Daily Archives: மார்ச் 15th, 2010

பாலுறவில் அவசரம் தேவையா?

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான
ஒரு புனிதமான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம்.பொதுவாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும்
இருவருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம்.

கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந்தாலோ,
அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண்டாலோ,
அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும்,
வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில்
பாலுறவுப் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

Foreplay எனப்படும் பாலுறவு கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல்
மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு,
பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது,
என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது.

எனவே பாலுறவுப் புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது.
தவிர, திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால்
இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான்.
அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப,
அவ்வப்போது பாலுறவு வைத்துக் கொள்வதால் மனதில் உற்சாகம் எப்போதும்
நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

கைகழுவுவதில் இவ்ளோ விஷயமா?


கையை நீங்கள் தினமும் கழுவி சுத்தம் செய்வீர்களா? சாப்பிடும் போதும் சரி, வேறு சமயங்களிலும் எத்தனை நொடிகள் கையை சோப்பு போட்டு சுத்தம் செய்வீர்கள்? ஹேண்ட் வாஷ் திரவத்தை வாங்கி பயன்படுத்துபவரா நீங்கள்?
— என்னடா இது, கை கழுவுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், படித்து முடித்தபின், இனி, தினமும் ஒழுங்காக கைகளை கழுவுவீர்கள்.
நாகரிக உலகில், இப்போதெல்லாம், எப்படி பல் துலக்குவது, எப்படி கையை கழுவுவது என்று பயிற்சி வகுப்பு துவங்கினால் கூட, ஆச்சரியப் படுவதற்கில்லை.
தனி நபர் சுத்தத்தில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதால்தான், புதுப்புது வைரஸ் நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் கைகள், எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
உடல் கோளாறுகளை அண்ட விடாமல் இருக்க, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக, மிக அவசியம். பன்றிக்காய்ச்சல் நோய் வரும் வரை, கையை சுத்தமாக கழுவுவது பற்றி, பலருக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருந்ததில்லை.
ஆனால், கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், அவற்றில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவி அதன் மூலம், ஒருவருக்கு அந்த நோய் வரும் ஆபத்து உண்டு என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த பின் தான் மக்கள் விழித்துக் கொண்டனர்.
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க, “ஹேண்ட் சேனிட்டர்’ மற்றும் “ஹேண்ட் வாஷ்’ லோஷன்கள் மூலம் கையை கழுவ வேண்டும்; அப்படி செய்தால், வைரஸ் தாக்காது என்று அறிவிப்பு வெளிவந்ததும், இந்த லோஷன்கள் விற்பனை கொடிகட்டிப்பறந்தது. தரமான, “ஹேண்ட் சேனிட் டர்’ லோஷன்களை சில நிறுவனங்கள் தான் தயாரித்து விற்பனை செய்தன.ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், பெயரளவுக்கு இவற்றை புதுப் புது பெயர்களில் வெளியிட்டு, சந்தையில் குவித்தன.
எது நல்ல, “ஹேண்ட் சேனிட்டர்’ என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 60 முதல் 90 சதவீதம் வரை ஆல்கஹால் கலந்த சேனிட்டர்களாக இருந் தால் தான் நல்லது.
வைரஸ்களை அப்புறப் படுத்தி, கையை சுத்தப்படுத்த ஆல்கஹால் அடிப்படையிலான, திரவ சாதனங்கள் தான், சிறந்தது என்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதெல்லாவற்றுக்கும் மேலாக, தரமான சோப்பால் கையை சுத்தப்படுத்தினாலே போதும்.
தண்ணீரில் கைகளை கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய் தால் தான் இடுக்குகளில் உள்ள கிருமிகள் நீங்கும்; கைகளும் சுத்தமாகும்.
குறிப்பாக, ஆன்டி பாக்டீரியல் லோஷன்களை விட, சோப்பு போட்டு கழுவுவதுதான் மிக வும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கைகளை சுத்தம் செய்யும் போது, குறைந்த பட்சம் 30 நொடிகளாவது கைகளை சோப்பு, லோஷன்கள் மூலம் சுத்தம் செய்து அதன் பின், தண்ணீரில் கழுவ வேண்டும்.
டென்ஷன்…’ அர்ஜென்ட்… என்று எல்லாம் சாக்கு போக்கு சொல்லாமல், கை சுத்தம் செய்து, நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்து கொள் வீர்கள்தானே!

கண் பார்வைத்திறன்

1) கண்களை பாதிக்கும் பொதுவான கண் நோய்கள் யாவை?
கண்களை பாதிக்கும் சில காரணிகள்:
க்ளைகோமா
தூரப்பார்வை
கிட்டப்பார்வை
ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்)
கட்டிகள்
தொற்றுகள்
கண்புரை உலர்ந்த கண்

2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?
இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்
இரட்டை தோற்றம்
சிவந்த விழிகள்
கண் எரிச்சல் மற்றும் வீக்கம்
கண் மற்றும் கண்களை சுற்றி வலி
அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்
கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்
தெளிவில்லாத பார்வை திறன்
காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்
கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம்
பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்

3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?
சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.

4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?
வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.

5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?
இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.

6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?
இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?
மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.

8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?
பழைய பரிந்துரையான காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.

9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?
பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.

10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?
தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.

அதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியீடு

விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50. http://www.opera.com/ என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும். இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம். புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

வானில் பறக்கும் ஓட்டல்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பு நிறுவனம், வான்வெளியில் மிதக்கும்
ஓட்டல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

`ஏர்குருய்ஸ்’ என்ற அந்த ஓட்டல், ஒரு வான்வெளிக் கப்பலாகவும் பயணிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லும். அதிநவீனமும், ஆடம்பரமும் இணைந்த ஆச்சரியமாக இந்த ஓட்டல் `பிளஸ்’ கப்பல் இருக்கும் என்று இதை உருவாக்குபவர்கள் கூறுகின்றனர்.

இந்த வான்வெளி ஓட்டலில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாகவும், அவர் களுக்கான இடவசதி அதிகமாகவும் இருக்கும். வாடிக்கையாளர்கள் இங்கு தங்கலாம், உணவருந்தலாம், `ரிலாக்ஸ்’ செய்துகொள்ளலாம்.

செய்மோர்பவல் என்ற நிறுவனம் வடிவமைக்கும் இந்த வான்வெளி ஓட்டலில், வரவேற்பு பகுதி, `பார்’, 4 இரட்டை அடுக்கு வசிப்பிடங்கள், 5 சிறிய வசிப்பிடங்கள், ஓர் உச்சிக் குடியிருப்பு ஆகியவை அமைந்திருக்கும்.

இதற்கான வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு இயக்குநர் நிக் டால்போட் கூறுகை யில், “எதிர்காலத்தில் விமான பயணம் நெருக்கடி இல்லாததாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த வான்வெளிக் கப்பல் மற்றும் ஓட்டல் உருவாக்கபடுகிறது. அமைதியான பயணத்தை நாடுவோருக்கு ஏற்ற வகையில் இதன் செங்குத்து வடிவ அமைப்பு இருக்கும்” என்கிறார்.

அவர் மேலும் விளக்கிச் சொல்கையில், “இந்த ஓட்டலை வானில் பறக்க வைப்பதற்கு மிக அதிகளவு வாயு தேவை படுகிறது. வாயுவே அதிக இடத்தை அடைத்துக்கொள்வதால், குறைந்த நபர்களையே இதனுள்ளே அனுமதிக்க முடியும். ஆக இதற்குள் வரும் எவரையும் இது ஆடம்பரமாகவே உணர வைக்கும்” என்கிறார்.

`ஹைட்ரஜன்’ வாயுவால் பறக்க வைக்கபடும் இந்த வான்வெளி ஓட்டல், சூரிய ஒளியிலிருந்து தேவையான மின்சக்தியை பெறும். மேலும் இந்த ஓட்டல், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும் என்கிறார்கள்.

இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான சிங் மின் கிம், “பொதுவாக இன்றைய கட்டிட வடிவமைப்பில் சுற்றுச்சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாங்கள் அதைக் கருத்தில் கொண்டு உருவாக்கும் விஷயங்களின் அருமை, 2015-ம் ஆண்டு வாக்கில் உணரபடும்” என்று கூறுகிறார்.

வானில் பறக்கும்போது சேதம் அடைந்து வாயு கசிந்து அதனால் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு அமைப்புகளும் பக்காவாகச் செய்யபட்டுள்ளன.

மேலும் ஓட்டல் ஆட்டம் காணாமல் இருக்க வைக்கும் நுட்பம், பறக்கும் உயரத்தைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களுக்குச் சீரான, சொகுசான பயண அனுபவத்தைத் தரும் என்கிறார்கள். புயல், மோசமான வானிலை போன்றவற்றின்போது இந்த ஓட்டல் பறப்பது கடினம் என்றாலும், இதில் அமைக்கபடும் வானிலை `ரேடாரால்’ பெரும்பாலான பிரச்சினைகளைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கின்றனர்.

மேக நீர்த்திவலைகளைத் திரட்டியே ஓட்டலுக்குத் தேவையான குடிநீர் தயாரிக்கப்படும்.

சாதாரணமாக இந்த ஓட்டல் 12 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்து செல்லும். தேவைபடும் இடங்களில் பூமிக்கு அருகே சில நுறு அடி உயரத்துக்கும் இது கீழிறக்கபடும்.

இந்த ஓட்டலின் பயண வேகம் மணிக்கு 100 முதல் 150 கிலோமீட்டர்களாக இருக்கும்.

இரண்டு `பிளைட் என்ஜினீயர்கள்’ உட்பட 6 பேர் அடங்கிய குழுவினர் மாறி மாறி இந்த ஓட்டலை ஓட்டுவர்.

அமைதி மற்றும் வசதியை பயன்படுத்தியபடி பயணிக்க இந்த `ஏர்குருய்ஸ்’ ஏற்றதாக இருக்கும் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள், இதை வடிவமைப்பவர்கள்!