விக்கிபீடியாவிற்கு கூகுள் நன்கொடை

இணையத்தில் இயங்கி வரும் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா வளர்ச்சிக்கு கூகுள் நிறுவனம் அண்மையில் 20 லட்சம் டாலர் நன்கொடை வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை அமைத்து இயக்கி வரும் விக்கிமீடியா பவுண்டேஷன் அமைப்பிடம் இது வழங்கப்பட்டது. இந்த நிதி, விக்கிபீடியாவின் தொழில் நுட்ப கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும். பயன்படுத்து வதற்கு எளிமையான தாகவும், ஒரே நேரத்தில் பலருக்கு விரைவில் கிடைப்பதாகவும் விக்கிபீடியா வினை மாற்ற இந்த நிதி உதவும் என்று இந்த அமைப்பின் செயல் குழு உறுப்பினர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்தார்.
இன்டர்நெட்டின் மிகப் பெரிய வெற்றி என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் நம் கண்களின் முன் தெரிவது விக்கிபீடியா கலைக் களஞ்சியம் தான். மக்களால் உருவாக்கப்பட்டு இதில் கிடைக்கும் தகவல்கள் இந்த உலகில் நமக்கும் நம் சந்ததியினருக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும் என கூகுள் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரையன் அறிவித்தார்.
விக்கிமீடியா பெரும்பாலும் தனி நபர்களால் வழங்கப்படும் நன்கொடை களைக் கொண்டே செயல்படுத்தப்படுகிறது. சென்ற 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் 80 லட்சம் டாலருக்கு மேல் நிதி அளித்துள்ளனர். இது விக்கிமீடியாவின் பட்ஜெட்டில் நான்கில் மூன்று பங்காகும்.
விக்கிமீடியா பிற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.விக்கிபுக்ஸ் (http://www.wikibooks.org/) விக்ஷனரி (http://www.wiktionary.org/) விக்கிமீடியா காமன்ஸ் (http://commons.wikimedia.org/) ஆகிய தளங்களும் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டு வருகின்றன.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,054 other followers

%d bloggers like this: