Daily Archives: மார்ச் 24th, 2010

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர், மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும்.

ஹெலிகாப்டரால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும். இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். ஹெலிகாப்டர் தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது என்பதே உண்மை. கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக் கருவியில் ஹெலிகாப்டர் விசிறி போல இருந்தவற்றின் உதவியால் அது காற்றில் சுற்றி பறந்தது. 1483-ம் ஆண்டில், பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு ஹெலி காப்டருக்கான மாதிரியை வரைந்தார். ஆனால் முதல்முறையாக 1907-ம் ஆண்டில்தான் ஹெலி காப்டரில் வெற்றிகரமாக பறக்கபட்டது. பிரெஞ்சு நாட்டவரான பால் கோர்னு அச்சாதனையை புரிந்தார். அவர் சுமார் 2 மீட்டர் உயரத்தில் 20 நொடிகள் பறந்தார்.

அடுத்து 1936-ம் ஆண்டில், இரட்டை விசிறி ஹெலிகாப்டரை ஹென்ரிக் போக்கே உருவாக்கினார். ரஷியாவில் பிறந்த பொறியாளரான இகோர் சிகோர்ஸ்கி, ஓர் ஒற்றை விசிறி ஹெலிகாப்டரை 1939-ல் அமெரிக்காவில் உருவாக்கினார். `சிகோர்ஸ்கி விஎஸ்- 300′ என்ற அந்த ஹெலிகாப்டர், போரில் பயன்படுத்தபட்ட முதல் ஹெலிகாப்டர் ஆகும்.

இன்று உலகிலேயே பெரியது, ரஷியாவின் `எம்ஐ 26′ ஹெலிகாப்டர் ஆகும். இதில் 20 மெட்ரிக் டன் எடையளவுக்குச் சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். இது சாதாரண ஹெலிகாடர்களில் எடுத்துச் செல்லபடும் அளவை விட பத்து மடங்கு அதிகம். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்டது. அபோது, பாதிக்கபட்ட பகுதிகளுக்கு `புல்டோசர்களை’யும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்ல ஐ.நா.வால் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தபட்டது.

கூகுள் விவகாரத்தில் சீனா செம கடுப்பு: இன்டர்நெட் தணிக்கை விகாரமாகிறது

வாஷிங்டன் : ‘கூகுள் அனுப்பும் எந்த தகவல்களையும் தணிக்கை செய்து தான், இன்டர்நெட்டில் பார்க்க அனுப்புவோம்’ என்று அடம் பிடித்த சீனாவுக்கு, அந்த வெப்சைட் தேடல் நிறுவனம் சரியான பதிலடி கொடுத்துள்ளது; தன் சேவையை ஹாங்காங்குக்கு மாற்றிவிட்டது.

அமெரிக்காவில் உள்ள கூகுள், இன்டர்நெட்டில் வெப்சைட்களை தேடுவதற்கு சேவை செய்யும்நிறுவனம். இன்டர்நெட்டில் கூகுள் மூலம் செய்திகள், தகவல்கள், படங்கள், வரைபடங்கள் போன்றவை உடனுக்குடன் பெற முடியும். சீனா தொடர்பான தகவல்கள் அனைத்தும் தணிக்கை செய்த பின் தான் வெளியிட வேண்டும் என்று சீனா கூறி வருகிறது. ‘இது, தகவல் சுதந்திரத்தை பறிக்கும் போக்கு; இதை அனுமதிக்க முடியாது’ என்று கூகுள் நிறுவனம் கூறிவிட்டது. தணிக்கை செய்யாமல், சீனாவில் இருந்து கூகுள் தன் இன்டர்நெட் சேவையை சீனமக்களுக்கு அளிக்க முடியாது என்று சீனா மீண்டும் மிரட்டி வந்தது. சீனாவில் இருந்து கூகுள் தகவல்கள் எல்லாம் தணிக்கை செய்வதும், இருட்டடிப்பு செய்வதும் தொடர்ந்ததை, கூகுள் கவனித்து வந்தது.

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி உள்ளது. சீனா பற்றிய தகவல்கள், தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை, சீன பொருளாதார தடைகள், சீன கரன்சியான ‘யான்’ மதிப்பு நிலைமை, திபெத் தலைவர் தலாய் லாமா பேச்சுகள் போன்றவற்றை அவ்வப்போது கூகுள் மூலம் பல வெப்சைட்கள் வெளியிடுவதை, சீனா விரும்பவில்லை. கம்யூனிச கட்டுப்பாட்டை மீறிய தகவல்களை அது தணிக்கை செய்ய ஆரம்பித்தது. இதையடுத்து தான், கூகுள் – சீன கம்யூனிச அரசு சண்டை ஆரம்பமானது. இது தொடர்பாக பல முறை பேச்சு நடந்தும், இரு தரப்பிலும் ஒத்துப் போகவில்லை. கடைசி கட்ட பேச்சும் முறிந்துவிட்டது. தணிக்கையை எந்தவடிவிலும் ஏற்க முடியாது என்று கூகுள் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது. பொறுமை இழந்த கூகுள், நேற்று திடீரென சீனாவில் இருந்து கூகுள் தேடல் சேவையை நிறுத்திவிட்டது. ‘சீனாவில் உள்ள மக்கள் எங்கள் சேவையை பெற விரும்பினால், தணிக்கை செய்யப்படாத தகவல்களை பெற, ஹாங்காங் சேவை மூலம் பெறலாம்’ என்று அறிவித்து உள்ளது.

