30 வயது தொடங்கி 40 வயது வரை உள்ள பெண்களுக்கு

30 வயது தொடங்கி 40 வயது வரை பெண்களுக்கு நடுத்தர வயது. இந்த பருவத்தில் உடலில் பலவிதமான மாறுதல்களும் ஏற்படு கின்றன. உடற்கட்டு, இளமைத் தோற்றம், சுறுசுறுப்பு ஆகியவை பாதிக்கபடுகின்றன. தலைமுடி நரைப்பது, முகத்தில் சுருக்கம் விழுவது போன்ற அடையாளங்களும் தோன்றுகின்றன. உடலில் அடிக்கடி சின்ன சின்ன நோய்களும் ஏற்படுகின்றன. மணமான பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைகிறது.

உடலில் தோன்றும் இந்த குறைபாடுகளை, உள்ளத்தில் ஏற்படும் பக்குவத்தினால் மட்டுமே சமாளிக்க முடியும்.

பெண்களுக்கு இந்த நடுத்தர வயதில் தோன்றும் ஒரு தடுமாற்றம் தங்களுக்கு தாம்பத்ய உறவில் ஏற்படும் நெருக்கடிகளை பற்றியதே. ஒரு பெண் தன்னுடைய இளமை பருவத்தில் கணவனை வசீகரிப்பதற்காகவும், இன்பம் பெறுவதற்காகவும் குழந்தைகளை பெறுவதற்காகவும், தாம்பத்ய உறவை உணர்ச்சி வேகத்துடன் மேற்கொள்கிறாள். இந்த நடுவயதில் இந்த அவசியங்கள் எதுவுமே அவளுக்கு இருப்பதில்லை. அதனால் தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவதோடு சல்லாபங்களில் ஓரளவு சலிப்பும் ஏற்படுகிறது.

நடுத்தர வயது பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கணவருடன் சில நாட்களாவது தனியே எங்கேயாவது போய் இன்பமாக பொழுது போக்கிவிட்டு வரவேண்டும். இது இன்னொரு தேனிலவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உங்களிடையே உள்ள அன்பு மிகுந்த உறவை இது மேலும் பலப்படுத்த உதவும். நீங்கள் உங்களுடைய இளமை பருவ தேனிலவின் போது இன்பமாகக் கழித்த இடங்களுக்கு மீண்டும் போய் வாருங்கள். இப்போது அது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

ஒவ்வொரு வாரமும் சில மணி நேரமாவது உங்கள் கணவருடன் தனியே பொழுது போக்குங்கள். வெளியே சென்று வருவது மட்டுமல்லாமல் வீட்டிலேம் கூட தனியாக அவருடன் பேசுவதும், பொழுது போக்குவதும் நீங்கள் அவருடன் மனத்தளவில் நெருங்குவதற்கு உபயோகமாக இருக்கும். உங்களுடைய உணவு பழக்கங்கள், தேக பயிற்சி ஆகியவற்றினால் கூடியவரை உங்களுடைய இளமையான அழகான தோற்றத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வயதுக்கேற்ற உடை, அலங்காரம் ஆகியவற்றினால் உங்களுடைய தோற்றத்தை மதிப்புள்ளதாகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய நயமான பேச்சினாலும், கலைகளினாலும், மென்மையான பழக்கங்களி னாலும் உங்களுடைய கணவரின் தனிக் கவனத்தைக் கவர முயலுங்கள்.

பெண்கள் மனச்சோர்வு ஏற்படாத அளவுக்கு வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மனச் சோர்வு வந்து விட்டால் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. தங்களுடைய இன்பத்துக்காகவே அவர்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். நடுத்தரவயது பெண்கள் கூச்சபடாமல் டாக்டரிடம் தங்களுடைய தேவைகளையும், குறைபாடுகளையும் எடுத்துச் சொல்லி அதற்குண்டான ஆலோசனைகளை பெறுவதும் நல்லது.

%d bloggers like this: