Daily Archives: மார்ச் 13th, 2010

பயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம்

அண்மையில் வெளியான பயர்பாக்ஸ் பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறீர்களா? இதில் ஸ்குரோல் ஆக்ஸிலரேஷன் (Scroll Accleration) என்னும் ஒரு புதிய வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மவுஸ் இன்டர்நெட் பக்கத்தில் ஸ்குரோல் செய்து செல்லும் வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் தேடல் வேகத்தை அதிகரிக்கலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.
பொதுவாக, இணைய தளப் பக்கங்களில் நாம் படித்துச் செல்கையில், மவுஸ் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி மேலும் கீழும் செல்வோம். எத்தனை முறை இந்த வீல் சுழற்றப்படுகிறதோ, அதற்கேற்றார்போல வரிகள் மேல் கீழாகச் செல்லும். எனவே இந்த வரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அல்லது ஸ்குரோல் வீலுக்கு வேகத்தை அதிகப்படுத்தினால், நம் படித்துச் செல்லும் வேகம் கூடும் அல்லவா? அதனைத்தான் மொஸில்லா பயர்பாக்ஸ் 3.6 பதிப்பில் தந்துள்ளது. இதனை இந்த பதிப்பில் தந்தாலும்,மொஸில்லா இவ்வசதியை ஆப் செய்தே வைத்துள்ளது. ஆனாலும் சில பயனாளர்கள் இந்த வசதி இருப்பதை அறிந்து, அதனை இயக்கிப் பார்த்து இவ்வசதியை அனுபவித்து வருகின்றனர். நீங்களும் இந்த வசதியை மேற்கொள்ள கீழ்க்காணுமாறு செயல்படவும். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசர் பக்கத்தில் அட்ரஸ் பார் சென்று about:config என டைப் செய்திடவும். உடன் Advanced Preferences என்ற பக்கம் கிடைக்கும். இதன் மேலாக உள்ள Filter Box செல்லவும். இங்கு mousewheel.a cceleration.start என்று டைப் செய்திடவும். அங்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இந்த பாக்ஸில் டபுள் கிளிக் செய்து திறக்கப்படும் பாக்ஸில் அங்கு வேக மதிப்பு தர வேண்டிய இடத்தில் 3 என என்டர் செய்திடவும். இது மவுஸ் வீல் ஸ்குரோலிங் வேகத்தினை அதிகரிக்கும். அடுத்து ‘mousewheel. acceleration.factor’ என்பதன் மதிப்பை 5 என தரவும். இது எவ்வளவு வேகத்தில் நீங்கள் ஸ்குரோல் செய்திட விரும்புகிறீர்கள் என்பதனை செட் செய்கிறது. அடுத்து பிரவுசரை மூடி மீண்டும் இயக்கி, மவுஸ் ஸ்குரோல் செய்து வேகத்தை அனுபவிக்கவும்.

உடல் வெப்பத்தால் செல்போன்

சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.

இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

கண்பார்வை !

நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய்,தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க…

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க…

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண்பார்வை தெளிவடைய…

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

குளிர் கண்ணாடிகள் அணிதல்

புறஊதா கதிர்கள் உங்கள் கண்களில் எரிச்சலை உண்டு பண்ணும், அதே வேளையில் உங்கள் தோலுக்கும் எரிச்சலை உண்டாக்கும்.
அறிகுறிகள்: சிவந்து போதல், அரிப்பெடுத்தல், மணல் நெருடுதல் போன்ற உணர்வு. தொடர்ந்த நீண்ட புறாஊதா கதிர் வீச்சுகளின் தாக்கம் கண்புரை மற்றும் ரெட்டினா மோசமாக பாதித்தல் போன்ற கண்களின் நிரந்தர பாதிப்பை உண்டு பண்ணும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எனவே வெளியில் செல்லும் போது குளிர் கண்ணாடிகளை அணிதல் வேண்டும், மேகமூட்டமாக இருக்கும் போது கூட.எந்த நிற கண்ணாடிகள் சிறந்தது?
UVA மற்றும் UVB
ஆகிய இரண்டு கதிர்களையும் தடுத்து 75 முதல் 90 சதவீத பார்வை வெளிச்சத்தினை வழங்கும் கருப்பு நிற கண்ணாடிகளை அணிதல் தெளிவான மற்றும் குறைவில்லாத பார்வையினை வழங்கும் மேலும் சரியான நிற பாகுபாடுகளை கண்டுணர சாம்பல் நிற கண்ணாடிகளை அணியவும்.
பாதுகாப்பு கண்ணாடிகளை அணிதல்:
நீங்கள் தூசிகள் பறக்கும் பிளீச்சிங் சம்பந்தப்பட்ட இரசாயான வேலை செய்பவர் அல்லது மட்டைபந்து விளையாடுபவராக இருந்தால் சம்பந்தப்பட்ட கண்ணாடிகளை அணிந்து கொள்ளவும். பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது சிறந்த பாதுகாப்பளிக்கும் என்பதை மறவாதீர்கள்.

கத்தரிகாய் சாதம்

தேவையானப் பொருட்கள்:

அரிசி – 250 கிராம்
கத்தரிகாய் – 200 கிராம்
தக்காளி – 4
பூண்டு – 6 பல்
பட்டை, கிராம்பு, சோம்பு சிறிது
மிளகாய் தூள், கரம் மசாலா – சிறிது
வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்க
கொத்துமல்லி இலை, உப்பு

செய்முறை:

அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.

வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு
தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

கத்தரிகாய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை  கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர்  விட்டு
வேகவைக்கவும்.

கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை,
தூவி இறக்கவும்.

இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.

சாதத்துடன் சிறிது நெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

ப்ரட்டை எண்ணெய்யில் பொறித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.

பெண்களுக்காக…`கோகேர்ள்’

பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு உதவும் பொருள் `கோகேர்ள்’ என்ற பெயரில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதை உருவாக்கியிருப்பவர் 47 வயது அமெரிக்க பெண்மணியான சாரா தில்லான்.

இந்த `கோகேர்ள்’ ஒரு மலிவான, திரும்பத் திரும்ப பயன்படுத்தத்தக்க, சிலிக்கானால் ஆன `புனல்’ வடிவ அமைப்பாகும். இதை வடிவமைத்திருக்கும் சாரா, கழிப்பிட பொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி பெண்மணி. மொத்தம் 10 லட்சம் `கோகேர்ள்’ கருவிகளை விற்க முடியும் என்று திட்டமிடுகிறார் இவர்.

“ஆண்கள் வேண்டுமானால் உலகத்தையே பாத்ருமாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று குறும்பாகக் கூறும் சாரா-

“இன்று ஆண்களுக்கு இணையாக பரபரப்பாகத் திரியும் பெண்கள் போருக்கு போகிறார்கள், வேட்டையாடுகிறார்கள், மீன் பிடிக்கிறார்கள், ஓடுகிறார்கள், சைக்கிள் ஓட்டுகிறார்கள். ஆனால் பாத்ரும் செல்வது என்றால் மட்டும் பெண்களுக்கு சிக்கலாக இருக்கிறது. இந்த `கோகேர்ள்’, ஆண்களை போல பெண்கள் சிறுநீர் கழிக்க உதவும்” என்கிறார்.

ஒரு சிறு பயிற்சிக்கு பின், பெண்கள் இதை பொருத்திக் கொடு, நின்றபடி சிறுநீர் கழிக்க முடியும். கைக்கு அடக்கமான ஒரு சிறிய `ட்யூப்’பில் `டிஸ்யூ’, ஒரு `பேக்’ ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது. பெண்கள் எளிதாக தங்கள் கை பைக்குள் இதை வைத்து எடுத்துச் செல்லலாம். தேவைபடும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் நடைபெற்ற மகளிர் கண்காட்சியில் அறிமுகபடுத்தபட்ட இந்த புதிய கருவிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்த `கோகேர்ள்’-க்கு 370 ருபாய் முதல் 470 ருபாய் வரை விலை நிர்ணயிக்கபட்டுள்ளது.