Daily Archives: மார்ச் 17th, 2010

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

`ஒலிம்பிக்’ – உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல… விளையாட்டு ரசிகர்களுக்கும் ஓர் கனவு. அங்கே ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அப்படி அரங்கேறிய ஆச்சரியங்களை இங்கே பார்ப்போம். 1900-ம் ஆண்டில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மைதானங்கள் மிகவும் சிறியதாக அமைக்கப் பட்டிருந்தன. இந்த சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் போட்டியில் வீரர்கள் எறிந்த வட்டுகள், அங்கிருந்த மரத்தில் சிக்கிக் கொண்டன. தங்கம் வென்ற ஹங்கேரி வீரர் டால்ப் போயர் எறிந்த வட்டு முன்று வாய்ப்புகளிலும் ரசிகர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தில் விழுந்தது. இதனால் ரசிகர்கள் கூடுதல் கவனத்தோடும், அச்சத்தோடும் அமர்ந்திருந்தனர். அதே ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அம்பு எய்த வேண்டிய இலக்கு எது தெரியுமா? உயிருடன் பறக்கும் புறாதான்! சரியாக அம்பை எய்து புறாவை கீழே விழச் செய்தால் தங்கம் கிடைக்கும்! 1912-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் மராத்தானில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கனிகுரி பாதியிலேயே வீட்டுக்கு திரும்பினார். இதற்கான காரணத்தையும் கூற மறுத்துவிட்டார். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு பிறகு அதற்கான காரணத்தை கூறினார். மாரத்தானில் ஓடிக் கொண் டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் கொடுத்த உற்சாக பானத்தை குடித்துள்ளார். இதனால் தாம் விதிமுறையை மீறிவிட்டோமோ என்ற பயத்தில் டிராம் வண்டியில் ஏறி வீட்டுக்கு போய்விட்டாராம்! 1904-ம் ஆண்டு செயின்ட் லூயிசில் நடந்த ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் ஏரியில் நடத்தப்பட்டன. இதற்காக ஏரியில் உலோகத்திலான உருளைகள் மீது மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. வீரர்கள் டைவ் அடிக்கும்போது கீழே உள்ள உருளைகள் அசையும். உடனே பாலம் அந்தரத்தில் ஆடும். அந்த நேரத்தில் வீரர்கள் மட்டுமின்றி, அமைப்பாளர்களும் தண்ணீருக்குள் விழுந்து விடுவர். பின்னர் இவர்கள் மேலே எழும்பி வருவது என நீச்சல் போட்டிகள் நகைச்சுவையாக நடந்துள்ளன. 1920-ம் ஆண்டு அன்ட்வெர்ப் ஒலிம்பிக் டைவிங் போட்டியில் அமெரிக்காவின் ஹால்பிரிஸ்ட் வெண்கலம் வென்று சாதனை புரிந்தார். இவரிடம் சக வீரரான டியுக் ஒரு சவால் விட்டார். அதாவது ஒலிம்பிக் கொடியை `லவட்டி’ கொண்டு வரமுடியுமா? என்பது தான் அந்த சவால். உடனே களத்தில் இறங்கினார் பிரிஸ்ட். கொடியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். இந்த கொடியை 80 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார் பிரிஸ்ட். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கின் போதுதான் உரியவரிடம் ஒப்படைத்தார். அப்போது அவருக்கு வயது 103! 1924-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாவோ யூர்மி என்பவர் ஆறு நாட்களில் ஏழு ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு சாதனை புரிந்தார். முதல் நாளில் நடந்த 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றவர், அடுத்த ஒரு மணிநேரத்தில் நடந்த 5000மீ பிரிவிலும் தங்கம் வென்றார்! டென்மார்க்கைச் சேர்ந்த லிஸ் ஹார்டெல் என்ற பெண், பக்கவாத நோயின் காரணமாக கால்கள் ஊனமாக இருந்தார். ஆனாலும் 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் குதிரையேற்றம் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண் ஒருவர் குதிரையேற்றம் போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை. பதக்கம் பெறுவதற்காக அவர் மேடைக்கு அழைக்கப்பட்ட போது நடக்க முடியாத அவரை, அப்போட்டியில் தங்கம் வென்ற சுவீடன் வீரர் ஹென்றி செயின்ட்செர் மேடை வரை தூக்கிக் கொண்டு சென்றார். வெள்ளியை தங்கம் சுமந்தது ஆச்சரியம்தானே!

தாய்ப்பால் வழியே பண்பூட்டும் குரங்குகள்

தாய்ப்பால் குழந்தைக்கு தெம்பூட்டும். நலமுடன் வாழ உர ட்டும். ஆனால் அனுபவம்தான் குழந்தைகளுக்கு அறிவூட்டும். இது மனிதர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் குரங்கினத்தில் தாய்ப்பால் வழியே பண்புகளும், உணர்ச்சிகளும் ஊட்டப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு பலவிதமான தாய்ப்பால்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அப்போது ரீசெஸ் மக்காஸ் இன குரங்குகளில் தாய்ப்பால் லம் உணர்வுகளும், பண்புகளும் கடத்தப்படுவது அறியப்பட்டது.

குரங்கு குட்டி போட்ட முதல் மாதம் மற்றும் ன்றரை மாதங்களில் உடலில் சுரக்கும் தாய்ப்பால் பலசோதனைகளுக்கு உட்படுத்தி ஆராயப்பட்டது. அப்போது ஆரம்பத்தில் ஊட்டமளிக்கும் தாய்ப்பால் காலப்போக்கில் குட்டிகளுக்கு பழக்க வழக்கங்களை கற்பிக்கும் விதமாகவும், சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படும் மனோபாவத்தை வளர்க்கும் விதமான ஊட்டம் அளிப்பதும் தெரியவந்துள்ளது. இந்த செயல் நரம்புகளின் வழியே பி.டி.என்.எப். சிக்னல்களாக கடத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஸ்கைப் புதிய பதிப்பு

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது. இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அப்ளிகேஷன் புரோகிராமின் புதிய பதிப்பு ஸ்கைப் 4.2.0.152 அண்மையில் பிப்ரவரி 25ல் வெளியானது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் பைலின் அளவு 1.6 எம்பி தான்.
இதனைப் பெற http://www.skype.com/ என்ற முகவரியில் உள்ள ஸ்கைப் தளம் சென்று அங்குள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். இதற்கான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும். இதனை இறக்கிய பின், அதற்கான இன்ஸ்டலேஷன் பைலில், டபுள் கிளிக் செய்திடவும். தானாகப் பதியப்படும்.
இந்த புதிய பதிப்பு, ஸ்கைப்பைப் பயன்படுத்த தெளிவான யூசர் இன்டர்பேஸ் தருகிறது. மிக எளிதாகப் பயன்படுத்தலாம். புதிதாக ஸ்கைப் இணைய தளத்தில் புதிய ஹெல்ப் பிரிவு தரப்பட்டுள்ளது. இதில் அக்கவுண்ட் வைத்துள்ள தனிநபரின் தகவல்களை எளிதாக அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். பிற பயனாளர்களை விரைவாகத் தேடி தொடர்பு கொள்ள முடிகிறது.
இதில் பல பைல்களை ட்ரான்ஸ்பர் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பேச்சொலி மிகத் தெளிவாக உள்ளது. சேட் வசதி, ஒரே நேரத்தில் ஐந்து பேர் கலந்துரையாடும் கான்பரன்ஸ் வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படுள்ளன. இதனை விண்டோஸ் 2000 சிஸ்டம் முதல் இன்றைய சிஸ்டம் வரை உள்ள கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். வீடியோ அழைப்புகளைப் பெற எக்ஸ்பி தேவை. பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இருந்தால், தொடர்பு மிகச் சிறப்பாக இருக்கும்.
இணைந்தோ அல்லது தனியாக இணைத்தோ மைக், ஸ்பீக்கர்கள் கட்டாயம் தேவை. வீடியோ அழைப்புகளுக்கு வெப் கேமரா தேவை. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ப்ராசசர் குறைந்தது 400 MHz வேகம் உடையதாக இருக்க வேண்டும். ராம் மெமரி குறைந்தது 128 எம்பி தேவை. ஹார்ட் டிரைவில் 15 எம்பி இடமாவது காலியாக இருக்க வேண்டும்.

லட்சிய தம்பதியராய் வாழுங்கள்! (ஆன்மிகம்)

காதலில் வெற்றி, தம்பதியர் ஒற்றுமை ஆகிய பாடங்களை இக்காலப் பெண்கள் சத்தியவான் சாவித்திரியின் வாழ்க்கையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மந்திரதேச மன்னன் அஸ்வபதி-மாளவி தம்பதியரின் மகள் சாவித்திரி. ஒரே மகள் என்பதால் ஆணுக்கு நிகராக வளர்த்தனர். தன் பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளையை தேட ஆரம்பித்த அஸ்வபதி, அவளது மனதுக்கு பிடித்தவனை அவளே தேர்ந்தெடுத்தால் நல்லது என நினைத்தார்.
ஆனால், அவளிடம் இதைச் சொல்லாமல், தோழிகளுடன் பல நாடுகளையும் சுற்றி வரும்படி அனுப்பி வைத்தார். பலநாட்டு இளவரசர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, யாராவது ஒருவன் அவள் மனதுக்கு பிடித்துப் போகலாம் என்பது அவரது எண்ணம்.
சாவித்திரி பல தேசங்களுக்கும் சென்றாள். அவந்திபுரி என்னும் பகுதிக்கு சென்ற போது, அங்குள்ள காட்டில் ஒரு இளைஞன், கண்ணற்ற தன் தந்தைக்கும், படுத்த படுக்கையாய் கிடந்த தன் தாய்க்கும் சேவை செய்வதைப் பார்த்தாள். அவன் முகத்தில் ராஜ களை தென்பட்டதை அவளது அறிவு கண்டுபிடித்து விட்டது. அவளை அறியாமலே அவன் மீது காதல் பிறந்தது. அவர்களது வரலாற்றைக் கேட்டாள்.
கண்பார்வையற்ற அவர், அவந்திபுரி மன்னர் தமனசேனர். அவரது நாட்டைப் எதிரிகள் பிடித்துக் கொண்டனர். போரில் அவரது கண்கள் பறிபோய்விட்டன. உயிர்தப்பிய அவர், மனைவியுடனும், மகன் சத்தியவானுடனும் அங்கு மறைந்து வாழ்வது தெரிய வந்தது. சத்தியவான் அங்கிருந்தபடியே படை திரட்டி, இழந்த நாட்டை மீட்க போராடிக் கொண்டிருப்பதை அறிந்தாள்.
நாடு திரும்பிய சாவித்திரியிடம் திருமணப் பேச்சை எடுத்தார் தந்தை.
காட்டில் சந்தித்த சத்தியவானைப் பற்றிக் கூறினாள்.
பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில், சத்தியவானின் வாழ்நாள் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் முடிவதாக இருந்தது. இது, அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் தெரியும்.
திருமணமான சில மாதங்களில் மாங்கல்யம் இழப்பதை அஸ்வபதியால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
“அப்பா! மரணம் அனைவருக்கும் உரியதே. ஒருவேளை, நீங்கள் ஜாதகம் பார்த்து முடிப்பவனும் ஏதோ ஒரு போரில் இறந்துவிட்டால் என்ன செய்து விட முடியும்? அதுபற்றி எனக்கு பயமில்லை’ என்றாள் சாவித்திரி.
இப்படி விதியையே வெல்லும் மனோபலம் இவளிடம் இருந்தது. சத்தியவானின் மரணநாளன்று எமன் அவனது உயிரைப் பறித்துச் சென்றான். பதிவிரதையான சாவித்திரி, எமனைப் பின்தொடந்தாள். அவன், அவளிடம் தன்னைத் தொடர்வதற்கான காரணம் கேட்டான். தன் கணவனின் உயிரைத் திருப்பித்தரும்படி அவள் கேட்டாள். “விதி முடிந்தால் முடிந்தது தான்’ என்ற எமதர்மன், “அவனது உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் தருவேன்…’ என்றான்.
அவள், அவனிடம் மூன்று வரம் கேட்டாள்.
“தன் மாமனாருக்கு பார்வை கிடைப்பதுடன், நாடும் திரும்பக் கிடைக்க வேண்டும்; தன் தந்தைக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்; தனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்’ என்றாள். மூன்றுக்கும் ஒப்புக்கொண்ட எமதர்மனிடம் பதிவிரதையான தனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டுமானால், கணவன் வேண்டுமே என்றாள். வேறு வழியின்றி சத்தியவானுக்கு உயிர் கொடுத்து, அவளிடமே ஒப்படைத்தான் எமன்.
அவள், தன் கணவனின் உயிரை மீட்டநாளே காரடையான் நோன்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மாமியார், மாமனார், மருமகள் நல்லுறவு, மனஉறுதி, கணவன் மீது கொண்ட பாசம் ஆகியவற்றை சாவித்திரியின் வரலாறு நமக்கு சொல்கிறது. இந்த நன்னாளில், அவளது வரலாற்றை படித்த நாம், அவள் வழியில் நடக்க உறுதி கொள்வோம்.
***
நோன்புக் கயிறு!
காரடையான் நோன்பன்று தாலி பாக்கியம் வேண்டி மெல்லிய மஞ்சள் கயிறை கழுத்தில் அணிவர் பெண்கள். இந்த நோன்புக் கயிறு மிகவும் புனிதம் வாய்ந்தது. கன்னியர்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டி மூத்த சுமங்கலிகள் அவர்களுக்கு நோன்புக் கயிறு கட்டிவிடுவர்.
***
காரடையான் – பெயர் காரணம்!
கார அடை செய்து, தாங்கள் தாலி பாக்கியத்துடன் சுமங்கலிப் பெண்களாக இருக்க வேண்டுமென்று வேண்டி விரதம் இருப்பதால், இவ்விரதத்துக்கு காரடையான் நோன்பு எனப்பெயர் ஏற்பட்டது.
***
கணவரைக் காக்கும் விரதம்!
நோய், விபத்து, பொருள் நலிவு ஏற்பட்டு, பாதிப்பிலிருக்கும் கணவரைக் காத்திட பெண்கள் காமாட்சி விரதமென்றும், காரடையான் நோன்பை மேற்கொள்கின்றனர்.
***
காமாட்சி விரதம்!
மாங்காட்டில் கம்பா நதியில் மூழ்கி அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார் பார்வதி தேவி. அப்போது ஊழிக்காலம் ஏற்பட்டதால், சிவலிங்க வடிவத்திற்கு ஊறு நேருமோ என்று அஞ்சி காரடை விரதத்தை மேற்கொண்டாள். அவ்விரதத்தின் மகிமையால் சிவ தரிசனம் கிடைத்து, ஏகாம்பரேசுவரர் – காமாட்சி திருமணம் நடைபெற்றது. காமாட்சி தேவி குறித்து, காரடையான் நோன்பு இருந்ததால் இந்நோன்பிற்கு, “காமாட்சி விரதம்’ என்றும் பெயருண்டு.

***
காரடையான் நோன்பு விரதம்!
காரடையான் நோன்பு மாசி மாத முடிவில் பங்குனி மாதத் துவக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. சாவித்திரி, தன் கணவன் ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டியே இந்த நோன்பை மேற் கொண்டாள். எமனிடமிருந்து தன் கண வனின் உயிரை மீட்டு வந்தாள். அதன் பின்னர் சாவித்திரியைப் போலவே இதர பெண்களும் மாங்கல்ய பாக்கியத்திற்காக இந்தப் பழக்கத்தை மேற்கொண்டனர்.