பெண்களுக்காக…`கோகேர்ள்’

பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு உதவும் பொருள் `கோகேர்ள்’ என்ற பெயரில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதை உருவாக்கியிருப்பவர் 47 வயது அமெரிக்க பெண்மணியான சாரா தில்லான்.

இந்த `கோகேர்ள்’ ஒரு மலிவான, திரும்பத் திரும்ப பயன்படுத்தத்தக்க, சிலிக்கானால் ஆன `புனல்’ வடிவ அமைப்பாகும். இதை வடிவமைத்திருக்கும் சாரா, கழிப்பிட பொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி பெண்மணி. மொத்தம் 10 லட்சம் `கோகேர்ள்’ கருவிகளை விற்க முடியும் என்று திட்டமிடுகிறார் இவர்.

“ஆண்கள் வேண்டுமானால் உலகத்தையே பாத்ருமாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று குறும்பாகக் கூறும் சாரா-

“இன்று ஆண்களுக்கு இணையாக பரபரப்பாகத் திரியும் பெண்கள் போருக்கு போகிறார்கள், வேட்டையாடுகிறார்கள், மீன் பிடிக்கிறார்கள், ஓடுகிறார்கள், சைக்கிள் ஓட்டுகிறார்கள். ஆனால் பாத்ரும் செல்வது என்றால் மட்டும் பெண்களுக்கு சிக்கலாக இருக்கிறது. இந்த `கோகேர்ள்’, ஆண்களை போல பெண்கள் சிறுநீர் கழிக்க உதவும்” என்கிறார்.

ஒரு சிறு பயிற்சிக்கு பின், பெண்கள் இதை பொருத்திக் கொடு, நின்றபடி சிறுநீர் கழிக்க முடியும். கைக்கு அடக்கமான ஒரு சிறிய `ட்யூப்’பில் `டிஸ்யூ’, ஒரு `பேக்’ ஆகியவற்றுடன் இது கிடைக்கிறது. பெண்கள் எளிதாக தங்கள் கை பைக்குள் இதை வைத்து எடுத்துச் செல்லலாம். தேவைபடும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் நடைபெற்ற மகளிர் கண்காட்சியில் அறிமுகபடுத்தபட்ட இந்த புதிய கருவிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்த `கோகேர்ள்’-க்கு 370 ருபாய் முதல் 470 ருபாய் வரை விலை நிர்ணயிக்கபட்டுள்ளது.

%d bloggers like this: