Daily Archives: மார்ச் 22nd, 2010

யானையின் துதிக்கையில் ஒன்பது லிட்டர் தண்ணீர்

* யானைகள் எலிபண்டிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.
* யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது.
* ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும்.
* யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது.
* யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.
* யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது.
* யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது.
* யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன.
* பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும்.
* விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன.
* விலங்கு இனத்தில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.
* யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
* யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன.
* யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
* யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.

தக்காளிக் கூழும், எலுமிச்சை சாறும் முகத்தை பளிச் சென்று ஆக்கிவிடும்

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் வேறு சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. கண்ணுக்கு தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்கு தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்னை ஏற் படுகிறது. ஏனென்றால், அவர்களின் தோலின் துளைகளில் அதிகளவு ‘செபம்’ நிறைந்து காணப்படுகிறது.
* முகத்தில் தோன்று பருக்களை கிள்ளுதல்.
* முறையாக சுத்தம் செய் யாதது.
* தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ…
வீட்டில் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள்:
* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய ‘பேஸ் பேக்’கள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய <உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.
*முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.
* ஓட்மீலுடன் வெள்ளரிச்சாறை கலந்து முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
*ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).
தோல் சிகிச்சை நிபுணரிடம் மேற்கொள்ளும் சிகிச்சை
மீசோதெரபி மற்றும் மீசோபோடக்ஸ்: இந்த சிகிச்சை முறையில், மிகச் சிறிய அளவு வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் போடக்ஸ் ஆகியவை நேரடியாக முகத்தில் காணப்படும் தோலில், மிக நுண்ணூசி மூலம் செலுத்தப்படும். ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் அனைவருக்கும் பொருந்தாது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற, இது போதும் என்ற திருப்தியான மனதுடன் இருப்பவர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்படும் கடலை மாவு, மஞ்சள் பொடியே போதும்.

படித்தால் மூளை பலம் பெறும்!

வளமான வாழ்வுக்கு இன்றியமையாதது கல்வி. படிப்பதை பள்ளி, கல்லூரிப் பருவத்துடன் நிறுத்தாமல், படித்துக் கொண்டே இருந்தால் மூளை எப்போதும் பலமாக இருக்கும் என்கிறது புதிய ஆய்வு.

இர்வின் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக கிளை ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. படிப்பது மூளைக்கு பலம் சேர்ப்பதோடு, எண்ணக் கிளர்ச்சி ஏற்படுவதை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் வயதாக வயதாக மூளையின் திறன் குறைவதையும் தடுக்கிறது. பதிலாக மூளைத்திறன் சீராக உயரவும் துணைபுரிகிறது.

படிப்பதனால் நியூரான் ஏற்பிகளின் செயல் வேகம் தூண்டப்படுகிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதற்கு காரணமாக இருக்கும் புரதம் `பிரைன் டெரிவ்டு நிரோடிராபிக் பேக்டர்’ எனப்படுகிறது. இதனால் உணர்வுகளை கடத்தும் நியூரான்கள் கிளர்ச்சி அடைகிறது. தொடர்புகள் பலம் பெறுகிறது. மூளை சுறுசுறுப்படைந்து நினைவுத்திறன் அதிகரிக்கிறது.

நரம்புணர்ச்சிகளை ஒரே திசையில் கடத்தும் நரம்புகளின் கூடல்பகுதி, படிக்கும் நேரங்களில் மற்ற நேரங்களைவிட 3 முதல் 8 மடங்கு வேகம் பெறுகிறது. இப்படி ஒரே சீராக இயங்குவதை `தட்டா ரிதம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ரிதம் அளவு வயது அதிகமாகும்போது குறையத் தொடங்கும். படிப்பதன் முலம் இதை குறைத்து மூளையை பலப்படுத்தலாம்.

இதே வகையில் மூளையைப் பலம்பெறச் செய்து மூளை சம்பந்தமான சில வியாதிகளை குணப்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க!

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும், ‘பர்கர்’ வகை தான், ‘ஹாட் டாக்ஸ்’ என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதி கரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர் தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்த பின், இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு வகைகள் டிபன் பாக்சில் அதிகம் இடம் பிடிக்கின்றன; போதாக் குறைக்கு, ‘ஹாட்டாக்ஸ்’ பர்கரையும் குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவதால், பள்ளிப் பருவத்திலேயே ஒபிசிட்டிக்கு ஆளாகி விடும் ஆபத்து ஏற் படுகிறது; அதனால், புரோட்டீன், நார்ச்சத்துள்ள உணவுகளுக்கு மாற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் விளைவு, இப்போது அமெரிக் கர்கள் பலரும், நம்மைப் போல காய்கறி, பழங்களுக்கு மாறி வருகின்றனர்; கேக், ஐஸ்கிரீம், பர்கர், பிட்சா, கூல் டிரிங்ஸ்களை குறைத்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கான சத்துணவுகளை பட்டியலிட்டுள்ளது அமெரிக்க சுகாதார நலத்துறை. அதில் உள்ளவை—
* அரிசி, கோதுமை உட்பட தானிய வகை உணவு தினமும் முக்கியம்.
* சுகாதாரமான நொறுக்குத்தீனி பாப் கார்ன்.
* கேரட், வெள்ளரி, தக்காளி,வெங்காயம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜ் சாலட்.
* குழந்தைகளாக இருந்தால் பிசைந்த உருளைக்கிழங்கு உணவு.
* திராட்சை, பாதாம் உட்பட உலர்ந்த பழங்கள்.
* பழங்கள் அல்லது பழச்சாறுகள்.
* மீன், முட்டை, பால்.
* புரோட்டீன் தரும் சோயாபீன்ஸ்.
*வேர்க்கடலை போன்ற கடலை வகைகள்.
* பசலைக்கீரை உட்பட கீரை வகைகள்.
அமெரிக்காவில் உள்ள சராசரி மக்கள், தங்கள் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றி வருகின்றனர். முந்தைய அதிபர் கிளின்டன், இந்தியா வந்தபோது, நம் திருமண, குடும்ப கலாச்சாரத்தை பார்த்து வியந்தார். அதுபோல, ‘நான் ஒரு மகளை பெற்ற தந்தையாக கவலைப்படுகிறேன்; அவளை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்’ என்று சமீபத்திய மாஜி அதிபர் புஷ் , இந்தியா வந்தபோது கூறினார்.
இப்படி அதிபர்கள் மட்டுமல்ல, சாதாரண அமெரிக்கர்களும், இந்தியாவை பார்த்து தான் தங்களை மாற்றி வருகின்றனர். குறிப்பாக, சத்துணவுகள் என்றால், இந்தியாவின் உணவுப்பழக்கம் தான் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பல ஆண்டாக கொடிகட்டிப் பறந்த ஹாட் டாக்ஸ் என்ற பர்கர் உணவு வகை, இப்போது குட்டீஸ்களின் லஞ்ச் பாக்சில் இடம் பெறுவதில்லை. அதற்கு பதிலாக, பழங்கள் தான் இடம் பெறுகின்றன.

