Daily Archives: மார்ச் 9th, 2010

“வைன்ப்ளூ’ன்னா என்ன?

“ஸ்வைன் ப்ளூ’ பற்றி தெரியும்; ஆனால், “வைன்ப்ளூ’ன்னா என்ன என்று தெரியுமா? இது ஒரு மனோவியாதி; இதற்கு காரணமாக இருப் பதும், அதற்கான மருந்து , மாத்திரையுமாக இருப்பதும் மனது தான்.
“வைன்’ என்றால், புலம்பல்தனம் என்று பொருள். அதாவது, “எல்லாம் எனக்கு தான் வருது; நான் என்ன செய்வேன்? எதுவுமே புரியலியே? தப்பே செய்யலே; நமக்கு ஏன் இப்படி…?’ என்று புலம்புவது தான் இந்த நோய் ஏற்படுவதன் ஆரம்ப ஆறிகுறி.
மனோதத்துவ நிபுணர்களை கேட்டால், “இது ஒரு விதமான வைரஸ் தான். இது நம்மில் பலருக்கு, வாழ்க்கை யின் ஒரு கட்டத்தில் மட்டுமல்ல, பல சூழ்நிலைகளில் இருக்கத்தான் செய்கிறது’ என்று தெரிவிக்கின்றனர்.
வீட்டினுள் எப்படி இது பாதிக்கிறது; யாரை பாதிக்கிறது?
* “சே! நாம நினைச்சபடி எதுவுமே நடக்க மாட்டேங் குது; நல்லது தான் சொல் றேன்; யாரும் கேட்க மாட் டேங்கறாங்க; நாம தான் சரியில்லையோ?’ என்று புலம்பல், ஒவ்வொருவருக் கும் ஒரு வகையில் இருக் கிறது.
*ஏதாவது ஒரு விஷயத் தில் இறங்கி, அது சரியாக நடக்காவிட்டால், “நமக்கு தான் அதிர்ஷ்டமில்லை யோ!’ என்று மனதுக்குள் வாட்டி எடுப்பதும் ஒரு வகை பாதிப்பு.
* ஒரு குறிப்பிட்ட செயலை செய்திருப் பீர்கள்; கடைசியில் தவறாக முடிந்திருக்கும்; “எல்லாம் உங்களால் தான் ஆனது; உங்களை யார் இதை செய்யச் சொன்னது?’ என்று அர்ச்சனை கிடைக்கும்.
இப்படி பல வகையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், “வைன்ப்ளூ’வின் தாக்கம் தான் என் கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
சரி, வெளியிடங்களில், பணியாற்றும் இடங்களில் எப்படி பாதிக்கிறது?
*சிடுமூஞ்சித்தனமான ஊழியர்களால் இந்த பாதிப்பு ஏற்படும். எந்த ஒரு பணியை செய்தாலும்,”என்ன, மாங்கு மாங்குன்னு வேலை செய்தா… பாஸ் கிட்டே நல்ல பேர் வாங்கி, இன்கிரீமென்ட் வாங்கலாம்ன்னு நினைப்போ…’ என்று சக ஊழியர் எப்போ பார்த்தாலும் கடுப்பேற்றிக்கொண்டே இருந்தால் இந்த நோய் பாதிக்கும்.
*பெண் ஊழியர்களிடம் பேசும் பழக்கம் சிலருக்கு உண்டு; ஆனால், எந்த தவறான நோக்கமும் இருக்காது. அதுவே, சக ஊழியர் களிடம் கிசுகிசு எழ வாய்ப்பாக அமைந்து விடும். இதனால், எரிச்சல் எழுகிறதே. அதுவும், “வைன்ப்ளூ’ நோய் துவக்கம் தான்.
*இப்போது எல்லா ஆபீஸ்களிலும் கம்ப்யூட்டர் ஆதிக்கம் தான். கம்ப்யூட்டர் நெட்வொர்க் மக்கர் செய்தது என்றால், மகா டென்ஷன் தான். சிலர் தலையில் கை வைத்து கம்ப்யூட்டர் எப்போது சரியாகுமோ? என்று “உச்…’ கொட்டியபடி உட்கார்ந்திருப்பர். அப்போது ஏற்படும் இந்த பாதிப்பு.
*முதுகில் குத்தாத அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாமல் ஏதாவது ஒரு ஆபீஸ் உண்டா என்ன? அப்படி சக ஊழியர்கள் தவறாக, “போட்டுக் கொடுத்து’ பழிவாங்கும் போதும் ஏற்படும் இந்த பாதிப்பு.
*எல்லாரும் சம்பளத்துக்கு தானே வேலை செய்கின்றனர். ஆனால் சிலரோ, பில்மேல் பில் போட்டு, எப்படியோ வேலையே செய்யாமல் ஏகப்பட்ட சலுகை பெற்று வருவர். இதை பார்த்து வேலையில் தீவிரமாக உள்ள மற்ற சில ஊழியர்களுக்கு புலம்பல் வெளிப்படும்.
*மொபைல் போன் , ஒரு முக்கிய காரணம். பெண்களை பார்த்தால், பேசுவது பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட கேட்காது. ஆனால், ஆண்கள் சிலர் இருக்கின்றனரே, எதிர்முனையில் உள்ளவருக்கு போன் பேசாமலேயே கேட்கும் அளவுக்கு சத்தமாக, மைக் வைக்காத குறையாக பேசுவர். இது, சக ஊழியர்களுக்கு தலையில் அடிப்பது போல் இருக்கும்..
இப்படிப்பட்ட காரணங்களால் பாதிக்கப் படுவோருக்கு தவிர்க்க வழியில்லை என்றாலும், குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. “மனதை திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பலவீனம் ஆட்பட்டால் தான் கழிவிரக்கம் வெளிப்படும். அடிக்கடி இப்படி புலம்பியபடியே இருந்தால், அதுவே, “டிப்ரஷன்’ மற்றும், “ஸ்ட்ரெஸ்’ வர காரணமாகி விடும். அப்புறம் என்ன? ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு என்று கடைசியில், “ஆஞ்சியோ’ வரை கொண்டு விட்டு விடும்’ என்றும் மனோதத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
***
சமீபத்தில் லண்டனில் , சாப்ட்வேர் உட்பட பல துறை ஊழியர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் வெளிவந்த தகவல்கள்:
* “சக ஊழியர்களில் சிலர் எப்போதும் வேலை செய்ய விடாமல் கடுப்பேற்றி<யும், சீண்டியும் வருகின்றனர்’ என்று 37 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
*”கம்ப்யூட்டர் நெட்வொர்க் பாதிக்கப்பட்டால், மண்டை காய்ந்து விடுகிறது’ என்று 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
* “கிசுகிசு கிளப்பி, வேலை செய்ய விடாமல் சிலர் செய்கின்றனர்’ என்று 19 சதவீதம் பெண்கள் கூறியுள்ளனர்.
* ஆபீஸ் டாய்லெட் நாறுது; சிலர் உரக்க மொபைல் போன் பேசுகின்றனர்; சிலர் குளிக்காமல் வருகின்றனர்… என்ற புகாரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூறினர்.

யு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்

யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com /index.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.

டேஸ்டி கோகனட் ரைஸ்

தேவையானப் பொருட்கள்:

அரிசி-2கப்

தேங்காய்-  1

பெறிய வெங்காயம்-   1

தக்காளி-  1

பட்டை-  4துண்டு

ஏலம்-  4

பூண்டு-   5பற்கள்

இஞ்சிபூண்டுபேஸ்ட் -3 டீ ஸ்பூன்

சோம்பு பவுடர் -1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள்-அரை டீ ஸ்பூன்

கறிவேப்பிலை முற்றியது-2கொத்து

புதினா இலை- சிறிதளவு

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில்   தேங்காயை மிக்ஸியில் அரைத்து நான்கு கப் பால் எடுக்கவும் .வெங்காயம் தக்காளி அரிந்து கொள்ளவும்.பூண்டு இரண்டாக கட் பண்ணவும்.சட்டியில் எண்ணை ஊற்றி சூடான உடன் பட்டை ஏலம் போடவும்.பிறகு வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சிபூண்டுபேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து லைட்டாக வதக்கி தேங்காய் பால் சேர்க்கவும்.அதில் மஞ்சள் தூள் சோம்பு பவுடர் புதினா இலை சேர்த்து ஒரு கொதி வரவும் அரிசியை களைந்து போடவும்.சிறுதீயில் வேக விடவும்.சுவையான கோகனட் ரைஸ் தயார்.இதில்  மஞ்சள்தூள் சேர்க்காமலும் செய்யலாம். மட்டன்,சிக்கன்,இரால்,க்ரேவி இதற்க்கு ஏற்ற சைட் டிஷ்.

குழந்தைகள் விரும்பும் பொம்மைகள்??

குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை.  பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான். உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான். அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான்.

இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து, காற்றடித்த வண்ண பொம்மைகள்.

ஓராண்டு வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும். மேலும் இப் பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.

இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்து விட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான். அவர்களை கவரக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்…

சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக் கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை

இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக், பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி. யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.

இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது

வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

நமது உடலின் காவல்காரனாக இருக்கும் கல்லீரல், ரத்தத்தை உற்பத்தி செய்யும் மண்ணீரல், சிறுநீரை சுத்திகரிக்கும் சிறுநீரகம், சர்க்கரையை கட்டுப்படுத்தும் கணையம் போன்ற அனைத்து உறுப்புகளும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு உறுப்பில் தொல்லை ஏற்பட்டாலும்கூட பிற உறுப்புகளும் பலஹீனமடைவதுண்டு. கல்லீரலில் ஏற்படும் பலஹீனத்தால் மண்ணீரல் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு போன்றவையும், கணையத்தின் குறைபாட்டால் சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரல் வீக்கமும், சிறுநீரக செயலிழப்பால் கணையம் மற்றும் கல்லீரல் பாதிப்பும் மாறி மாறி உண்டாகி, ஆரோக்கியமான உடல்நிலை கெட ஆரம்பிக்கிறது. கல்லீரல் தனது பாதுகாப்பு வளையத்தை தளர்த்திக் கொண்டால் அனைத்து உறுப்புகளும் சிறிது சிறிதாக செயலிழக்கத் தொடங்கிவிடும். எனவே கல்லீரலை பாதுகாப்பது அவசியமாகும்.
கல்லீரல் மற்றும் மண்ணீரலில் தோன்றும் பலவகையான குறைபாடுகள், அதனால் தோன்றும் சிறுநீர் தொற்று ஆகியவற்றை நீக்கி கல்லீரலை வலுப்படுத்தும் அற்புத மூலிகை அமரவள்ளி, ஆகாசக்கொடி, நீலாதாரம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படும் ஆகாசவள்ளி கொடியாகும். வேர், குளோரோபில் மற்றும் சுவாச தண்டுகள் ஏதுமில்லாமலேயே பிற மரம், செடிகளின் மேல் படர்ந்து, அவற்றின் சத்துக்களை உறிஞ்சிவளரும் இந்தக் கொடிகளுக்கு வேர்கள் இல்லாததால் மரம் மற்றும் செடிகளின் மேற்பகுதிகளில் போர்வை போல் படர்ந்து வாழ்கின்றன.
கஸ்குட்டா எபிதைமம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கன்வால்வுலேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கொடிகள் தான் சார்ந்திருக்கும் மரங்களின் மருத்துவ குணங்களையே பெற்றுள்ளன. ஆனால் இந்த கொடிகளுக்கென தனித் தன்மையாக அமைந்திருக்கும் கஸ்குட்டாலின், கஸ்குட்டின், அமார்வெலின், லூட்டியோலின், பெர்ஜெனின், குயிர்சட்டின் போன்ற வேதிப்பொருட்கள் கல் லீரலை பாதுகாக்கின்றன. உலர்ந்த ஆகாசவள்ளி கொடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி 30 கிராமளவு எடுத்து 500 மிலி நீரில் போட்டுகொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் குடித்துவர கல்லீரல் வீக்கம் தணியும். உலர்ந்த ஆகாசவள்ளி கொடிகளை இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் தேனுடன் குழப்பி சாப்பிட மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

எம்.எஸ்.ஆபீசுக்கு இணையான அப்ளிகேஷன்கள்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். வேர்ட் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷிட், பிரசன்டேஷன் டூல் என இன்னும் பல பயனுள்ள தொகுப்புகளைத் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் இது.
முன்பு கம்ப்யூட்டரை நிறுவனங்களிடம் வாங்கினாலும், கிரே மார்க்கட்டில் அசெம்பிள் செய்து வாங்கினாலும், தனிநபர் பயன்பாட்டுக்கென வாங்குபவர்கள், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பை இலவசமாகப் பதிந்து தர கேட்பார்கள். இதனால் இந்த ஆபீஸ் தொகுப்பு, தனி நபர்களின் கம்ப்யூட்டர்களில் காப்பி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் தொகுப்பாகவே இருந்து வந்தது, வருகின்றது. ஆனால், இப்போது இன்டர்நெட் இணைப்பு என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அமைந்துவிட்ட நாளில், மைக்ரோசாப்ட் எந்தக் கம்ப்யூட்டர்களில், ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாத ஆபீஸ் தொகுப்பு களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கிறது. அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் உதவிக் குறிப்புகளைத் தர மறுக்கிறது. இன்னும் சில நாட்களில் இவற்றை இயங்கவிடாமல் செய்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆபீஸ் தொகுப்பினைக் கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்த பலரும் முன்வருவதில்லை. ஏனென்றால், ஒரு சில நாடுகளில் அதன் விலை மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இதனால் தான் திருட்டு நகல் சாப்ட்வேர் பரவி வருகின்றது. ஆனால் இது போன்ற திருட்டு நகல் ஆபீஸ் தொகுப்பு பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாம் இணையத்தில் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக இலவசமாகக் கிடைக்கும் தொகுப்புகளை டவுண்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அந்த தொகுப்புகள் குறித்து இங்கு காணலாம்.

1. ஓப்பன் ஆபீஸ் (Open Office. org): எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பாகும். இதற்கென இத்தொகுப்பினை வழங்குபவர்களுக்கு பல விருதுகள் தரப்பட்டுள்ளன. உங்கள் டாகுமென்ட், ஸ்ப்ரட்ஷீட், பிரசன்டேஷன் பைல்களை, இந்தத் தொகுப்பிலும் எளிதாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத் தலாம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் முகவரி: http://why.openoffice.org/ . இது ஒரு ஓப்பன் சோர்ஸ் கோடிங் முறையில் உருவானது என்பதால், நீங்கள் ஒரு புரோகிராமராக இருந்தால், இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, உங்களுக்குத் தேவையானபடி இதனை வளைத்து அமைத்துக் கொள்ளலாம்.

2. ஐ.பி.எம். லோட்டஸ் சிம்பனி (IBM Lotus Symphony): பலவகையான பயனுள்ள வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பு. இதில் லோட்டஸ் சிம்பனி டாகுமெண்ட்ஸ், லோட்டஸ் சிம்பனி ஸ்ப்ரெட் ஷீட்ஸ், லோட்டஸ் சிம்பனி பிரசன்டேஷன்ஸ் என ஆபீஸ் தொகுப்பின் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதனைப் பெற http://symphony.lotus.com/software/lotus /symphony/home.nsf/home ன்றமுகவரிக்குச் செல்லவும்.

3. கூகுள் டாக்ஸ் அன்ட் ஸ்ப்ரெட் ஷீட்ஸ் (Google Docs and Spreadsheets):: இணையத்தில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக கூகுள் தரும் தொகுப்பு இது. இத்தொகுப்பில் உள்ள வசதிகள் இதனை நிரூபிக்கின்றன. நீங்கள் ஆன் லைனில் இதனைப் பயன்படுத்தலாம் என்றாலும், ஆப் லைனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பயன்படுத்தி பின்னர் முந்தைய டாகுமெண்ட்டுடன் இணைத்துக் கொள்ளும் வசதியையும் இது தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய முகவரி http://docs.google.com/


4.ஸோஹோ சூட்(Soho Suite): இதுவும் ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன் புரோகிராம். இதில்Zoho Writer, Zoho Sheet and Zoho Show எனப் பலவகையான டாகுமெண்ட்களை உருவாக்கும் வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த தொகுப்பும் ஆப் லைனில் டாகுமெண்ட்களை எடிட் செய்து, பின் அப்டேட் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது. இதனைப் பெற்றுப் பயன்படுத்த http://www.zoho. com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.

5. கே ஆபீஸ் (K Office) : நீங்கள் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த ஆபீஸ் சூட் உங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கும். இதில் அனைத்து அப்ளிகேஷன் வசதிகளும் உள்ளன. இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.koffice.org/ மேலே காட்டப்பட்டுள்ள ஆபீஸ் தொகுப்புகள் தவிர, சில குறிப்பிட்ட அப்ளிகேஷன்களுக்கு (வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் போன்றவை) மட்டும் பதிலியாகப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

6.ஓப்பன் ஆபீஸ் கால்க் (Open Office Calc): மைக்ரோசாப்ட் எக்ஸெல் அப்ளிகேஷனுக்கு இணையானது இந்த புரோகிராம். இதில் கூடுதலாக டேட்டா பைலட்
(Data pilot) என்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. நிறுவனங்களின் டேட்டா பேஸ் தொகுப்பிலிருந்து டேட்டாவைப் பெற்று, பலவகைகளில் அவற்றைக் கையாளும் திறன் பெற்றது. இதன் மூலம் பல தெளிவுள்ள முடிவுகளை எடுக்க இது உதவிடும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.openoffice.org/product/calc.html

7. அபிகஸ் (Abykus): அபிகஸ் 2.0 என்ற இந்த புரோகிராம் ஒரு ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஆகும். இது வர்த்தகம் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களைக் கையாளப் பல வழிகளைத் தருகிறது. இதில் புள்ளிவிபரங்களைக் கையாண்டு தீர்வுகளைப் பெற ஸ்டேட்டிஸ்டிகல் விஸார்ட் தரப்படுகிறது. 190க்கும் மேலான கணக்கு பார்முலாக்கள், மேட்ரிக்ஸ் பயன்பாடுகள், நாள், நேரம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சமன்பாடுகள், முப்பரிமாண கிராபிக்ஸ் வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த ஒர்க்ஷீட்டையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் பெற http://www.abykus.com/என்னும் முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

8. கிளீன் ஷீட்ஸ் (CleanSheets): : அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங் களிலும் பயன்படுத்தக் கூடிய முதல் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இது ஜாவா கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதால், இதனைப் பயன்படுத்த ஜாவா உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும். இதனைப் பெற http://csheets.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

9. ஸ்ப்ரெட் 32 (Spread32): இது ஒரு சிறிய ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். இதில் 256 நெட்டு வரிசையும், 65536 படுக்கை வரிசையும் கொண்ட மேட்ரிக்ஸ் தரப்படுகிறது. 255 ஒர்க்ஷீட் கொண்டுள்ளது. 300க்கு மேற்பட்ட பார்முலா செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி http://www.xtort.net /officeandproductivity/floppyoffice//

10.எடிட் கிரிட் (EditGrid): இது ஒரு ஆன்லைன் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம். எக்ஸெல் புரோகிராம் தரும் அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும். டேட்டா வினை இதனுடன் தொடர்புபடுத்தி, பின் எக்ஸெல் தரும் வசதிகளுக்கும் மேலான வசதிகளைப் பயன்படுத்தி, நாம் முடிவிற்கான ஸ்ப்ரெட்ஷீட்களை இதன் மூலம் தயாரிக்கலாம். இதனைப் பெற http://www.editgrid.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இணைய தளங்கள் பலவற்றில் இது போல ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம்கள் வெவ்வேறு வசதிகளுடன் உள்ளன. அவற்றில் Google Spread sheets, Zoho Sheets, Num Sum, Simple Spreadsheet, wikiCalc, ZCubes Calci ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.

இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.

“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.

“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.

`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.

அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.

“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.

அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.

அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.

ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.