Daily Archives: மார்ச் 31st, 2010

மூளைக்கு பலம் ‘ஜாகிங்’

ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.

சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.

பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.

எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.

ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.

முரசு அஞ்சல் புதிய பதிப்பு

கம்ப்யூட்டர் பைல்கள், இணைய தளங்கள், இன்ஸ்டண்ட் மெசேஜ், சேட் விண்டோ, பிளாக் என்னும் வலை மனைகள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்கள் ஆகிய அனைத்திலும் தமிழில் எழுதக் கடந்த 25 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் முரசு அஞ்சல் தமிழ் செயலியின் பத்தாவது பதிப்பு சென்ற வாரம் வெளியிடப்பட்டது. இது முழுக்க யூனிகோட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ்7 வரை அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கக்கூடியது. இதில் உருவாக்கப்படும் பைல்களை பி.டி.எப். பைல்களாக மாற்றும் வசதி இதிலேயே தரப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த பதிப்பில் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் லிப்கோ ஆங்கிலம் தமிழ் அகராதியும் தரப்பட்டுள்ளது. பயன்படுத்துகையில் எந்த சொல்லுக்கும் தமிழில் பொருள் காணலாம்.
தமிழ்நெட் 99 கீ போர்டு விசுவலாகத் திரையில் காட்டப்படும். அதனைப் பார்த்து வழக்கமான கீ போர்டில் டைப் செய்திடலாம். முரசு அஞ்சல் தொகுப்பினை http://anjal.net என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதனை டவுண்லோட் செய்து இயக்க இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,200 செலுத்த வேண்டும்.

விண்டோஸ் 7 டிப்ஸ்( 31.3.2010)

அறிவிப்பு வேண்டாமா?
விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் திரையின் வலது மூலையில் கீழாகத் திடீர் திடீரென சில அறிவிப்புகள் வருவதைப் பார்த்திருக்கலாம். உங்கள் நண்பரிடமிருந்து இமெயில் வந்திருப்பதாக, விண்டோஸ் ஒரு அப்டேட் பைலை டவுண்லோட் செய்து கொண்டிருப்பதாக – இப்படி பல செய்திகள் பாப் அப் ஆகி வரும். இவை எல்லாம் எதுக்காக வருகின்றன? எனக்கு இவை ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லையே. பார்க்கும் வேலைக்கு இடையூறாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இவற்றை விலக்கி வைத்திடவும் செட்டிங் மேற்கொள்ளலாம்.
உங்களுடைய டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். டாஸ்க்பார் டேப்பின் கீழாக நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area) என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கஸ்டமைஸ் (Customize) என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பிரிவுகள் மூலம் எப்போது உங்களுக்கு இந்த அறிவிப்புகள் வேண்டும் என்பதனை வரையறை செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பியபடி இவற்றை அமைத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.
பைல் செக் பாக்ஸ்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எப்படி பைல்களை செலக்ட் செய்கிறீர்கள்? அப்படியே பைல்களைச் சுற்றி ஒரு கட்டம் எழுப்பி செலக்ட் செய்கிறீர்களா? அல்லது கண்ட்ரோல் அழுத்திக் கொண்டு தேவையான பைல்களின் மீது கிளிக் ஏற்படுத்துகிறீர்களா? அல்லது செக் பாக்ஸ் மீது டிக் அடையாளம் உண்டாக்குகிறீர்களா?
அதென்ன செக் பாக்ஸ் டிக் என்று உடனே நீங்கள் எண்ணுவது தெரிகிறது. மேலும் படியுங்கள்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரில் ஆர்கனைஸ் (Organize) என்னும் பட்டன் உள்ளது. இடதுபுறம் மேலாக இது காணப்படும். இதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் Folder and Search Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி தோன்றும் விண்டோவில் View என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Advanced Settings என்பதன் கீழ், கீழாக ஸ்குரோல் செய்து வந்தால், Use check boxes to select items என்று ஒரு வரி கிடைக்கும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி எந்த பைல் பெயரின் மீது நீங்கள் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலும் ஒரு செக் பாக்ஸ் ஐகானில் கிடைக்கும். இதில் செலக்ட் செய்வதன் மூலம் பைலைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஹார்ட்வேர் இடத்தில் சாப்ட்வேர்

கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன பின், சில சின்ன சின்ன விஷயங்கள் உடைந்து செயல்படாமல் போகலாம். கீ போர்டில் சில இயங்காமல் இருக்கலாம்; மானிட்டரின் பவர் ஸ்விட்ச் உள்ளாக உடைந்து செயல்படாமல் தொல்லை கொடுக்கலாம். இது போன்ற பிரச்னைகளில் நமக்கு சில சாப்ட்வேர் தொகுப்புகள் கை கொடுக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. மானிட்டர் ஸ்விட்ச்: மானிட்டரை நாம் நேரடியாக பவர் பிளக் அல்லது யு.பி.எஸ். ப்ளக்கில் இணைத்திருப் போம். கம்ப்யூட்டரில் வேலை முடியும்போது, மானிட்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்த, மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திடுவோம். இதற்கான புஷ் பட்டன் ஸ்விட்ச் அனைத்து மானிட்டர்களிலும் அதன் முன்புறத்தில் இருக்கும். இதன் தொடர் பயன்பாட்டால், இந்த ஸ்விட்ச் நாளடைவில் இயங்காமல் போய்விடும். அதற்காக நாம் வேறு மானிட்டரை வாங்குவது வீண் செலவு. இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு சாப்ட்வேர் Monitor Off என்ற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தியோ, அல்லது கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியோ மானிட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்தலாம். கூடுதலாக இன்னும் பல வசதிகளையும் இது தருகிறது. இதனை சோதித்துப் பார்க்க இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இணைய தள முகவரி: http://www.rtsoftwares.com/Utilities/TurnOffMonitor/setup.exe

2. சிடி ராம் டிரைவ் பட்டன்: அடுத்ததாக நமக்குத் தொல்லை தருவது சிடி ராம் டிரைவின் பட்டன். பெரும்பாலான டிரைவ்களில் நமக்கு முதல் தொல்லை தருவது, சிடி ட்ரேயினை வெளியே, உள்ளே கொண்டு வரும் பட்டன் தான். பலர் இந்த ட்ரேயினை மூடுகையில் தங்கள் கைகளாலேயே தள்ளி மூடுவார்கள். திறக்க மட்டுமே பட்டனைப் பயன்படுத்துவார்கள். இது நாளடைவில் பட்டனை முடக்கிவிடும். அப்போது கம்ப்யூட்டரில் சிடி டிரைவ் ப்ராப்பர்ட்டீஸ் சென்று அந்த மெனுவில் எஜக்ட் பிரிவில் கிளிக் செய்து இதனைத் திறக்கலாம். ஆனால் மூடுவதற்கு பட்டன் வேலை செய்யவில்லை என்றால், கைகளால் தான் மூடுகிறோம். இதற்கான ஒரு சாப்ட்வேர் ட்ரே 2.5 (Optical Drive Tray)என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த பைலின் அளவு 713 கேபி. இதனைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ்களின் கதவுகளை இயக்கலாம். இதனைப் பெற அணுக வேண்டிய இணைய முகவரி: http://www.softpedia.com/prog Download/TrayDownload112476.html

3. ஆன் ஸ்கிரீன் கீ போர்டு : இப்போது பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில் ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கிறது. இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கீ போர்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இந்த வகையில் இன்னும் சில முன்னேற்றங்களுடன் TouchIt 4.3.03 (On Screen Keyboard) என்னும் சாப்ட்வேர் கிடைக்கிறது. இதன் மூலம் கீ போர்டுக்கான பல வசதிகளைப் பெறலாம். இதனைப் பெற இணையத்தில் http://www.softpedia.com/ progDownload/TouchItDownload29438.html என்ற முகவரிக்குச் செல்லவும்.

4. கீ போர்டு விளக்குகள்: கீ போர்டில் நம் லாக், ஸ்குரோல் லாக், முக்கியமாக கேப்ஸ் லாக் அழுத்தப் பட்டிருக்கிறதா என்று அறிய, இந்த கீகளுக்கான சிறிய எல்.இ.டி. ஒளி கிடைக்கும்படி கீ போர்டில் தனி இடம் இருக்கும். நாளடைவில் இவை தங்கள் செயல்பாட்டை இழக்கும். இந்த விளக்குகளை மானிட்டர் திரையிலேயே காட்டும்படி சாப்ட்வேர் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் டி.கே. கீ போர்டு (DK:Keyboard) இதனை இயக்கிவிட்டால், திரையில் சிறிய பாப் அப் பலூன் குமிழ் விளக்காக, இந்த கீகள் அழுத்தப்படும் போது ஒளிரும். இதனைப் பார்த்த பலரும், கீ போர்டு நன்றாக இயங்கினாலும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பெற http://www.softpedia. com/progDownload/DKKeyboardStatusDownload96870.html என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.

5.மவுஸ்: உங்கள் மவுஸ் திடீரென உடைந்து போய்விட்டதா? கீழே விழுவதனால் அல்லது தரையில் இருக்கையில் அதனை அறியாமல் மிதித்துவிடுவதனால் உடையும் வாய்ப்புகள் உண்டு. இதனை இன்னொரு மவுஸ் தான் ஈடு கட்ட முடியும். இருப்பினும் அவசரத் தேவைக்கு, உங்களிடம் பழைய ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேட் (Game Pad) இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இதற்கான சாப்ட்வேர் பெயர் JMouse 1.0. இதனை இயக்கினால் அது இணைக்கப்பட்ட ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேடினைப் புரிந்து கொண்டு மவுஸ் இயக்கத்தினைத் தருகிறது. இந்த சாப்ட்வேர் http://www.softpedia.com/ progDownload/JMouseDownload102151.html என்ற இணைய முகவரியில் இலவசமாகக் கிடைக்கிறது.

பிக் பாங்’ சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?

பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்’ என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், ‘பிக் பாங் தியரி’ (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, ‘செர்ன்’ (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், ‘லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்’ எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, ‘செர்ன்’ அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .

ஜிம் போக ஆசையா!

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு ஓடுகிறவர்கள் உண்டு. ஆனால் உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தினமும் தவறாமல் போவது மட்டும் அதிசயத்தை நிகழ்த்தி விடாது.

எல்லா விஷயங்களைம் போல உடற்பயிற்சிக்கும் சில விதிகளும் முறைகளும் இருக்கின்றன. அவற்றைச் சரியாக பின்பற்றவில்லை என்றால் உரிய பலனிருக்காது. சில நேரங்களில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஜிம்’மில் ஏற்படக்கூடிய பொதுவான பாதிப்புகள் குறித்து உடல்தகுதி நிபுணர் அல்தியா ஷா விளக்குகிறார்…

சரியான முறை

அனைத்து பயிற்சிகளும் அதிகபட்ச பலனைத் தரும்படி குறிபிட்ட முறையில் அமைக்கபட்டிருக்கின்றன. ஒருவர் தனது திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளிலேயே கடைசியாக அதிகபட்ச எடையைத் தூக்குவது அதிகமான பலனைத் தரும். ஆனால் சரியான முறையில் எடை தூக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வீணாக போகும். பலனேதும் இருக்காது.

அதிகமாகத் தூக்குவது

உங்கள் தசைகள் தாங்கக்கூடிய அளவை விட அதிகமான எடையைத் தூக்காதீர்கள். படிபடியாக எடையை அதிகரிப்பது தசை பலத்தைக் கூட்டுவதற்கான நல்ல வழியாகும். அத்துடன் நீங்கள் ஒருவருக்கு எடை தூக்க உதவும்போது எடை தூக்குபவருக்கு இடைறாக இல்லாமல் உங்கள் உடம்பை விலக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன்மூலம் எடை தூக்குபவருக்குக் காயம் ஏதும் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

சுத்தமே சுகாதாரம்

ஒரு ஜிம்’ உபகரணத்தை பயன்படுத்தும் முன்பும் பயன்படுத்திய பின்பும் அதை ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள். அதன்மூலம் தொற்று வியாதியால் பாதிக்கபடாமலும் அது பரவாமலும் தவிர்க்கலாம். உடற்பயிற்சிக்கூட நடத்தை விதிகளின்படி உடற்பயிற்சி உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பது வலிறுத்தபடுகிறது. குறிப்பாக இதயத் தசைக்கு வலுவூட்டும் எந்திரங்களை பயன்படுத்தும்போது! அம்மாதிரி வலியுறுத்தபட்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. பக்கத்தில் உள்ள உபகரணங்களில் இருந்து கூட நீங்கள் பயன்படுத்த போகும் கருவிக்கு கிருமிகள் பரவக் கூடும் என்பதால் துடைத்துவிட்டு பயன்படுத்துவதே நல்லது.

வெறுங்காலுடன் போகாதீர்கள்

நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத மூடபட்ட பகுதிகள் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலாக அமைகின்றன. எனவே எப்போதும் காலணி அணிந்தே பயிற்சி செய்யு
ங்கள். அதன்மூலம் அத்லெட்ஸ் பூட்’ என்ற பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இந்த பூஞ்சைத் தொற்றால் கால் விரல்களுக்கு இடையே அரிப்புடன் கூடிய செதில்களும் கொப்புளங்களும் ஏற்படும். காலணி அணிவது ஜிம்’மின் வழுவழுப்பான தரையில் வழுக்கி விழுவதையும் தடுக்கும்.

அடிக்கடி பொது நீச்சல் குளத்தில் குளிபவர்களுக்கு டெர்மட்டிடிஸ்’ என்ற தோல் நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. நீச்சல் குளங்களில் கலக்கபடும் குளோரின் பெரும்பாலான கிருமிகளைக் கொன்றுவிடும். ஆனால் குளோரின் அளவு போதுமானதாக இல்லாவிட்டால் உங்களுக்கு மயிர்க்கால் தொற்று ஏற்படும். அதற்கு எதிர்உயிரி சிகிச்சை அவசியமாகும்.

செல்போனை தவிருங்கள்

உடற்பயிற்சிக்குத்தான் உடற்பயிற்சிக் கூடம். எனவே அங்கே அதில் மட்டும் கவனமாக இருங்கள். ஜிம்’மில் போய் எஸ்.எம்.எஸ்.’ அனுப்புவதும் அரட்டையடிப்பதும் உங்கள் நேரத்தை மட்டும் வீணாக்குவதில்லை. காயமடைம் அபாயத்தைம் ஏற்படுத்துகிறது.

சரி பாருங்கள்

எந்த உபகரணத்தையும் பயன்படுத்தும் முன் அதில் நட்டு’கள் ஸ்க்ரூ’க்கள் எதுவும் லூசாக’ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். எந்திரம் கடகட’வென்று ஆடினாலோ அசைவுகள் அதிகமாக இருந்தாலோ ஜிம்’ நிர்வாகியிடம் தெரிவித்து விட்டு வேறு உபகரணத்துக்கு மாறிக்கொள்ளுங்கள்.