Daily Archives: மார்ச் 3rd, 2010

உலக டிஜிட்டல் நூலகம்

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம் வீட்டில் நம் தாத்தா அல்லது அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்த போட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரி செய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போல உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம், பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம்.
ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவைச் சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில், இரண்டு போட்டோக்கள் கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படி யெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. போட்டோக்களின் கீழே, நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக் காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணைய தளம். இதன் முகவரி: http://www.wdl.org/en/

ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்

தேவையானப் பொருட்கள்:

*  பால் – 1 லிட்டர்
* பச்சரிசி – 1 கைப்பிடி
* சர்க்கரை – 1 கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளலாம்)

செய்முறை:

* முதல் முறை – அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
* பால் காய்ந்ததும் அரிசியைக் கழுவி பாலுடன் சேர்க்கவும்.
* அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும்.
* அரிசி குழைய வெந்ததும் இறக்கி வைத்து பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி பரிமாறவும்.
* இரண்டாம் முறை
* பாலைக் காய்ச்சவும்.
* கழுவிய பச்சரிசியைச் சேர்க்கவும்.
* குக்கரில் வைத்து குழைய வேக வைத்து எடுக்கவும்.
* குக்கரிலிருந்து இறக்கி சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி சர்க்கரை கரைந்ததும் மூடி வைத்துப் பரிமாறவும்.

சிரிக்க வைச்சுட்டேன்ல…!(உடல்நலம் )

நல்ல `ஜோக்’கை கேட்டால் கூட இதற்கெல்லாம் சிரிக்க வேண்டுமா என்பது போல் சிலர் முகபாவம் காட்டுவார்கள். வாழ்க்கை என்பது `சீரியசான’ விஷயம் என்பது இவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும். வேறு சிலரோ எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள். தங்களுக்கு நேரும் கஷ்டங்களைக் கூட!

“நம்மாளை’க் கவரணும்னு நடுரோட்டில `வீலிங்’ பண்றேன் பேர்வழின்னு `தடால்’னு விழுந்தேன் பாரு… அவ விழுந்து விழுந்து சிரிச்சா. எப்படியோ அவளை பார்க்க வைச்சுட்டேன்ல… அது போதும்!’ என்று சிரிப்பார்கள் சிலர்.

எப்போதுமே வாழ்க்கையின் வேடிக்கையான பக்கத்தை மட்டுமே பார்பது உங்களை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும் என்கிறார்கள், நிபுணர்கள்.

ஒரு நிகழ்வு-

டாக்டரிடம் சென்ற ஒரு மனிதர், தனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்.

அவரிடம் முன்று பாட்டில் மாத்திரைகளைக் கொடுத்த டாக்டர் சொன்னார்: “நீங்கள் காலையில் கண் விழிச்சதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் பச்சை மாத்திரையைச் சாப்பிடுங்க. மதிய உணவுக்கு பிறகு ஒரு கிளாஸ் தண்ணீருடன் நீல மாத்திரையைச் சாப்பிடுங்க. சிவப்பு மாத்திரையை ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரவு சாப்பிடுங்க.”

அந்த ஆள் பயந்து போனார். “எனக்கு என்ன பிரச்சினை டாக்டர்?” என்று கேட்டார்.

“போதுமான தண்ணீர் குடிக்காதது தான் உங்களோட பிரச்சினை.”

இதை படிக்கும்போது சிரிப்பு வருதா? நல்லது. உங்களை ஆரோக்கியமாக வைப்பதற்கான சிறந்த வழி சிரிப்பு.

இதுபற்றி தேசிய மனோவியல் நிறுவனத்தின் மனோவியல் நிபுணர் டாக்டர் நிகில் ரகேஜா, `சிரிப்பு என்பது ஓர் உணர்வு வெளிப்பாடு’ என்கிறார்.

