Daily Archives: மார்ச் 4th, 2010

அப்போதே அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் என்று கூறப்படுவதுண்டு. இவர் வேத காலத்தை சேர்ந்தவர். சுஸ்ருதரை உலக அளவில் தெரியாது. தற்போது ஆதி காலத்திலேயே அறுவை சிகிச்சை இருந்துள்ளது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

விலங்குகளின் தோல், ரோமங்களை உடையாக அணிந்த காலத்திலேயே அறுவைசிகிச்சை டாக்டர்களும் இருந்துள்ளனர். அவர்கள் ஆபரேசன் நடத்திய ஆபரேசன் தியேட்டர் புதை படிவமாக நமக்கு கிடைத்துள்ளது.

தெற்கு பாரிஸ் நகருக்கு அருகே ஒரு சமாதி அடையாளம் காணப்பட்டது. அத்துடன் ஒரு மரக்கூடாரமும் உள்ளது. இது அவர்களின் ஆபரேசன் தியேட்டராக இருந்திருக்கலாம். அங்கு கிடைத்த பொருட்கள், எலும்புத்துண்டுகளை பிரான்ஸ் தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் அப்போதே அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்தன. அவர்கள் வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்துகளையும், புண்கள் அழுகி விடுவதை தடுக்கும் மருந்துகளையும் உபயோகித்து இருக்கிறார்கள். சேதம் அடைந்த கை எலும்புகளை இணைத்து தைத்திருக்கிறார்கள். இது அப்போதைய அறுவைச் சிகிச்சை முறையை நமக்கு உணர்த்துகிறது.

இந்த காயம் அவர்கள் போரில் ஈடுபட்டதால் ஏற்பட்டதாகவோ அல்லது வேட்டையாடியபோது விலங்குகளால் தாக்கப்பட்டு அல்லது தவறி விழுந்ததாலோ ஏற்பட்டதாக இருக்கலாம். இதுபோன்ற வேறு சில தடயங்கள் ஜெர்மனியிலும், செக்குடியரசு நாட்டிலும் கிடைத்துள்ளன. இவையெல்லாம் 6 ஆயிரத்து 900 ஆண்டுகளுக்கு முந்தையவை.

எனவே கிறிஸ்துவின் காலத்துக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறுவை சிகிச்சையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. குறிப்பாக ஐரோப்பிய குடியினர் அறுவை சிகிச்சையின் முன்னோடிகளாக இருந்துள்ளனர் என்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள்.

திருவோட்டின் மகிமையை தெரிஞ்சுக்கோங்க! -திருவோட்டுக்காயின் மருத்துவ குணங்கள்

உணவை பதப்படுத்தவும், சமைக்கவும், பக்குவப்படுத்தவும் மண், சிரட்டை, மூங்கில், மட்டை, இலைகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்கப்படுகிறது. மேலும் இயற்கையாய் கிடைக்கும் இந்த பாத்திரங்களால் உடலுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான கேடும் ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி எந்ததாவர இயற்கை பொருளால் நாம் உணவு உட்கொள்ளும் பாத்திரம் செய்யப்பட்டுள்ளதோ அந்தப் பொருளின் மருத்துவத்தன்மையும் நமது உடலில் சேர்ந்து பல நோய்கள் நம்மை அணுகாமல் பாதுகாக்கின்றது.
மண் பாத்திரங்களை கொண்டு சமைத்தும், மூங்கில் தப்பை, மரக்குச்சி கரண்டிகளால் இலைகளில் உணவை
பரிமாறி சாப்பிட்டும் வந்த நமது பண்டைய பாரம்பரிய உணவு முறையை தற்சமயம் வெளிநாட்டினர் பலரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமான உணவிற்கும், இயற்கையோடு இயைந்த வாழ்விற்கும் உணவு மட்டமல்ல, அதனை உட்கொள்ள உதவும் பாத்திரங்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
நமது பாரம்பரிய மருத்துவத்தையும், பழக்க வழக்கங்களையும் அனைவரும் விரும்பத் தொடங்குவதே நமது
கலாசாரத்தின் வெற்றியாகும். கிரசன்ஸ்சியா குஜேட் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிக்னோனியேசியே குடும்பத்தைச் சார்ந்த பெரிய மரங்களின் காயாக வழங்கப்படும் பிச்சைப்பாத்திரம் என்றழைக்கப்படும் திருவோட்டுக்காயின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்பட செய்கின்றன.
இதன் உலர்ந்த பழங்கள் மற்றும் ஓட்டின் உட்புறம் தங்கியுள்ள கிரிசன்டின், கிரிசன்டோசைடு, அஜுகால், கிரிசன்டிக் அமிலம், டார்டாரிக் அமிலம், டானிக் அமிலம், பீட்டா சைட்டோஸ்டீரால், பாலிமிட்டிக் அமிலம், எபிஜெனின், அக்காந்தோசைடு போன்ற ஏராளமான வேதிப்பொருட்கள் வயிற்று உபாதைகளை நீக்குதல், கழிச்சலை கட்டுப்படுத்துதல், நுரையீரல் மற்றும் சிறுநீர் தொற்றை நீக்குதல், உணவுப் பொருட்களில் நுண்கிருமி வளர்ச்சி மற்றும் புழுக்களின் பெருக்கத்தை அழித்தல், ரத்தக்கசிவை தடுத்தல், உணவுப் பாதையில் தோன்றும் சூட்டை தணித்து குளிர்ச்சியை உண்டாக்குதல், வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றுதல் போன்ற பலவிதமான மருத்துவ செய்கைகளை செய்கின்றன.
ஈ.கோலை, எஸ்.ஆலியஸ் போன்ற நுண்கிருமி வளர்ச்சிகளையும் கட்டுப்படுத் துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருவோட்டில் காணப்படும் சோடியம், கால்சியம், தையமின் ஆகியன நல்ல ஊட்டச்சத்து காரணிகளாகவும் விளங்குகின்றன.
நமது வீட்டில் பயன்படுத்தும் தானியங்களையும், பழங்களையும் திருவோட்டில் சேமித்து வைப்பது நல்லது. அது மட்டுமின்றி திருவோட்டில் நீர் ஊற்றி அருந்தி வர தாகம் தணிந்து, உடல் குளிர்ச்சியடையும். நாகரிக மோகம் இல்லாதவர்கள் திருவோட்டில் உணவையும் உட்கொள்ளலாம்.

விளாம் பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

கோதுமை பிரியாணி வித் ரெய்தா

தேவையானப் பொருட்கள்:

* கோதுமை ரவை – ஒரு கப்
* கேரட் துருவல் – ஒரு கப்
* பொடியாக நறுக்கின வெங்காயம் – கால் கப்
* பொடியாக நறுக்கின தக்காளி – கால் கப்
* இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
* பச்சை மிளகாய் – 3
* கிராம்பு – 2
* பட்டை – ஒன்று
* சோம்பு – அரை தேக்கரண்டி
* பிரியாணி இலை – ஒன்று (விருப்பப்பட்டால்)
* உப்பு – தேவைக்கு
* எண்ணெய் – தேவைக்கு
* தண்ணீர் – 3 கப்
* ரெய்தாவுக்கு தேவையானவை:
* தயிர் – அரை கப்
* வெங்காயம் – ஒன்று
* தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
* பச்சைமிளகாய் – ஒன்று
* உப்பு- தேவைக்கு
செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
step 1
வெறும் வாணலியில் ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
step 2
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
step 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
step 4
வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி விடவும்.
step 5
தக்காளி வதங்ககியதும் கேரட் துருவலை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
step 6
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
step 7
தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
step 8
தீயின் அளவை மிதமாக வைத்து மூடி 8 நிமிடங்கள் வேக விடவும்.
step 9
தண்ணீர் வற்றியதும் நன்றாக ஒருமுறை கிளறி விட்டு இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி.
step 10
ரெய்தாவுக்கு: வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனை வெங்காயத்துடன் கலந்து பரிமாறுமுன் அதில் தயிர் கலக்கவும்.
step 11
சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெய்தாவுடன் தயார்.

கமாண்ட் ப்ராம்ப்ட்டில் தேடல்

விண்டோஸ் வழங்கும் பைல் தேடல் வசதியை நாம் அனைவரும் அறிவோம். இந்த வசதி டாஸ் கமாண்ட் ப்ராம்ப்ட் கட்டளை மூலமாகவும் நாம் பெறலாம் என்பது பலருக்குத் தெரியாது. இதனை எப்படிப் பெறலாம் என்று பார்க்கலாம். ஸ்டார்ட் சென்று ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினைப் பெறவும். அங்கு சி டிரைவ் எழுத்துடன், கர்சர் துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். இதில் எங்கேணும் ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Find தேர்ந்தெடுங்கள். இப்போது கட்டம் கிடைக்கும். அதில் மேலும் சில ஆப்ஷன்கள் கிடைக்கும். அதனை உங்கள் இலக்குப்படி அமைத்து என்ன பைல் தேட வேண்டுமோ, அதனை டைப் செய்து கிளிக் செய்திடவும். ஆஹா! நீங்கள் தேடிய பைலின் பட்டியல் எங்கு உள்ளது என்ற தகவல் கிடைக்கும். அட! இப்படிக் கூட உள்ளதா!! என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
நோ டு ஆல்
பல பைல்களை மொத்தமாக இயக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். எடுத்துக் காட்டாக, போல்டர் ஒன்றில் உள்ள அனைத்து பைல்களையும் டெலீட் செய்திடக் கட்டளை கொடுத்திருப்பீர்கள். அப்போது ஏதேனும் ஒரு பைலைக் காட்டி இதனை அழிக்கவா என்று ஒரு கட்டம் கேள்வி கேட்கும். பதில் தரக் கொடுக்கப்படும் ஆப்ஷன்களில் “Yes to All” தரப்பட்டிருக்கும். அனைத்திற்கும் ஒரே மாதிரியான செயலை மேற்கொள்ள வேண்டும் என்றால் இதனை அழுத்தலாம். வேண்டாம் என்றால் என்ன செய்வது? அங்கு “No to All” இருக்காது. அப்படியானால், ஒவ்வொரு பைலுக்கும் No அழுத்த வேண்டுமா? அட! ஆமாம்!! இத்தனை நாளா இதைக் கவனிக்கலையே என்று எண்ணுகிறீர்களா? கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்கிறேன். “No to All”எனப் பதிலளிக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்தியவாறு No என்பதனை அழுத்துங்கள். உங்களுக்கு”No to All” கிடைக்கும். எவ்வளவு எளிது பார்த்தீர்கள? ஆனால், கவனம். இதனை அழுத்தும் முன் அத்தனைக்கும் நோ கொடுக்கலாமா என்பதனை நன்றாக முடிவு செய்து அழுத்தவும்.

தண்ணீரைப் பாதுகாப்போம்! (ஆன்மிகம்)

“நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. இன்று, தமிழகத்திலுள்ள பெரிய நதிகள் பெரும்பாலும் வறண்டு கிடக்கின்றன. பல நதிகள், குப்பைத் தொட்டியாக்கப்பட்டு விட்டன; சில ஆக்ரமிப்பில் சிக்கி தங்கள் அகலத்தை இழந்துவிட்டன. இதன் காரணமாக, பாட்டிலில் கிடைக்கும் தண்ணீரை குடிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி, இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் கிடைக்குமா என்ற அபாய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
இந்த நதிகள் உருவாக நம் முன்னோர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல… குறிப்பாக, தமிழகத்துக்கு வளம் சேர்க்கும் காவிரி நதியை இங்கு கொண்டு வருவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களை மாசிமகத் திருவிழா காலத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கும்பகோணம் அருகிலுள்ள ஊர் கொட்டையூர். இங்கே, “ஹேரண்டகர்’ என்ற ரிஷி இருந்தார். அப்போது, காவிரி நதி குடகு மலையில் உற்பத்தியாகி, சில மைல் தூரமே ஓடியது. இந்த நதியின் தண்ணீர் வீணாகப்போகிறதே… இதை சோழநாட்டுக்கு கொண்டு வந்தால் நாடு வளமாகுமே என, அன்றைய சோழ ராஜாவான காந்தமன் திட்டமிட்டான். அகத்தியரின் தயவால் தான் அது நடக்குமெனத் தெரிந்து, குடகுமலையில் தவமிருந்த அவரைத் தேடிச் சென்றான். விஷயத்தைச் சொன்னதும், சம்மதித்தார் அகத்தியர்.
ஒரு காலத்தில் லோபாமுத்திரை என்ற பெண்மணி அகத்தியரின் மனைவியாக இருந்தாள். அவளையே தீர்த்தமாக்கி தன் கமண்டலத்தில் வைத்திருந்தார் அகத்தியர். விநாயகர் காகம் வடிவெடுத்து, அதை தட்டிவிட, அந்த நீர் நதியாக ஓடியது. காகம் தட்டி விரிந்த ஆறு என்பதால், “காவிரி’ என்று பெயர் வந்ததாகக் கூடச் சொல்வதுண்டு. லோபா முத்திரை மீது கொண்ட பாசத்தால், அகத்தியர் அவளை குறைந்த தூரமே ஓடச்செய்து, தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டார். அப்போது சோழராஜா, மக்கள் நலன் கருதி தண்ணீர் வேண்டவே, மனைவியை நீண்ட தூரத்துக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு ஆளானார்.
ஒருவழியாக காவிரி, கொட்டையூர் வரை வந்துவிட்டது. திடீரென ஒரு இடத்தில் ஒரு குகை போன்ற துவாரத்துக்குள் பாய்ந்து, மறைந்து விட்டது. கொட்டையூரையும் தாண்டி இன்னும் நாற்பது ஐம்பது மைல் தூரம் வரை போனால், காவிரிபூம்பட்டினம் வரை எட்டுமே என்று ராஜாவுக்கு ஆசை. அவன், இதுபற்றி ஹேரண்டகரிடம் முறையிட்டான்.
ஹேரண்டகர் அவனிடம், “எந்த நாட்டில் மக்கள் பாவம் செய்கின்றனரோ, அதன் பலனாக, நதிகள் இவ்வாறு தங்களை மறைத்துக் கொள்கின்றன. நதி மீண்டும் வெளிப்பட்டு ஓடவேண்டுமானால், மக்களின் பாவத்துக்கு பொறுப்பாளனான ராஜாவோ அல்லது ஒரு துறவியோ தன் உயிரைக் கொடுக்க வேண்டுமென சாஸ்திரம் சொல்கிறது…’ என்றார்,
மக்களுக்காக உயிர் கொடுக்க முன் வந்தான் ராஜா. துறவியோ அதை மறுத்து, “நீ நாடாள வேண்டியவன். போர் சமயங்களில் மக்களுக்காக உயிர் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் வரலாம். ஆனால், எனக்கு இதுதான் சந்தர்ப்பம். இறைவன் கொடுத்த இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க மாட்டேன்…’ எனச் சொல்லி, அந்த துவாரத்தில் புகுந்து உயிர்விட்டார். நதியும் துவாரத்தில் இருந்து வெளிப்பட்டு, சோழநாட்டின் எல்லை வரை சென்றது.
மாசிமகத்தன்று காவிரியிலும், காவிரி நீர் நிரம்பிய மகாமக குளத்திலும் நீராடி, நம் பாவங்களையும் போக்கிக் கொள்வது ஐதிகம். நதிகளுக்காக தம் உயிரையே கொடுத்தனர் நம் முன்னோர்; நாமோ அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளைப் பாதுகாத்து, நாடெங்கும் சுத்தமான நீர் கிடைக்க, மாசிமக நன்னாளில் உறுதியெடுப்போம்.