மருத்துவத் துறையில் ஓசோனின் பயன்

ஓசோன் (OZONE) என்ற வார்த்தை, கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஓசோன் என்றால் வாசனை என்று பொருள். இந்த ஒசோன், சூரிய வெளிச்சத்திலுள்ள அல்ட்ரா வயலெட் கதிரிலிருந்து உருவாகிறது. மேலும், மழை காலங்களில் ஏற்படும் இடி, மின்னல்களிலிருந்து உருவாகிறது. இப்படியாக ஓசோன் என்ற வாயு, பிராண வாயுவை, அதாவது ஆக்சிஜனை விட உயர்ந்தது. ஆக்சிஜனின் அணு மூலக்கூறு, O2 ஓசோனின் அணு மூலக்கூறு, O3. நல்ல முறையில் உயிர் வாழ, ஒவ்வொரு திசுவிலும் ஆக்சிடேஷன்(Oxidation) என்ற பிராணிகரணம் ஏற்பட வேண்டும். அதாவது திசுக்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமானால் இந்த ஆக்சிடேஷன் நிகழ வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, தாதுப்பொருள்களான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் முதலியவை, ஆக்சிடேஷன் செயல்பாட்டிற்கு தேவை. இது வேலை செய்யாவிட்டால் திசு அழிந்து விடும். பல திசுக்களை இழந்து, உறுப்பு செயலிழந்துவிடும்.
ஓசோன், இந்த ஆக்சிடேஷனைப் போல தான் செயல்படுகிறது. ஓசோன் எந்த பொருளுடன் இணைகிறதோ, அது, ‘ஆக்சிடைஸ்’ ஆகிறது. உதாரணம், நச்சுப் பொருள்களுடன் சேரும் போது, அந்த நச்சு தன்மையை அழித்து விடுகிறது. இதே போல வைரஸ், பூஞ்சைகளோடு சேரும் போது, அவற்றை செயலிழக்க செய்கிறது. இதுபோல பல அரிய குணங்கள் உள்ளன.
இந்த ஓசோனை பயன்படுத்தி பல வியாதிகளை குணப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. முதுகுத் தண்டில், ஜவ்வு வெளியே வரும்போது கடும் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறோம். இதற்கு ஓசோன் ஊசி போட்டால், குணமாகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஓசோனில் உள்ள மூன்றாவது அணு, முதுகுத் தண்டில் உள்ள புரோட்டோகிளைசின் என்ற மூலக்கூறுடன் இணைந்து, அதிலுள்ள தண்ணீரை வெளியேற்றுகிறது. தண்ணீர் வெளியேறும்போது, ஜவ்வு தானாகவே சுருங்கி, உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் வலி நீங்குகிறது.
இது போல, பல நாட்கள் குணமாகாத புண்கள், சர்க்கரை நோயால் வரும் நரம்பு நோய்கள், அதிக குடியால் ஏற்படும், நரம்பு தளர்ச்சி, முட்டி வீக்க நோய்களை, ஓசோன் ஊசி போடுவதன் மூலம் குணப்படுத்தலாம்.
தெரியாத தகவல்கள்
* இறைச்சி கெடாமல் பாதுகாக்க ஓசோன் வாயுவை, சுவிட்சர்லாந்து இயற்பியல், வேதியல் நிபுணர் கிறிஸ்டியன் சோனேபின் 1840 ல் கண்டுபிடித்தார்.
*தொற்று நோய்களை தடுக்கவும் ஓசோன் பயன்படும் என்று அவர் கண்டுபிடித்தாலும், 1868ல் அவர் ஆந்த்ராக்ஸ் என்ற மாட்டிறைச்சி மூலமான தொற்றுநோய்க்கு பலியானார்.
* பதினோரு ஆண்டுக்கு பின், வேதியல் நிபுணர் வெர்னர் சீமன்ஸ் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார்; ஓசோன் வாயு ஜெனரேட்டரையும் வடிவமைத்தார்.
* மருத்துவத்துக்கு பயன்படுத்த முடியும் என்று 1871ல், ஆஸ்திரிய நிபுணர் எட்வின் பைர் கண்டுபிடித்து, பல் சிகிச்சைக்கு பயன்படுத்தினார்.
* சட்டரீதியாக ஓசோன் வாயுவை மருத்துவத்துக்கு பயன்படுத்துவதில் இன்னமும் சர்ச்சை இருக்கிறது.
* அண்டவெளியில் பரந்து அடர்த்தியாக பல அடுக்குகளாக ஓசோன் வாயு இருந்தாலும், சமீப ஆண்டாக புவி வெப்பமயத்தால் கார்பன் வாயுக்களால் பாதிக்கப்பட்டு, ஓசோன் இழைகளில் ஓட்டை விழுந்துள்ளது.
* ஆக்சிஜனில் இருந்து உருவாவது தான் ஓசோன். எளிதில் கரையக்கூடியது.
* நம் உடலில் ரத்தம், திசுக்கள், தோல், உறுப்புகளுக்கு முக்கிய தேவை ஆக்சிஜன்; உடலில் மொத்தம் 65 சதவீதம் ஆக்சிஜன் நிரம்பியது.
* மருத்துவ ஓசோன் என்பது, 95 சதவீதம் ஆக்சிஜன், ஐந்து சதவீதம் ஓசோன் கொண்டது தான்.
* ஆலிவ் ஆயில் மிக நல்லது; இதில், மருத்துவ ஓசோன் செலுத்தப்பட்ட ஆலிவ் , தோல் அழகுக்கு நல்லது.
* அல்சர், சைனஸ் போன்ற பாதிப்புகளுக்கும் மருத்துவ ஓசோன் பயன்படுத்தப்படுகிறது.
டாக்டர் சு.அர்த்தநாரி எம்.டி., டி.எம்.,

குழந்தைகளின் மனதில் குரோதம்…

இந்தியாவில் ஆண்டுதோறும் முன் விரோதத்தால் 16.2 சதவீதம் கொலையும், வரதட்சணைக் கொடுமையால் 2.3 சதவீதம் கொலையும், காதல் ஏமாற்றத்தால் 6.2 சதவீதம் கொலையும், நிலத் தகராறினால் 10.2 சதவீதம் கொலையும் நடக்கின்றன என்று கூறுகிறது, ஒரு சர்வே. இப்படி நடக்கும் கொலைகளில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது. நட்பு, பணம் மற்றும் முன்விரோதம் போன்ற காரணங்களால் வன்முறை பக்கம் திரும்புகின்றனர் என்பதே கசப்பான உண்மை இதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் விளையாட்டுதான் என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள்.

இப்போதுள்ள வீடியோ கேம்ஸில் ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி பல் வேறு பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டு கொடூரமாக கொல்லும் காட்சி களும் உள்ளன. இது குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாக பதிந்து விடுகிறது. மேலும், அவர்கள் படிக்கும் சூப்பர்மேன், பார்க்கும் ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட் கதை புத்தகங்களும், சினிமாக்களும் இளம் உள்ளங்களில் கொலை வெறி உணர்ச்சியைத் தூண்டி மனதில் பதிந்து விடுகிறது என்கின் றனர் மனவியல் நிபுணர்கள்.

உலகில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திள்ளது வீடியோ கேம்ஸ். இந்தியாவில்… குறிப்பாக தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கான இலக்கியமோ அல்லது அதற்குரிய எழுத்தாளர்களோ கிடையாது என்ற சூழ்நிலையே உள்ளது.

சினிமாக்களில் கூட சிறுவர், சிறுமிகளுக்கான படைப்புகள் இல்லை. எப்போதாவதுதான் ஒன்றிரண்டு வருகின்றன. அதிலும் சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமே பிரதான படுத்தபடுகின்றன. தொலைக்காட்சிகளில் தற்போது சிறுவர், சிறுமிகளுக்கான சேனல்கள் வந்தாலும் அவற்றிலும் மசாலா நெடி அதிகமாகவே உள்ளன. அதில் குழந்தைகளின் கற்பனை உலகை விளக்கவோ… அவர்களுடைய குணங்களை மேம்படுத்தும் நோக்கிலோ படைப்புகள் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். அப்படியே பார்க்க வேண்டும் என்றால் கூட மொழி தெரியாத கார்ட்டூன் சேனல்களில் உள்ள நிகழ்ச்சிகளைத் தான் நம்முடைய குழந்தைகள் காண வேண்டிய சூழல்.

மக்கள் தொகையில் 55 சதவீதமாக உள்ள குழந்தைகளுக்காக நாம் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. வருங்காலச் சமுதாயம் வன்முறை இல்லாத அமைதி பூங்காவாக திகழ… குழந்தைகள் வளர்பில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

அதனால்தான் இளைஞர்களை கனவு காணச் சொல்கிறார்கள். அந்தக் கனவுகள் யாவும் மனதில் தங்கியிருந்து பிற்காலத்தில் வடிவம் பெறும் என்ற நம்பிக்கையில் அப்படி கூறப்படுகிறது. கனவு கூட ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் முதலே அவர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்தை பொறுத்தே அமைம்.

குழந்தை பருவத்தில் சிறுவர்களின் குணம் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றினால் அவர்கள் செல்லும் பாதை சீரானதாக அமையும். மேதைகள் மற்றும் விஞ்ஞானிகளின் வாழ்க்கையை நோக்கினால் அவர்களின் இளமைக் காலத்தில் அவர்கள் தங்களின் மனதுக்குள் வளர்த்துக் கொண்ட கனவுகள்தான் பிற்காலத்தில் நனவுகளாகி புகழின் சிகரங்களைத் தொட்டன என்பதை புரிந்து கொள்ளலாம்.

சச்சின் 25 – உலகின் முதல் டபுள் டன் ஹீரோ சச்சின் !

உலகின் முதல் டபுள் டன் ஹீரோ சச்சின் ! அவருக்கு “”பாரத ரத்னா” வழங்கியாக வேண்டும் என்கிறார் கபில்தேவ். ஆம்… சச்சின், கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். இவர் படைக்காத சாதனைகளே இல்லை, தனது சாதனைகளையே உடைத்து, புதிய புதிய சாதனைகளைப் படைக்கிற ஆட்டக்காரர். சச்சின் ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும், அடிக்கிற ஒவ்வொரு ரன்னுக்கும் உலக கிரிக்கெட் வரலாற்றை அப்டேட் செய்ய வேண்டி இருக்கிறது !
* சச்சினின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப்பெயர். சச்சினின் அப்பா, பிரபல மராத்தி எழுத்தாளர். அவர் சச்சின் தேவ் பர்மன் என்னும் இசையமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால்தான் மகனுக்கு சச்சின் என்று பெயர் வைத்தார். !
* 1988ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ப்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது. மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, சட்டென எல்லார் மனதிலும் பதிந்தார் சச்சின் !
* சச்சினை கிரிக்கெட் விளையாட ஆர்வப்படுத்தியவர் அவரது அண்ணன் அஜீத். மும்பை பாந்த்ராவில் இருந்த சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால், சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினை தங்க வைத்து, கூடவே இருந்தார் அண்ணன் அஜீத்.
* முதலில் சென்னை எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷனில் பௌலர் ஆவதற்குப் பயிற்சிப் பெற வந்தார் சச்சின். ஆனால், பயிற்சியாளரான டென்னிஸ் லில்லி, “” நீ சூப்பர் பேட்ஸ்மேன் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போய் பேட்டிங் பயிற்சி எடு” என்று அனுப்பி வைத்தார்.
* ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக கிரிக்கெட் மைதானத்துக்கு வந்து கடைசி ஆளாகப் போவாராம் சச்சின். “”அச்ரேகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாம் எப்படி விளையாடுகிறோமோ,அதில் இன்னும் சிறப்பாக விளையாடச் சொல்லித் தருவார். நம் ஸ்டைலை மாற்ற மாட்டார்”என்பார் சச்சின்.
* எந்தப் பந்து வீச்சாளர்கள் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறார்களோ, அவர்களின் பந்துகளை எதிர்கொள்வதற்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுப்பார். 98-ம் ஆண்டு ஷேன் வார்னேவின் சுழற்பந்தை எதிர்கொள்ளச் சிரமப்பட்டவர், சுமார் ஒரு மாதம் சென்னையில் தங்கி சிவராமகிருஷ்ணனிடம் பயிற்சி எடுத்தார். அதன்பிறகு சச்சின் ஆடிய ருத்ரதாண்டவத்தை ஷேன் வார்னே இன்னும் மறக்கவில்லை!
* முதன்முதலாக வேர்ல்டு பெல் நிறுவனத்துடன் 18 கோடி ரூபாய் என்கிற கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டார். இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் ஒப்பந்தமானது இல்லை என்று வியந்தது விளையாட்டு உலகம். இப்போத சச்சினின் சொத்துக்கள் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது. அண்ணன் அஜீத்தான் முழுவதையும் கவனித்துக் கொள்கிறார்.
* கிரிக்கெட் விளையாட வந்த ஆரம்பத்தில் நண்ப்களை அதிகம் மிஸ் செய்வேன். இப்போது என் ஆரூயிர் நண்பன் என் கிரிக்கெட் பேட்தான். அவன் என்னைவிட்டுப் பிரிவதை என்னால் எப்போதும் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று சொல்லி இருக்கிறார் சச்சின்!
* கிரிக்கெட் இல்லையென்றால் மனைவி அஞ்சலி மகன் அர்ஜுன் மகள் சாராவுடன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் கிளம்பிவிடுவார். மகனை கிரிக்கெட் பிளேயராகவும், மகளை டென்னிஸ் பிளேயராகவும் உருவாக்க வேண்டும் என்பது கனவு!
* மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பது சச்சினின் ஆசை. ஆனால் இந்தியாவில் அது முடியாத காரியம் என்பதால் சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் சொந்தமாக வீடு வாங்கினார். வீட்டின் அருகே உள்ள பார்க்கில் குடும்பத்தோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பதுதான் சச்சினுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!
* எந்த நகரத்தில் கிரிக்கெட் விளையாடப்போனாலும், மேட்ச் இல்லாத நாட்களில் பேஸ்பால் கேட் கூலிங்கிளாஸ், தாடி என கெட்-அப்பை மாற்றி, நகர்வலம் செல்லப் பிடிக்கும். மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு வெளியே செல்வதை நிறுத்திவிட்டார்.
* சென்டிமென்ட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கிரிக்கெட் என்றால் 10-ம் நம்பர் ஜெர்சி கார் என்றால் 9999 என ராசியான நம்பர்களை யாருக்கும் விட்டுத்தரமாட்டார்!
* லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகர். லதா மங்கேஷ்கர், ச்சினை எப்போது பார்த்தாலும் அவருக்காக நாலு வரிகளாவது பாடாமல் போகமாட்டார்.
* பெர்ஃப்யூம், சன் கிளாஸ் மியூஸிக் சிஸ்டம், பிராண்டட் ஷர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் கார் இவைதான் சச்சின் அதிகம் விரும்பி வாங்குபவை.
* பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி தேடித் தந்தார் கேப்டன் சச்சின். இருப்பினும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால் தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
* இதுவரை மொத்தம் ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கிறார் சச்சின். இதில் இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து மேன் ஆஃப் த சீரிஸ் விருது பெற்றிருக்கிறார்.
* 2001 – 2002ம் ஆண்டின்போது டென்னிஸ் எல்போ பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டார். ஆபரேஷன் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தது மனைவி அஞ்சலி. என் மனைவி மட்டும் எனக்குத் துணையாக இல்லை என்றால் மீண்டும் கிரிக்கெட் பேட்டைத் தொட்டிருக்கவே முடியாது என நெகிழ்வார் சச்சின்!
* இதுவரை மேட்ச் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு நான் சரியாகத் தூங்கியதே இல்லை. இரவு முழுக்க அடுத்த நாள் மேட்சைப் பற்றியேதான் என் மனதில் படம் ஓடிக் கொண்டு இருக்கும் என்பார்!
* சிறுவனாக இருந்தபோது நான்கு மணி நேரம் விளையாடினாலும் சச்சினை அவுட் ஆக்க முடியாமல் தவிப்பார்களாம். பயிற்சியாளர் அச்ரேகர் ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்டம்ப்பின் மேல் வைத்துவிட்டு சச்சினை அவுட் ஆக்குபவருக்கு ஒரு ரூபாய் சொந்தம் எனச் சவால்விடுவாராம்!
* 2005ம் ஆண்டின்போது பத்திரிகை ஒன்று எண்டுல்கர் எனத் தலைப்பிட்டு சச்சினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியது. என்னைப்பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அந்த விமர்சனத்தை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதநாள் அது மட்டும்தான்! என்றார் சச்சின்!
* சச்சினுக்கு மிகவும் பிடித்தது கார் ரேஸ். ஃபார்முலா-1 ரேஸ் நடக்கும் மைதானங்களுக்கு நேரடியாக விசிட் அடிப்பார் சச்சின். நரேன் கார்த்திகேயனுடன் பேசி, வேகமான கார்களைப்பற்றி அப்டேட் செய்து கொள்வார்.
* கிரிக்கெட் விளையாட வந்த புதிதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேரி சோபர்ஸ் எழுதிய ட்வெண்ட்டி இயர்ஸ் அட் த பாப் என்கிற புத்தகம்தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னார் சச்சின். இப்போது 20 வருடங்களைக் கடந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார் மாஸ்டர் ப்ளாஸ்டர்!

கல்வி வரம் தரும் ஹயக்ரீவர் தரிசனம்

மகாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவரே சரஸ்வதியின் குரு என்கின்றன புராணங்கள்.
ஹயக்ரீவரை தரிசிப்பதும், அவரது துதிகளைச் சொல்வதும் கல்வி, கலை என அனைத்திலும் சிறப்பான அறிவினைப் பெற உதவும் என்பது நிச்சயம்.
ஆண்டு இறுதித் தேர்வுகள் ஆரம்பமாகியிருக்கும் இந்த சமயத்தில் மாணவர்கள் தசிரித்துப் பயன்பெறும் வகையில் பலப்பல தலங்களில் உள்ள ஹயக்ரீவர்களின் தரிசனம் இங்கே தரப்பட்டுள்ளது.
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே
ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசியுங்கள். நீங்கள் ஜெயிப்பது நிஜம்!

குடும்ப பாசம் அதிகம் கொண்டவரா நீங்கள்? (ஆன்மிகம்)

மனிதர்கள் எல்லாரும் நல்லவர்கள்தான். வந்தவர்களிடம் மரியாதையாகப் பேசுவர்; வாய் உபசாரமாவது செய்வர். இருந்தாலும், மனித மனதுக்குள்ளே சில கொடிய மிருகங்களும் உள்ளன. இவைதான் மனிதனை ஆட்டி வைக்கின்றன.
‘திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கள் மூன்றும்
நகைக்கின்ற நெஞ்சில் நரிக்குட்டி நாலும்
அசைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகளைந்தும்
பகைக்கின்ற நெஞ்சிற் பகைவராமே!’
— என்பது சித்தர் பாடல்.
பேசும்போது வெண்ணை போல் நெகிழ்ந்து தேனொழுகப் பேசுகிறோம். ஆனால், அவரது உள்ளத்தில் திகைக்கிற சிந்தையுள் – பந்தங்களினால் கட்டுண்டு, அலைக்கழிக்கப்பட்டு, திகைத்துப் போயிருக்கும் ஆன்மாவில் சிங்கங்களாகிய முக்குணங்களும் உள்ளன. இந்த சிங்கங்கள் தான் ஆன்மாவின் குணத்தையே மாறுபடச் செய்கின்றன.
போதாக்குறைக்கு, ‘நகைக்கிற நெஞ்சில் நரிக்குட்டி நாலும்’ சிரித்துப் பேசுபவன் உள்ளத்தில், ஏமாற்றும் தந்திரத்திற்கு காரணங்களாகிய நான்கு நரிகளும் சுற்றிச் சுற்றி வருகின்றன. இதுவும் போதாதென்று, ‘அசைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகள் ஐந்தும்…’ ஏற்கனவே சஞ்சலமும், வேதனையும் நிறைந்து அவதிப்படும் ஆன்மாவின் நெஞ்சிலே, ஐம்பொறிகளாகிய ஐந்து ஆனைகளும் ஆட்டம் போடுகிறதாம்.
இவை, இந்த ஆன்மாவுக்கு நல்லது செய்வதை விட்டு, தீமை செய்து கொண்டே இருக்குமாம். இவற்றை வெல்வதற்கு, அடக்குவதற்கு உபதேசம் பெற வேண்டும். அவர் மூலமாக சிவத்தை அறிய வேண்டும். அப்படி அறிந்தவர்கள் யோகியாவர். யோகிகளிடம் இந்த குணங்கள் இருக்காது. மனதை மெல்ல, மெல்ல சிவன் பக்கம் திருப்பி, சிவ தியானத்தில் ஈடுபடுத்த வேண்டும். ‘சிந்தையை மடக்கி சும்மா இருத்தல் அரிது…’ இந்த மிருகங்களை ஒரு பக்கம் விரட்டினால், மறுபக்கமாக நுழைந்து விடுகிறது. சிந்தையை அடக்கி, அந்த பரம்பொருள் ஒன்றையே சிந்தனையில் நிறுத்தினால் தானே இன்பம் வரும்.
அப்படி தீவிரமாக ஈடுபடும்போது, கண்கள் மூடியிருக்கும். புருவ மத்தியில் பேரொளி தெரியும்; வேறு எந்த சப்தமும் காதில் விழாது; வேறு எந்த வாசனையையும் மூக்கு அனுபவிக்காது; கைகளும், கால்களும் விஷமம் செய்யாமல் அசைவற்றிருக்கும்; வாய் சிவ நாமம் மட்டும் சொல்லும்; மனம் சிவனிடத்திலேயே இருக்கும்.
இப்படி தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஈடுபட்டால், யோகிகளுக்கு கிடைக்கும் பேரானந்தம் பெறலாம். உலக பாசம் ஒவ்வொன்றாக விட்டுப் போகும்; பிறவித்தளை அகன்று விடும்.