Advertisements

Daily Archives: மார்ச் 8th, 2010

புதிய பாட்நெட் வைரஸ்

நெட்விட்னஸ் என்னும் இன்டர்நெட் ஆய்வு நிறுவனம் புதிய வைரஸ் ஒன்று வேகமாக நிறுவனங்கள் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. “நீபர் பாட்நெட்“ என அழைக்கப்படும் இந்த வைரஸ் இந்த குறிப்பை எழுதும் நாள் வரை 2,500 நிறுவனங்களின் 75,000 கம்ப்யூட்டர்களிலும், சில சோஷியல் நெட்வொர்க் தளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களின் கம்ப்யூட்டர்களிலும் பரவி உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வைரஸ் தான் பற்றிக் கொண்டுள்ள கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம் உட்பட அனைத்து பெர்சனல் தகவல்களையும் திருடி, இதனைத் தயாரித்து அனுப்பிய ஹேக்கர்களின் கம்ப்யூட்டர் களுக்கு அனுப்பும். பாட்நெட் என்பது இந்த வைரஸ் பரவி உள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினைக் குறிப்பிடுகிறது. இந்த நெட்வொர்க்கை ஹேக்கர்கள் தள்ளி உள்ள ஓர் இடத்தில் தங்களின் மையக் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
இந்த வைரஸ் பரவி வருவது வழக்கமான ஒரு சோதனையின் போது நெட்விட்னஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டது. வழக்கமான மால்வேர் பாதுகாப்பு வழிமுறைகள், சிக்னேச்சர் வரிகள் அடிப்படையிலான கண்டறிதல் ஆகியவை இந்த வைரஸிடம் செல்லுபடியாகாமல், கண்டறியமுடியாமல் உள்ளன.

Advertisements

விண்டோஸ் புதியவர்களுக்கு

விண்டோஸ் இயக்கத் தொகுப்புக்கு முதல் முதலாக அறிமுகம் ஆகும் புதியவர்களுக்காக    எளிய வழிகள். நீங்கள் விண்டோஸ் குறித்து நன்கு அறிந்தவர் எனில், இவற்றைப் புதிதாய் விண்டோஸ் கற்றுக்கொண்டு பயன்படுத்தும் உங்கள் நண்பருக்கு, குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

1. பைல்களைக் காண விண்டோஸ் எக்ஸ்புளோர ருக்குச் செல்கிறீர்கள். விண்டோஸ் R + E அழுத்தலாம்; ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Explore அழுத்திப் பெறலாம்.
2. பின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தரும் டைரக்டரிகளில், பல போல்டர்களைத் திறந்து பார்க்கிறீர்கள். இங்கே தரப்பட்டுள்ள சில ஐகான்களைப் பார்க்கலாம். இந்த ஐகான்களைக் கவனியுங்கள். முதலில் உள்ள ஐகானைக் கிளிக் செய்தால், அப்போது நீங்கள் இருக்கும் போல்டருக்கு முன் எந்த போல்டரைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களோ, அந்த போல்டருக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். கர்சரை அந்த ஐகான் மீது கொண்டு சென்றாலே, அதில் நீங்கள் இதற்கு முன் பார்த்த டைரக்டரி பெயர் கொடுக்கப்பட்டு Back என்ற சொல்லுடன் தரப்படும். இதே போல அடுத்த அம்புக்குறி உள்ள ஐகானில் கிளிக் செய்தால், நீங்கள் பின் செல்வதற்கு முன் பார்த்த டைரக்டரிக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
மேலே அம்புக்குறி கொண்டுள்ள ஐகானில் கிளிக் செய்தால் “தணீ” என்ற சொல் கிடைக்கும். அதாவது நீங்கள் முன் செல்ல வேண்டிய டைரக்டரிக்கு உங்களை இட்டுச் செல்லும்.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேடியும், நீங்கள் தேடும் பைல் கிடைக்கவில்லை என்றால், தேடுவதற்கு மீண்டும் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி சர்ச் பாக்ஸ் செல்ல வேண்டியதில்லை. இதிலேயே மேலே காட்டப்படும் Search ஐகானை அழுத்தித் தேடலாம்.
பக்கத்தில் காணப்படும் போல்டர்ஸ் ஐகானில் அழுத்தும் போது, அங்கே இருக்கும் இரண்டு பிரிவு (போல்டர்கள், போல்டரில் உள்ள பைல்கள்) மறைந்து பைல்கள் மட்டும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால், போல்டர்கள் பிரிவும் காட்டப்படும்.
நீங்கள் பைல்கள் மற்றும் போல்டர்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த வகையில் அவற்றைக் காட்டுமாறு நீங்கள் விண்டோஸ் இயக்கத்தினை செட் செய்திடலாம். இதற்கு மேலாக உள்ள மெனுபாரில் உள்ள வியூ (View) என்ற பிரிவில் அழுத்தவும். இங்கு ஒரு கீழ் விரி மெனு கிடைக்கும். இதில் எப்படி பைல் மற்றும் போல்டர்கள் காட்டப்பட வேண்டும் எனப் பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்துப் பிரிவுகளிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி பின் அப்ளை (Apply) கிளிக் செய்து வெளியேறலாம். இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், பைல்கள் வைக்கப்பட்டுக் காட்டப்படும் நிலை முற்றிலும் மாறிவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம். பைல்களும் போல்டர்களும் அப்படியே தான் இருக்கின்றன. அவை காட்டப்படும் விதத்தைத்தான் நீங்கள் உங்கள் விருப்பப்படி மாற்றுகிறீர்கள். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
பைல் மற்றும் போல்டர்கள்: பைல் என்பதற்கும் போல்டர் என்பதற்கும் வேறுபாடு தெரியாத தொடக்க நிலை கம்ப்யூட்டர் பயனாளர் பலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். நான் ஒரு படத்தை டவுண்லோட் செய்தேன். ஆனால் அது எந்த பைலில் உள்ளது என்று தெரியவில்லை என்று சொல்வார்கள். உண்மையில் அவர்கள் போல்டரைத்தான் தேடுகிறார்கள். எந்த போல்டரில் அவர் டவுண்லோட் செய்த பட பைல் இருக்கிறது என்பதைத்தான் அவர் தேடுகிறார்.
இனி விளக்கத்திற்கு வருவோம். பைல் என்பது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஒரு ஐட்டம். அது போட்டோவாகவோ, வேர்ட் டாகுமெண்ட்டாகவோ, டேட்டா பேஸ் ஆகவோ, இமெயில் இணைப்பாகவோ இருக்கலாம். ஸிப் பைல் (zip file) என்பது பல பைல்கள் சேர்ந்து சுருக்கப்பட்டு இருப்பது. இதனை விரித்தால், அந்த ஸிப் பைலில் இருப்பவை எல்லாம் தனித்தனி பைலாகக் கிடைக்கும்.
போல்டர் என்பது இந்த பைல்களைத் தாங்கி வைத்திருக்கும் ஒரு கன்டெய்னர். விண்டோஸ் உங்களுக்கு பல போல்டர்களைக் காட்டி தன் வேலையைத் தொடங்கும். அவை Documents, Music, Pictures போன்றவையாக இருக்கலாம்.
சிங்கிள், டபுள் கிளிக்: அடுத்து விண்டோஸ் இயக்கத்திற்கு அறிமுகமானவர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்னையைப் பார்க்கலாம். அது சிங்கிள் மற்றும் டபுள் கிளிக். சில செயல்பாடுகள் மவுஸின் இடது பக்கம் ஒரு கிளிக் மூலம் தொடங்கலாம். சில இரண்டு கிளிக் மூலம் தொடங்கலாம். இது இப்படித்தான் என விண்டோஸ் இயக்கத்தில் எங்கும் வரையறை செய்யப்படவில்லை. இருப்பினும் இது சார்ந்த சில வழக்கு விதிகளைக் காணலாம்.
1.வெப் பிரவுசரில் இரண்டு கிளிக் வேண்டாம். ஒரு பிரவுசரில் நீங்கள் சந்திக்கும் லிங்க், பட்டன், டேப், டூல்பார் ஐகான்கள், இமெயில் முகவரி மற்றும் பிறவற்றில் ஒரு கிளிக் செய்தால் போதும். இமெயில் முகவரி ஒன்றில் நீங்கள் இரண்டு கிளிக் செய்வதாக வைத்துக் கொள்வோம். உடனே இரண்டு இமெயில் விண்டோக்கள் உங்களுக்குத் திறக்கப்பட்டு கிடைக்கும்.
2. உங்களுடைய விண்டோஸ் குயிக் லாஞ்ச் பாரில்(ஸ்டாட் பட்டனுக்கு வலதுபுறமாகக் காணப்படும்) உள்ள ஐகான்கள் மீது டபுள் கிளிக் வேண்டாம். டாஸ்க்பாரில் உள்ளவற்றில் எதிலும் இரண்டு கிளிக் தேவையில்லை.
3. டெஸ்க்டாப்பில் உள்ள புரோகிராம் ஐகான்களில் இரண்டு கிளிக் செய்தால் தான் அவை செயலாக்கத்திற்குக் கிடைக்கும்.

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை

வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று

உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம்

ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை

இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு

வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி

வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது

வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால்.

தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல்

பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல்

சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த

பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும்

பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள்.  அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை

கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க!

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றேர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

நெகிழும் தன்மையுடன் நவீன சோலார் செல்!

இயற்கை சக்தியை தேவைக்கு உபயோகப்படுத்தும் விழிப்புணர்வு அதிகரித்தபின் சோலார் கருவிகள் பயன்பாடு உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இதன் தேவை இன்னும் அதிகரிக்கும். இதற்காக நவீன மாற்றங்களுடன் கூடிய சோலார் கருவிகள் தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

சுவர், கண்ணாடி, கதவு என்று எந்த பொருளையும் சோலார் கருவியாக மாற்றும் சோலார் மை சமீபத்தில் அறிமுகமானது. அதேபோல தற்போது புதுமையாக நவீன சோலார் செல் உருவாக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சிலிக்கான் தகட்டுக்குப் பதிலாக சிறிய சிலிக்கான் கம்பியும், சிறிய அலுமினிய எதிரொளிப்பு தகடும் சேர்ந்து இந்த நவீன சோலார் செல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 85 சதவீத சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றி சேமித்துவிடும். இது முந்தைய செல்களைவிட 17 சதவீதம் கூடுதல் சக்தி பெற்றது.

மேலும் இந்த சோலார் செல் நெகிழும் தன்மை கொண்டதாகவும், குறைந்த எடை உடையதாகவும் இருக்கிறது. கண்ணுக்கு புலனாகாத இன்பிராரெட் அலைக் கற்றையையும் ஈர்த்து ஆற்றலை சேமிக்கும். நெருக்கமற்று சுற்றப்பட்டிருக்கும் சிலிக்கான் வயர் வரிசை, சூரிய ஒளியை அதிகஅளவில் ஈர்க்க உதவுகிறது. அதேபோல நல்ல முறையில் `அவுட்புட்’டாக அதிக அளவு மின்சாரத்தையும் தருகிறது.

நெகிழும் தன்மை கொண்டதாக இருப்பதால் விரும்பிய வடிவங்களில் சோலார் கருவியை வடிவமைக்க முடியும். அதிகப்படியான சூரிய ஆற்றலை சேமிப்பதால் வருங்காலத்தில் இது மிகவும் பிரபலமாகும் என்று நம்பலாம்!

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!

விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

முதலீட்டு ஆவணங்கள் பத்திரம்!

தேடித் தேடி அலசி அலசித் தேர்ந்தெடுத்து முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பலர். ஆனால் அதற்கான ஆவணங்களைப் பத்திரமாக வைக்க மாட்டார்கள். குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்பவர்கள்.

“ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களில் முதலீடு செய்பவர்களிடம் இது பொதுவாகக் காணப்படும் விஷயம். `மிச்சுவல் பண்டில்’ முதலீடு செய்பவர்களுக்கு அதற்கென தனியான சான்றிதழ் கிடைப்பதில்லை. ஓர் ஒற்றை `அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டை’ முதலீட்டுக்கான சான்றாகப் பயன்படுத்த முடியும் என்றாலும், பெரும்பாலும் ஆட்கள் அவற்றைப் பாதுகாத்து வைப்பதில்லை. தபாலில் வரும் அவற்றைப் பிரித்து பார்த்துவிட்டுக் கிழித்தெறிந்து விடுகிறார்கள் அல்லது அலட்சியமாகத் தூக்கிப் போட்டுவிடுகிறார்கள்” என்று முதலீட்டு ஆலோசகரான அரவிந்த் ராவ் கூறுகிறார்.

மற்றொரு முதலீட்டு நிறுவன ஆலோசகரான அமர் பண்டிட், “100 வாடிக்கையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 95 சதவீதம் பேர் தங்களின் ஆவணங்களை ஒழுங்காக வைத்திருப்பதில்லை.

ராஜேஷ்வர் அப்படி ஒருவர். அவர் தனது மனைவியின் மறைவுக்குப் பின் நிதி விஷயங்களை ஒழுங்குபடுத்த முயன்றபோது, பாதி முதலீட்டுத் திட்டங்களுக்கான ஆவணங்களைக் காணாமல் திகைத்தார்.

“அவரது மனைவி இரண்டொரு காப்பீட்டு பாலிசிகளை எடுத்திருந்தார். தபால் அலுவலகத்தில் முதலீடு செய்திருந்தார். தவிர, `பிக்சட் டெபாசிட்’களிலும், பங்குகளிலும் முதலீடு செய்திருந்தார். ஆனால் அவற்றுக்குரிய பத்திரங்கள் எங்கு சென்றன ராஜேஷ்வருக்குத் தெரியவில்லை” என்கிறார் அமர்.

“மக்கள் பொதுவாக, தாங்கள் எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறோம் என்று ஒரு பட்டியல் தயார் செய்துகொள்வதில்லை. அதை ஒரு கடினமான பணியாக நினைக்கிறார்கள்” என்கிறார் நிதிப் பயிற்சியாளரான பி.வி. சுப்பிரமணியம்.

இவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் வங்கிப் பத்திரம் ஒன்றை அதன் முதிர்வுக் காலம் முடிந்து ன்றாண்டுகள் கழித்துக் கண்டுபிடித்தார். மற்றொருவர் தனது `பிக்சட் டெபாசிட்’டை குறிப்பிட்ட நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் 15 ஆயிரம் பாயை இழந்தார்.

“முதலீட்டை முடித்ததும், அவ்வப்போது `அப்டேட்’ செய்வது, `ரிட்டர்ன்களை’ `டெபாசிட்’ செய்வது போன்றவை பற்றிப் பலர் அலட்டிக்கொள்வதில்லை. இந்த விஷயத்தில் மக்கள் மிகவும் `கேசுவலாக’ நடந்துகொள்கிறார்கள்” என்று ஒரு நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான கஜேந்திரா கூறுகிறார்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் இந்த மார்ச் மாதத்தில் நம்மில் பலரும் ஆவணங்களைத் தேடுவோம். இனியாவது அவற்றை ஒழுங்குபடுத்துவோமா?

கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்

தேவையானப் பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – அரை கப்
பச்சை பட்டாணி – மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் (விரும்பினால்) – அரை டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
எண்ணை – அரை டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலம் – சிறிது
மெலிதாக நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் – அரை கப்

வதக்கி அரைக்க:
எண்ணை – அரை டேபிள் ஸ்பூன்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லி இலை – அரை கட்டு
பூண்டு – மூன்று பற்கள்
இஞ்சி – ஒரு துண்டு
தேங்காய் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று

செய்முறை:
அரிசியை கழுவி ஒரு கப் நீரூற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும் .

புதினா கொத்தமல்லி இலைகளை உதிர்த்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக கட் செய்யவும்

வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி வதக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி ஆற வைத்துக்கொள்ளவும்.

இதனை சிறிது நீர் விட்டு மிக்சியில் அரைத்து கொள்ளவும்

குக்கர் பாத்திரத்தில் எண்ணை விட்டு சூடாக்கி தாளிதம் செய்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்

ஓரளவு வதங்கியவுடன், பட்டாணி சேர்த்து வதக்கவும்

அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

இத்துடன் அரிசி ஊற வைத்த நீர் சேர்த்து, கொதி வந்தவுடன் அரிசி, உப்பு சேர்த்துக்கொள்ளவும்
இறுதியாக, எலுமிச்சம் பழ சாறு மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு விடவும்
ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து வைத்து நான்கு-ஐந்து நிமிடம் கழித்து தீயை அணைத்து விடவும் (அல்லது நீங்கள் எப்போதும் செய்யும் முறையிலும் வைத்துக்கொள்ளலாம்).

விசில் ஆறியவுடன் வெயிட் எடுத்து குக்கரை திறக்கவும்…. சாதம் ரெடி…. இதனை ரைத்தாவுடன் பரிமாறலாம்….

குழந்தைகளின் மொழியறிவை வளர்க்கும் இசை!

இசையானது குழந்தைகளின்   மூளை ஒலி நுண்ணுணர்வுத் திறனை அதிகரிக்கிறது, அதன் மூலம் அவர்களது மொழியைக் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொழியறிவு என்கிறபோது அதில் பேச்சும் அடக்கம்.

இது தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் சிகாகோ நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் மேற்கொண்டனர். அதில், மூளையின் அறிவு வளர்ச்சி நிலையில் இசையானது அதிகப் பலனளிப்பதாகக் கண்டறிந்தனர். அதிலும் குழந்தைகளுக்கு இசை அதிக நன்மை அளிக்கிறது. குறிப்பாக, கற்றல் குறைபாடு மற்றும் `ஆட்டிச’ பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு.

இசைத் திறனுக்கும், இசை முறைமைகளைக் கிரகிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இசைக் கருவியை வாசிப்பது, மொழியைக் கற்கும் குழந்தையின் திறனில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது.

ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த பேராசிரியை நினா கிராஸ் கூறுகையில், இசைக் கருவியை வாசிப்பது, மூளைத் தண்டின் தானியக்கச் செயல்முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் கீழ்ப் பகுதியான இது, சுவாசித்தல், இதயத் துடிப்பு, ஒலிகளுக்கான `ரியாக்ஷன்’ ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிப்பதாகும்.

அவர் மேலும் கூறுகையில், “இசை வாசிப்பது, ஒலி சம்பந்தப்பட்ட திறனைத் தூண்டி வளர்க்கிறது. அதாவது ஒருவரது சொந்த இசைக் கருவியின் ஒலி, அதன் இனிமை, `ரிதம்’ ஆகியவற்றை ஈர்க்கும் திறனை. இது, சத்தமான வகுப்பறைகளில் பேச்சை வளர்த்துக் கொள்வதற்கு குழந்தைகளுக்கு உதவும். குரலில் சிறுசிறு மாற்றங்களை, ஏற்ற இறக்கங்களை செய்வதன் லம் குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்துவது என்ற பேச்சு ணுக்கத்தைத் துல்லியமாக அறிய குழந்தைகளுக்குக் கை
கொடுக்கும்” என்று விளக்கமாகத் தெரிவிக்கிறார்.

`ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இசைக்கு நன்றாக பதில் செயல்பாட்டைக் காட்டுகிறார்கள், அவர்கள் இசையை விரும்புவது நன்றாகத் தெரிகிறது என்று அமெரிக்க `ஆட்டிச’ கழகத்தின் பேச்சாளர் பெண்மணி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “குழந்தைகள் தொடர்புகொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கலந்துரையாடவும், `ரிலாக்ஸ்’ ஆகவும், உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் இசை உதவுகிறது என்பது தெரிகிறது” என்றார்.

இசைக்கு பல இனிய, நன்மை தரும் தன்மைகள் உண்டு, நோயாளிகளுக்கு நலமளிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது குழந்தைகளின் மொழியறிவை, மொழித் திறனை வளர்க்கவும் உதவுகிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.