அவர் கூறுகையில், “ஒருவரது உள்நிலையின் வெளிப்பாடு தான் சிரிப்பு. ஒருவரின் வெளி பாடுகளுடன் தொடர்புடைய ஒன்று இது. சிரிப்பது, ஒருவரின் உள்நிலையை உயர்த்துகிறது” என் கிறார்.

ஹார்மோன்களின் வெளியீட்டினால் தூண்டபடும் சிரிப்பு, மனஅழுத்தத்தைத் தளர்த்தும் வேதி வினைகளைத் தூண்டுகிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நாம் சிரிக்கும்போது நமது உடல் உள்ளமை பானது `என்டார்பின்’, `என்கேபாலின்’ போன்ற வேதிபொருட்களை விடுவிக்கிறது. இவை, மூளைக்குள் ஓர் இயற்கையான நல்ல உணர்வை ஏற்படுத்தும் `நிரோகெமிக்கல்கள்’ ஆகும். மூளை நரம்புகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளன. உணர்வு அமைப்பு நரம்புகள், பகுதி உணர்வு அமைப்பு நரம்புகள். இந்த இரு பகுதி நரம்புகளும் பல்வேறு வேதி பொருட்களை விடுவிக்கின்றன. அவை, மனநிலை, நடத்தை, உடம்பை பாதிப்பவையாக இருக்கின்றன. அவை சேதபடுத்துவதாகவோ அல்லது செறிவூட்டுவதாகவோ இருக்கலாம்.

“நாம் மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போது, மூளையின் உணர்வு அமைப்பு நரம்புகள் `ஆக்டிவ்’ ஆகின்றன. கவலையைச் சமாளிக்கும் வேதிபொருட்களை அந்த நரம்புகள் வெளியிடுகின்றன. மனஅழுத்தமான நிலையைச் சமாளிக்க உதவும் ஹார்மோன்களும் வெளியிடபடுகின்றன” என்கிறார், டாக்டர் ரகேஜா.

எப்போதும் இளமை வேண்டுமா-‘கறிவேப்பிலை’

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் – தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

படுக்கையறையில் படிகள் பல

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது.

ஆகவே, `உறவு’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி…

முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள்
நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.

இரடாவது : படி தனித்தனியே சுற்றுலா
பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

முன்றாவது படி : ஒரு புதிய இடத்தில்…
ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

நான்காவது படி :`பிளாஷ்பேக்’கில் முழ்குவது…
நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர
வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.

ஐந்தாவது படி : தடாலடியான செயல்பாடுகள்
விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.’ உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோமைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினை’ விடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி றது, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

ஆறாவது படி : விலகி… சீண்டி…
தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த காதலர் தினத்துக்கு வருகிறது…

காதலர் தினம் ஒரு உலகத் திருவிழாவாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் காதலர்கள் விதவிதமான முறைகளில் காதலர் தினத்தை வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் காதலர் தினம் கடந்து சென்றது. அதற்குள்ளாக அடுத்த காதலர் தினத்துக்கு விஞ்ஞானிகளும் புதிய யுக்தியுடன் தயாராகி வருகிறார்கள்.

புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று நறுமணத்துக்கான ஜீன்களை சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளது. 13 விதமான ஜீன்களை பகுத்து கலவையாக்கி வண்ண வண்ணக் குழல்களுடைய மலரையும், மணத்தையும் உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது மல்லிகையில் இருந்து மல்லிகை மணம், ரோஜாவில் இருந்து ரோஜா மணம் தரும் சென்டுகளே தயாரிக்கப்படுகிறது. வாசனை ஜீன்கள் கண்டறியப்பட்டுவிட்டதால், இனி நாம் விரும்பும் மணத்தை வாசனைத் திரவியத்தில் கொண்டு வர முடியும். அதேபோல பழங்கள், உணவுப் பண்டங்கள் ஆகியவற்றிலும் கவர்ச்சி, புத்துணர்ச்சிட்டும் வாசனையை கொண்டு வரலாம். இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டும்.

அடுத்த காதலர் தினத்துக்குள்ளாக விதவிதமான மணமுள்ள சென்ட் தயாரிக்க அனுமதி கோரப்பட்டு உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் உங்கள் ஜோடிக்கு பிடித்த வாசனையை வெளிப்படுத்தி கவரலாம். பிடிக்காதவர் நெருங்கி வந்தால் துர்நாற்றம் வீசும்படியாகவும் செய்ய முடியும்.

ஏற்கனவே பெண்களுக்கு வாசனைத் திரவியம் என்றால் பிரியம். இந்த புதிய சென்ட் வந்துவிட்டால் அவர்கள் இன்னும் புதிய வாசனையுடன் மணக்கும் புதுமலர் களாக வலம் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

திக்கு வாய் வியாதி தீர்கிறது!

மனிதனின் சிறப்புகளில் மொழி வழக்கும் ஒன்று. பேச முடிந்தாலும் மனிதர்களில் பலருக்கு சரளமாக பேச்சு வராது. சிலருக்கு திக்கித்திக்கி பேச வரும். இது ஒரு வித வியாதி. உலகில் 1 சதவீதம் பேர் திக்கு வாய் வியாதியால் அவதிப்படுகிறார்கள்.

இவர்கள் பேசும்போது வார்த்தைகள் அரைகுறையாக வெளிவருவதோ, ஒரே வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதோ, சில வார்த்தைகள் வராமலோ இருக்கலாம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு காரணமான ஜீன்கள் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் காதுகேளாமை மற்றும் உடலியல் தொடர்பு கோளாறுகள் ஆராய்ச்சி மையம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 123 பேர் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்த 550 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் குறிப்பிட்ட அளவில் சாதாரணமாக பேசும் திறனுடையவர்களும் அடங்குவர்.

அவர்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் 3 வித ஜீன்கள் திக்கிப் பேசுவதில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜீன்கள்தான் ஒருவர் திக்குவாய், திக்காமல் பேசுவது, சரளமாகப் பேசுவது என ஒவ்வொன்றிலும் தொடர்பு கொண்டுள்ளது. இவற்றின் செயல்படும் விதத்தில் மாறுபாடு ஏற்பட்டால் பேச்சுத்திறனிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வேறுசில வளர்ச்சிதை மாற்றத்திலும் இவை பங்காற்றுகின்றன.

இதுவரையில் திக்கு வாய் வியாதி உடையவர்களுக்கு கவலையை குறைப்பதற்கான பயிற்சியும், தெளிவாகப் பேசுவதற்கு எலக்ட்ரானிக் கருவியுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் இந்த ஜீன்களைப் பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இனி திக்குவாய், வ..வ…வரட்டுமா? என்று போகப்போகிறது!

பிளாஷ் ஷாக்வேவ் என்ன வேறுபாடு

சில எளிய, அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வேறுபாடுகளை இங்கு காணலாம்.
இணைய தளங்களில் அம்சமான முறையில் நல்ல பொழுதுபோக்கினைத் தர வேண்டும் எனத் திட்ட மிடுகிறீர்களா? அப்படியானால் இணையதளத்தை வடிவமைக்கும் நீங்கள் பயன்படுத்த வேண்டியது பிளாஷ் அல்லது ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பு களைத்தான். சில இணைய தளங்கள் இந்த சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுக்களை நடத்துபவர்கள் ஷாக்வேவ் சாப்ட்வேர் தொகுப்பை முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்டுக் கொள்வார்கள். சரி, பிளாஷ் மற்றும் ஷாக் வேவ் – இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? செயல்படும் விதத்திலா? பயன்பாட்டிலா?
இரண்டுமே:
1. முன்பு மேக்ரோமீடியா என அழைக்கப்பட்ட அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பங்களாகும்.
2. இணைய தளங்களுக்கான ப்ளக் இன் புரோகிராம்கள்.
3. வெப் பிரவுசரில் ஆக்டிவ் எக்ஸ் பயன்படுத்து கின்றன.
4. கிராபிக்ஸ், வீடியோ, அனிமேஷன்ஸ் போன்ற ஆப்ஜெக்ட்களை இணையப் பக்கங்களில் இணைக்க பயன்படுகின்றன.
இருப்பினும் இரண்டையும் சற்று உற்று நோக்கினால், சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால், இவை சற்று சாதாரணமானவை தான். இவற்றைப் பிரித்து இந்த வேறுபாடுகளைக் காணலாம்.
அடோப் பிளாஷ்:
1. அடோப் பிளாஷ் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர். பல இணைய தளங்கள் பிளாஷ் தொகுப்பை இன்ஸ்டால் செய்வதனைக் கட்டாயப்படுத்துகின்றன. டெக்ஸ்ட், கிராபிக்ஸ், வீடியோ, ஒலி ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை உண்டாக்க இது இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு உதவுகிறது. தளங்களைப் பார்வையிடுபவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையிலான வசதிகளையும் தருகிறது.
2. பிளாஷ் சார்ந்த விஷயங்கள், ஷாக்வேவ் தருவதைக்காட்டிலும் வேகமாக பிரவுசரில் தரப்படுகின்றன.
3. இணைய தளத்தைப் பார்வையிடுபவர்களிடம் ஆப்ஷன்ஸ் மற்றும் தகவல் கேட்டு அமைக்கப்படும் இன்டராக்டிவ் பக்கங்களில் பிளாஷ், பக்கங்களை வடிவமைப்பவர்களுக்கு பக்க பலமாக உதவிடுகிறது.
4. ஷாக் வேவ் தொகுப்பைக் காட்டிலும் பிளாஷ் தொகுப்பு விலை குறைவானது.
5. பிளாஷ் .SWF என்னும் பிளாஷ் பார்மட்டில் செயல்படுகிறது. “SIMPLE” Scripting Level என்பதன் ஒரு பகுதியாகும்.
அடோப் ஷாக்வேவ்:
1. 20 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் இணைய தளங்களைப் பார்வையிடுபவர்களால் அடோப் ஷாக்வேவ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முப்பரிமாணத்தில் தரப்படும் விளையாட்டுகள், சில சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கான காட்சிப் படங்கள், ஆன்லைனில் கற்றுக் கொள்வதற்கான பாடங்களின் விளக்கப்படங்கள் ஆகியவற்றில் ஷாக்வேவ் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
2. ஷாக்வேவ் பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக புரோகிராமிங் தேவைப்படும் பிரிவுகளில் இது துணைபுரிகிறது. இதன் மூலம் ஆப்ஜெக்ட்களை சுழற்றிக் கொண்டு வரலாம்.
3.பிளாஷ் பார்மட்டைத் தன் பார்மட்டிற்குள் கொண்டு வரும் திறன் ஷாக்வேவ் தொகுப்பிற்கு உண்டு. ஆனால் பிளாஷ் தொகுப்பில் இந்த வசதி கிடையாது.
4. ஷாக்வேவ் உருவாக்க அடோப் டைரக்டர் வசதி கட்டாயம் வேண்டும். இது Advanced Scripting Language என்பதன் ஒரு பகுதியாகும்.ஷாக் வேவ் பயன்படுத்த தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.
5.ஷாக் வேவ், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும் விலை மிக அதிகம்.
6. ஷாக் வேவ் .DCR என்னும் ஷாக்வேவ் பார்மட்டினைப் பயன்படுத்துகிறது. இந்த பார்மட்டினை பிரித்துப் பார்ப்பதோ, மாற்றங்களை ஏற்படுத்துவதோ மிக கடினமான ஒரு வேலையாகும். அநேகமாக முடியாது.

30 வயது தொடங்கி 40 வயது வரை உள்ள பெண்களுக்கு

30 வயது தொடங்கி 40 வயது வரை பெண்களுக்கு நடுத்தர வயது. இந்த பருவத்தில் உடலில் பலவிதமான மாறுதல்களும் ஏற்படு கின்றன. உடற்கட்டு, இளமைத் தோற்றம், சுறுசுறுப்பு ஆகியவை பாதிக்கபடுகின்றன. தலைமுடி நரைப்பது, முகத்தில் சுருக்கம் விழுவது போன்ற அடையாளங்களும் தோன்றுகின்றன. உடலில் அடிக்கடி சின்ன சின்ன நோய்களும் ஏற்படுகின்றன. மணமான பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைகிறது.

உடலில் தோன்றும் இந்த குறைபாடுகளை, உள்ளத்தில் ஏற்படும் பக்குவத்தினால் மட்டுமே சமாளிக்க முடியும்.

பெண்களுக்கு இந்த நடுத்தர வயதில் தோன்றும் ஒரு தடுமாற்றம் தங்களுக்கு தாம்பத்ய உறவில் ஏற்படும் நெருக்கடிகளை பற்றியதே. ஒரு பெண் தன்னுடைய இளமை பருவத்தில் கணவனை வசீகரிப்பதற்காகவும், இன்பம் பெறுவதற்காகவும் குழந்தைகளை பெறுவதற்காகவும், தாம்பத்ய உறவை உணர்ச்சி வேகத்துடன் மேற்கொள்கிறாள். இந்த நடுவயதில் இந்த அவசியங்கள் எதுவுமே அவளுக்கு இருப்பதில்லை. அதனால் தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவதோடு சல்லாபங்களில் ஓரளவு சலிப்பும் ஏற்படுகிறது.

நடுத்தர வயது பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கணவருடன் சில நாட்களாவது தனியே எங்கேயாவது போய் இன்பமாக பொழுது போக்கிவிட்டு வரவேண்டும். இது இன்னொரு தேனிலவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உங்களிடையே உள்ள அன்பு மிகுந்த உறவை இது மேலும் பலப்படுத்த உதவும். நீங்கள் உங்களுடைய இளமை பருவ தேனிலவின் போது இன்பமாகக் கழித்த இடங்களுக்கு மீண்டும் போய் வாருங்கள். இப்போது அது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

ஒவ்வொரு வாரமும் சில மணி நேரமாவது உங்கள் கணவருடன் தனியே பொழுது போக்குங்கள். வெளியே சென்று வருவது மட்டுமல்லாமல் வீட்டிலேம் கூட தனியாக அவருடன் பேசுவதும், பொழுது போக்குவதும் நீங்கள் அவருடன் மனத்தளவில் நெருங்குவதற்கு உபயோகமாக இருக்கும். உங்களுடைய உணவு பழக்கங்கள், தேக பயிற்சி ஆகியவற்றினால் கூடியவரை உங்களுடைய இளமையான அழகான தோற்றத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வயதுக்கேற்ற உடை, அலங்காரம் ஆகியவற்றினால் உங்களுடைய தோற்றத்தை மதிப்புள்ளதாகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய நயமான பேச்சினாலும், கலைகளினாலும், மென்மையான பழக்கங்களி னாலும் உங்களுடைய கணவரின் தனிக் கவனத்தைக் கவர முயலுங்கள்.

பெண்கள் மனச்சோர்வு ஏற்படாத அளவுக்கு வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மனச் சோர்வு வந்து விட்டால் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. தங்களுடைய இன்பத்துக்காகவே அவர்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். நடுத்தரவயது பெண்கள் கூச்சபடாமல் டாக்டரிடம் தங்களுடைய தேவைகளையும், குறைபாடுகளையும் எடுத்துச் சொல்லி அதற்குண்டான ஆலோசனைகளை பெறுவதும் நல்லது.

சம்பாதிப்பது எதற்கு? (ஆன்மிகம்)

மிகுந்த புண்ணியங்களை விலையாகக் கொடுத்து, இந்த மனித சரீரமாகிய ஓடம் வாங்கப்பட்டுள்ளது. இது உடைந்து போவதற்குள் பிறவிக் கடலைத் தாண்டி அக்கரை போய்ச் சேர்’ என்று ஒரு மகான் அறிவுரை கூறியுள்ளார்.
மானிடப் பிறவி கிடைத்தும் எவர் ஞானம் பெறவில்லையோ, அவர்கள், பசுவாகவோ, இதர விலங்குகளாகவோ இருந்திருக்கலாமே… ஏனெனில், மனிதர்களுக்கு தான் சாஸ்திரம், சம்பிரதாயம்; பாவம், புண்ணியம்; செய்யத் தகுந்தவை, செய்யத் தகாதவை என்றெல்லாம் உள்ளது; விலங்குகளுக்கு இதெல்லாம் கிடையாது. அதனால், சாஸ்திர, சம்பிரதாயங்களை அனுசரித்து நடவாத மனிதன், விலங்காகவே இருந்திருக்கலாமே என்றார் அவர்.
மனிதனுக்கு பணம், பொருள் ஆகியவற்றின் மேல் தீராத பேராசை. நிறைய சம்பாதிக்க வேண்டும்; நிறைய சேர்த்து வைக்க வேண்டும்… இதற்காக ஓய்வில்லாமல் ஓடித் திரிவதும், கவலைப்படுவதுமாகவே காலம் கழிகிறது. சம்பாதித்தது போதும்; சேர்த்து வைத்தது போதும் என்று எத்தனை பேர் சொல்கின்றனர்?
பணம் சேரச் சேர ஆனந்தம். ஒன்றுக்கு பக்கத்தில் எத்தனை பூஜ்யம் சேர்த்தாலும் அவ்வளவுக்கு அவ்வளவு ஆனந்தம். இன்னும் ஒரு பூஜ்யம் சேர வேண்டும் என்று ஆசை. கடைசியில் இவன் கொண்டு போவது ஒரே ஒரு பெரிய பூஜ்யம் தான். ஆனால், அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லையே!
இவன் நிறைய சேர்க்கச் சேர்க்க, இவனது வயதும் ஏற, ஏற, மற்ற பந்துமித்திரர்கள் இவனையே கவனிக்க ஆரம்பித்து விடுகின்றனர்… “எவ்வளவு வைத்திருக்கிறான், யார், யாருக்கு என்ன கிடைக்கும்?’ என்பது அவர்களது கவலை. இவன் பணத்தை கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான்; சித்ரகுப்தனோ, இவனது வாழ்நாளை கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பொருள், பணம் சேர்க்க வேண்டியது தான். இருக்கும் போதே தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால் அவர்களும் பயன் பெற்று, சந்தோஷப்படுவர்; தனக்கும், ஒரு திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும். நாம் போன பிறகு இவ்வளவும் யார் எடுத்துக் கொள்வரோ என்ற மனக்கவலையுடன், சாந்தியில்லாமல் போக வேண்டாமே!
“நிறைய சம்பாதித்தான், எல்லாருக்கும் கொடுத்தான்; புண்ணியவான்… அவனுக்கு நல்ல கதி கிடைக்கட்டும்…’ என்று உற்றாரும், சுற்றாரும் சொல்ல வேண்டாமா? பணம் படைத்தவன் ஏழ்மை நிலையில் உள்ள சுற்றத்தாருக்கு உதவி செய்யாவிடில் அது பெரும் பாவம் என்கிறது தர்ம சாஸ்திரம்.
சாஸ்திரம் பெரிதா, பணம் பெரிதா? சிந்திக்க வேண்டும். இப்போது கொடுப்பது பல மடங்காக பிற ஜென்மங்களில் திரும்பி வரும்; வந்தே தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. கொடுக்க மனம் வர வேண்டும்; கை வர வேண்டும். இரண்டும் இருந்தால் போதும்!