Advertisements

மருத்துவத் துறையில் ஓசோனின் பயன்

ஓசோன் (OZONE) என்ற வார்த்தை, கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஓசோன் என்றால் வாசனை என்று பொருள். இந்த ஒசோன், சூரிய வெளிச்சத்திலுள்ள அல்ட்ரா வயலெட் கதிரிலிருந்து உருவாகிறது. மேலும், மழை காலங்களில் ஏற்படும் இடி, மின்னல்களிலிருந்து உருவாகிறது. இப்படியாக ஓசோன் என்ற வாயு, பிராண வாயுவை, அதாவது ஆக்சிஜனை விட உயர்ந்தது. ஆக்சிஜனின் அணு மூலக்கூறு, O2 ஓசோனின் அணு மூலக்கூறு, O3. நல்ல முறையில் உயிர் வாழ, ஒவ்வொரு திசுவிலும் ஆக்சிடேஷன்(Oxidation) என்ற பிராணிகரணம் ஏற்பட வேண்டும். அதாவது திசுக்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமானால் இந்த ஆக்சிடேஷன் நிகழ வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, தாதுப்பொருள்களான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் முதலியவை, ஆக்சிடேஷன் செயல்பாட்டிற்கு தேவை. இது வேலை செய்யாவிட்டால் திசு அழிந்து விடும். பல திசுக்களை இழந்து, உறுப்பு செயலிழந்துவிடும்.
ஓசோன், இந்த ஆக்சிடேஷனைப் போல தான் செயல்படுகிறது. ஓசோன் எந்த பொருளுடன் இணைகிறதோ, அது, ‘ஆக்சிடைஸ்’ ஆகிறது. உதாரணம், நச்சுப் பொருள்களுடன் சேரும் போது, அந்த நச்சு தன்மையை அழித்து விடுகிறது. இதே போல வைரஸ், பூஞ்சைகளோடு சேரும் போது, அவற்றை செயலிழக்க செய்கிறது. இதுபோல பல அரிய குணங்கள் உள்ளன.
இந்த ஓசோனை பயன்படுத்தி பல வியாதிகளை குணப்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. முதுகுத் தண்டில், ஜவ்வு வெளியே வரும்போது கடும் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறோம். இதற்கு ஓசோன் ஊசி போட்டால், குணமாகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஓசோனில் உள்ள மூன்றாவது அணு, முதுகுத் தண்டில் உள்ள புரோட்டோகிளைசின் என்ற மூலக்கூறுடன் இணைந்து, அதிலுள்ள தண்ணீரை வெளியேற்றுகிறது. தண்ணீர் வெளியேறும்போது, ஜவ்வு தானாகவே சுருங்கி, உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் வலி நீங்குகிறது.
இது போல, பல நாட்கள் குணமாகாத புண்கள், சர்க்கரை நோயால் வரும் நரம்பு நோய்கள், அதிக குடியால் ஏற்படும், நரம்பு தளர்ச்சி, முட்டி வீக்க நோய்களை, ஓசோன் ஊசி போடுவதன் மூலம் குணப்படுத்தலாம்.
தெரியாத தகவல்கள்
* இறைச்சி கெடாமல் பாதுகாக்க ஓசோன் வாயுவை, சுவிட்சர்லாந்து இயற்பியல், வேதியல் நிபுணர் கிறிஸ்டியன் சோனேபின் 1840 ல் கண்டுபிடித்தார்.
*தொற்று நோய்களை தடுக்கவும் ஓசோன் பயன்படும் என்று அவர் கண்டுபிடித்தாலும், 1868ல் அவர் ஆந்த்ராக்ஸ் என்ற மாட்டிறைச்சி மூலமான தொற்றுநோய்க்கு பலியானார்.
* பதினோரு ஆண்டுக்கு பின், வேதியல் நிபுணர் வெர்னர் சீமன்ஸ் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார்; ஓசோன் வாயு ஜெனரேட்டரையும் வடிவமைத்தார்.
* மருத்துவத்துக்கு பயன்படுத்த முடியும் என்று 1871ல், ஆஸ்திரிய நிபுணர் எட்வின் பைர் கண்டுபிடித்து, பல் சிகிச்சைக்கு பயன்படுத்தினார்.
* சட்டரீதியாக ஓசோன் வாயுவை மருத்துவத்துக்கு பயன்படுத்துவதில் இன்னமும் சர்ச்சை இருக்கிறது.
* அண்டவெளியில் பரந்து அடர்த்தியாக பல அடுக்குகளாக ஓசோன் வாயு இருந்தாலும், சமீப ஆண்டாக புவி வெப்பமயத்தால் கார்பன் வாயுக்களால் பாதிக்கப்பட்டு, ஓசோன் இழைகளில் ஓட்டை விழுந்துள்ளது.
* ஆக்சிஜனில் இருந்து உருவாவது தான் ஓசோன். எளிதில் கரையக்கூடியது.
* நம் உடலில் ரத்தம், திசுக்கள், தோல், உறுப்புகளுக்கு முக்கிய தேவை ஆக்சிஜன்; உடலில் மொத்தம் 65 சதவீதம் ஆக்சிஜன் நிரம்பியது.
* மருத்துவ ஓசோன் என்பது, 95 சதவீதம் ஆக்சிஜன், ஐந்து சதவீதம் ஓசோன் கொண்டது தான்.
* ஆலிவ் ஆயில் மிக நல்லது; இதில், மருத்துவ ஓசோன் செலுத்தப்பட்ட ஆலிவ் , தோல் அழகுக்கு நல்லது.
* அல்சர், சைனஸ் போன்ற பாதிப்புகளுக்கும் மருத்துவ ஓசோன் பயன்படுத்தப்படுகிறது.
டாக்டர் சு.அர்த்தநாரி எம்.டி., டி.எம்.,

Advertisements
%d bloggers like this: