கொத்தமல்லி-புதினா பட்டாணி புலாவ்

தேவையானப் பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – அரை கப்
பச்சை பட்டாணி – மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் (விரும்பினால்) – அரை டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
எண்ணை – அரை டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலம் – சிறிது
மெலிதாக நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் – அரை கப்

வதக்கி அரைக்க:
எண்ணை – அரை டேபிள் ஸ்பூன்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லி இலை – அரை கட்டு
பூண்டு – மூன்று பற்கள்
இஞ்சி – ஒரு துண்டு
தேங்காய் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று

செய்முறை:
அரிசியை கழுவி ஒரு கப் நீரூற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும் .

புதினா கொத்தமல்லி இலைகளை உதிர்த்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக கட் செய்யவும்

வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி வதக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி ஆற வைத்துக்கொள்ளவும்.

இதனை சிறிது நீர் விட்டு மிக்சியில் அரைத்து கொள்ளவும்

குக்கர் பாத்திரத்தில் எண்ணை விட்டு சூடாக்கி தாளிதம் செய்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்

ஓரளவு வதங்கியவுடன், பட்டாணி சேர்த்து வதக்கவும்

அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

இத்துடன் அரிசி ஊற வைத்த நீர் சேர்த்து, கொதி வந்தவுடன் அரிசி, உப்பு சேர்த்துக்கொள்ளவும்
இறுதியாக, எலுமிச்சம் பழ சாறு மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு விடவும்
ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து வைத்து நான்கு-ஐந்து நிமிடம் கழித்து தீயை அணைத்து விடவும் (அல்லது நீங்கள் எப்போதும் செய்யும் முறையிலும் வைத்துக்கொள்ளலாம்).

விசில் ஆறியவுடன் வெயிட் எடுத்து குக்கரை திறக்கவும்…. சாதம் ரெடி…. இதனை ரைத்தாவுடன் பரிமாறலாம்….

One response

  1. This seems to be tasty. Let me try and infirm you

%d bloggers like this: