`கை பிடிக்காத’ குடை

மழைக் காலத்துக்கு பயன்படுத்தி வந்த குடைகள் தற்போது வெயிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. குடைகளை கையில் பிடித்தபடி செல்ல வேண்டியதிருக்கும். இதனால் கையில் மற்ற பொருட்களை எடுத்துச் செல்வதோ, வாகனங்களில் செல்லவோ சிரமமாக இருக்கும்.

இந்தப் பிரச்சினைகளுக்குத்தீர்வு தருகிறது `ஹெல்மட்’ குடை. இதை கையில் பிடித்துக் கொண்டு திரிய வேண்டாம். தோள்பட்டையில் பட்டையால் இணைத்துவிட்டால் போதும். ஹெல்மட்போல நின்று தலை மற்றும் உடல்பகுதி (மார்பகம் வரை) நனையாதவாறு பாதுகாக்கும். இதை அணிந்து கொண்டு வாகனமும் ஓட்டமுடியும்.

விதவிதமான குடைகளில் இது ஒரு புதுமைக் குடை.

%d bloggers like this: