கது. காரட்களுக்கு ஆரஞ்சு வண்ணத்தைத் தருவது கரோடீனாயிட்கள் தான்.

சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களில் உள்ள பழங்கள், காய்கள், மற்றும் இலை தழைடன் கூடிய பசுமைக் காய்கள், கீரைகள் ஆகியவற்றில் இதனைக் காணலாம். பருப்பு வகைகள் ஸ்வீட் கார்ன், பட்டாணி, ரோகோலி (காலி பிளவர் வகை) ஆகியவற்றிலும் லூடீன் அதிகம் உள்ளது.

கரோடீனாயிட் வகைகளுள் மற்றொன்று லைகோபீன். இது தக்காளியில் காணப்படுகிறது. இதுவும் க பாதுகாப்பிற்கு ஏற்றதாகும்.

1995-ம் ஆண்டு முதலே லூடீன் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. வர்த்தக ரீதியாக இது மேரிகோல்ட் மலரின் இதழ்களில் இருந்து எடுக்கபடுகிறது. நீல நிறக் கண்கள் உடையவர்களின் விழித்திரைகளில் பாதுகாப்பு நிறமிகள் மிகக் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு இந்த லூடீன் அதிக அளவில் தேவைபடும். இந்த ஊட்டச்சத்து கடுகு, கீரை, ஸ்பைநாச், கோலார்ட் உள்ளிட்ட கருமை, பசுமை, இலையுடன் கூடிய காய்களிலும், முட்டைகளிலும் கிடைக்கிறது.

கொழுப்பு அமிலங்களும் ஆரோக்கியமான கண் பார்வையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், ப்ளாக்ஸ் விதைகள், பருப்பு வகைகள், மீன்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.

தினசரி 500 மில்லிகிராம் தண்ணீரில் கரையும் தன்மை கொண்ட வைட்டமின் சி, சராசரியான கண் ஆரோக்கியத்துக்கு தேவையானதாகும். அதிக அளவு வைட்டமின் சி கண்புரை நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது, விழித்திரை பொட்டு திசு அழிவைத் தாமதபடுத்துகிறது.

இந்த வைட்டமின் சி ஆரஞ்சுச்சாறு மற்றும் சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் கிடைக்கும்.

தினசரி 400 மில்லிகிராம் உயிர்வளியேற்ற எதிரப்பிகள் மற்றும் கரையும் தன்மை கொண்ட 8 வைட்டமின்களின் கூட்டு பெயர் வைட்டமின் இ ஆகும். கண்புரை மற்றும் விழித்திரை பொட்டு திசு அழிவைத் தடுக்கும் ஆற்றல் இதற்கும் உண்டு. இதை சில ஆய்வுகள் வெளிபடுத்துகின்றன.

கொட்டை, சாலட், பட்டாணி, வெண்ணெய், பருப்பு வகைகள், இனிப்பு உருளை மற்றும் கொழுப்பில் இருந்து தயாரிக்கபடும் செயற்கை வெண்ணை ஆகியவற்றில் `வைட்டமின் இ’ கிடைக்கிறது. நமக்கு தினமும் அத்தியாவசியத் தேவையான துத்தநாகம், உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் காணப்படுகிறது. இதன் நோய் எதிர்ப்பு சக்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெட்டுக்காயங்கள் எளிதில் குணமடையும். சுவை, நுகர்தன்மைக்கும் இது மிகவும் அவசியமாகும். துத்தநாகம் சிவப்பு இறைச்சி, கோழி, ஆயிஸ்டர் மீன், பருப்பு வகைகள், வேக வைத்த பீன்ஸ் ஆகியவற்றில் கிடைக்கிறது.

அதிக அளவு சோடியம் கண்புரைக்கு வழிவகுக்கும். தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய அதிகபட்ச சோடியம் 2000 மில்லிகிராம் மட்டுமே. முடிந்தவரை அன்றைக்கு சமைத்த உணவை உட்கொள்ளவும்.

ஆரோக்கிய உணவுக் கட்டுபாடு, கால்சியம் தேவைக்காக கொழுப்பு நீக்கபட்ட பால் பொருட்கள், 100 சதவீத காய்கறிச் சாறுகள், பழச்சாறுகள், முலிகைத் தேநீர், தண்ணீர் ஆகியவை அவசியம். அதிக அளவு நீராகாரம் பருகுவது கண் எரிச்சலை கணிசமாகக் குறைக்கும்.

%d bloggers like this: