எக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ், எக்ஸெல் கிராபிக்ஸ்

ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்ற தாகத் தோன்றும். நாம் வேண்டும் போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் எக்ஸெல் 2003 வரையில் எதுவாக இருந்தாலும் கீழே கண்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.
2. இதில் View என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
3. பின்னர் Hide All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்தவுடன் கிராபிக்ஸ் ஒர்க்ஷீட்டிலிருந்து மறைக்கப்படும். அவை அங்குதான் இருக்கும். பார்வையிலிருந்தும் பிரிண்ட் செய்வதிலிருந்தும் மறைக்கப்படுகிறது.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டனை அழுத்தி அதில் Excel Options என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். Excel Options dialog box காட்டப்படும்.
2. பின் டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை ஸ்குரோல் செய்து பார்க்கவும். அங்கு Display Options என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் உள்ள ட்ராப் டவுண் லிஸ்ட்டினைப் பயன்படுத்தி எந்த ஒர்க்புக் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Nothing (Hide Objects) என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்தால் கிராபிக்ஸ் மறைக்கப்படும்.
இனி உங்கள் ஒர்க்ஷீட்டினை வழக்கமான முறையில் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின் மீண்டும் கிராபிக்ஸ் படங்கள் ஒர்க்ஷீட்டில் காணப்பட வேண்டும் எனில் மேலே சொன்னபடி ஆப்ஷன்கள் பட்டியலில் சென்று Show All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுத்திரையில் ஒர்க்ஷீட்
எக்ஸெல் பயன்படுத்துகையில் நீங்கள் தயாரித்த ஒர்க்ஷீட்டின் தகவல்கள் மட்டுமே மானிட்டரின் முழுத் திரையில் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? View மெனு சென்று Full Screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பன் தரும் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Workbook Views குரூப்பில் இருந்து Full Screen என்பதனைக் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு மாற்றியபின் உங்கள் பணியினை முழுத்திரையில் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு முடித்தபின் அதே பிரிவில் onscreen பட்டனை அழுத்தவும். இதனால் வழக்கமான தோற்றம் கிடைக்கும். அல்லது எஸ்கேப் (Escape) கீயையும் அழுத்தலாம்.

%d bloggers like this: