Daily Archives: மார்ச் 18th, 2010

மைக்ரோசாப்ட் ஜாதகம் அறிய

இந்த உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களும் உங்களுக்கு வேண்டுமா? அதன் முகவரி, ஊழியர்களின் எண்ணிக்கை, சாதனை செய்த நாட்கள், வருமானம், கிளை அலுவலகங்கள், ஆய்வுக் கூடங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிய ஆசையா?
ஆம், இருக்காதா பின்னே! நம்மைப் பற்றிய தகவல்களை எல்லாம் பல வழிகளில் மைக்ரோசாப்ட் வாங்கிக் கொள்கிறதே. அப்படியானால், அதனைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே என்கிறீர்களே. கவலையே பட வேண்டாம். மைக்ரோசாப்ட் நிறுவனமே தன் சர்வரில், ஒரு தளத்தில் தன்னைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்ப்பதற்காகவே போட்டு வைத்துள்ளது. http://www.microsoft.com/presspass/inside_ms.mspx#EKF ன்ற முகவரியில் உள்ள தளம் சென்று தேவையான அனைத்து தகவல்களையும் பெறலாம்.

தீவிரவாதியை அடையாளம் காட்டும் மூ க்கு

பார்வை மற்றும் கைரேகையை வைத்து மட்டும் சமு க விரோதிகளை அடையாளம் காணுவது கடினம். உடனடி பலனும் கிடைக்காது. இதற்கு மாற்றுவழியைத் தேடி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

அவர்களின் முயற்சிக்கு பலன் தந்து புதிய துப்பறியும் உறுப்பாக அமைந்துவிட்டது மூக்கு. முகத்தில் எல்லா நேரத்திலும் பளிச்சென்று முன்நோக்கி அமைந்திருக்கும் உறுப்பு மூக்கு. அதனாலோ என்னவோ ஒருவரை அடையாளம் காட்டுவதிலும் முன்னோடியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

கண், காது, ரேகை இவற்றைவிட மூக்கு ஒருவரை துல்லியமாக அடையாளம் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பலவித மாதிரி மூக்குகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் உள்ள மூக்குகளை 6 விதமாக வகைப்படுத்தி உள்ளனர். ரோமன், கிரேக்கம், பியாக், வாக், ஸ்நப் மற்றும் டர்ன்அப் போன்றவை அந்த 6 வகையாகும். முக்குகளை பல்வேறு கோணங்களில் முப்பரிமாண (3டி) வடிவில் படம் பிடித்து ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 160 விதமான சோதனைகளுக்குப் பிறகு, மூக்கின் வடிவம், அவற்றின் நிழல் அமைப்பு, சுவாசம் செய்யும் முறையை ஒப்பிட்டு ஒரு மென்பொருள் தயாரிக்கப் பட்டது.

இது குற்றவாளி களை எளிதில் அடையாளம் காண உதவியது. எனவே இந்த புதிய முறையைக் கொண்டு புதுவித பாதுகாப்பு கருவியை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பாத் பல்கலைக் கழகம் இந்த நவீன யுக்தியை கண்டுபிடித்தது.

ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, `குற்றவாளிகளை பார்வையை வைத்து கண்டுபிடிப்பது கடினம். கண்ணின் கருவிழியின் தெளிவற்ற தன்மை, கண் விரிவதற்கேற்ப ஏற்படும் மாற்றம் போன்றவை குற்றவாளியை தெளிவாக அடையாளம் காண சிக்கலாக அமைகிறது. காதுகளையும் எளிதில் அடர்ந்த தலைமுடி மறைத்துவிடுகிறது. ஆனால் முக்கானது எளிதில் மறைக்க முடியாத உறுப்பு. அறுவைச் சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டாலும் சுவாசமுறை தீவிரவாதியை எளிதில் காட்டிக் கொடுக்கும். எனவே வருங்காலங்களில் குற்றத்தைக் குறைக்கும் அதிமுக்கிய கருவியாக `சுவாச ஸ்கேனிங்’ பயன்படும்’ என்றார்.

ஆன்லைனில் அன்ஸிப்

வேர்ட் டாகுமெண்ட்டாக இமெயில் செய்தி
இணைய தளங்களில் இருந்து டவுண்லோட் செய்திடுகையில், பெரும்பாலும் ஸிப் செய்யப்பட்ட, அதாவது சுருக்கப்பட்ட பைல்களாகவே நமக்குக் கிடைக்கின்றன. பெரிய பைல்களை நம் நண்பர்கள் நமக்கு அனுப்பும்போதும் அவற்றைச் சுருக்கி ஸிப் பைல்களாகவே அனுப்புகிறார்கள். நம்மிடம் இவற்றை விரித்து முழுமையான பைல்களைப் பெற ஏதேனும் சாப்ட்வேர் வைத்திருப்போம் (விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர். போன்றவை) என்று எண்ணி அனுப்புகிறார்கள். இவை நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்கிறோம். இணைய இணைப்பு பெற்று, இவற்றை அன்ஸிப் செய்யக் கூடிய சாப்ட்வேர் தொகுப்பை டவுண்லோட் செய்து, பின் பயன்படுத்துகிறோம். அவ்வாறு டவுண்லோட் செய்பவையும் ஸிப் பைலாக இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுகிறதா?
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஓர் இணைய தளம் இயங்குகிறது. http://www.wobzip.org/ என்ற முகவரியில் உள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள். அன்ஸிப் செய்திட வேண்டிய, விரித்துப் பார்க்க வேண்டிய ஸிப்டு பைலை அப்லோட் செய்திடுங்கள். இந்த தளம் அந்த ஸிப் பைலை விரித்து, என்ன என்ன பைல்கள் அதில் உள்ளன என்று காட்டும். நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ டவுண்லோட் செய்திடலாம். தளம் பலவகையான ஸிப் பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. அவை –– 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB மற்றும் NSIS ஆகும்.
இதில் அப்லோட் செய்யப்படும் ஸிப் பைல் அளவு 100 எம்பிக்கு மேல் இருக்கக்கூடாது.
நமக்கு வரும் சில இமெயில் செய்திகளை காப்பி செய்து, டாகுமெண்ட் டெக்ஸ்ட்டாக வேர்டில் பேஸ்ட் செய்திடுவோம். அப்போது வேர்டில் உள்ள பேஜ் செட்அப் படி இமெயில் டெக்ஸ்ட் அமையாது. இமெயில்டெக்ஸ்ட்டில் உள்ள ஒவ்வொரு வரியிலும் ஒரு என்டர் ரிட்டர்ன் அடையாளம் இருக்கும். இதனால் வரிகள் முழுப் பக்கத்தில் பாதி பாதியாகத் தோற்றமளிக்கும். பாராக்களுக்கு மத்தியில் இரண்டு என்டர் தட்டியது போல இடைவெளி இருக்கும். இதனால் பிரிண்ட் எடுக்கையில் பேப்பர் வீணாவது போலக் காட்சி அளிக்கும். ஏனென்றால் பேப்பரின் முழு அகலத்திற்கும் டெக்ஸ்ட் அமையாது. இதனைச் சரி செய்திட வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியிலும் சென்று இவற்றை நீக்க வேண்டும்.
வேர்ட் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கொண்டுள்ளது. இமெயில் டெக்ஸ்ட்களைச் சரியான முறையில் பார்மட் செய்திட சில வழிகளைத் தருகிறது.
இமெயில் டெக்ஸ்ட்டை காப்பி செய்துவிட்டு, பின் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் கண்ட்ரோல் + ஆல்ட்+ கே அழுத்தினால் ஆட்டோ பார்மட் வசதி இயக்கப்பட்டு, டெக்ஸ்ட் வழக்கமான வேர்ட் பார்மட்டில் அமைக்கப்படும்.
இதிலும் உங்களுக்குத் தேவையான பார்மட்டில் டெக்ஸ்ட் அமைந்திட வேண்டும் எனில் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. டூல்ஸ் மெனுவில் இருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் ஆட்டோ பார்மட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த டயலாக் பாக்ஸில் நீங்கள் விருப்பப்படும் வகையில் பார்மட் வசதிகளை இயக்க செட் செய்திடவும். நீங்கள் ஏற்படுத்தும் ஆப்ஷன்ஸ், ஆட்டோ பார்மட் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை வரையறை செய்கின்றன.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.

எடுத்த காரியம் வெற்றி பெற..

.

நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?

வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலை தொடங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றி பெற ஒரே தாரக மந்திரம்தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளலாம் இனி. எண்ணித் துணிக கருமம் என்று கூறியிருக்கிறார்கள் தாதையர்கள். `சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் தெரியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்’ எனக் கூறுகிறார் இங்கிலாந்து மேதை பிரியாண்ட். விஞ்ஞானி ஐன்ஸ்டினோ, ஆழ்ந்த சிந்தனைக்கு அதிகம் பயன் உண்டு என்கிறார்.

சிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதிக்கும் முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்படாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவும், லாபம்போல நட்டத்தை சமாளிக்கவும் மனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டும். துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக்கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறு முயற்சியாக முன்னோக்கியே அடியெடுத்து வைக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும் அடுத்த வழியாகும். எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. பழைய பேப்பர், பலசரக்கு வியாபாரம் முதல் பங்குச் சந்தை, தகவல் தொழில்நுட்பம் வரை எல்லாம் போட்டிதான்.

பரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒரு பந்தயக் குதிரை என்று எண்ண வேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட்டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிதாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும். போட்டியாளருக்கு ஏற்ப வாடிக்கையாளருக்கு சலுகை அளிக்க வேண்டும். தரமான பொருட்களை வழங்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண்டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையும், மாற்றத்தையும் யூகித்து அறிந்து செயல்பட்டால் வெற்றி கைகூடும்.

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும். நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்வி களை அசைபோட்டு அனுபவப் பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடைபோடுங்கள். பயத்தை கைவிடுவதே வெற்றிப் பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்களைக் கண்டு தயங்கி நிற்க கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான். சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. `கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்.

ஒரே கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு

ஈரோட்டின் எல்லைக்கோட்டை இயற்கையாக வரைந்திருக்கும் காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது கொடுமுடி. இங்கிருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்புகிறது.

கொடுமுடி என்றால் `மலையின் உச்சி’ என்று பொருள். இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 482 அடிக்கு மேல் உள்ளது. இங்கு மலை உச்சியே தெய்வமாகக் கருதி வணங்கப்படுகிறது.

தேவாரத்தில் பாடப்பட்டுள்ள கொங்கு மண்ணின் 7 தலங்களில் கொடுமுடி 6-வது தலமாக பாடப்பட்டு உள்ளது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் 3 பேரும் கொடுமுடியை பாடி உள்ளனர்.

இங்கு பிரம்மா வழிபட்டதால் `பிரம்மபுரி’ என்றும், திருமால் பூஜை செய்ததால் `அரிகரபுரம்’ என்றும் மேலும் பெயர்கள் உண்டு.

கருடன் இங்கு பூஜை செய்த பிறகே தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததாக ஐதீகம். அந்த அடிப்படையில் கொடுமுடிக்கு `அமுதபுரி’ என்ற பெயரும் உண்டு.

மேலும் கன்மாடபுரம், திருப்பாண்டி கொடுமுடி, பரத்வாசசேத்திரம் என்ற பெயர்களும் கொடுமுடிக்கு வழங்கப்படுகிறது.

மேரு மலையில் இருந்து ஒரு துண்டு வைரமணியாக கொடுமுடியில் விழுந்து பெரும் சிகரமாக அமைந்தது என்றும், அந்த சிகரமே மூல லிங்கமாகவும் அமைந்து இருப்பதால் தென் கயிலாயம் என்றும் கொடுமுடி அழைக்கப்படுவதாக கொடுமுடியின் தலவரலாறு கூறுகிறது.

இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகுடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு திருமாலுக்கு என்று தனியாக கோவில் உள்ளது. அங்கே மகாவிஷ்ணு, பள்ளிகொண்ட கோலத்தில் வீரநாராயண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

அதுபோல் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வன்னி மரம் கோவில் தல விருட்சமாக உள்ளது. இந்த வன்னிமரம் பிரம்மாவின் அடையாளமாக உள்ளது.

– இப்படி ஒரே கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய 3 கடவுளுக்கும் சன்னதிகள் அமையப்பெற்று இருப்பது மிகவும் சிறப்பாகும்.

கொடுமுடி சிறந்த பரிகார தலமாக உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கொடுமுடியை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இதற்காக கோவில் வளாகத்தில் பரிகார மண்டபம் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. குரு பிரீதி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், திருமணத்தடை, பூர்வ ஜென்ம சாப தோஷம் உள்பட பல்வேறு தோஷங்களுக்கும் இங்கு பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.