Daily Archives: மார்ச் 14th, 2010

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!

நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெடரும் முதல் பாத்ரும்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனர்.

அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது… போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது.

முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிருபித்துள்ளனர்.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?

அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!

ருசியான புளியோதரை

தேவையானப் பொருட்கள்:

பொடிக்கு
காய்ந்த மிளகாய் – 10
கடலைப் பருப்பு -2டேபிள்ஸ்பூன்
தனியா- 2 ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்{வறுத்துபொடிக்கவும்}
கடுகு – தாளிக்க
முந்திரிப் பருப்பு-15
புளி – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 8
உளுத்தம் பருப்பு –  1 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு  1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பச்சரிசிசாதம் -4 கப்
நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:

வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,  பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுதாளிக்கவும்

அதனுடன் நிலக்கடலை, வெந்தயம், வெள்ளை எள், முபருப்புபோட்டுவதக்கவும்

புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். அதனை இதில் ஊற்றவும்

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து  வதக்கவும்.அதனுடன் உதிரியாக வடித்த சாதம் போட்வும்.சாதம்  பொடி போட்டு நன்கு கிளரவும்

சுவையான சாதம் ரெடி இதனை இரவில் செய்தால் காலையில் சாப்பிட்டால்  அதன் சுவை அதிகமாக இருக்கும்.

`அடைகாத்த’ பூனை!

மனிதர்களுக்குத்தான் தாங்கள் யார் என்ற அடையாளக் குழப்பம் ஏற்படும் என்பதில்லை. விலங்குகளுக்கும் கூட அந்நிலை ஏற்படும் என்பதற்கு உதாரணம், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பூனை.

`புஷ்டோபர்’ என்ற அந்த நான்கு வயது ஆண் பூனை, தன்னை ஒரு `கோழி’யாக நினைத்து அப்படியே நடந்துகொள்ள ஆரம்பித்தது. அதன் உச்சமாக கோழி முட்டைகளை `அடை காக்கவும்’ செய்தது.

“அது, தான் ஒரு பூனை என்பதை அறிந்திருக்கிறதா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அப்படி அது நடப்பதேயில்லை” என்கிறார், பண்ணையாளரும், பூனையின் எஜமானிமான நவோமி ஆலிவர்.

“புஷ்டோபர் அடிக்கடி கோழிக்கூடு பக்கம் போகும். அவற்றில் ஒன்றாக, விளையாடும். பிற உயிரினங்களை வேட்டையாடித் தின்னும் பிராணி தான் என்பதையே அது மறந்துவிட்டது” என்கிறார் இவர்.

இவரது கோழிகள் சில, சமீபத்தில் கூடுக்கு வெளியே சில முட்டைகளை இட்டன. ஆனால் அவற்றை அடைகாப்பதில் அவை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அந்த `பொறுபை’ பூனை புஷ்டோபர் ஏற்றுக் கொண்டது.

அப்போதுதான், கோழிகளுடனான பூனையின் பழக்கத்தின் தாக்கம் தனக்கு புரிந்ததாகக் கூறுகிறார் நவோமி.

“முட்டைகளின் மீது புஷ்டோபர் அமர்ந்திருப்பதை பார்த்த நான் அது அடைகாக்கிறது என்பதை உணர்ந்தேன். முன்று நாட்கள் அவ்வாறு அடைகாப்பதைத் தொடர்ந்தது அது. அப்போது அதன் மனதில் என்ன ஓடியிருக்கும் என்று நான் வியந்தேன். பரிதாபமாக, முன்று நாட்களுக்கு பின், முட்டை பொரிக்கவில்லை என்று கீழே இறங்கிவிட்டது. வழக்கம்போல் தனது கோழி தோழிகளுடன் விளையாட ஆரம்பித்தது. ஆனால் எனக்கு இன்று வரை வியப்பு மாறவில்லை” என்கிறார் ஆச்சரியம் மாறாத நவோமி.