Daily Archives: மார்ச் 29th, 2010

பெண்ணுக்கு உதவிய வயாகரா

உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.
பிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிப்பவர் டேவிட். அவருக்கு 2002ல் திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் கெர்ரி ஹோரன். எட்டு ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் கெர்ரி ஹோரன் தவித்து வந்தார், ஹோரன் கருத்தரிப்பார். ஒரு சில மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அதனால் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை.
நாட்டிங்காம் நகரில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை நிலையத்துக்கு கெர்ரி ஹோரன் சென்றார். அவர்கள் சோதனைக்குழாயில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்த பிறகு கரு முட்டையை கருப்பைக்குள் வைக்க தீர்மானித்தனர்.
அதன்படி சோதனைக்குழாயில் கரு முட்டை உருவாக்கப்பட்டது. அந்தக் கருமுட்டையை கருப்பைக்குள் வைத்தனர். ஆனால் கருமுட்டை கருப்பையில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு மீண்டும் ஏற்பட்டது. இம்முயற்சிகளை மூன்று முறை தொடர்ந்தனர். ஆனால் மூன்று முறையும் கருச்ச¤தைவுதான் ஏற்பட்டது. அதனால் கெர்ரி ஹோரன்& டேவிட் தம்பதியர் மனமுடைந்தனர்.
அடுத்தடுத்து கருச்சிதைவு ஏற்படுவது ஏன் என மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது கெர்ரி ஹோரனின் கருப்பை சுவர் மிக மெல்லியதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிக மெல்லியதாக கருப்பைச் சுவர் இருப்பதால் கருமுட்டை கருப்பை சுவரில் பதிய முடியவில்லை. அதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என உறுதி செய்தனர்.
இந்நிலையில் கருத்தரிப்புத்துறை நிபுணர் ஜார்ஜ் நெடுக்வே ஒரு ஆலோசனை கூறினார். வயாகரா உட்கொண்டால் பெண்களுக்கு கருப்பைப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். அதிக ரத்தம் செல்வதால் கருப்பை சுவர் தடிமனாகும். கருப்பை சுவர் தடிமன் அதிகமானால் கரு முட்டை கருப்பையில் பதிந்து வளரும் வாய்ப்பு ஏற்படும் என ஜார்ஜ் தெரிவித்தார்.
இது மிகவும் அபாயகரமானது. எனவே மருத்துவ நிபுணர் மேற்பார்வையில் வயாகரா சாப்பிடலாம¢ என ஜார்ஜ் குறிப்பிட்டார். முதலில் இந்த உத்தி பலன் தருமா என ஹோரன் சந்கேகப்பட்டார். ஆனால் எப்படியும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் வயாகரா சாப்பிட சம்மதித்தார். ஆனால் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வை அவசியமில்லை என்று கணவனும் மனைவியும் தீர்மான¤த்தனர்.
முதல் வயாகரா மாத்திரையை சாப்பிட்டதும் உடலே சிவந்து போய்விட்டது. முகம் ரத்த சிவப்பாகி விட்டது. ஆனால் இதற்கு ஹோரன் பயப்படவில்லை. நாளொன்றுக்கு ஒரு வயாகரா வீதம் ஒன்பது நாள்களுக்கு சாப்பிட்டார். அவரது கருப்பைக்கு ரத்தம் செல்வது படிப்படியாக அதிகரித்தது. பின்னர்அவரது கருப்பையை மருத்துவ நிபுணர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்பொழுது கருப்பை சுவர் தடிமனாகி இருப்பது உறுதியானது. இந்த அளவு கருப்பைச் சுவர் தடிமனாக இருந்தால் கருமுட்டை பதிந்து கொள்ளும். கரு வளரும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சோதனைக் குழாயில் தயாரிக்கப்பட்ட கருமுட்டையை ஹோரனின் கருப்பையின் உள்ளே நான்காவது முறை எடுத்துச் சென்றனர். இந்த முறை கருமுட்டை கருப்பையின் உள்சுவரில் பதிந்து வளரத் தொடங்கியது. பின்னர் பத்து மாதங்கள் கழித்து ஹோரனுக்கு சிக்கல் எதுவும் இன்றி குழந்தை பிறந்தது. வயாகராவுக்கு புது உபயோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நிறமாலஜி(வண்ணங்களின் பலன்கள்)

நிறங்கள் நம்முடைய வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அங்கங்களாகும். அறிவு வளர்ச்சியும், உணர்ச்சி பரிணாமமும் நிறங்களிலிருந்து தான் உருவாகின்றன. பிறந்த குழந்தை வளர்ச்சி அடைகின்ற போது, தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை எப்படி பரீசிலித்து உணர்கிறது என்று கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். குழந்தை வளர வளர, நிறங்களின்பால் அது ஈர்க்கபடுவதை காணலாம்.   வெள்ளை – இது தூய்மையினை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை அதிகமாக விரும்புகிறவர்கள், மற்றவர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவது இவர்களின் இயல்பு. கால தாமதத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வெள்ளை நிறத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எதைம் தாங்குகின்ற இதயபலம் ஏற்படும். விடாமுயற்சியும் கைகூடும். எந்த நிறம் தங்களுக்கு உகந்தது என்று சந்தேகம் உள்ளவர்கள், வெள்ளை நிறத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.   ஆரஞ்சு – இது தியாகத்தின் அடையாளமாகக் கருதபடுகிறது. இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்துவோர், தத்துவக் கண்ணோட்டத்துடன் இருப்பார்கள். மேலும் இவர்களுக்குள் மன ஒருமைபாடும் இருக்கும். நேரத்தை முறையாக பயன்படுத்தும் மனபக்குவமும் ஏற்படும். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகின்ற மனநிலையைத் தூண்டக்கூடிய சக்தி ஆரஞ்சு நிறத்திற்கு உண்டு. பெரிய லட்சியவாதிகள் ஆரஞ்சு நிறத்தை அதிகம் விரும்புவார்கள்.   பச்சை – இது வளத்தை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இயற்கையில் பசுமையே நிறைந்து காணப்படுவதால் பச்சையை தாராளமாக பயன்படுத்தலாம். மனதை இளமையாக வைத்திருக்க பச்சை நிறம் மிகவும் உகந்தது. வாழ்க்கையில் மாற்றங்களை காண விரும்புவோர், பச்சை நிறத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம். பச்சை நிறம் பொறாமையை வளர்க்கும் என்ற கருத்து தவறு. பசுமை நிறம் வாழ்க்கையில் வளமையை உண்டாக்கும்.   சிவப்பு – இது சக்தி அளிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் பெருந்தன்மையான குணம் உடையவர்கள். புதுமை மற்றும் சாதனைகளை நிகழ்த்துவதற்கான ஊக்கத்தை சிவப்பு நிறம் கொடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நோய் உடையவர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். 4 மற்றும் 8 எண்ணுக்குரியவர்கள் சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறத்தையும் பயன்படுத்தலாம்.   நீலம் – பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த நிறம். வானமும், கடலும் நீல நிறம் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். இது சந்தோஷத்தை உருவாக்கும் நிறம். தெய்வ நம்பிக்கை, இயற்கை மற்றும் தத்துவத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் குணம் நீல நிறத்திற்கு உண்டு. தூக்கமின்றி தவிப்பவர்கள் நீல நிறத்தை பயன்படுத்தலாம். அமைதியாக வாழ விரும்புவோரும் நீல நிறத்தை பயன்படுத்தலாம். உணர்ச்சியை கட்டுபடுத்தக் கூடிய ஆற்றல் நீல நிறத்திற்கு உண்டு.   மஞ்சள் – அதிர்ஷ்டமான நிறமாக கருதபடுகிறது. பண பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றலும் உடையது என்கிறார்கள். ஆக்கபூர்வ சிந்தனைகளை தோற்றுவிக்கின்ற சக்தி மஞ்சள் நிறத்திற்கு உண்டு. பொதுமக்களிடையே செல்வாக்கை அதிகரிக்க வைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையை வளர்க்கும். இதனுடன் நீல நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பேச்சாற்றலை வளர்க்கின்ற சக்தியும் மஞ்சள் நிறத்திற்கு உண்டு.   கறுப்பு – சிலர் இந்த நிறத்தை வெறுப்பார்கள். இது வெறுக்கத்தக்க நிறமல்ல. கடின உழைபுக்கு அடையாளம் கறுப்பு நிறம். இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு குறுக்கு வழி பிடிக்காது. வாழ்க்கையில் ஏற்படும் மேடு, பள்ளங்களை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். தோல்விகள் முலம் அனுபவத்தை பெறுவார்களே தவிர, துவண்டு விட மாட்டார்கள். கறுப்பு நிறத்தை, வெள்ளையுடன் இணைத்து பயன்படுத்தினால் உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.   சாம்பல் நிறம் – எதையும் முழுமையாக செய்ய வேண்டும் என்று நினைபவர்கள் இந்த நிறத்தை விரும்புவார்கள். நிதானமும், எச்சரிக்கையும் இவர்களுக்கு நிரந்தர குணமாக இருக்கும். கெட்ட கனவுகளால் அவதிபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. பொறியியல் ஆராய்ச்சிகள், கட்டிடக் கலை போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்தலாம். சாம்பல் நிறத்துடன், வெள்ளை அல்லது நீல நிறத்தை சேர்த்து பயன்படுத்தினால் பயம் அகலும்.   பிரவுன் – அறிவுபூர்வமான நிறமாக இதை கூறுகின்றனர். கற்பனை வளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நிரந்தர வேலை இன்றி தவிப்பவர்கள் பிரவுன் நிறத்துடன், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தவும். பெரும்பாலான கற்பனைவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பிரவுன் நிறத்தையே பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதுஅவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு நல்லது.   இளஞ்சிவப்பு – தெய்வீகத் தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. மனதை சாந்தபடுத்தி, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற சக்தி இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்திற்கு உண்டு. இந்த நிறங்களால் கவரபடுகிறவர்கள் அமைதியும், அடக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். விடாமுயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களுக்கு எப்போதும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறம் பிடிக்கும்.

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம்!

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு

பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம்.வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்குவரும்

வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது,முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள்

மருத்துவர்கள்.‘‘கழுத்து வலிங்கிறது சின்ன வயசு, நடுத்தர வயசு, முதியவர்கள்னு எந்த வயசுலயும் வரலாம்.விடலைப் பருவத்துல வரும்

கழுத்து வலிக்கான காரணம், அதிகப்படியான உபயோகம்.

பள்ளிக்கூடத்துல முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து, போர்டை அண்ணாந்து பார்க்கிறது, தரைல உட்கார்ந்து எழுதறது, சரியான நிலைல

உட்காராததுனால வலி வரலாம்.கம்ப்யூட்டரை சரியான பொசிஷன்ல வச்சு உபயோகிக்காதது, எப்பப் பார்த்தாலும் லேப்டாப் முன்னாடியே

இருக்கிறது, படுத்துக்கிட்டு கம்ப்யூட்டரை உபயோகிக்கிறது… இதெல்லாம் இளம் வயசுக்காரங்களுக்கு வரும் கழுத்து வலிக்கான

காரணங்கள்.கழுத்தின் பக்கத்துல உள்ள தசைகள் சோர்வுற்று, கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்வில் அழுத்தம் அதிகமாகும். ‘செர்வைகல்

டிஸ்க்’னு சொல்ற இந்த சவ்வு விலகி, பக்கத்துல உள்ள நரம்புகளை கழுத்து வலியை கவனித்தால் மருததுவம அழுத்தும். அப்படி உண்டாகிற

வலி, கைகளுக்கும்,கால்களுக்கும் பரவலாம்.வயசானவங்களுக்கு வரக்கூடிய கழுத்து வலியை ‘செர்வைகல் ஸ்பான்டிலைட்டிஸ்’னு சொல்றோம்.

50 பிளஸ்ல வரக்கூடியது இது. கழுத்துல மொத்தம் 7 எலும்புகளும் இருக்கும். ஒவ்வொண்க்கும் இடையில இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.

முதுமையின் காரணமா தேளிணிமானம் ஏற்படும்போது, அது பக்கத்துல உள்ள தண்டுவடம் (ஸ்பைனல் கார்டு) மற்றும் நரம்புகள்ல

அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டுவடம் பாதிக்கப்படற இந்த நிலைக்கு ‘செர்வைகல் மைலோபதி’னு பேர்.

நரம்புகளும் வரும் வழி சிறுத்துப் போளிணி, கை, கால்கள் சோர்வுற்று,அந்தப் பகுதிகள்ல உணர்ச்சிகளும் குறையும்.

சின்னப் பொருஷீமீகளைக் கூடப் பிடிச்சுக்க முடியாம தவற விடறது, சாவியால பூட்டைத் திறக்க முடியாதது, புத்தகத்தைப் பிடிச்சிட்டுப் படிக்க

முடியாததுனு மறைமுக அறிகுறிகளை உணர்வாங்க பாதிக்கப்பட்டவங்க. தண்டுவடம் பாதிக்கப்படறதால,கால்களும் சோர்வாகி, நடை மாறலாம்.

பாதங்கள்லயும் உணர்ச்சி குறையலாம். இன்னும் தீவிரமானா, சிறுநீர் கழிக்கிறதுலயும் பிரச்னை வரலாம். கழுத்து வலி வரும்போது, அது

சாதாரண வலியாகவோ, சுளுக்காகவோதான் இருக்கும்னு நினைச்சு அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலயும் வலி தொடர்ந்தாலோ,
வலியோட கூடவே காளிணிச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியா டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்’’ என்கிறார்கள்

மருத்துவர்கள்.

கழுத்து வலி வராமலிருக்க சொல்லித் தரும் சில பொதுவான டிப்ஸ்கள்.

படிக்கிற பிள்ளைங்க படிக்கவும்,எழுதவும் டெஸ்க் உபயோகிக்கலாம்.நிற்கிறபோது, நடக்கிறபோது,உட்கார்ந்திருக்கிறபோது,கம்ப்யூட்டர் மானிட்டரை பார்க்கிறபோதெல்லாம் சரியான பொசிஷனைப் பின்பற்ற வேண்டியது அவசியம். டூ வீலர்ல போறவங்க ,மேடு, பள்ளங்கள்
இல்லாத பாதையில போகவும் .திடீர் திடீர்னு பிரேக் போடறபழக்கத்தைத் தவிர்க்கவும்,தூங்கும்போது 2, 3 தலையணை உபயோகிக்கக்
கூடாது. மெல்லிசான ஒரே ஒரு தலையணை போதும். படுத்துட்டு புத்தகம் படிக்கிறது, டி.வி பார்க்கிறது, கம்ப்யூட்டர்உபயோகிக்கிறதெல்லாம்
கூடவே கூடாது.
சாதாரண சுளுக்கா இருக்குமோங்கிற எண்ணத்துல கண்டவங்ககிட்டயும் சுளுக்கு எடுத்துக்கக் கூடாது.
அது கழுத்து நரம்புகளையும் பாதிக்கும்.புகைப் பழக்கம் உள்ளவங்களுக்கு கழுத்து எலும்பு சவ்வு பாதிப்பு அதிகம்னு ஆராளிணிச்சிகள் . ஸோ . . நோ ஸ்மோக்கிங்!கால்சியம் அதிகமுள்ள உணவுகள் தினசரி மெனுவுல இருக்கவும். கழுத்து தசைகளை பலப்படுத்தற பயிற்சிகளையும், தோள்பட்டைகளுக்கான பயிற்சிகளையும் மருத்துவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செளிணியறது மூலமா , வலி வருமுன் காக்கலாம்.அழுத்தும். அப்படி உண்டாகிற வலி, கைகளுக்கும்,கால்களுக்கும் பரவலாம்.வயசானவங்களுக்கு வரக்கூடிய கழுத்து வலியை ‘செர்வைகல் ஸ்பான்டிலைட்டிஸ்’னு சொல்றோம். 50 பிளஸ்ல வரக்கூடியது இது. கழுத்துல மொத்தம் 7 எலும்புகள் இருக்கும். ஒவ்வொண்க்கும் இடையில இணைப்புகளும், சவ்வும் இருக்கும்.
முதுமையின் காரணமா தேளிணிமானம் ஏற்படும்போது, அது பக்கத்துல உஷீமீள தண்டுவடம் (ஸ்பைனல் கார்டு) மற்றும் நரம்புகள்ல அழுத்தத்தை அதிகமாக்கி, கை, கால்களுக்கும் வலியைத் தரும். தண்டுவடம் பாதிக்கப்படற இந்த நிலைக்கு ‘செர்வைகல் மைலோபதி’னு பேர். நரம்புகள் வரும் வழி சிறுத்துப் போளிணி, கை, கால்கள் சோர்வுற்று,அந்தப் பகுதிகஷீமீல உணர்ச்சிகளும் குறையும். சின்னப் பொருள்களைக் கூடப் பிடிச்சுக்க முடியாம தவற விடறது, சாவியால பூட்டைத் திறக்க முடியா தது, புத்தகத்தைப் பிடிச்சிட்டுப் படிக்க முடியாததுனு மறைமுக அறிகுறிகளை உணர்வாங்க பாதிக்கப்பட்டவங்க. தண்டுவடம் பாதிக்கப்படறதால,கால்களும் சோர்வாகி, நடை மாறலாம். பாதங்கள்லயும் உணர்ச்சி குறையலாம். இன்னும் தீவிரமானா, சிறுநீர் கழிக்கிறதுலயும் பிரச்னை வரலாம். கழுத்து வலி வரும்போது, அது சாதாரண வலியாகவோ, சுளுக்காகவோதான் இருக்கும்னு நினைச்சு அலட்சியப்படுத்த வேண்டாம். 5 நாட்களுக்கு மேலயும் வலி தொடர்ந்தாலோ,வலியோட கூடவே காளிணிச்சலோ, பசியின்மையோ இருந்தாலோ, உடனடியா டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம்.