சீனா பற்றிய தகவல்களை, படங்களை பெற, சீனாவில் உள்ளவர்கள், www.google.com.hk என்று இன்டர்நெட்டில் முகவரியிட்டு பெறலாம். இந்த திருப்பத்தால் ஆடிப்போன சீனா, கடும் கோபம் கொண்டுள்ளது. ‘அமெரிக்காவை அடுத்து சீனாவில் தான், இன்டர்நெட் பார்ப்போர் அதிகம் உள்ளனர்; நாங்கள் கூகுளுக்கு சரியான பாடம் கற்பிப்போம்’ என்று சீனா கருவிக் கொண்டுள்ளது. ‘தகவல் சுதந்திரத்தை நாங்கள் பறிக்கத் தயாரில்லை; உலகில் உள்ள மக்களுக்கு எல்லா தகவல்களும் போக வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்’ என்று கூகுள் சட்ட அதிகாரி டேவிட் ட்ரூம்மாண்ட் கூறினார். ‘பேச்சு தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது; இன்டர்நெட் சுதந்திரத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கிறது; தணிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படும் என்று கருதவில்லை’ என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மைக் ஹேம்மர் கூறினார்.

பயர்பாக்ஸ் புது வசதிகள்

ஓப்பன் சோர்ஸ் (Open Source) முறை என்று சொல்லப்படுகின்ற திறந்த நிலை சிஸ்டம் வரிகளுடன் அமைக்கப்பட்டது பயர்பாக்ஸ் பிரவுசர். இதனால் இதன் புரோகிராமிங் வரிகளைப் பெற்று, பல கணிப்பொறி வல்லுநர்கள், இதற்கான ஆட் ஆன் (Add on) தொகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவற்றினால் பல கூடுதல் வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் குறிப்பிட்டிருக்கிறோம். அண்மையில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் தொகுப்புகளைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் சிறப்பான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

1. மல்ட்டி ரோ புக்மார்க்: நமக்குப் பிடித்த அல்லது நமக்குப் பயன்தரும் இணைய தள முகவரிகளைப் புக் மார்க் (Book Mark) என்ற பெயரில் பயர்பாக்ஸ் பிரவுசரில் பட்டியலிட்டு வைக்கிறோம். புக்மார்க் டூல்பாரில் கிளிக் செய்தவுடன் 20க்கும் மேற்பட்ட தளங்களுக்கான புக்மார்க்குகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் கிளிக் செய்தவுடன், அந்த இணைய தளங்களுக்கு நாம் எடுத்துச் செல்லப்படுகிறோம். ஆனால் புக்மார்க்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, கூடுதலாக இருப்பவைகள், ஒரு கீழ்விரி மெனுவாக நமக்குக் கிடைக்கிறது. கீழாகச் சென்று கிளிக் செய்தால், மெனு விரிந்து நமக்கு அவை கிடைக்கின்றன. இதற்குப் பதிலாக அருகே ஒரு பட்டியல் விரிந்து அவை அனைத்தும் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா! இதற்கென ஒரு ஆட் ஆன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. Multirow Bookmarks Toolbar என இது அழைக்கப்படுகிறது. இதனைப் பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/6937 என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், மெனுவில் புக்மார்க்குகள் சென்று தங்குவதில்லை. வரிசையாகப் பட்டியலிடப்படுகின்றன.

2. யு.எஸ்.பி.யில் பயர்பாக்ஸ்: சென்ற மாதம் ஒரு நாள் அவசரமாக வெளியூர் சென்றிருந்த போது, இணையத்தில் சில தகவல்களைத் தேடி ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்றேன். அங்கே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும், குரோம்பிரவுசரும் வைத்திருந்தனர். எனக்கு இவற்றை இயக்குவது தெரியும் என்றாலும், பயர்பாக்ஸ் பிரவுசரில் பழகிவிட்டதால், அது இல்லாதது சிறிது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான், ஏன் நாம் எடுத்துச் செல்லும் வகையில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பைலை வைத்திருக்கலாமே என்று யோசனை பிறந்தது. அதே நோக்கத்துடன் தேடுகையில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் என்ற ஒரு புரோகிராம் பைல் இருப்பது தெரிய வந்தது. இதனை ஜான் டி ஹேலர் என்பவர் உருவாக்கி இலவசமாகத் தந்துள்ளார். இந்த பைலின் அளவு 5710 கேபி தான். இதனை ஒரு யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து எடுத்துச் சென்றால், பயர்பாக்ஸ் பிரவுசரை இதிலிருந்தே இயக்கி பிரவுஸ் செய்திடலாம். இதனைப் பெறவும், இது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் http://portableapps.com/apps/internet/firefox_ portable என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3. தண்டர்போர்டு போர்ட்டபிள் (Thunderbird Portable): பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும்,மொஸில்லா தரும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். இந்த புரோகிராமும் யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. 5950 கேபி அளவுள்ள பைலில் இது அடங்கியுள்ளது. இதனை யு.எஸ்.பி.யில் இன்ஸ்டால் செய்து இயக்கி பயன்படுத்தலாம்.

4. ஒன் கிளிக் ஆன்ஸர் (One Click Answer): பயர்பாக்ஸ் பிரவுசரில் எந்த இணைய தளத்தில் இருந்தாலும், ஏதேனும் ஒரு சொல்லுக்குரிய பொருள் தெரிய வேண்டுமா? ஒன் கிளிக் ஆன்ஸர்ஸ் என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் போதும். எந்த சொல்லிலும் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால், உடனே Answers.com என்ற தளத்திலிருந்து பொருள் விளக்கம் பெறப்பட்டு ஒரு பாப் அப் விண்டோவாகக் கிடைக்கும். இந்த ஆட் ஆன் தொகுப்பை http://www.answers.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

5. வண்ணங்களில் டேப்கள்: பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திற்குமான டேப்களை ஒரே நிறத்தில் தான் பார்க்கிறோம். அதற்குப் பதிலாக அவற்றை வண்ணங்களில் பார்த்தால் நன்றாக இருக்குமே! ஒன்றுக்கொன்று வித்தியாசமான வண்ணங்களில் வேறுபடுத்திப் பார்க்கலாமே!! இதற்கான புரோகிராம் http://binaryturf.com/ என்கிற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதுவும் இலவசம்தான்.

6. வெப்சைட் பி.டி.எப். பைலாக: பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை அப்படியே பி.டி.எப். பார்மட்டில் ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா? ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளம் முழுவதையும் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் திரைக் காட்சியை மட்டும், பி.டி.எப். பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து கொண்டால், எந்த தளத்தைப் பார்க்கும்போதும் மவுஸால் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் பி.டி.எப். பைலாக மாற்றும் வசதி கிடைக்கும். அல்லது ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தியும் கீழ்க்கண்ட முறையில் பி.டி.எப். பைல்களைப் பெறலாம்.
மொத்த பக்கத்தினையும் முழு இமேஜாகப் பெற: Alt + 1

பார்க்கும் ஏரியாவை மட்டும் இமேஜ் ஆகப் பெற: Alt + 2
மொத்த பக்கத்தினையும் பி.டி.எப். பைலாகப் பெற: Alt + 3
பார்க்கும் ஏரியாவை மட்டும் பி.டி.எப் பைலாகப் பெற: Alt + 4
இதில் இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. உருவாக்கப்படும் இமேஜுக்கு ஒரு டைட்டில் தரலாம். அந்த தலைப்பு என்ன எழுத்து வகையில், என்ன வண்ணத்தில், எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை செட் செய்திடலாம். பக்கத்தை இமேஜாக மாற்றுகையில் பல பில்டர்களைப் பயன்படுத்தலாம்.
உருவாக்கப்பட்ட இமேஜை பி.டி.எப். பைலாக மாற்ற www.touchpdf.com என்ற தளம் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பை உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்திட https://addons.mozilla.org/enUS/firefox/addon/7528 என்கிற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

கடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் என்ன?

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.
ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.
மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.
சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.
ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீராம நவமி பூஜை!

மகிமை மிக்க ராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி. பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.
ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்தபோது, நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். இதன் காரணமாக, ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.
நீர் மோர் படைத்து, பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக் கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுதுவதும் மிகுந்த புண்ணியத் தைக் கொடுக்கும்.
***
பத்து நாள் உற்வசம்!
ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங் களோடு ராம நவமி சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத் துவங்கி, ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும். ஸ்ரீ ராமரின் காவியம் படிப்பது, ராமரின் பெருமை களை பிறர் சொல்லக் கேட்பது போன்றவை நமக்கு சிறந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.
***
ஸ்ரீராம நவமி மகிமை!
ஸ்ரீராமன் பிறந்தது நவமி திதியில் தான். எனவே, அவன் பிறந்த புனித திருநாளை ராம நவமியாகக் கொண்டாடுகிறோம். ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது. அஷ்டமியும், நவமியும் கலந்த தினத்தில் தான் பார்வதி அன்னை அவதாரம் செய்தாள். எனவே, தேவியின் பக்தர்கள் தேவி பூஜை செய்துவிட்டு, நிறைவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை நடத்துகின்றனர்.
***