Advertisements

Daily Archives: மார்ச் 28th, 2010

விண்டோஸ் டிப்ஸ் -28.3.2010

இங்கு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான பொதுவான சில டிப்ஸ்கள் பட்டியலிடப்படுகின்றன.
1. ஒரு பைலின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Send To தேர்ந்தெடுத்து, அது எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டால், தேர்ந்தெடுக்கப்படும் டிரைவில், அந்த பைலுக்கான ஷார்ட் கட் கீ அமைக்கப்படும்.
2. ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறக்க regedit என்ற கட்டளை தருகிறோம். இந்த கட்டளையுடன் ஒரு முறை தான் ரெஜிஸ்ட்ரியைத் திறக்க முடியும். ரெஜிஸ்ட்ரியை நன்றாக ஒத்துப் பார்த்து, அதன் வரிகளைக் கையாள ரெஜிஸ்ட்ரியினை இரண்டு பதிப்புகளில் திறக்க வேண்டும் என்றால், regedit /m என்ற கட்டளையைக் கொடுக்கவும்.
3. ஒரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் தெரிய, பைலைத் தேர்ந்தெடுத்த பின், ஆல்ட் + என்டர் அழுத்தவும். ப்ராப்பர்ட்டீஸ் உடனே கிடைக்கும்.
4. மை கம்ப்யூட்டர் திறக்க வேண்டுமா? விண்டோஸ் கீயுடன் E கீயும் சேர்த்து அழுத்தவும்.

விண்டோஸ் 7 புது போல்டர்
விண்டோஸ் 7 பெற்று அதில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா! புதிய போல்டர்களை உருவாக்கி அவற்றில் பைல்களை இட்டு நிரப்பிக் கொண்டிருக் கிறீர்களா? எப்படி புதிய போல்டர்களை உருவாக்கினீர்கள்? குறிப்பிட்ட டைரக்டரி சென்று அதில் ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் கீழ்விரி மெனுவில் நியூ (New) கிளிக் செய்து, பின் போல்டர் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டினீர்களா! இனிமேல் அதெல்லாம் வேண்டாம். எங்கு புதிய போல்டர் உருவாக்கப்பட வேண்டுமோ, அங்கு செல்லவும். பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்ட வேண்டுவதுதான் உங்களின் வேலை. இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் பிலும் போல்டரை உருவாக்கலாம்.

வேர்ட்: சில எடிட் வசதிகள்
வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில் சில நேரங்களில் நாம் முன்பு மேற்கொண்ட எடிட்டிங் வேலைகளை மாற்றி அமைக்க எண்ணுவோம். எடுத்துக் காட்டாக சில தலைப்புகளில், புதிய வகை எழுத்துரு ஒன்றில் அமைத்திருப்போம். அல்லது சில குறிப்பிட்ட சொற்களை போல்ட் செய்திருப்போம். பின்னர் அவற்றை அவ்வாறு மாற்றியிருக்க வேண்டாமே என்று எண்ணுவோம். எப்படி இவற்றைத் திருத்தலாம். முதலில் மாற்றிய இடங்களுக்கு எப்படி செல்வது?
ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ஷிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டு எப்5 (Shft+F5) அழுத்துங்கள். நீங்கள் இறுதியாக மேற்கொண்ட எடிட் இடத்திற்குக் கர்சர் செல்லும். விரும்பும் மாற்றத்தை மேற்கொள்ளலாம். இன்னும் அதற்கு முன்னால் எடிட் செய்த இடத்திற்குச் செல்ல வேண்டுமா? தொடர்ந்து அப்படியே அழுத்த அழுத்த கர்சர் நீங்கள் எடிட் செய்த இடத்திற்குப் பின்னோக்கிச் சென்று கொண்டே இருக்கும்.
வேர்ட் டாகுமெண்ட்டில் Find & Replace வசதியை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதில் உள்ள ஒரு வசதியைப் பார்ப்போம்.
பைண்ட் (Find) கட்டம் மூலம் ஒரு சொல்லைத் தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள். அதனை எடிட் செய்கிறீர்கள். பின் சர்ச் கட்டத்தை மூடிவிட்டு வேறு செயல்களில் ஈடுபடுகிறீர்கள். பின் மீண்டும் அதே சொல்லை வேறு இடங்களில் இருக்கிறதா எனத் தேட விரும்புகிறீர்கள். மீண்டும் சர்ச் செயல்பாட்டிற்கான கீகளை அழுத்தி தேடுதல் கட்டம் வரவழைத்து சொல்லை டைப் செய்து என்டர் அழுத்தியெல்லாம் தேட வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்தி எப்4(Shft+F4) அழுத்துங்கள். இறுதியாகத் தேடிய சொல்லை மீண்டும் டைப் செய்யாமலே வேர்ட் உங்களுக்குத் தேடிக் கொடுக்கும்.

எக்ஸெல் ஷார்ட் கட்ஸ்
எக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள்.
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME : ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘ : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C: காப்பி செய்தல்
CTRL+V: ஒட்டுதல்
CTRL+Z: செயல்படுத்தியதை நீக்க
CTRL+S: சேவ் செய்திட
CTRL+P : பிரிண்ட் செய்திட
CTRL+O : புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்

விண்டோஸ்-7 9 கோடி விற்பனை
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு வெளியாகி நான்கு மாதங்களும் சில நாட்களுமே ஆகியுள்ள நிலையில், 9 கோடி தொகுப்புகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதுவரை வெளியான விண்டோஸ் தொகுப்புகளில் மக்களின் ஆதரவைப் பெற்ற சிறந்த தொகுப்பாக விண்டோஸ் 7 உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள வசதிகள் குறித்து இதனைப் பயன்படுத்து பவர்கள் அனைவரும் திருப்தி அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

ஏக்கங்களைத் தீர்க்கும் `20′

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.

அதற்கு என்ன செய்யலாம்?

பயனுள்ள 20 டிப்ஸ் :

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.

7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.

8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.

10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.

11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.

12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…

13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.

15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.

18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.

19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்

மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன. படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.