திருமணமான தம்பதிகளுக்கு…
திருமணமான தம்பதிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் எப்படி பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலான தம்பதிகள் சுவாரஸ்யம் இன்றி பதிலளித்த போதிலும், பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூட தீவிர செக்ஸ் உறவு வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது எப்படி சாத்தியம்? கணவருடன் வாரம் ஒரு முறையாவது வெளியே ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். முடிந்தால் சினிமா, சுற்றுலா அல்லது பார்ட்டி என ஏதாவது நிகழ்ச்சிக்கு சேர்ந்து செல்லலாம்.
அப்படிச் செல்வதால் அன்யோன்யம் அதிகரிப்பதுடன் பாலுறவில் ஈடுபாடு குறையாமல் நீடிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடைவெளியில் இருவரின் உடல்நிலைக்கு ஏற்ப பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ளலாம்.
பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளாத நிலையிலும் சிறு, சிறு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 24 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதியாக வாழும் மார்க்-ஜெல்டா கூறுகையில், தாங்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறினர்.
அதற்குக் காரணம் குழந்தைகள் இருந்த போதிலும், தங்கள் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை பின்பற்றி வருவதாகவும், குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளதால் அவர்களும் தங்களைப் புரிந்து நடந்து கொள்வதாகவும் கூறினர்.
மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, துர்மணமாகி விடக்கூடாது.
சிறு சிறு பிரச்சினைகளுக்குக் கூட கூச்சலிட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடிய தம்பதிகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
பாலுறவுப் புணர்ச்சி தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை பாலுறவுப் புணர்ச்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுறவுப் பிரச்சினைக்காக பிரிந்த குடும்பங்கள் ஏராளம்.
எனவே மனம் விட்டுப் பேசி மகிழ்வோம். முடிந்தவரை தம்பதியரில் இருவரின் நிலைக்கேற்ப பாலுறவுப் புணர்ச்சி மேற்கொள்வோம். இன்பத்தின் எல்லையை அடைவோம்.
உலகிலேயே விலையுயர்ந்த செல்போன்!
கூறு கட்டி கூவி விற்காத குறையாக செல்போன்கள் இன்று மகா மலிவாகிவிட்டன. ஆனால் உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள செல்போனை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த `தங்க செல்போனில்’, விலை மிகுந்த வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
`ஐபோன் 3ஜி சுப்ரீம்’ என்ற இந்த செல்போனை லிவர்பூல் கோல்டு ஸ்ட்ரைக்கர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துக்காக ஸ்டூவர்ட் ஹிக்ஸ் என்பவர் வடிவமைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இதை வெளியிட்டிருக்கிறது. 22 கேரட் தங்கத்தால் ஆன இந்த செல்போனின் முன்புறத்தில் 136 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. 53 வைரங்களைக் கொண்டு `ஆப்பிள் சின்னம்’ உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பிரதான பட்டன், 7.1 கேரட் மதிப்புள்ள ஓர் அரிய வைரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு செல்போனை தயாரித்து முடிக்க 10 மாதங்களுக்கு மேல் ஆனது. இதை வைப்பதற்கான பெட்டி கூட மிகவும் விலையுயர்ந்த பொருட்களால் ஆடம்பரமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனின் விலை பல கோடிகளைத் தாண்டுகிறது.
தூக்கம் வரலே! என்ன காரணம் ?
பணத்துக்கும் குறைவிருக்காது; சந்தோஷத்துக்கும் குறைவிருக்காது; ஆனால், ராத்திரி
படுத்தால் மட்டும் தூக்கம் வராது. கடன் தொல்லையால், கிரெடிட் கார்டு பாக்கியை
கட்டாததால்…போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் தவிப்பவர் பலர் உள்ளனர்;
ஆனால், எந்த காரணமும் இல்லாமல், தூக்கம் வராமல் தவிப்பவர்கள், புலம்பினால்
மட்டும் போதாது.
இரவில் தூக்கம் வரலையா…? அப்படீன்னா, ஒரு கப் பால் சாப்பிடு; புத்தகம் படி; “டிவி’
பாரு… இப்படி யோசனை சொல்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம்மில் சிலர்,
டாக்டரை தவிர, எல்லாரிடமும் , இன்னும் சொல்லப்போனால், பார்மசியில் வேலை
செய்யும் பணியாளிடம் கூட கேட்டு மருந்து சாப்பிடுவர்.
டாக்டரிடம் போங்க: டாக்டரிடம் மட்டும் போய் கேட்க மாட்டார்கள். உண்மையை
அறிந்து சரியான தீர்வு காண வேண்டுமானால், டாக்டரிடம் போய் தானே தெரிந்து
கொள்ள முடியும். நாமே காரணமாக உள்ள நிலையில் தூக்கம் வராமல் தவிக்கலாம்.
மன அழுத்தம், கடன் தொல்லை, நண்பர்கள் பிரச்னை, ஆபீஸ் பிரச்னை என்பதெல்லாம்
அந்த பிரச்னை தீர்ந்த அடுத்த நிமிடமே சூப்பர் தூக்கம் வரும்.
அதை பலர் செய்யாமல், தூக்கம் வராததற்கு போய் மருந்து சாப்பிடுவர். கண்ணை
மூடினாலும் கனவில் கடன்காரர்கள் தானே வருவர். நம் உடல் நலனுக்கு
வைட்டமின்கள், கனிம சத்துக்கள் தான் மிக மிக முக்கியம். உணவில் கிடைக்காத
நிலையில், மருந்து , மாத்திரை மூலம் ஈடு செய்வது டாக்டர்கள் வழக்கம். சத்தான
உணவில் குறைவில்லாமல் இருந்தால், உடல் நலனில் குறைவே இருக்காது என்பது
தான் டாக்டர்களின் அடிப்படை கருத்து.
சத்தான உணவு: தூக்கம் சரிவர வராததற்கு இரு முக்கிய சத்துக்கள் குறைபாடு தான்
காரணம். ஒன்று, கால்சியம்; இன்னொன்று மக்னீசியம். குறிப்பாக, பெண்களுக்கு தூக்கம்
வராததற்கு இவற்றின் குறைபாடு தான் காரணம். நரம்பு மண்டலத்தை
அமைதிப்படுத்தி, அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது கால்சியம் தான்.
கால்சியம், எலும்புகளின் திடத்தன் மைக்கும் மிக முக்கியமானது. மூட்டு பாதிப்பு
வராமல் இருக்க பெண்கள், கால்சியம் சார்ந்த பால் மற்றும் பால் பொருட்கள் , சோயா,
வெங்காயம் போன்ற காய்கறி வகைகள், பாதம் பருப்பு உட்பட சில வகை தானியங்கள்,
ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.
இரும்பும் முக்கியம்: இதுபோலத்தான் மக்னீசியம், தூக்கத்துக்கு உற்ற நண்பன்.
கால்சியம், நரம்புகளை அமைதிப்படுத்துகிறது என்றால், மக்னீசியம், மூளையை
அமைதிப்படுத்துகிறது. கரும்பச்சை நிறத்திலான கீரை வகைகள், காய்கறிகளை
உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 500 மில்லி கிராம்
மக்னீசியம் சேர்த்துக்கொண்டாலே போதும். உணவில் பயன்படுத்தப்படும் சிலவகை
தானியங்கள், கொட்டை வகைகள், பால் பொருட்களில் மக்னீசியம் உள்ளது.
இது மட்டுமின்றி, இரும்பு, செப்பு போன்ற கனிம சத்துக்களும் தூக்கத்துக்கு
உதவுகின்றன. முட்டை, மீன் உணவு, சில வகை கொட்டை வகைகள் போன்றவற்றில்
இந்த சத்துக்கள் உள்ளன. செம்பில், நோர்பின்பைன், இரும்பில் டோபாமைன் ஆகிய
கனிம சத்துக்கள் உள்ளன. தூக்கத்துக்கு இந்த இரண்டும் தான் கைகொடுக்கின்றன.
உடலில் இந்த சத்துக்கள் இல்லாததால், தூக்கம் கெடுகிறது.
வைட்டமின் பி: தூக்கம் வர வேண்டுமானால், வைட்டமின் பி சத்தும் தேவை. உடலில்
ட்ரைப்டோபன் உட்பட சில வகை அமினோ ஆசிட் சத்துக்கள், தூக்கத்தை ஆழ்நிலைக்கு
கொண்டு செல்கின்றன. மது, சிகரெட் பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால்
இந்த அமிலச்சத்துக்கள் குறைகின்றன. இதை ஈடு செய்ய, வைட்டமின் பி சத்து
மாத்திரைகள் சாப்பிட வேண்டும். சைவ உணவு சாப்பிடுவோருக்கு தூக்கம் வராமல்
இருப்பதற்கு அவர்களின் சில உணவு முறைகள் தான் காரணம். இதனால் பலரும்
வைட்டமின் பி மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்கின்றனர்.
இதுபோல, வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவையும் முக்கியம். நரம்பு
மண்டலத்தையும், மூளையையும் சமப்படுத்தி உடல் செயல்பாடுகளை முடக்கி,
தூக்கத்துக்கு வழி வகுக்கின்றன. தூக்கம் வராமல் தவிப்பதற்கு ஆசிட், மக்னீசியம்
வைட்டமின், கனிம சத்துக்கள் குறைபாடு போல, சுரப்பிகளின் செயல்பாடும் முக்கியம்.
குறிப்பாக மேலடோனின் என்ற சுரப்பி, இரவில் அதிகம் சுரந்து தூக்கத்துக்கு
அழைத்துச்செல்கிறது.
படுக்கப்போகுமுன்: அவசரம் அவசரமாக எழுவது, சாப்பிடுவது, அதே வேகத்தில் ஆபீஸ்
போய் திரும்புவது, இரவில் திரும்பிய பின் சாப்பிடுவது, அதே வேகத்தில் படுப்பது
என்ற பழக்கம் சரியானதல்ல. இப்படி செய்தால், நாற்பதில் வேலையை காட்டி விடும்.
அப்போது தான் டாக்டரிடம் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும்; சாப்பிடும் உணவு
குறைந்து போய், மருந்து , மாத்திரைகளை பட்டியல் போட்டு “டிக்’ அடித்து சாப்பிட
வேண்டியிருக்கும்.
மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ்
தேவையானப் பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 3 டம்ளர் அரை மணி நேரம் ஊற வைத்தது
நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்,கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,விளக்கெண்ணய்-2 டேபிள் ஸ்பூன்,சூரிய காந்தி எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன், மக்காச்சோள எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 2
. பச்சை மிளகாய் (கீறியது) – 3
. வெந்தயம் – 10 டீஸ்பூன்
. பட்டை – 1
. பூண்டு – 2
. கறிவேப்பில்லை – 1 கொத்து
. உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கர் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,வெந்தயம்,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்
வதக்கியதும் 5 டம்ளர்தண்ணீர் ஊற்றி கொதிக்கும்பொழுது ஊற வைத்த அரிசியை போடவும்.3.4 விசில் விடவும்.
இப்போது மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ் ரெடி.
மகா சிவராத்திரி விழா சிறப்புகள்
ஹெலிகாப்டரில் மலர் அர்ச்சனை!
பெங்களூரிலிருந்து, கோலார் தங்க வயல் செல்லும் வழியில் உள்ள ஊர் பேத்த மங்கலம். இதன் அருகே, கம்ம சமுத்திரம் எனும் ஊரில் கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள 108 அடி உயர சிவ பெருமானுக்கு, மகா சிவராத்திரி அன்று அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது, ஹெலிகாப்டர் மூலம், சிவபெருமானுக்கு பூமாரி பொழிந்து பூஜை நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
***
நாள் முழுவதும் பூஜை!
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள அன்னை பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் சிறிய மலை ஒன்றில் எழுந்தருளியுள்ளார், கனககிரீசுவரர். இவருக்கு தினமும் வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இம்மலை மீது சிவலிங்க பூஜை நிகழ்த்தி தவம் இருந்தாராம் பார்வதி தேவி. அதனால், மகிழ்ந்து சுயம்பு லிங்கமாகக் காட்சி தந்து, பார்வதி தேவியை தன் இடது பக்கத்தில் இணைத்துக் கொண்டாராம் சிவ பெருமான்.
அந்த புண்ணிய திருநாளே மகா சிவராத்திரி நன்னாள் என்பதால், இங்கு மகாசிவராத்திரியில் மட்டும் நாள் முழுவதும் பூஜை நடைபெறும். மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பூஜை நடைபெறும்.
***
\எட்டு தல விருட்சங்கள்!
பொதுவாக கோவில்களில், ஒரே தல விருட்சம் மட்டும் இருக்கும். சில கோவில்களில், அபூர்வமாக, இரண்டு, மூன்று கூட இருக்கும். ஆனால், கும்பகோணம் அருகில் உள்ள திருவிச நல்லூர், சிவயோக நாதர் திருக்கோவிலில் மட்டும், எட்டு தல விருட்சங்கள் உள்ளன. அலை, வன்னி, உந்துவில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசுவில்வம்.
இங்கு நந்தி முதலில் இருக்கிறது. அதன் பின் கொடிமரம் உள்ளது. கருவறையில் உள்ள லிங்கத் திருமேனியின் மேல்பகுதியில், ஏழு சடை கள் உள்ளன.
***
சிவராத்திரி – அபிஷேக ஆராதனைகள்!
முதல் யாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.
இரண்டாம் யாமம்: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம்.
மூன்றாம் யாமம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
நான்காம் யாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம்.
***
ஜோதிர்லிங்கம்!
ஜோதி வடிவமானவர் சிவபெருமான். அவர், அகண்ட நெருப்பு பிழம்பாய் இருந்து குளிர்ந்தவர். அந்த வடிவங் களே லிங்கமாகி உள்ளன. அவற்றை, “ஜ்யோதிர் லிங்கம்’ என்பர். பேச்சு வழக்கில், “ஜோதிர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 12 இடங்களில், ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவை பீம சங்கரம், திரியம்பகம், குங்கும ணேஸ்வரம், நாக நாதம், வைத்திய நாதம், சோமநாதபுரம், ஓங்காரம், ஸ்ரீசைலம், கேதார்நாத், உஜ்ஜயினி, காசி மற்றும் ராமேஸ்வரம்.