Daily Archives: மார்ச் 5th, 2010

வாட்டர் தெரப்பி தெரியுமா?

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.

செலவே இல்லாத தண்ணீரா? என்று திருப்பி கிண்டல் அடிக்காதீர்கள். சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலோர், ஏதோ தனியாரிடம் வாங்கி சாப்பிடும் “கேன் வாட்டர்’ தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட்டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போதும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

அதென்ன “வாட்டர் தெரபி?.’ நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.

தொண்டை வரை காரமாகவோ, இனிப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக்காக சாப்பிடும் பல வேண்டாத சமாச்சாரங்களும், கழிவுப் பொருளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான் வெளியேறுகின்றன.

நம் வீட்டில் எப்படி சமையல் அறை, படுக்கையறை, ஹால்,பாத்ரூம், டாய்லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள்ளது. எல்லாவற்றையும் கழுவி, நல்லதை “டெட்டால்’ ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா? அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும்.

அதற்காக தான் அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்பு இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வகுத்து வைத்தனர். இப்போது “லைப் ஸ்டைல்’ எவ்வளவோ மாறி விட்டது.

உடலை எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட சத்துக்கள் அனைத்தையும் நம் உணவுகளின் மூலம் தருகிறோம். கொழுப்பு, ஷûகர், ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடுகிறோம்.

இந்த புது “லைப் ஸ்டைலில்’ எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இந்த லைப் ஸ்டைல் காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லாரிடமும் பழங்கள் போன்ற திரவ சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய்விட்டது. அதுவும், தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு.

ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் “வாட்டர் தெரபி’ உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

இது தான் “வாட்டர் தெரபி’ பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களே? என்ன பாட்டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன் வைத்திருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீசிலாகட்டும் மணிக்கொருதரம் தண்ணீர் குடிங்க, பாருங்க, உடல் “கும்ம்ம்’ன்னு இருக்கும்.

வெயிட் குறைய தண்ணீர் முக்கியம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன் படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது. கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட, பழங்கள் நல்லது.

“அப்பா விடட்டும் முதலில்; நான் அப்புறம் விடறேன்!’

இருபது வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்பதுக்கு மேல், உடலில் தங்கள் வேலையை செய்து, எல்லா வியாதிகளையும் வரவழைத்து விடுகிறது. அப்புறம், ஐம்பதில் தான் நமக்கு “விழிப்புணர்வே’ வருகிறது. நம் பிள்ளைகளுக்கு தான் “அட்வைஸ்’ சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கிறானா? “போப்பா, நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழைச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு, நுõடுல்ஸ் சாப்பிடு, பனீர் பட்டர்… அது இதுன்னு சாப்பிட வச்சே…’ என்று பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே.

அதனால், இன்றைய முப்பதில் இருப்பவர்களா நீங்கள்? வேண்டாமே, இந்த உணவுப் பழக்கங்களில் தவறான சமாச்சாரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவார்கள். இன்னிலேர்ந்து விட்டுவிடுங்கள், ப்ளீஸ்.

நீச்சல் பயிற்சி நல்லது: நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டுமா? உடல் பயிற்சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது.

முன்பெல்லாம் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு நீச்சல் முக்கியம். கிராமங்களில் பிறந்தவர்களுக்கு இதெல்லாம் இல்லாமல் இளமை வாழ்க்கை நகராது. நகரங்களில் உள்ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளியலில் கூட ஏதோ காக்காய் குளியல் தான். இதனால் பலருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர் வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்துப் பாருங்கள், அதன் மணமே, தன்மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக தண்ணீரில் நிற்பதும் ஒன்று. அதனால், தான் பலரும் டென்ஷனாக, பிசியாக இருந்து வீடு திரும்பினால், உடனே குளிக்கின்றனர். முடிந்தவரை டென்ஷனை போக்கும் தன்மை, குளிர்ந்த நீருக்கு உண்டு.

பாதிக்கு பாதி தண்ணீர் வேணும்!: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* இதை ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம்.

* ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, மாம்பழம், சாத்துக்குடி, கேரட் ஜூஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

* தொண்டை கரகரப்பு இருந்தால்… வெந்நீர், அல்லது வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கரகர… போச்.

1,400 ஆண்டுக்கு முந்தைய மது தயாரிப்பு கூடம்

மற்றொரு புதைபொருள் ஆய்வுக்குழு 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தயாரிப்பு கூடத்தை கண்டுபிடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் இருந்து 25 மைல் தொலைவில் இந்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது ஒரு ஒயின் தயாரிப்பு தொழிற்சாலையாகும். 21 அடி அகலமும், 54 அடி நீளமும் உள்ள பெரிய அறையாக இந்த மதுக்கூடம் அமைந்துள்ளது. உயர்ந்த பளபளப்பான தளத்தில் திராட்சை பழங்களை பிழியும் பெரிய இயந்திரம் உள்ளது. அங்கிருந்து அரைக்கப்படும் திராட்சைக் கூழ் வழிந்து இருபுறமும் அண்டாக்களில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இங்கு தயாரிக்கப்பட்ட மது வகை எகிப்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது 6 அல்லது 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அப்போதைய தொழில்நுட்பத்தை விளக்கும் நற்சான்றாக அமைந்துள்ள இந்த மதுக்கூடம், மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. இதை கண்டுபிடித்தது இஸ்ரேலிய தொல்பொருள் ஆய்வுக்குழுவாகும்.

வெளிநாட்டில் இனி கைகேயந்த வேண்டாம் ; நெல்லையில் கிரையோஜெனிக் சோதனை

ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் சோதனை வெற்றிகரமாக முடிந்து விட்டால் வெளிநாடுகளில் கையேந்தும் நிலை மாறி விடும். மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை ) மாலையில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி மலைப்பகுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் “திரவ திட்ட இயக்க மையம்’ உள்ளது.

ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனை தளமாக மகேந்திரகிரி மையம் செயல்படுகிறது. இதுவரையிலும் ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் கூடிய கிரையோஜெனிக் இயந்திரங்களை இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுகிறது. கல்வி-மருத்துவத்திற்கு கார்ட்டோ சாட்டிலைட் 2பி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரலில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கான ஜி-சாட் 4 செயற்கை கோள் பெங்களூருவில் உள்ள செயற்கை கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே இவை தொடர்பான சோதனைகள் நடத்த கே.ராதாகிருஷ்ணன் இன்று காலையிலேயே மகேந்திரி ஐ.எஸ்.ஆர்.ஓ.,மையம் வந்துள்ளார். அவருடன் பெங்களூரு மற்றும் மற்ற மைய அதிகாரிகளும் வந்துள்ளனர்.

இன்று ( வெள்ளிக்கிழமை ) மாலையில் நடத்தப்படும் எல்110 எனப்படும் டெபலப்மென்ட் சோதனையில் 200 வினாடிகளுக்கான சோதனை நடத்தப்பட உள்ளது. தற்போது நாம் ரஷ்யாவிடம் வாங்கி வருகிறோம். இந்த சோதனை கூடிய அளவிற்கு இன்று வெற்றியாக அமைந்து விடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் ‌கையேந்த ‌வேண்டியிருக்காது என்கின்றனர்.

எக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ், எக்ஸெல் கிராபிக்ஸ்

ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்ற தாகத் தோன்றும். நாம் வேண்டும் போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் எக்ஸெல் 2003 வரையில் எதுவாக இருந்தாலும் கீழே கண்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.
2. இதில் View என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
3. பின்னர் Hide All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்தவுடன் கிராபிக்ஸ் ஒர்க்ஷீட்டிலிருந்து மறைக்கப்படும். அவை அங்குதான் இருக்கும். பார்வையிலிருந்தும் பிரிண்ட் செய்வதிலிருந்தும் மறைக்கப்படுகிறது.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டனை அழுத்தி அதில் Excel Options என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். Excel Options dialog box காட்டப்படும்.
2. பின் டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை ஸ்குரோல் செய்து பார்க்கவும். அங்கு Display Options என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் உள்ள ட்ராப் டவுண் லிஸ்ட்டினைப் பயன்படுத்தி எந்த ஒர்க்புக் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Nothing (Hide Objects) என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்தால் கிராபிக்ஸ் மறைக்கப்படும்.
இனி உங்கள் ஒர்க்ஷீட்டினை வழக்கமான முறையில் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின் மீண்டும் கிராபிக்ஸ் படங்கள் ஒர்க்ஷீட்டில் காணப்பட வேண்டும் எனில் மேலே சொன்னபடி ஆப்ஷன்கள் பட்டியலில் சென்று Show All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுத்திரையில் ஒர்க்ஷீட்
எக்ஸெல் பயன்படுத்துகையில் நீங்கள் தயாரித்த ஒர்க்ஷீட்டின் தகவல்கள் மட்டுமே மானிட்டரின் முழுத் திரையில் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? View மெனு சென்று Full Screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பன் தரும் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Workbook Views குரூப்பில் இருந்து Full Screen என்பதனைக் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு மாற்றியபின் உங்கள் பணியினை முழுத்திரையில் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு முடித்தபின் அதே பிரிவில் onscreen பட்டனை அழுத்தவும். இதனால் வழக்கமான தோற்றம் கிடைக்கும். அல்லது எஸ்கேப் (Escape) கீயையும் அழுத்தலாம்.

புரதச் சத்து உணவின் மகத்துவம்

எதில் கிடைக்கிறது தெரியுமா? புரதச் சத்து உணவின் மகத்துவம்
சிலருக்கு “சிக்ஸ் பேக்ஸ்’ காட்ட புஜபலம் கிடைக்கிறது; சிலரை பார்த்தால் நீண்ட நகங்கள்; கருகரு கேசம், பளபள தோல் எடுப்பாக இருக்கும். எண்பது வயதானாலும் தள்ளாடாமல் நடக்கிறாரே அவர் என்று சிலரை பார்த்து வியந்ததுண்டு தானே.
விபத்தில் சிக்கிய அந்த மனிதர், காயங்களுடன் எப்படி வலியை சகிக்கிறார் என்று “டென்ஷன்’ ஆனதுண்டா?
வயிற்று வலி அடிக்கடி வருது; அல்சர் தான் நிச்சயம் என்று புலம்பியதற்கு காரணம் என்ன தெரியுமா?
எல்லாவற்றுக்கும் ஒன்று தான் காரணம்; அது தான் புரதச்சத்து (புரோட்டீன்). அது மட்டும் குறையாமல் இருந்தால் போதும்; எதையும் தாங்கும் சக்தி நமக்கு இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்ளலாம்.
அமினோ ஆசிட்கள்: புரோட்டீனில் பல வகை உண்டு; அவற்றில் மொத்தமாக 22 அமினோ ஆசிட்கள் உள்ளன. அவற்றில் எட்டு அமினோ ஆசிட்கள், நம் உடலுக்கு மிக முக்கியமானவை.
தசைகள், நகங்கள், கேசம், தோல், ரத்த செல்கள், முக்கிய உறுப்புகள் வளர்வதற்கும், வலுவாக இருப்பதற்கும் புரதம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமின்றி, உடலில் பல உறுப்புகளுக் கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும் உதவுவது இது தான்.
குறைவும், அதிகமும் ஆபத்தே: நம் உடலில் கொழுப்பு அணுக்கள் உருவாகின்றன; அதுபோல, கல்லீரலில் குளூக்கோஸ் உருவாகிறது. ஆனால், புரதம் மட்டும் உணவுகளில் இருந்து தான் பெற வேண்டும். புரதத்தை குறைவாக சாப்பிட்டாலும் சிக்கல்; அதிகமாக சாப்பிட்டாலும் ஆபத்து தான். சில வகை உணவுகள் மூலம் கிடைக்கும் புரதங்களில் அமினோ ஆசிட்கள் அதிகம். பொதுவாக, உடல் தனக்கு வேண்டிய புரதத்தை எடுத்துக்கொண்டு, வெளியேற்றி விடும். அப்படி வெளியேறும் போது, அமினோ ஆசிட்கள் மட்டும் தங்கி விடும். அப்படி தங்கி விடுவதால் தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.
இதய நோய், பக்க வாதம், சிறுநீரக கற்கள், எலும்பு பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பை அளிக்கிறது.
யாருக்கு தேவை: ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந் தைகள் எல்லாருக்கும் புரதச்சத்து தேவை. ஓட்டப்பந்தயம் உட்பட விளையாட்டு வீரர்களுக்கு சற்று அதிகமாகவே தேவை. சைவ உணவுகளை விட, அசைவ உணவில் அதிக புரதம் உள்ளது. அதனால் பலர் அசைவத்தை விரும்புவதுண்டு. உண்மையில் சைவ உணவுகளில் தான் புரதம் ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது.
ஒருவரின் எடை, உயரத்தை வைத்து தான் உடல் மொத்த எடையளவு (மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிடப்படுகிறது. அதைப் பொறுத்து தான் ஒருவரின் தேவை நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாகவே, குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் போன்றவர்களுக்கு புரதச் சத்து அதிகமாக இருக்க வேண்டும்.
எடை குறையும் அபாயம்: அதிக புரத சத்து சேர்ந்தாலும் ஆபத்து தான். இறைச்சி, பால் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களில் இருந்து, ரத்தத்தில் யூரியா, யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்கிறது. அவை சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. அப்போது அதிக தண்ணீர், உடலில் இருந்து வெளியேற்றப்படுவதால் உடல் வற்றிப்போய் விடுகிறது. உடல் எடை குறையும் அபாயம் இதனால் தான்.
அதுபோல அதிக புரதம் உடலில் சேரும் போது, கால்சியமும் பாதிக்கப்படுகிறது. அதனால், எலும்புகள் பலவீனம் அடைந்து, அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது. கால்சியம் உட்பட கனிம சத்துக்கள் வெளியேறும் போது, அவை திடமாகி சிறுநீரகத்தில் கற்களாக சேர்கின்றன. சிறுநீரக கல் சேர இதுவே காரணம்.
நிபுணர் சொல்வதென்ன? இந்திய சத்துக்கள் ஆராய்ச்சி அமைப்பு உட்பட பல்வேறு அமைப் புகளில் பங்கு வகிக்கும் சென்னையை சேர்ந்த பிரபல சத்துணவு நிபுணர் வர்ஷா கூறுகிறார்:
* ஒரு கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1.8 கிராம் புரதம் தேவை.
* பட்டாணி, பீன்ஸ், விதை, கொட் டை, தானியம், பருப்பு, கடலை வகைகளில் அதிக புரதம் உள்ளது. பருப்பில் 27, கொட்டை, விதைகளில் 13, தானியங்களில் 12 சதவீதம் புரதம் உள்ளது; முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றிலும் சம நிலையில் புரதம் கிடைக்கிறது.
* ஈரல், மூளை, சிறுநீரகம் பாதிக்கப் பட்டவர்களுக்கு புரதச்சத்து உணவுகள் முக்கியம்.
* விளையாட்டு வீரர்கள், தினமும் உடற்பயிற்சி செய்வோருக்கு அதிக புரதம் தேவை.
“சிக்ஸ் பேக்ஸ்’ போன்ற தசை முறுக்கேற்றும் வித்தைக்கு புரதம் தான் முக்கியம்.
காய்கறிகளில் புரதம்: காய்கறிகள், சோயா போன்றவற்றில் இருந்து கிடைக்கும் புரதத்தில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. கெட்ட கொலஸ்ட் ரால் குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக கிடைக்கிறது. அதுபோல, கால்சியம் வெளியேறுவதும் குறைகிறது; சிறுநீரக பிரச்னையும் வருவதில்லை.
ஆலிவ் ஆயில் உட்பட தாவர வகைகளில் புரதம் கிடைக்கும் போது, “அன்சாச் சுரேட்டட்’ கொழுப்பே உள்ளது. அதனால், எந்த ஆபத்தும் இல்லை. நார்ச்சத் துள்ள உணவுகள் மூலம் பலன் கிடைக் கும் போது, உடலுக்கு ஆபத்தை விளைவிக்காமல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உணவுக்காளான் சத்துக்களின் புதையல்!
உணவுக்காளான் – கொழுப்பு குறைந்தது; சோடியம், க்ளூடாமிக் ஆசிட், அமினோ ஆசிட் உட்பட பல வகை சத்துக்களை கொண் டது. சைவ உணவுப் பிரியர்களில் சிலருக்கு இதன் பெயரை கேட்டாலே, ஙே…என்று முகத்தை சுளிப்பர். உண்மையில், இதை சாப்பிட்டு பார்த்தால் தான் அதன் சுவை தெரியும்; உடல் எடையை குறைக்க வேண்டுமானால், கலோரி குறைந்த இதை விட சூப்பர் உணவு எதுவுமில்லை.
* எல்லையில்லா புரதச்சத்து கொண்டது.
* பொட்டாசியம், செலினியம், தாமிரம், துத்தநாகம், நியாசின், ரிபோப் ளோவின், இரும்பு சத்துக்களை கொண்டது. அவ்வளவும் எலும்புக்கும் , தசைகளுக்கும் வலுவூட்டத்தக்கது.
* சமைத்த காளானில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதய பாதுகாப்புக்கு மிக நல்லது.
* பல வகை உணவுக்காளான்கள் இருந்தாலும், பட்டன் காளான்களை பலரும் விரும்புவர். இதை பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் பாதுகாக்கலாம்.
* தோட்டங்களில் விளையும் வேறுவித காளான்கள் ஆபத்தானவை. பல வகை காளான்கள் விஷத் தன்மை வாய்ந்தவை என்பதால், உணவுக்காளான் தானா என்று உறுதி செய்வது நல்லது.

வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு

தேவையானப் பொருட்கள்:

வாழைக்காய் – 1
பச்சைப்பயறு – 1 கப்
பச்சை மிளகாய் – 4 அல்லது 6
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு

செய்முறை:

பச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில்
ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன்
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

வாழைக்காய்
துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை
விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை
வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில்
எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும்
அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். பின்னர் அதில் வேக
வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது
ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி
விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து,
இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.

தேவையானப் பொருட்கள்:

வாழைக்காய் – 1
பச்சைப்பயறு – 1 கப்
பச்சை மிளகாய் – 4 அல்லது 6
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு

செய்முறை:

பச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில்
ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன்
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

வாழைக்காய்
துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை
விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை
வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில்
எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும்
அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். பின்னர் அதில் வேக
வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது
ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி
விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து,
இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.