குழந்தைகளின் மனதில் குரோதம்…

இந்தியாவில் ஆண்டுதோறும் முன் விரோதத்தால் 16.2 சதவீதம் கொலையும், வரதட்சணைக் கொடுமையால் 2.3 சதவீதம் கொலையும், காதல் ஏமாற்றத்தால் 6.2 சதவீதம் கொலையும், நிலத் தகராறினால் 10.2 சதவீதம் கொலையும் நடக்கின்றன என்று கூறுகிறது, ஒரு சர்வே. இப்படி நடக்கும் கொலைகளில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது. நட்பு, பணம் மற்றும் முன்விரோதம் போன்ற காரணங்களால் வன்முறை பக்கம் திரும்புகின்றனர் என்பதே கசப்பான உண்மை இதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் விளையாட்டுதான் என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள்.

இப்போதுள்ள வீடியோ கேம்ஸில் ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி பல் வேறு பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டு கொடூரமாக கொல்லும் காட்சி களும் உள்ளன. இது குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாக பதிந்து விடுகிறது. மேலும், அவர்கள் படிக்கும் சூப்பர்மேன், பார்க்கும் ஸ்பைடர் மேன், ஜேம்ஸ்பாண்ட் கதை புத்தகங்களும், சினிமாக்களும் இளம் உள்ளங்களில் கொலை வெறி உணர்ச்சியைத் தூண்டி மனதில் பதிந்து விடுகிறது என்கின் றனர் மனவியல் நிபுணர்கள்.

உலகில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திள்ளது வீடியோ கேம்ஸ். இந்தியாவில்… குறிப்பாக தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமிகளுக்கான இலக்கியமோ அல்லது அதற்குரிய எழுத்தாளர்களோ கிடையாது என்ற சூழ்நிலையே உள்ளது.

சினிமாக்களில் கூட சிறுவர், சிறுமிகளுக்கான படைப்புகள் இல்லை. எப்போதாவதுதான் ஒன்றிரண்டு வருகின்றன. அதிலும் சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமே பிரதான படுத்தபடுகின்றன. தொலைக்காட்சிகளில் தற்போது சிறுவர், சிறுமிகளுக்கான சேனல்கள் வந்தாலும் அவற்றிலும் மசாலா நெடி அதிகமாகவே உள்ளன. அதில் குழந்தைகளின் கற்பனை உலகை விளக்கவோ… அவர்களுடைய குணங்களை மேம்படுத்தும் நோக்கிலோ படைப்புகள் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். அப்படியே பார்க்க வேண்டும் என்றால் கூட மொழி தெரியாத கார்ட்டூன் சேனல்களில் உள்ள நிகழ்ச்சிகளைத் தான் நம்முடைய குழந்தைகள் காண வேண்டிய சூழல்.

மக்கள் தொகையில் 55 சதவீதமாக உள்ள குழந்தைகளுக்காக நாம் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. வருங்காலச் சமுதாயம் வன்முறை இல்லாத அமைதி பூங்காவாக திகழ… குழந்தைகள் வளர்பில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

அதனால்தான் இளைஞர்களை கனவு காணச் சொல்கிறார்கள். அந்தக் கனவுகள் யாவும் மனதில் தங்கியிருந்து பிற்காலத்தில் வடிவம் பெறும் என்ற நம்பிக்கையில் அப்படி கூறப்படுகிறது. கனவு கூட ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் முதலே அவர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்தை பொறுத்தே அமைம்.

குழந்தை பருவத்தில் சிறுவர்களின் குணம் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றினால் அவர்கள் செல்லும் பாதை சீரானதாக அமையும். மேதைகள் மற்றும் விஞ்ஞானிகளின் வாழ்க்கையை நோக்கினால் அவர்களின் இளமைக் காலத்தில் அவர்கள் தங்களின் மனதுக்குள் வளர்த்துக் கொண்ட கனவுகள்தான் பிற்காலத்தில் நனவுகளாகி புகழின் சிகரங்களைத் தொட்டன என்பதை புரிந்து கொள்ளலாம்.

%d bloggers like this: