விண்டோஸ் 7 டிப்ஸ்( 31.3.2010)

அறிவிப்பு வேண்டாமா?
விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் திரையின் வலது மூலையில் கீழாகத் திடீர் திடீரென சில அறிவிப்புகள் வருவதைப் பார்த்திருக்கலாம். உங்கள் நண்பரிடமிருந்து இமெயில் வந்திருப்பதாக, விண்டோஸ் ஒரு அப்டேட் பைலை டவுண்லோட் செய்து கொண்டிருப்பதாக – இப்படி பல செய்திகள் பாப் அப் ஆகி வரும். இவை எல்லாம் எதுக்காக வருகின்றன? எனக்கு இவை ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லையே. பார்க்கும் வேலைக்கு இடையூறாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இவற்றை விலக்கி வைத்திடவும் செட்டிங் மேற்கொள்ளலாம்.
உங்களுடைய டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். டாஸ்க்பார் டேப்பின் கீழாக நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area) என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கஸ்டமைஸ் (Customize) என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பிரிவுகள் மூலம் எப்போது உங்களுக்கு இந்த அறிவிப்புகள் வேண்டும் என்பதனை வரையறை செய்து கொள்ளலாம். நீங்கள் விரும்பியபடி இவற்றை அமைத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறலாம்.
பைல் செக் பாக்ஸ்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எப்படி பைல்களை செலக்ட் செய்கிறீர்கள்? அப்படியே பைல்களைச் சுற்றி ஒரு கட்டம் எழுப்பி செலக்ட் செய்கிறீர்களா? அல்லது கண்ட்ரோல் அழுத்திக் கொண்டு தேவையான பைல்களின் மீது கிளிக் ஏற்படுத்துகிறீர்களா? அல்லது செக் பாக்ஸ் மீது டிக் அடையாளம் உண்டாக்குகிறீர்களா?
அதென்ன செக் பாக்ஸ் டிக் என்று உடனே நீங்கள் எண்ணுவது தெரிகிறது. மேலும் படியுங்கள்.
விண்டோஸ் எக்ஸ்புளோரரில் ஆர்கனைஸ் (Organize) என்னும் பட்டன் உள்ளது. இடதுபுறம் மேலாக இது காணப்படும். இதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் Folder and Search Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி தோன்றும் விண்டோவில் View என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Advanced Settings என்பதன் கீழ், கீழாக ஸ்குரோல் செய்து வந்தால், Use check boxes to select items என்று ஒரு வரி கிடைக்கும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி எந்த பைல் பெயரின் மீது நீங்கள் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலும் ஒரு செக் பாக்ஸ் ஐகானில் கிடைக்கும். இதில் செலக்ட் செய்வதன் மூலம் பைலைத் தேர்ந்தெடுக்கலாம்.

%d bloggers like this: