Advertisements

Daily Archives: மார்ச் 27th, 2010

முதலுதவி அளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஆரம்பித்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்கம் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.

முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1.உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3.சீக்கிரத்தில குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். பதட்டப்படக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.
2. தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.
3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்துகொள் வேண்டும்.
4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.
5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
6. மருத்தவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

எப்படிச் சமாளிப்பது?
நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கயம். மேலும் சில குறிப்புகள் கீழே –

1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்

அடிப்படை உயிர் பாதுகாப்பு முறை

1. பாதிக்கப்பட்டவர் உடன் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியமானது.
பேச்சு மூச்சு இல்லையா?
கத்தி உதவி கேட்கவும்
காற்றோட்டம் ஏற்படுத்தவும்
சுவாசம் சீராக இருக்கிறதா?
அருகிலுள்ள அவசர சிகிச்சை எண்ணைத் தொடர்பு கொள்ளவு.
30முறை நெஞ்சை அழுத்தம் முறை
சுவாச மீட்டு (2முறை)
மீண்டும் 30 தடவை நெஞ்சை அழுத்தும் முறை

2. ஏதாவது அசைவு இருக்கிறதா என்று பார்க்கவும் எப்படி இருக்கிறீர்கள்? என்று தோளை அசைத்துக் கேட்கலாம்.

3. அ) அவரிடமிருந்து பதில் வந்தால்
வேறு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், அவர் முன்னர் இருந்த நிலையிலேயே இருக்க விடலாம்.
அவருக்கு என்ன பிரச்சனை என்று கண்டறிய முயற்சி செய்யுங்கள். உதவி கிடைக்குமா என்று பாருங்கள்.
அவ்வப்போது அவரைப் பரிசோதித்துக் கொண்டே இருங்கள்.

3) ஆ) அவரிடமிருந்து பதில்இல்லை என்றால்
உதவி கேட்டு கத்துங்கள்
சம்பந்தப்பட்டவரை பின்பக்கமாகத் திருப்பவும். அவர் மூச்சு விடுவதற்கு ஏற்ப தலையையும் மோவாய் கட்டையையும் உயர்த்தி வைக்கவும்.
தலையைச் சாய்த்து, மோவாயை உயர்த்துதல்

1) அவரது நெற்றியில் கை வைத்து தலையை பின்னுக்கு சாய்க்கவும்.
2) உங்கள் விரல் நுனியை மோவாய்கட்டையின் முனையில் வைத்து உயர்த்தவும்

தலையைச் சாய்த்து, மோவாய் கட்டையை உயர்த்துதல்

4. சீரான சுவாசம் இருக்கிறதா என்று சரிபார்த்தல்
மார்பில் ஏற்ற இறக்கம் இருக்கிறதா என்று கவனித்தல்

சுவாசிக்கும் சத்தம் கேட்கிறதா என்ற வாயை கவனித்தல்
முகத்துக்கு அருகே குனிந்து சுவாசத்தை கவனித்தல்

சுவாசத்தை கவனித்தல்

நினைவிழப்பு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களுக்கு சுவாசம் தடைபடும். சுவாசிக்கும் இடைவெளி அதிகம் இருக்கும். இறைச்சல் இருக்கும். இதனைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது. அவசியம்.

சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் சுவாசத்தை பத்து விநாடிகள் தொடர்ந்து கண்காணிக்கவும். சிறிய தடங்கல் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.

5. அ) சுவாசம் சீராக இருந்தால் –
அவரது நிலையை மாற்றவும்
உதவி பெறவும். ஆம்புலன்ஸை வரவழைக்கவும்
தொடர்ந்து சீராக சுவாசிக்கிறாரா என்று கண்காணிக்கவும்.

குணமடையும் நிலை

5 அ) சுவாசம் சீராக இல்லை என்றால் –
அருகிலிருப்பவரிடம் சொல்லி உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கவும். நீங்கள் தனியாக இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம்.

1. அவருக்கு அருகே முழங்காலிட்டு அமர்ந்துகொள்ளவும்.
2. ஒரு கையைப் பிரித்து அவரது நெஞ்சின் மையத்தில் வைக்கவும்.
நெஞ்சின் மையத்தில் கையை வைத்தல்

3. முதல் கையின் மீது மற்றொரு கையை வைக்கவும்.
முதல் கையின் மீது மற்றொரு கையை வைத்தல்

4.கை விரல்களை ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும். கவனம், அவரது நெஞ்சையோ மார்புக்கூட்டையோ அழுத்த வேண்டாம்
இரு கை விரல்களையும் சேர்த்துக் கொள்ளுதல்

5.செங்குத்தாக, சம்பந்தப்பட்டவரின் நெஞ்சுக்கு மேலாக நகர்ந்து, மார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்தவும்

மார் எலும்பை 4 – 5 செ.மீட்டர் அழுத்துதல்
6. ஒவ்வொரு முறை அழுத்தி பின்பும், நெஞ்சில் உள்ள அழுத்தத்தை வெளியேற்றவும். அவ்வாறு செய்யும்போது, உங்கள் கைகளும் மார் எலும்பு இடையில் தொடர்பு இருக்க வேண்டும்.
7. ஒரு நிமிடத்துக்கு நூறு முறை அழுத்தலாம் (ஒரு விநாடிக்கு இரண்டு முறை என்னும் விகிதத்தைவிட கொஞ்சம் குறைச்சல்)
8. அழுத்தும்போதும், வெளியேற்றும்போதும் ஒரே மாதிரியான அவகாசம்தான் இருக்க வேண்டும்.

6 அ) நெஞ்சை அழுத்துவதையும் சுவாசத்தை மீட்பதையும் ஒன்றிணைத்தல்
30 அழுத்தங்களுக்குப் பிறகு, மீண்டும் தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தவும்.
உங்கள் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலைவும் கொண்டு அவரது மூக்கை மெலிதாக அழுத்தவும்.
மோவாய் கட்டையை உயர்த்தியபடி, அவரது வாயை மெதுவாகத் திறக்கவும்.

தலையைச் சாய்த்து மோவாயை உயர்த்தும்போது, மூக்கையும் மெலிதாக அழுத்தவும்.

ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு, அவரது வாயோடு உங்கள் வாயைப் பொருத்துங்கள்.
அவரது வாயுக்குள் ஊத ஆரம்பியுங்கள். அப்போது அவரது நெஞ்சு உயர்கிறதா என்று கவனியுங்கள். இயல்பாக சுவாசிக்கும்போது நெஞ்சு எப்படி உயர்கிறதோ அப்படி உயர்ந்த பின், மீண்டும் ஊதுங்கள். இது சுவாசத்தை மீட்கும் வழி.

நெஞ்சு உயர்கிறதா என்று கவனித்தபடியே அவரது வாய்க்குள் ஊதுங்கள்

தலை சாய்ந்த நிலையிலும், மோவாய் உயர்ந்த நிலையிலும் இருக்கும்போது, உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெறியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்கிறதா என்று கவனியுங்கள்.

உங்கள் வாயை அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். காற்று வெளியேறும்போது, அவரது நெஞ்சு கீழே இறங்குகிறதா என்று கவனியுங்கள்.

நன்றாக ஒரு முறை சுவாசித்துவிட்டு, மீண்டும் குனிந்து அவர் வாயில் ஊதுங்கள். மொத்தம் இரண்டு முறை, முன் இருந்த நிலையில் அவரைக் கொண்டு சென்று மீண்டும் 30 முறை நெஞ்சை அழுத்துங்கள்.

30 முறை நெஞ்சை அழுத்யி பிறகு, இரண்டு முறை சுவாச மீட்புச் செய்யலாம்.

அவர் இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தால் ஒழிய இந்த முறைகளைக் கைவிட வேண்டாம்.

மேற்கண்ட வழிகளில் முயன்றும் சீரான சுவாசம் வரவில்லை என்றால், மீண்டும் முயற்சியைத் தொடரும் முன் கீழ்க்கண்டவற்றைச் செய்யவும்.
தடை செய்யும்படி அவர் வாயில் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்
போதுமான அளவுக்குத் தலை சாய்க்கப்பட்ட நிலையிலும் முகவாய்க்கட்டை உயர்த்தப்பட்ட நிலையிலும் உள்ளதா என்று சரிபார்க்கவும்
மார்பை அழுத்துவதற்கு முன்னால் இரண்டு முறைக்கு மேல் ஊத வேண்டாம்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில், இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு, மற்றொருவர் மார்பை அழுத்தும் பணியைச் செய்யலாம்.

6 ஆ) மார்பை அழுத்துதல் மட்டும்
சுவாச மீட்பு செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில், மார்பை மட்டும் அழுத்தவும்.
இடையில் நிறுத்தாமல் நிமிடத்துக்கு 100 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அவருக்கு சுவாசம் திரும்பி விட்டதா என்று பார்க்கவும், திரும்பவில்லை என்றால் மீண்டும் சிகிச்சையை தொடரவும்.

7. இதய இயக்க மீட்புப் பணியை எது வரை தொடரலாம்?
தகுந்த பயிற்சி பெற்ற ஒருவர் வரும் வரை
பாதிக்கப்பட்டவர் சீராக மூச்சு விடும் வரை
நீங்கள் சோர்வடையும் வரை

மீட்பு நிலை
பாதிக்கப்பட்டவரை இப்படித்தாக் கிடத்தி வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர் நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சுவாசம் தடைபடாதபடி இருக்க வேண்டும்.

கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.

அவரது மூக்குக் கண்ணாடியை அகற்றவும்
அவரது கால்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்கின்றதா என்று கவனிக்கவும்.
அவருக்குப் பக்கவாட்டில் மண்டியிட்டு அமர்ந்து, கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கைகையும் பற்றிக்கொள்ளவும்

உங்கள் கைகளால் அவரது மணிக்கட்டையும் முழங்கையைம் பற்றிக் கொள்ளவும்

மார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் செல்லவும். அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.

மார்புக்குக் குறுக்காக அவரது கையை எடுத்துச் சென்று, அவரது கன்னத்தை ஒட்டியபடி உங்கள் கையை ஊன்றவும்.

மற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.

மற்றொரு கையால் அவரது காலை மேல் நோக்கி உயர்த்தவும். கால் பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.

உங்களது ஒரு கை அவரது கன்னத்தில் இருக்கிறது- அப்படியே, மற்றொரு கையால் அவரை பக்கவாட்டில் ஒருக்களித்தவாறு திருப்பி விடுங்கள்.

படத்தில் உள்ளவாறு அவரது கால்களை மாற்றி வைக்கவும்
காற்று வழி தடைபடாதபடி தலை¬யைச் சரிசெய்யவும்.
காற்று வழி தடைபடாதபடி தலையைச் சரிசெய்யவும்
தேவைப்பட்டால், கன்னத்தின் கீழே உள்ள அவரது கையை சரி செய்யவும்.

மீட்பு நிலை

சுவாசத்தின் தொடர்ச்சியை பரிசோதிக்கவும்

ஒருக்களித்த நிலையிலேயே அரை மணி நேரத்துக்கு மேலாக அவர் இருக்க வேண்டும் என்னும் நிலையில், எதிர்பபுறமாக அவரைத் திருப்பி விடலாம்.

Advertisements

ஜில்லுன்னு இருங்க…!

சூடு பிடித்துள்ளது வெயிலின் ஆக்கிரமிப்பு! சூட்டில் உடம்பெல்லாம் அழுகிறது வியர்வையாக… கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சரும நலனுக்காக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணை பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய் படுத்தும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

கோடை வெயில் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கபடும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கபடுவதோடு… தோலில் படிம் அழுக்குகளும் அகற்றபடும். குறிப்பாக இரவு படுக்க போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிபடியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.

வெயில் காலத்தில் புரோட்டீன் சத்துக்குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். கழுத்தின் முன்பாகம், அக்குள், தொடை இடுக்கு பகுதிகள், இடுப்பு, மார்பின் அடிப்பாகம், முதுகுபகுதி போன்ற இடங்களில் பெண்களுக்கு அதிகம் வியர்த்து, வேர்க்குரு தோன்றும். இதற்கு சாதம் வடித்த தண்ணீரை அந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுபடுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அடிக்கடி உடம்பை அடிக்கடி கழுவவும்.

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சு பழம், அன்னாசி பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:

இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.

அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்,

இமேஜ் பைல்களைச் சுருக்க…

இந்த புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்திட http://luci.criosweb.ro/riot/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
இதற்கான பைல் 1 எம்பிக்கும் குறைவாக இருப்பதால், ஒரு நிமிடத்தில் இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். டவுண்லோட் ஆகும்போது ஸிப் பைலாக இது கிடைக்கும். விரித்து செட் அப் பைலில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டலேஷன் முடிந்தவுடன், இமேஜ் பைலைச் சுருக்கும் வேலையைத் தொடங்கலாம். இந்த புரோகிராமினை இயக்கி, சுருக்க வேண்டிய இமேஜ் பைலை அதன் விண்டோவில் இழுத்துவிட வேண்டும். இதன் பின்னர் இந்த ரயட் புரோகிராம், இரண்டு பிரிவுகளைக் காட்டும். இடதுபுறத்தில் ஒரிஜினல் இமேஜும், வலதுபுறத்தில் கம்ப்ரஸ் ஆகும் இமேஜும் காட்டப்படும். எந்த அளவிற்குச் சுருக்கப்பட வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். 75% ல் தொடங்கி, பின் சுருக்கப்படும் இமேஜின் தன்மையைப் பார்த்தவாறே, சுருக்கப்படும் அளவை அதிகப்படுத்தலாம். பைல் அளவு சுருங்கினாலும், படத்தின் தன்மை மாறாமல் இருப்பதனைப் பார்க்கலாம். 200 கேபி அளவிற்குச் சுருக்கப்பட்ட பைல் கூட, இமேஜை மிகத் தெளிவாகக் காட்டியது. இமேஜ் பைலைச் சுருக்குவதற்கான மிக திறன் கொண்ட புரோகிராமாக இது உள்ளது.

படுக்கையில் தம்பதியினர் எப்படி!

மனிதனின் நிம்மதி ஸ்தலம் படுக்கையறை. எல்லா இடங்களைம் போல படுக்கையறைக்கும் என்று சில நாகரீக நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றாவிட்டால், துணைவருக்கோ அல்லது அருகில் படுப்போருக்கோ தொந்தரவாகி விடக் கூடும்.

படுக்கையறை, உங்களுடன் படுப்பவருக்குத் தொந்தரவு அறையாக மாறாமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய நாகரீக நடைமுறைகள் சிலவற்றை பார்க்கலாம்…

அணைப்பு

படுக்கையறை என்றாலே தனிமை என்று அர்த்தம். பல தம்பதிகளுக்குத் தனிமை வாய்ப்பது படுக்கையறையில் மட்டும்தான். அந்த நேரத்தில் உங்களின் அன்பை வெளிபடுத்தும் விதத்தில் மென்மையாக அணைப்பது தவறில்லை. பெரும்பாலான ஆண்கள் `உறவு’க்கு பின் உடனே தூங்கி போகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். மாறாக பெண்களோ அன்பான அரவணைப்பை எதிர்பார்க்கிறார்கள்.

தூங்குவதற்கு முன் துணையுடன் சிறிது நேரம் அன்போடு உறவாடுங்கள், உரையாடுங்கள். சிறிது நேரத்துக்கு பின் இருவரும் இயற்கையாகவே விலகித் தூங்க ஆரம்பித்துவிடுவீர்கள். இல்லாவிட்டால், `தூங்கலாம்னு நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகக் கூறி விட்டுத் தூங்க ஆரம்பிங்கள். அதற்கு முன், அன்பான புன்னகைடன் கூடிய `குட் நைட்’ அருமையாக இருக்கும்.

புரளுவது, குறட்டை விடுவது

துணையில் ஒருவர் இன்னும் தூக்கம் வராமல் அல்லது அரைகுறைத் தூக்கத்தில் இருக்கலாம். அடுத்தவரோ ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விடலாம், கன்னாபின்னாவென்று உருண்டு அடுத்தவரை கட்டிலில் இருந்தே தள்ளிவிட்டுவிடலாம். விளைவு: ஒருவருக்குத் நிம்மதியில்லாத உறக்கம், காலையில் கிறக்கம்.

இதற்குத் தீர்வு என்ன? கடுமையாகக் குறட்டை விடுபவர்கள் முக்கு பட்டை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம். காது, முக்கு, தொண்டை நிபுணரை பார்க்கலாம். `பாதிக்கப்படுபவர்’ காது அடைப்பான் மாதிரியானதை உபயோகிக்கலாம். மெலிதாக மெல்லிசையை ஒலிக்க விடலாம். துணையிடம் நீங்கள் ரொம்ப சத்தமாகக் குறட்டை விடுகிறீர்கள் என்று சத்தம் போடாமல் எடுத்துக் கூறலாம். கடுமையாக உருண்டு புரண்டு படுப்பவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒரே தீர்வு, படுக்கை அளவை அதிகரிப்பதுதான்.

நேரம் கடந்த தூக்கம்

உங்களுக்கு இரவு 10 மணிக்கெல்லாம் படுத்து காலை 5 மணிக்கு `டான்’ என்று எழ வேண்டும். ஆனால் உங்கள் துணைக்கோ நள்ளிரவு தாண்டினால்தான் தூக்கம் இலேசாகக் கண்ணை விசாரிக்கும். இதற்கு என்ன செய்வது? `விளக்கு அணைக்கும் கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்டு வாருங்கள். இருவரில் ஒருவர் தூங்கியபிறகு அடுத்தவர் அடுத்த அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்துக்கு புத்தகம் படிக்கலாம், டிவி பார்க்கலாம். ஆனால் அதன் பின் நல்லபிள்ளையாக விளக்கை அணைத்துவிட வேண்டும். படிப்பதாக இருந்தாலும் அதற்கான விளக்கை பொருத்திக் கொண்டு, துணைக்குத் தொந்தரவில்லாமல் படிக்க வேண்டும்.

தொழில்நுட்பத் தொந்தரவுகள்

தம்பதிகளுக்கான அந்தரங்க இடம் படுக்கையறை. படுக்கையில் சாய்ந்து விளையாடி, உறவாடி என்று சிறிது நேரத்துக்கு பின்புதான் தம்பதிகளுக்கு `அடுத்தகட்டத்துக்கு’ போகும் மனநிலை வரும். அப்போது பார்த்து செல்போன் ஒலித்தால், பேசிவிட்டுத் திரும்பி வரும்போது எல்லாம் காணாமல் போயிருக்கும். இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் ஏற்படும் தொந்தரவு இது. இதைத் தவிர்க்க, படுக்கையறைக்கு செல்போன், லேப்டாப் போன்றவற்றைக் கொண்டு வராதீர்கள். தம்பதிகளின் இனிமையான உறவில் இவையெல்லாம் குறுக்கீடாக அமைய வேண்டாம்.

முடிவாக…

சிலர், குறிப்பாக மனைவியர், படுக்கையறையைக் கட்டபஞ்சாயத்து மேடையாக மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அது தூக்கத்தை மட்டுமல்ல, தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கத்தையும் பாதிக்கும். குடும்ப பிரச்சினைகளை வேறு இடத்தில், வேறு வகையில் நாசூக்காகச் சொல்லலாமே!

செவ்வாய் கிரகம் செல்லத் தயார்…

விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நிலவுப்பயணத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா நாடுகள் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.

இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள். இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபடப் போகிறார்கள். இந்த பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது.

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல சுமார் 250 நாட்கள் ராக்கெட்டில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் அங்கு 30 நாட்கள் வரை தங்கி இருந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டால் சுமார் 240 நாட்கள் பயணம் செய்தால் தான் பூமியை வந்தடைய முடியும். ஆக மொத்தம் சுமார் 520 நாட்கள் பூமியை விட்டு விண்வெளியில் இருக்க வேண்டும்.

இதை தாங்கும் அளவுக்கு விண்வெளி வீரர்களின் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். எனவே அத்தகைய தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய சோதனைகள் நடக்கிறது. பல்வேறு உடல்தகுதி, கல்வித்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற 11 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களை ஒரு அறையில் 520 நாட்கள் அடைத்து வைத்து சோதனை செய்யப்போகிறார்கள். இந்த அறை ராக்கெட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பயணம் செய்யும் போது இருக்கும் எடையற்ற தன்மையுடன் இந்த தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி அங்கு தங்கி இருந்து ஆய்வு நடத்துவது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப் படுகிறது.

ரஷியாவைச்சேர்ந்த 5 என்ஜினீயர்கள், 2 டாக்டர்கள் மற்றும் பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, மற்றும் சீனா ஆகிய நாடுகளைச்சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர்கள் இந்த சோதனைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கி 520 நாட்களுக்கு நடைபெறும். இவர்கள் தங்கி இருக்கும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.