Daily Archives: மார்ச் 11th, 2010

பிரவுசருக்குள் பிரவுசர்

ஒரு பிரவுசரில் இன்டர்நெட் வெப்சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தளத்தை வேறு ஒரு பிரவுசரில் பார்த்தால் இன்னும் சிறப்பாக நன்றாக இருக்குமோ என்று எண்ணுகிறீர்கள். உடனே என்ன செய்வீர்கள்? அந்த பிரவுசரை விட்டு விலகி, அடுத்த பிரவுசரை இயக்கி, குறிப்பிட்ட தளத்தின் முகவரியினை அமைத்து இயக்கிப் பார்ப்பீர்கள். இதற்குப் பதிலாக அதே பிரவுசரில் ஒரு ஐகானை அழுத்துவதன் மூலம் மற்ற பிரவுசர்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ளது. ஆம். பயர்பாக்ஸ் பிரவுசர் சார்ந்த ஆட் ஆன் தொகுப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் இருக்கையில் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்களை இயக்க வழி தரும் ஆட் ஆன் தொகுப்புகள் உள்ளன.
கூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம் https://addons.mozilla.org/enUS/firefox/ addon/8740?src=oftenusedwith என்ற முகவரியிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கானது https://addons.mozilla.org/enUS/firefox/addon/1429?src= oftenusedwith என்ற முகவரியிலும், சபாரிக்கான புரோகிராம் https://addons.mozilla.org/enUS/firefox/ addon/6438?src=oftenusedwith என்ற முகவரியிலும், ஆப்பராவிற்கான புரோகிராம் https://addons.mozilla. org/enUS/firefox/addon/1 190?src=oftenusedwith என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.
தேவைப்படும் பிரவுசருக்கான ஆட் ஆன் புரோகிராமில் கிளிக் செய்து, பின் Add to Firefox என்ற பட்டனை அழுத்திவிட்டால் அதற்கான புரோகிராம் இணைந்துவிடும். பின் மீண்டும் பயர்பாக்ஸை இயக்கி, ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பார்க்கையில் ரைட் கிளிக் செய்தால் View this page in ……” என குறிப்பிட்ட அந்த பிரவுசரின் பெயர் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால்,உடன் அந்த பிரவுசர் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த தளம் அதில் காட்டப்படும்.

`கை பிடிக்காத’ குடை

மழைக் காலத்துக்கு பயன்படுத்தி வந்த குடைகள் தற்போது வெயிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குடைகளை கையில் பிடித்தபடி செல்ல வேண்டியதிருக்கும். இதனால் கையில் மற்ற பொருட்களை எடுத்துச் செல்வதோ, வாகனங்களில் செல்லவோ சிரமமாக இருக்கும்.

இந்தப் பிரச்சினைகளுக்குத்தீர்வு தருகிறது `ஹெல்மட்’ குடை. இதை கையில் பிடித்துக் கொண்டு திரிய வேண்டாம். தோள்பட்டையில் பட்டையால் இணைத்துவிட்டால் போதும். ஹெல்மட்போல நின்று தலை மற்றும் உடல்பகுதி (மார்பகம் வரை) நனையாதவாறு பாதுகாக்கும். இதை அணிந்து கொண்டு வாகனமும் ஓட்டமுடியும்.

விதவிதமான குடைகளில் இது ஒரு புதுமைக் குடை.

அதிக பேருக்கு இடமளிக்கும் `மேஜிக்’ சோபா

விருந்தினர்களை உபசரிப்பது நமது பண்பாடு. வந்தவர்களை அமர வைக்க எல்லோர் வீட்டிலும் இருக்கைகள் வைத்திருப்பார்கள். திடீரென்று நிறைய விருந்தினர்கள் வந்துவிட்டால் எல்லோருக்கும் இருக்கைகள் (சேர்) இருக்காது. ஆனால் விருந்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கையை சுருக்கி நீட்ட முடிந்தால் எப்படி இருக்கும்! அப்படி நீட்டி மடக்கும் மேஜிக் சோபா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சோபா அட்டைப் பெட்டி மற்றும் கழிவு மரக் கட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை ஒருவர் மட்டும் உட்காரும் படியாகவும் அமைக்கலாம். அதிகபட்சம் 16 பேர் அமரும்படி விரித்தும் அமைத்துக் கொள்ளலாம். 7 விதமான வடிவங்களில் சோபாவை மாற்றி அமைக்கலாம். குறைந்த இடவசதியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரவேற்பறைக்கு ஏற்ற வசதியான சோபா இது.

காளான் சாதம்

தேவையானப் பொருட்கள்:

உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி – பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு – பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு – தேவையானவை
நெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் – 200 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் [அ] நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.
காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும்.
அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது
வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார். மசாலா வாசனை வேண்டும் என்றால்
காளானை போடும் போது 1 ஸ்பூன்அஜினமோட்டோ தூவிகொள்ளலாம். .

மகான் சிவன்! (ஆன்மிகம்) -மார்ச் -13, 2010, மகா சிவராத்திரி.

சிவபெருமானுக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கின்றன. சிவசகஸ்ரநாமம் என்று இதைச் சொல்வர். இவற்றில் மிகவும் உயர்ந்ததாக எட்டு பெயர்கள் உள்ளன. பவன், சர்வன், ஈசானன், பசுபதி, உக்ரன், பீமன், ருத்ரன் என்ற ஏழு பெயர்களுடன் மகான் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இதனால், தவத்தில் உயர்ந்தவர்களை சிவாம்சமாகக் கருதி மகான் என்று சொல்லும் பழக்கம் வந்தது.
சிவராத்திரியன்று இரவில், நம்மால் எவ்வளவு முறை இந்த எட்டு நாமங்களை சொல்ல முடிகிறதோ, அந்தளவுக்கு விழித்திருந்து சொல்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. ஏனெனில், முதல் பெயரே, “பவன்’ என்று வருகிறது. “பவ’ என்றால் பிறவி. இந்த நாமங்களை,”பவாய தேவாய நம, சர்வாய தேவாய நம, ஈசானாய தேவாய நம, பசுபதயே தேவாய நம, ருத்ராய தேவாய நம, உக்ராய தேவாய நம, பீமாய தேவாய நம, மஹதே தேவாய நம…’ என்று பக்தியுடன் சொன்னால், இப்பிறப்பில் சகல இன்பங்களும், மறுபிறவியே இல்லாத நிலையும், பிறந்தாலும் இப்போது கிடைப்பதை விட பெரும் வளமும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை.
இந்த மந்திரத்தொடரில் கடைசியாக வரும், “மஹதே தேவாய நம’ என்ற தொடர் மகாசிவன் என்ற அர்த்தத்தில் வருகிறது. ஆனால், சிவனை இவ்வாறு அழைக்கும் பழக்கம் வராததால், மகேஸ்வரன், மகாலிங்கம் என்ற பெயர்கள் வந்தன. அவரை வணங்கும் இரவுக்கு மகாசிவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டது. ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு ஆட்சி செய்பவன் என்று பொருள். இதில், “மகா’ என்ற அடைமொழி சேரும் போது, அவனே சர்வ அதிகாரங்களும் பொருந்தியவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
விஷ்ணுவை மகாவிஷ்ணு என்பது போல, சிவனுக்கு சதாசிவன் என்ற திருநாமம் இருக்கிறது. “மகா’ என்ற சொல்லை விஷ்ணுவின் மனைவியான லட்சுமிக்கும் சூட்டி மகாலட்சுமி என்கிறோம். இது தவிர மகாசரஸ்வதி, மகாகாளி, மகாகணபதி, மகாசேனன் (முருகன்) என்ற பெயர்கள் உள்ளன. ஆனால், சிவனுக்கு மட்டுமே, “சதா’ என்ற சிறப்பு அடைமொழி உள்ளது. இந்தச் சொல் வேறு எந்த தெய்வத்துக்கும் தரப்படவில்லை என்பதால் தான், “சர்வம் சிவமயம்’ என்கின்றனர்.
“சிவ’ என்ற சொல்லுக்கு பத்ரம், கல்யாணம், சுபம் என்ற அர்த்தம் உண்டு. அதாவது, மங்களகரமானது என்ற பொருளில் இந்த வார்த்தை வடிக்கப்பட்டுள் ளது. இந்தச் சொல்லை உச்சரிப்பவர்களின் மனதில் அன்பு பெருகும். அன்பின் காரணமாக சகல சவுபாக்கியங்களும், சந்தோஷமும் கிடைக்கும். இதனால் தான், “அன்பே சிவம்’ என்றனர்.
இப்படி பல சிறப்புகளை உடைய சிவனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியை வழிபாட்டு இரவாகக் கொண்டுள்ளோம். இதையே சிவராத்திரி என்பர். மாசி மாதத்தில் வரும் இரவு, மிகவும் மகிமை உடையது என்பதால், “மகா சிவராத்திரி’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நாளில், தங்கள் குலதெய்வத்தையும் வணங்கும் வழக்கம் சில கிராமங்களில் உள்ளது.
வடமாநிலங்களில் மாசியை மகா மாதம் என்பர். அங்கே முன்னதாக இம்மாதம் பிறப்பதால், சிவராத்திரி தை கடைசி நாளிலேயே வந்துவிட்டது. இந்த நன்னாளின் இரவில் கண்விழித்து சிவ சிந்தனையுடன் இருந்து, அவரது நல்லருள் பெறுவோம்.