Advertisements

Daily Archives: ஏப்ரல் 2nd, 2010

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…?

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்….

எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை…

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்….

வஞ்சக நோக்கம் உடையவள்…

அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்

வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்

தூது செல்பவள்

தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்

குலப் பெருமையை அறிந்திராதவள்

மலடி

கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்

செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்

வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்…

கட்டுப்பாடு இல்லாதவள்

அசாதாரணக் குணம் உள்ளவள்

தகுதியற்றவனை மணந்தவள்

வயதான கணவனைக் கொண்டிருப்பவள்

இளம் வயதில் கணவனை இழந்தவள்

அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்

காம இச்சை அதிகம் கொண்டவள்

ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்

கணவனை வெறுப்பவள்….

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி….*

ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

Advertisements

மருத்துவக்காப்பீடு அவசியமா!

தனியார் நிறுவனங்களில் சில தங்களது ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் `மெடிகிளெய்ம்’ (மருத்துவக் காப்பீடு) பாலிசி எடுக்கப்படுகிறது. இந்த காப்பீட்டு தொகை உங்களுக்கு போதுமா? அல்லது கூடுதலாக தேவைப் படுமா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை கூடுதல் `பாதுகாப்பு’ தேவை எனில் நிச்சயமாக, தனியாக மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும்.

காரணம், நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் காப்பீடு, உங்களின் மருத்துவம் சார்ந்த அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும் என்று கூற முடியாது.

உதாரணத்துக்கு, நீங்கள் வியாதிகளுக்குக் காப்பீடு வேண்டும் என்று நினைக்கலாம. ஆனால், பணிபுரியும் நிறுவனம் அந்தக் காப்பீட்டை வழங்காது இருக்கலாம். எனவே, உங்கள் நிறுவனம் உங்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கிறது என்பதற்காகவே அதை ஒதுக்கிவிடாதீர்கள்.

ஏன் அவ்வாறு செய்யக் கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ…

முதலாவதாக, நிறுவனத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகைக்குத்தான் காப்பீடு செய்யப்படும். அது உங்களின் பதவி அல்லது பொறுப்பையும், சில நேரங்களில் நிறுவனத்தில் உங்களின் `சர்வீசை’யும் பொறுத்து மாறுபடும்.

அனேக நிறுவனங்கள் தங்களின் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு . 1 லட்சம், அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு மருத்துவக் காப்பீடு செய்யவே விரும்புகின்றன. சில நிறுவனங்களில், புதிதாகச் சேர்ந்த ஊழியர்களுக்குக் காப்பீடு வழங்கப்படுவதில்லை. இன்னும் பல நிறுவனங்களில், மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பிறகு `கிளெய்ம்’ செய்யப்படும் தொகையில் ஒரு பங்கு ஊழியரிடம் கோரப்படுகிறது.

பெரிய அறுவை சிகிச்சை செலவுகளைச் சமாளிப்பதற்கு, 1 லட்ச ருபாய் காப்பீடு என்பது போதாது. மருத்துவமனைக் கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தவிர உங்கள் நிறுவனமானது, காப்பீடு `கிளெய்ம்’ செய்யும் சுமையைப் பகிர்ந்து கொள்ளக் கூறினால், தனியாக மருத்துவக் காப்பீடு பெறுவதே சிறந்தது.

நிறுவனம் மாறுவது என்ற ஒரு விஷயமும் இருக்கிறது. நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறினால், புதிய நிறுவனத்தினர் உங்களுக்குக் காப்பீடு அளிக்கும் வரை அந்தப் பாதுகாப்பு இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. புதிய நிறுவனத்தில் `மெடிக் கிளெய்ம்’ வழங்கவே இல்லை என்றால், உங்களுக்குக் காப்பீடு இல்லாமல் போகும். புதிதாக ஒரு காப்பீடு போட வேண்டி வரும். உங்களுக்கு வயதாக ஆக இது பெரும் சுமையாகும். காரணம் வயதுக்கேற்ப மெடிக்கிளெய்ம் பிரீமியத் தொகையும் கூடும்.

நீங்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள நிறுவனம் மருத்துக் காப்பீட்டை வழங்கினாலும், சில காப்பீட்டு நிறுவனங்கள், `ஆரம்பகட்ட காத்திருப்பு காலத்தை’ வைத்திருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் (90 முதல் 180 நாட்கள்), நீங்கள் காப்பீடு பெற்றிருந்தாலும் `கிளெய்ம்’கள் ஏற்கப்படுவதில்லை.

எனவே, நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்து அதன் காப்பீட்டு வசதிக்கான `காத்திருப்பு காலத்தில்’ இருக்கும் வரை உங்களுக்குக் காப்பீட்டு பாதுகாப்பு இல்லாது போகும்.

அத்துடன், பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் இன்னொரு பிரிவையும் வைத்திருக்கின்றன. அதாவது, ஏற்கனவே உள்ள வியாதிகளுக்கு, `கிளெய்ம்’ இல்லாத நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின்பே காப்பீடு அளிப்பது.

தற்போது ஊழியர்கள் அடிக்கடி வேலை மாறுவதாலும், மருத்துவக் காப்பீடு பிரீமியம் அதிகரித்து வருவதாலும், பணிபுரியும் நிறுவனங்களால் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து விலகும்போது அந்த நிறுவனத்தில் காப்பீட்டை முறித்துக்கொள்ள நேர்வதால், `கிளெய்ம்’ செய்யாத நபருக்கான அனுகூலங்களை நீங்கள் இழக்க வேண்டியும் வரும்.

நீங்கள் ஓய்வு காலத்தை நெருங்கும்போது உங்கள் நிறுவனத்தினர் உங்களுக்கு `மெடிக்கிளெய்ம்’ வசதி அளிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதுடன், நீங்கள் `கிளெய்ம்’ செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக பிரீமியம் கோரும்.

நமது ஆரோக்கியம் என்பது முக்கியம், அனைத்துக்கும் அதுவே அடிப்படை என்பதால், இன்றுள்ள பல்வேறு மருத்துவக் காப்பீட்டு வாய்ப்புகளில் இருந்து நமக்குச் சரியானதைத் தேர்வு செய்வோம்.

———————————————————

வழங்குவது யார்?

பொது காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய இரண்டுமே மருத்துவக் காப்பீட்டை அளிக்கின்றன. பொதுக் காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் மருத்துவக் காப்பீடு ஓராண்டுக்கு மதிப்புடையதாக இருக்கும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டை அதற்கான காலம் முடியும் வரை புதுப்பிக்க வேண்டியதில்லை.

வரிச் சலுகை

தற்போதைய சட்டப்படி, உங்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரிமீயம் செலுத்திய வகையில் நீங்கள் 15 ஆயிரம் ருபாய் வரை வரிச் சலுகை பெறலாம். உங்கள் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்தியிருந்தால் 15 ஆயிரம் ருபாய் முதல் 20 ஆயிரம் பாய் வரை வரிச் சலுகை பெறலாம். உங்களின் பெற்றோர் ` முத்த குடிமக்களாக’ இருந்தால் வரிச் சலுகை கூடும்.

உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது

இந்தியாவில் போலிகளுக்கு பஞ்சமில்லை; சாதாரண சோப்பில் இருந்து எல்லா பொருட்களையும் கள்ளத்தனமாக தயாரித்து, விற் பனை செய்வதில் பல நூறு கோடிகளை முதலீடு செய்வோர் உள்ளனர்.
ஆனால், மனித உயிருடன் விளையாடும் போலி, கலப்பட மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடுவோர் அதிகரிப்பது தான் வேதனை. இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது; கலப்படமானது என்று கடந்தாண்டு எடுக்கப் பட்ட சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருந்துச்சீட்டு எதுக்கு
டாக்டர்கள் மத்தியிலும் போலிகள் உருவாவது அவ்வப்போது நடப்பதால் தான், பலரும் சாதா கோளாறுகளுக்கு எல்லாம், மருந் துக்கடையையே நாடுகின்றனர். தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு டாக்டரிடம் போக மறுப்பவர்கள் தான் போலி மருந்துகள் புழங்க இடம் தருகின்றனர்.
மருந்துச்சீட்டு வாங்கி தான் மருந்து வாங்க வேண்டும் என்பது கூட இன்னும் பலருக்கு தெரியவில்லை.
காலாவதி அலட்சியம்
எந்த ஒரு மருந்தும் நாளடைவில் வைத்துக்கொள்ளவே கூடாது; மருந்து பாக்கெட், பாட்டிலில் , காலாவதி நாள் மட்டுமல்ல, பாதுகாப்பு, பராமரிப்பு ஆலோசனையும் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இவற்றை பெரும்பாலோர் பார்ப்பதே இல்லை. என்ன மாத்திரை எழுதினார் டாக்டர், அது சரியாகத்தான் கடைக் காரர் தந்திருக்கிறாரா, என்ன மில்லி கிராம் என்பதை எல்லாம் கண்டிப் பாக கவனிங்க இனியாவது.
பராமரிப்பு சரியா?
பொதுவாக, சில மருந்துகள், மிதமான வெப்பத்தில், சூரிய வெளிச் சம் படாமல் பாதுகாக்க வேண்டும்; சில மருந்துகள் 59 முதல் 80 டிகிரி வெப்பத்தில் வைத் திருக்க வேண்டும்; இதற்காக இருட்டான இடத்தில் வைப்பது நல்லது. சமையல் அறை, குளியல் அறை தவிர, மற்ற அறையில், அலமாரியில் வைத்து மூடி வைப்பதே நல்லது. சில மருந்துகள் பிரிஜ்ஜில் வைத்து குளிர்பதன நிலையில் வைத்திருக்க வேண்டும். வீட்டில் பிரிஜ் இல்லாதவர்கள், கடையில் அவ்வப் போது வாங்கி பயன்படுத்துவதே சரியானது.
வாண்டூஸ் உஷார்
சில மருந்துகள் விஷத்தன்மை வாய்ந் தவை; குழந்தைகள் தவறுதலாக எடுத்து விடாமல் அவர்கள் கைபடாத இடத்தில் பாதுகாப்பது முக்கியம். மருந்து காலாவதி ஆகாமல் கண்காணிக்க, மருந்தை அதே பாட்டிலில், பாக்கெட்டில் வைத்து பயன் படுத்துவது நல்லது. அப்போது தான் காலாவதி தேதியை பார்த்து வரலாம்.
எது காலாவதி
மருந்துக்கடைகளில் வாங்கும் தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சாதா கோளாறுகளுக்கு வாங்கும் மருந்துகள் காலாவதி ஆகும்; அதுபோல, டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துகளும் குறிப்பிட்ட காலத்துக்கு பின் பயன்படுத்தவேகூடாது. கருத்தடை மாத்திரைகள், காண்டம்கள், காய்ச்சல் மருந்து, வலி நிவாரணி மருந்துகள், அலர்ஜி மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆன்டிசெப்டிக் ஆயின்ட் மென்ட்கள் ஆகியவையும் இந்த பட்டியலில் அடங்கும்.
ஆபத்தா, இல்லையா?
காலாவதி ஆன மருந்துகளை பயன்படுத்துவதால் ஆபத்தா என்று பலருக்கும் சந்தேகம். அவரவர் உடல் நிலையை பொறுத்தது; குறிப்பிட்ட சில கோளாறுக்கான மருந்துகள், செயலற்றதாகி விடும்; சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; அதனால் தான் ஆபத்து நேர்கிறது.
மருந்துகளில் உள்ள சில துணை ரசாயன பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதுவும் குழந்தைகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும்.
கண் மருந்து உஷார்
கண் மருந்து விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலை திறந்து வைக்கவே கூடாது. ‘ட்ராப்ஸ்’ போடும் போது, கடைசியாக போட்ட துளிகளில் இருந்து தேங்கிய மருந்தை துடைத்து, சுத்தமான பின், புதிய ‘ட்ராப்’ போட வேண்டும். மற்ற மருந்துகளை விட, கண் ‘ட்ராப்’ பாட்டில்களை உடனுக்குடன் மூடி வைத்து விட வேண்டும்; சூரிய ஒளிபடாமல் வைப்பதும் முக்கியம்.

நன்றி  தினமலர்

பெண்களுக்கு வலை விரிப்பவர்கள்…! கவனியுங்கள்! உங்களையும் பின் தொடர்வார்கள்!!

ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு மெரினா பீச் பக்கம் ஒதுங்கினார், ராமையா. விடுமுறை நாள் என்பதால் பீச்சில் ஏகத்துக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல காதலர்கள் மற்றவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் தங்களது `கடலை’ போடும் வேலையிலும், சில்மிஷ வேலைகளிலும் வழக்கம்போல் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களை பார்த்த ராமையாவுக்குள் என்னமோ செய்தது.

`தினமும் ஒரே முஞ்சை எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது? பீச் பக்கம் வந்து நாலு பேரை பார்த்தாதான் மனசுக்கு திருப்தியா இருக்கு…’ என்று, நேரில் திட்ட முடியாத மனைவியை பற்றி இங்கே பொருமிக்கொண்டார். `ஒரு பொண்ணு பக்கத்துல நெருங்கி வந்து நின்னாலே உடம்பெல்லாம் ஆட்டம் காணுமே… நாமெல்லாம் எப்படி ஒரு பெண்ணை செட் பண்ணபோறோம்…?’ என்று, தனது வீக்னசை பற்றி எண்ணினாலும், `கொஞ்சமாவது முயற்சிதான் பண்ணி பார்போமே…’ என்று, திடீரென்று சுருங்கிபோன மனதுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டார்.

அந்தநேரம் அவரது பார்வையில் 30 வயதை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் தென்பட்டாள். அவள் திரும்பி இருந்ததால் அவளது முகத்தை ராமையாவால் பார்க்க முடியவில்லை.

சேலையில் வந்திருந்த அந்த பெண்ணின் பின்னழகை பார்த்தவர் கொஞ்சம் கிறங்கித்தான் போனார். `இந்த பெண்ணையே பாலோ பணுவோம்…’ என்று பின்தொடர்ந்தார். நேராக சென்ற அந்த பெண் திரும்புவதாகத் தெரியவில்லை. அவரும் அவளை பின் தொடர்ந்தார்.

`கொஞ்சம்கூட திரும்ப மாட்டேங்குறாளே…’ என்று மனதுக்குள் படபடத்தாலும், வேறு வழியின்றி அந்த பெண்ணையே பின்தொடர்ந்தார். சிறிதுதூரம் இருவரும் சென்றிருப்பார்கள். ஓரிடத்தில் அந்த பெண் சட்டென்று நின்றாள். பின்தொடர்ந்த அவரும் பிரேக் போட்டு நின்றார். `ஒருவேளை… நாம் பின்தொடருவதை பார்த்துவிட்டாளோ…’ என்று எண்ணிய ராமையாவுக்கு பயம் வந்துவிட்டது. அவரது இதய துடிப்பும் வேகமாக எகிற ஆரம்பித்தது. எச்சிலை வேகமாக விழுங்கி, படபடத்த இதயத்தை சமாதானபடுத்த முயன்று தோற்றார்.

ஓரிரு நொடிகள் வேகமாக ஓடின. அவருக்குள் பயம் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், அந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. அதனால், தனது கவனத்தை திசை திருப்ப விரும்பாமல் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண் திடீரென்று அவரை நோக்கி திரும்பினாள். அந்த பெண்ணின் முகத்தை பார்த்த மாத்திரத்தில் `ஷாக்’ ஆகிபோனார் அவர். எதிர்பாராத இடத்தில் மனைவியை பார்த்தால் உடம்பு அதிரத்தானே செய்யும்.

`இவ்வளவு நேரமும் நம்ம பொண்டாட்டியையா பாலோ பண்ணுனோம்… இந்த விசயத்துல ரொம்பவும் ஓவராவே போயிட்டோமோ…’ என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் எண்ணியவர், மனைவியிடம் வேறு சில பொய்களை சொல்லி சமாளித்து, அங்கிருந்து `ஜூட்’ விட்டார்.

உண்மையைச் சொல்லபோனால், ராமையா மாதிரியான சபலங்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டார்கள். இவர்களிடம் இருந்து குடும்ப பெண்கள் விலகி இருப்பது நல்லது.

பொதுவாக, இந்த மாதிரியான ஆசாமிகள், பெண்களிடம் தங்களது `வேலை’யை உடனடியாக காட்டிவிட மாட்டார்கள். படிபடியாகத்தான் காயை நகர்த்துவார்கள்.

இவர்களது ஒரே குறி, இல்லற வாழ்க்கையில் தோற்றுபோன, தோல்வி முகத்தில் உள்ள நடுத்தர வயது பெண்கள்தான்.

ஒரு பெண் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவளது முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். இந்த மாதிரியான சபலகேஸ்கள் இந்த விஷயத்தில் அனுபவ ரீதியாக இன்னும் தேர்ச்சி பெற்று காணப்படுவார்கள்.

இப்படி, குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையில் வாழும் பெண்களிடம் இந்த சபலங்கள் தாங்களாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். சம்பந்தபட்ட பெண் முன்பின் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும் கூட, இவர்களே அவர்களிடம் ஆஜராகி, `இப்படி செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்; நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே…’ என்று ஆறுதல் கூறி, ஒரு ஈர்பை தேடிக்கொள்வார்கள்.

மனதில் பிரச்சினைகளை சுமந்து காணபடுபவர்களிடம் யாரேனும் ஆறுதல் கூறினால், அந்த மனச்சுமை சற்று குறைவதுபோல் தோன்றும். இது இயற்கை.

இதேபோன்று சபலங்கள் விரிக்கும் ஆறுதல் வலையில் முதல்கட்டமாக பிரச்சினைகளை சுமக்கும் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். வேறு நபர்களிடம் தனக்கான ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பெண்களே, சம்பந்தமே இல்லாமல் ஆறுதல் சொன்ன சபலங்களைத் தேடி வருகிறார்கள்.

இப்படி ஒரு பெண் தங்களை தேடி வர ஆரம்பித்துவிட்டால், இந்த சபலங்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார்கள்.

`விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்; அதேபோன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் – பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்…’ என்று ஆறுதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள் கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.

இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்துவிடும் பெண்கள், ஒருவித ஈர்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராகி விடுகிறார்கள்.

ஒருமுறை இந்த `தவறு’ நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து சம்பந்தபட்ட பெண்கள் திருந்தினாலும் கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த `தவறை’ ஆயுதமாக கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களை தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

இதுபோன்ற சபலங்களிடம் இருந்து குடும்ப பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்? ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமு கமாக இல்லை என்றுதான் அர்த்தம். தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் சாதாரண விஷயம் வரை எந்த பிரச்சினையாக இருந்தாலும், கணவன்-மனைவி இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் முக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் `ஈகோ’ ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகி விடும். அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில், மனோதத்துவ ஆலோசனையை நாடலாம். அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம். முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக் கொண்டால் அப்போதே உஷாராகி விடுங்கள். சபலங்கள், ஒரு பெண்ணை தங்கள் வலையில் வீழ்த்த கடைசி கட்டமாக கையில் எடுப்பது செக்ஸ் விஷயங்களைத்தான். அந்த விஷயங்களை பற்றி மறைமுகமாக உங்களிடம் கோடிட்டு காட்டி பேச ஆரம்பித்து விட்டால், அத்தோடு அவருடனான இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி அவர் உங்களை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்துவிடுங்கள். முக்கியமாக, உங்களுக்குள் எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டி பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களே சபலபடும் நிலையில் இருந்தால் சபல விஷயத்தில் ருசி கண்டவர்கள் உங்களை குறி தவறாமல் தங்கள் வலையில் வீழ்த்தி விடுவர்.

இன்னொரு விஷயம்… பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கபட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை.
நன்றிதினதந்தி

நீங்கள் `அம்மா செல்லமா’..!

ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். பக்குவமான மனநிலையையும் இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது.

தென்றல் வீசும்போதும், அரும்பு மலரும்போதும் அதை பற்றி யோசித்திருக்க மாட்டோம். அதை போல் தாயின் அரவணைப்பும் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.

ஒரு தாய் தன் பிள்ளைகள் என்னதான் தவறே செய்தாலும், அவர்களை அரவணைத்தே செல்வாள். பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள். ஆனால், ஒருநாள் தாய் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட, தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.

பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. இதற்குக் காரணம், காலத்திற்கு ஏற்ற படி அம்மாக்கள் சிந்தித்து செயல்படாமல் இருப்பதுதான். மகள் வளர்ச்சியில் எந்த தாய்க்குத்தான் மகிழ்ச்சி இருக்காது? அந்த மாதிரியான காலகட்டத்தில் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளிவிடும் அம்மாக்கள் இவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.

இன்னும் சில அம்மாக்கள் தங்கள் இளமைக்காலத்தில் தங்களால் முடியாமல் போன சாதனைகளை மகள் வழியாக நிறைவேற்றி பெருமைபட விரும்புவார்கள். இந்த திணிப்பு பிடிக்காத பிள்ளைகள் அம்மாவை எரிச்சலாய் நோக்கத் தொடங்குவது இந்த இடத்தில் இருந்து தான். ரசனைகள், விருப்பங்கள் தலைமுறைக்கு தலைமுறை மாறிக் கொண்டே இருக்கும் என்பதை அம்மா-பெண் இருவருமே புரிந்து கொள்ள வேண்டும்.

பிரபல பாடகி அவர். தன் மகளையும் தன்னைபோல் பாடவைக்க விரும்பினார். ஆனால் மகளுக்கு பாட்டில் ஆர்வம் இல்லை. பாட்டுக்கேற்ற குரல் வளமும் மகளுக்கு இல்லை. இதனால் தன் மகள் விரும்பிய நாட்டியத்துறையில் இணைத்தார். இந்தமாதிரி அம்மாக்கள்தான் இன்றைய இளம் பெண்களின் பிரியத்துக்குரியவர்கள்.

அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள். பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணமே, அம்மா-பெண்ணிடையே போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான். இதுவே நீடித்தால் ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்ல அவசியமில்லை என்கிற `பெரிய மனுஷித்தனம்’ பிள்ளைகளிடம் வந்து விடும். இது தேவையற்ற இடைவெளியை அம்மாவிடம் ஏற்படுத்தி விடும்.

`உனக்கு ஒண்ணும் தெரியாது… சும்மாயிரு’ என்று சொல்லும்போது அம்மா மனதளவில் புண்பட்டு விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. உணர்வு ரீதியாக எபோதும் அம்மாவை மனதளவில் பாதிக்கும்படி பேசிவிடக்கூடாது.

வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் ஒருபோதும் அம்மா உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் அம்மா. இந்த அம்மாவை புரிந்து கொண்டாலே இருவருக்கும் இடையில் ஒரு அழகான சிநேகம் பூத்துக்குலுங்கத் தொடங்கி விடும்.

மாம்பழம் சாப்பிடுகிறீர்களா?

கோடை காலம் ஆரம்பித்து விட்டதால், மலிவு விலையில் மாம்பழங்கள் அதிகமாக கிடைக்கும். சிலர் அதிகமாக மாம்பழம் சாப்பிட்டுவிட்டு வயிற்றுவலி, கழிச்சல், வாந்தி என கஷ்டப்படுவதுண்டு. மாம்பழம் உண்ணும்பொழுது பால் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது சித்த மருத்துவ விதி.

புளிப்புள்ள மாம்பழங்களை உண்ணும்பொழுது சிறுநீரக கற்கள் தோன்றலாம். பெரும்பாலும் இனிப்பான, நார் அதிகமில்லாத மாம்பழங்களை உண்பது நல்லது. இல்லையெனில் வயிறு ஊதல், பசி மந்தம், கழிச்சல் ஆகியன உண்டாகும். ரத்த முலம் உடையவர்கள் அதிகமாக மாம்பழம் உண்பதை தவிர்க்க வேண்டும். மாம்பழம் சாப்பிட்டவுடன் பால் அல்லது மோர் சாப்பிடுவது நல்லது.

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது.
மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்…? இப்படி காபி குடிப்பவர்களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர். ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல…

மீடியா – டாகுமெண்ட் பார்மட் மாற்ற

நாம் பயன்படுத்தும் பைல்களின் பார்மட்டினை மாற்றுவதற்கான தேவை நமக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இமேஜ் பைல் ஒன்றினை பி.எம்.பி. பார்மட்டில் வைத்திருப்போம். அதன் அளவு பெரிதாக இருப்பதால் ஜேபெக் போன்ற சிறிய அளவிலான பார்மட்டிற்கு மாற்றிக் கொண்டு செல்ல விரும்புவோம். அல்லது நமக்குக் கிடைத்த பார்மட்டில் பைலைத் திறக்க நம்மிடம் சாப்ட்வேர் இருக்காது. குறிப்பாக ஆடியோ, வீடியோ பைல்களில் இந்த பிரச்னையை அடிக்கடி நாம் சந்திப்போம்.
இமேஜ் பைல் மாற்றத்திற்கு சில இமேஜ் சாப்ட்வேர் தொகுப்புகள் உதவினாலும், வேறு சில பார்மட் மாற்றத்திற்கான சாப்ட்வேர்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. ஆனால் இணையத்தில் பல தளங்கள் இவற்றிற்கு உதவத் தயாராய் இருக்கின்றன. இதற்கென எந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் டவுண்லோட் செய்திட வேண்டியதில்லை. குறிப்பிட்ட தளம் சென்று பார்மட் மாற்ற வேண்டிய பைலை அப்லோட் செய்து, அதனை எந்த பார்மட்டிற்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டால் போதும். பைல் குறிப்பிட்ட பார்மட்டில் மாற்றப்பட்டு, நம் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். அல்லது அந்த தளத்தில் வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாளுக்குள் சென்று எடுத்துக் கொள்ளலாம்.
இமேஜ் பைல் மட்டுமின்றி, சில டாகுமெண்ட்களையும் நாம் அதன் பார்மட்டிலிருந்து வேறு பார்மட்டிற்கு மாற்ற எண்ணுவோம். அதற்கான தளங்களும் இணையத்தில் உள்ளன. அந்த தளங்களை இங்கு காணலாம்.

1. யு கன்வெர்ட் இட் (You Convert it): ஆன்லைனில் கிடைக்கும் பார்மட் மாற்றத்திற்கான டூல்களை இயக்கும் தளங்களில், இது மிகவும் திறன் கொண்ட ஒன்றாகும். டாகுமெண்ட், இமேஜ், வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இந்த தளத்தில் சென்று மாற்றலாம். இதன் இணைய முகவரி http://www.youconvertit.com/. இந்த தளம் சென்று உங்கள் இமெயில் முகவரி சார்ந்த தகவல்களைக் கொடுத்து, மாற்ற வேண்டிய பைல் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இடம், மாற்றப்பட வேண்டிய பார்மட் வகை ஆகியவற்றைக் கொடுத்துவிட்டால், மாற்றப்பட்ட பைலை எங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற லிங்க் உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும். ஏழு நாட்களுக்கு அந்த லிங்க்கில் பைல் கிடைக்கும். அதன் பின் நீக்கப்படும். நான் ஒரு டெக்ஸ்ட் பைலை டாகுமெண்ட் பைலாக மாற்றினேன். மிகச் சிறப்பான முறையில் மாற்றப்பட்டுக் கிடைத்தது. மிக வேகமாகவும், சிறப்பாகவும் பைல் ஒன்றின் பார்மட் மாற்றப்பட வேண்டும் என்றால், இந்த தளம் ஓர் அருமையான இடம் ஆகும்.

2. ஸம்ஸார் (Zamzar): ஆன்லைனில் உள்ள பைல் பார்மட் மாற்றும் தளம் இது. டாகுமெண்ட், இமேஜ், ஆடியோ, மீடியா பைல் மட்டுமின்றி, பைல் ஆர்க்கிவ்களையும் மாற்றித் தருகிறது இந்த தளம். எனவே கம்ப்ரஸ் செய்யப்பட்ட ஸிப் அல்லது ஆர் ஏ ஆர் ஸிப் பைல் உங்களுக்குக் கிடைத்து, அதனை அன்ஸிப் செய்திட உங்களிடம் சாப்ட்வேர் இல்லை என்றால், இந்த தளத்திற்கு அனுப்பி, விரித்து பைல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் 100 எம்பிக்கு மேல் அளவுள்ள பைல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இந்த தளம் சென்று, முதலில் மாற்றப்பட வேண்டிய பைல் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் இடத்தினைச் சுட்டிக் காட்டவும். பின் எந்த பார்மட்டுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். பின் எந்த இமெயில் முகவரிக்கு மாற்றப்பட்ட பைல் அனுப்பப்பட வேண்டும் என்பதனையும் என்டர் செய்திடவும். பின் கன்வர்ட் செய்வதற்கான பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே பைல் மாற்றப்பட்டு, இமெயில் முகவரிக்கு அதற்கான லிங்க் அனுப்பப்படும். இந்த தளத்தில் மாற்றப்பட்ட பைல் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும். எனவே உடனே டவுண்லோட் செய்திடுவது நல்லது.
இந்த தளத்தைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை மாற்றும்படி அனுப்பலாம். ஆனால் அனைத்து பைல்களும் ஒரே வகையான பார்மட்டில் இருக்க வேண்டும்; ஒரே வகையான பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டும். எனவே மொத்தமாக பைல்களின் பார்மட்டை மாற்ற இது ஒரு சிறந்த தளமாகும். தளத்தின் முகவரி www.zamzar.com

3. மீடியா கன்வர்டர் (Media Converter): ஆடியோ, வீடியோ மற்றும் ஆபீஸ் டாகுமெண்ட்களை இந்த தளத்தில் மாற்றலாம். 100 எம்பி அளவிற்குள்ளாக ஒரு பைலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிட வேண்டும். மேலும் கூடுதலாக வேறு விருப்பம் இருந்தால் குறிப்பிடலாம். பைல் அப்லோட் செய்யப்பட்டு, மாற்றப்பட்ட பைல் பெறுவதற்கான லிங்க் உங்களுக்கான லிங்க் தரப்படும். உடனடியாக பைல் மாற்றப்பட்டு, லிங்க் தரப்படுவதால், உடனடியாக அதனை டவுண்லோட் செய்வது அவசியமாகும். இந்த தளத்தின் முகவரி: http://www.mediaconverter.org