முப்பரிமாண டெலிவிஷன்

பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக ஆர்வம் காட்டும் வகையில் இன்றைய தலைமுறையினர் வளர்ந்து வருகிறார்கள். அவர்களின் மாலைப்பொழுதுகள் பெரும்பாலும் டெலிவிஷன் பெட்டிகளின் முன்பு தான் கழிகிறது.

மக்களின் தேவைகளுக்கு தீனி போடும் வகையில் நூற்றுக்கணக்கான டெலிவிஷன் சேனல்கள், கேபிள் நெட்ஒர்க்குகள் என்று பல்வேறு வசதிகள் வீட்டுக்குள் வந்துவிட்டது. இதற்கு ஏற்ப சாதாரண டெலிவிஷன் பெட்டியிலும் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன.

வண்ண டெலிவிஷன் பெட்டி, தட்டையான திரை கொண்ட அழகிய டெலிவிஷன் பெட்டி…. என அதிலும் நவீனம் புகுந்துவிட்டது. இதற்கு அடுத்தபடியாக எல்.சி.டி., எச்.டி. டி.வி. என நவீன தயாரிப்புகளும் சந்தைக்கு வந்துவிட்டன.

இப்போது முப்பரிமாண (3 டி- திரீ டைமன்சன்) டெலிவிஷன் பெட்டிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. குறிப்பாக சோனி நிறுவனம் இந்த முப்பரிமாண டெலிவிஷன்களை தயாரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நடந்த கண்காட்சி களில் இந்த ரக டெலிவிஷன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த டெலிவிஷன்களை பார்க்க விசேஷ கண்ணாடி தேவை. இந்த ரக டெலிவிஷன் பெட்டிகளில் காட்சிகளின் ஒலி-ஒளி அமைப்பு மிகத்துல்லியமாக இருக்கும் என்பதோடு இதன் விலையும் லட்சத்தை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: