Daily Archives: ஏப்ரல் 3rd, 2010

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா…
தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்…

பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.

விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்

ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்

பிற ஆணுக்காகத் தூது செல்பவன்

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்

உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்

அதிகத் துணிச்சல் உள்ளவன்

ஒன்றக வளர்ந்தவன்…

காம சாஸ்திரம் நன்கு கற்றவன்

அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்….

இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்

மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்…

புதுமாப்பிள்ளை

முதலாளியாக இருப்பவன்

தாராள மனப்பான்மை உள்ளவன்

ரகசியத்தை அறிந்தவன்

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்

பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்….

மெமரி காலியாகிறதா?

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும். அல்லது திடீரென கிராஷ் ஆகி நிற்கும். இந்த பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது. இதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. சிஸ் ட்ரே மீட்டர் (SysTray Meter): இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இது ஒரு சிறிய டூல். இதனை இயக்கினால், இந்த டூல் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரியின் அளவைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அத்துடன் சி.பி.யு.வின் பயன்பாட்டி னையும் பார்த்து நமக்குக் காட்டிக் கொண்டு இருக்கும். வண்ணங்களில் காட்டுவதால் மெமரி பயன்பாட்டினைத் தெளிவாக அறிய முடியும். இந்த டூல் பெற http://88.191.26.34/computers_are_ fun/index. php/systraymeter/என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த டூல் பைல் அளவு 15 கேபி.

2. மெம் இன்போ (Mem Info): இந்த புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், இது கம்ப்யூட்டரின் மெமரி பயன்பாட்டினைத் தொடர்ந்து அளந்து கொண்டிருக்கும். மிக அதிகமாக, நெருக்கடியான நிலையை மெமரி பயன்பாடு அடையப் போகிறது என்றால், உடனே எச்சரிக்கையினை வழங்கும். சிஸ்டம் ட்ரேயில் இது அமர்ந்து கொள்ளும். மெமரி டிபிராக் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். முதலில் சொல்லப்பட்ட சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்பட்டாலும், சில கூடுதல் வசதிகளையும் இந்த டூல் கொண்டுள்ளது. வண்ணம் பூசி முடிவுகளைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.carthagosoft.net/meminfo.htm

3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): இந்த டூல் மெமரி பயன்பாட்டினைக் கண்டறிவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் கண்காணிக்கிறது. உங்கள் திரையின் மேலாக ராம், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்கான கிராப் ஒன்றைக் காட்டிக் கொண்டே இருக்கும். இதனைப் பெற http://www.hexagora.com/en_dw_davperf.asp என்ற முகவரிக்குச் செல்லவும். தற்போது இதன் பதிப்பு 3.9 பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கிறது.

4. ப்ரீ ராம் எக்ஸ்பி ப்ரோ (FreeRAM XP Pro): இது சற்று கூடுதலான திறன் கொண்ட புரோகிராம். மெமரி மானிட்டருக்கும் மேலாகப் பல வேலைகளை மேற்கொள்ளக் கூடியது. ராம் மெமரியின் வேகத்தைக் கண்காணித்து அதனைத் திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்டது – இது மெமரியைத் தானாகவே விடுவிக்கும், அளவெடுக்கும், நமக்கு ரிப்போர்ட் தரும், மெமரி கம்ப்ரஸ் செய்து காட்டும். இதனைப் பெற http://www.yourwaresolutions.com/software. html#framxpro என்ற முகவரி செல்லவும். ஸிப் பைலாக 606 கேபி அளவில் இந்த பைல் கிடைக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இது செயல்படுமா எனத் தெரியவில்லை.

புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி

சொற்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை உச்சரித்துக் காட்டுதல், அச்சொற்களுக்கு இணையான பொருள் உள்ள சொற்களை எடுத்துக்காட்டல் எனப் பல வகைகளில் டிக்ஷனரிகள் புழக்கத்தில் உள்ளன. சில இணையத்திலும் உள்ளன. ஆனால் ஒரு சொல்லை அதன் பொருள் குறித்துப் படிப்பதனால் புரிந்து கொள்ளுதலைக் காட்டிலும், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் சூழ்நிலை, தொடர்புடைய சொற்களுடன் புரிந்து கொள்ளுதல், அச்சொல்லை மனதில் பதியவைக்கும். இந்த நோக்குடன் இணையத்தில் ஒரு டிக்ஷனரி கிடைக்கிறது. இதன் பெயர் வேர்ட் நிக் (Wordnik) மேலே கூறப்பட்டவற்றுடன், அந்த சொற்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உள்ள இடங்கள், அவற்றின் பொருள், தொடர்பான படங்கள், போட்டோக்கள், ஒன்றுக்குப் பலவாக விளக்கங்கள், பயன்படுத்துவது எப்படி என்ற எடுத்துக்காட்டுகள், தொடர்புள்ள மற்ற சொற்கள், சொற்களின் மூலக்கூறுகள் என அனைத்தையும் இந்த டிக்ஷனரி தருகிறது. இவற்றுடன் இன்றைய சொல் என்று தினம் ஒரு சொல்லை விளக்கத்துடன் காட்டுகிறது. “எங்கள் இலக்கு ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அவை சார்ந்த அனைத்தையும் தருவதாகும். அத்துடன் சொற்கள் குறித்து அதனைப் படிப்பவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று காட்டுவதும் ஆகும் என இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஒரு சொல்லின் அதே பொருளைத் தரும் சொற்களை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய சொற்களையும் இந்த டிக்ஷனரி தருகிறது. எடுத்துக்காட்டாக Cheeseburger, milkshake மற்றும் doughnut ஆகியவை ஒரே பொருளைக் குறிப்பவை அல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இது போன்ற தொடர்புடைய சொற்களும் இந்த டிக்ஷனரியில் கிடைக்கின்றன.
ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்று காட்டும் வேளையில், உங்கள் உச்சரிப்பினையும் பதிந்து கொள்ள வழி தரப்பட்டுள்ளது. இதன் பன்முகத் தன்மை கிராஸ் வேர்ட் மற்றும் ஸ்க்ராபிள் போன்ற புதிர் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களை ஈர்க்கிறது. இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்களில் ஐரோப்பியர்கள் 11 பேருடன் குமணன் ராஜ மாணிக்கம் என்ற தமிழரும் உள்ளார் என்பது இதன் சிறப்பு.
இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. இந்த டிக்ஷனரியைப் பயன்படுத்தவும், சொற்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களைப் பதியவும், நீங்கள் எப்படி இதற்கு உதவலாம் என்று கூறவும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.wordnik.com

ஆப்பிளும்… ஆரோக்கியமும்..!

நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும். இந்த தொல்லைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மருந்துகளையும், செரிமான டானிக்குகளையும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலானோர் உண்ணும் உணவை செரிப்பதற்கும், போதைக்கும் குறைந்தளவு மதுவை அருந்துவதுண்டு. இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பிக்கும் மதுபோதை பழக்கம் நாட்கள் செல்லச் செல்ல கடும் போதைக்கு அடிமையாகும் வாய்ப்புக்கு ஆளாகின்றனர்.

இது போன்ற மது போதை அடிமைகளை மீட்கவும், அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

பைரஸ் மேலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போமேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆப்பிள் மரங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் ஏராளமாக விளைகின்றன. கருஞ்சிவப்பு நிறத்தோலை உடைய ஆப்பிள் பழங்களே உண்ணத் தகுந்த பழங் களாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்
படுத்துகிறது.

வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

உணவுப் பழக்கம்

நாம் வாழ்வதற்காக உணவு உன்ன வேண்டும். நிறைவான சமச்சீரான உணவு தான் உடல் பருமனையும், உடற்கட்டையும் நிர்ணயிக்கிறது.
சமச்சீரான உணவு என்பது போதுமான புரதம், மாவுச் சத்துக்கள் , கொழுப்புகள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் அடங்கினதாக இருக்க வேண்டும்.
சமச்சீரான உணவுத் திட்டம் என்பது ஒருவர் செய்யும் வேலையைப் பொறுத்து அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உணவாக இருத்தல் அவசியம்.
கலோரிகளின் அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது.இரண்டுமே தொந்தரவு தான். குறைவான கலோரிகளில் நிறைவான சத்துள்ள உணவாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். சமச்சீர் உணவுப் பட்டியலில் முதலிடம் புரதத்திற்கு தான். புரதம் நம் உடலின் திசுக்கள் அழியாமல் தடுக்கவும், அழிந்த திசுக்களைப் புதுப் பிக்கவும் உதவுகிறது. தவிர சருமம், கேசம், நகங்களின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானது புரதம். உடலின் வளர்ச்சிக்கும், சீரமைப்பிற்கும் காரணமாக இருப்பதும் புரதம் தான். புரதக் குறைவால் நமது சருமம் பளபளப்பை இழந்து, சுருங்கி விரைவில் முதுமையுறுகிறது. மாவுச்சத்து உடலைப் பருமனாக்குவதில்லை. மாவுச்சத்து உணவில் போதுமான அளவு இருந்தால் தான் உடல் சக்தியையும், வலிமையையும் பெற முடியும்.

* நமது உணவில் காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். அப்போது தான் நமக்குத் தேவையான விட்டமின்களையும், தாதுக்களையும் நாம் பெற முடியும்.
* கீரை, வெள்ளரி, தக்காளி போன்றவற்றில் கால்சியம், வைட்டமின், போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
* நமது சருமத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப் பழங்களை போதுமான அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு தொடர்ந்து பருகி வர தோலிலும் கண்களிலும் பளபளப்பு கூடுகிறது.
* தினம் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத் தான் அதிகம் உள்ளது.
* பால் , முட்டை, காபேஜ் போன்றவற்றில் அயச்சத்து அடங்கியுள்ளது. அயச்சத்துக் குறைந்தால் சருமம் வெளிறிவிடும்.
*சர்க்கரை, ஐஸ்கிரீம், சாக்லேட், கேக் போன்றவற்றைக் கூடுமான வரை தவிர்க்கலாம். பதிலாக தேனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* பருமனைக் குறைப்பதற்காக பட்டினி இருப்பது அபாயகரமானதாகும். எடைக் குறைப்பிற்காக இப்படி இருந்தால் உடல் வலுவிழுந்து சோர்வடைந்து விடும்.
விருந்துகளையும், மதுபான வகைகளையும் குறைத்துக் கொள்ளலாம்.
பசித்த பிறகே சாப்பிடுவது என்ற நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவு உணவை நன்றாக மென்று விழுங்கினால் பூரணமாக சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.
இரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருப்பது உப்பு. உப்பைத் தேவைக்கும் சிறிது குறைவாகவே சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்துள்ளப் பொருட்களை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச் சத்துக் குறைவால் மாரடைப்பு, புற்று நோய், மலச்சிக்கல் உருவாகிறது.
நார்ச்சத்துள்ள பண்டங்கள் சீரணமாவதில்லை. புற்று நோய்க்கான நச்சு தேவை இல்லாத கழிவுகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மலத்துடன் வெளியேறுகிறது.
சாப்பிடும் போது கோபம், டென்ஷன் கூடாது. அந்நேரத்தில் சுரக்கப்படும் என்சைமால் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் விடுகிறது. அதாவது அந்த என்சைம் அஜீரணக் கோளாறை ஏற்படுத்துகிறது.
நமது உடலில் இயக்கத்திற்கு குறைந்த அளவு கொழுப்பே போதுமானது.
ஒரு கிராம் எண்ணையில் உள்ள கொழுப்புக் கலோரியை விட, ஒரு கிலோ காபேஜில் குறைவாகவே உள்ளது.
அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி,மீன் இவற்றில் 100 கிராம் அளவிற்கு உட்கொண்டாலே போதுமானது. கொழுப்புச் சத்து மீனுக்கு மீன் வேறுபடும். கருமை நிறமாக, சதைப் பற்றுள்ள மீனில் கொழுப்புச் சத்தும் கலோரியும் அதிகம். சதைப் பற்று குறைவாகவே உள்ள மீன்களை எண்ணையில் பொரித்து எடுக்கும் போது அதன் கலோரி அளவு அதிகரித்து விடுகிறது.
நாம் எதை உண்கிறோமா அது தான் நமது பருமனிற்குக் காரணமாகிறது.
கேக், ஐஸ்கிரீம்களைக் கூட டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் மிதமான அளவில் இருக்க வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது மற்ற ஐட்டங்களுக்கு நோ சொல்லி விடலாம்.
ஒரு முறை ஒருவர் தன் பருமனைக் குறைத்தவர் சந்தர்ப்பவசத்தால் மீண்டும் குண்டடித்து விட்டாரானால் மறுபடி அவர் தன் எடையை இழப்பது கடினமான ஒன்றாகி விடுகிறது.
குண்டாக இருப்பதாய் விட அடிக்கடி இளைத்து , குண்டாகிறவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகம். பேக்கரி, மதுபான வகைகளுக்கு ‘பைபை’ சொல்கிறவராயின் அவர் சிரமம் இல்லாமல் தன் இலட்சியத்தை அடைய முடியும்.
தற்போது பாஸ்ட்டு புட் சென்டர்கள் பெருகிவிட்டன. தேர்ந்தெடுத்து உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
எடை இழப்பிற்கு உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் இணைந்து மேற்கொண்டால் தான் சிறந்த பலனை அடைய முடியும்.
உணவில் போதுமான சத்துக்கள் இல்லாவிடில் உடலின் நோய்த் தடுப்பாற்றல் குறைகிறது.

சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்கணுமா ? ‘க்ளைசேமிக்’ குறைவான உணவு சாப்பிடுங்க

நீங்க பெரும்பாலும், இட்லி – சட்னி பிரியரா? பொங்கல் – சாம்பார் பிரியரா? எதிலும் மிதமாகத் தான் இருப்பீர்கள் என்றால் ஓகே; முதலாவதில் தான் மூக்கு பிடிப்பவர் என்றால் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.
இட்லி, சட்னியில் உள்ள ‘க்ளைசேமிக்’ சமாச்சாரங் களை விட, பொங்கல், சாம் பாரில் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ‘க்ளைசேமிக்’ ரசாயனம் தான், சர்க் கரை வியாதிக்கு அடிப் படையான காரணி.
சர்க்கரை அளவு, வழக்கத்தை விட, அதிகரித்து வந்தால், இட்லி, சட்னி மட்டுமல்ல, ‘க்ளைசேமிக்’ அதிகமுள்ள உணவுகளை, நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்வது தான் நல்லது.
அதென்ன ‘க்ளைசேமிக்?’
உணவுகளில் இருந்து ரத்தத் தில் சேரும் கார் போஹைட்ரேட் மூலம் உருவாகும் ரசாயன விளைவு தான் ‘க்ளைசேமிக் இன்டெக்ஸ்’ என்பது. சில வகை உணவுகளில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாக உள்ளது. சிலவற்றில் குறைவாக உள்ளது. உணவுகள் மூலம் உடலில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சேரும் போது, செரிமானம் அதிவேகத்தில் நடக்கும்; அப்போது கார்போஹைட்ரேட் சிதைந்து ‘க்ளைசேமிக்’ அதிக அள வில் க்ளூகோசாக மாறும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
மிதமான கார்போஹைட்ரேட் இருக்கும் போது, செரிமானமும் மிதமாக நடக்கும்; கார்போ சிதைந்து க்ளூகோஸ் ஏற்படும் போது, அது நிதானமாக வெளியேறி விடும். அதனால், க்ளைசேமிக் உருவாகி, சர்க்கரை அளவை அதிகரிக்காது.
மிதமான அளவில் கார்போ ஜீரணிப்பதால், சர்க்கரை அளவும் குறைந்து, அதை கரைக்க, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கும் தேவையும் குறைந்து விடுகிறது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
எப்படி கண்டு பிடிப்பது?
கார்போஹைட்ரேட் மற்றும் க்ளூகோஸ் சத்து கொண்ட 100 கிராம் உணவை சாப் பிட்ட 2 மணி நேரத்துக்கு பின் உடலில் ரத்தப்பரிசோதனை செய்தால், ‘க்ளைசேமிக்’ அளவு தெரிந்துவிடும். அது அதிகமாக இருந்தால், ‘க்ளைசேமிக்’ அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனித உடலில் இப்படிசெய்யும் பரிசோதனையில் பத்து வகையான அம்சங்களின் அடிப்படையில் ‘க்ளைசேமிக்’ அளவு கண்டுபிடிக்கப்படும்.
எது பாதுகாப்பானது?
‘க்ளைசேமிக்’ அளவில் பாதுகாப்பான அளவு என்பது வரையறுக்கப் பட்டுள்ளது; இதை நாமாக கண்டுபிடிக்க முடியாது; சர்க்கரை அளவை கண்டறிந்தால் தான், அதில் உள்ள ‘க்ளைசேமிக்’ அளவு கண்டறியப்பட்டு, டாக்டர் சில உணவு வகைகள் மட்டும் தவிர்க்க யோசனை சொல்வார். டிபன், சாப்பாடு மட்டுமின்றி, பாக்கெட் உணவுகள், நொறுக் குத்தீனிகள் வரை எல் லாவற்றிலும் ‘க்ளைசேமிக்’ அளவு உண்டு. அது மீறாமல் இருக்க டாக்டர் களை தான் ஆலோசிக்க வேண்டும். சர்க்கரை நோய் வரும் என்று நினைப் பவர்கள், வந்து விட்டவர்கள், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது தான் மிக நல்லது.
70ஐ தாண்டக் கூடாது
* ‘க்ளைசேமிக் இன் டெக்ஸ்’ உணவுகள் சாப்பிடும் போது, 55 பாயின்ட் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* 55ல் இருந்து 70 வரை போனால், உஷாராகி விட வேண் டும் என்று பொருள்.
* எழுபதை தாண்டி விட்டால், கண்டிப்பாக சர்க்கரை கோளாறு அதிகரிக்கலாம்; சர்க்கரை நோய் வரலாம் என்பதற்கான அறிகுறி தான்.
உணவு வகைகள் எவை
கேக் வகைகள், ரொட்டி வகைகளில் இந்த ‘க்ளைசேமிக்’ உள்ளது. சாதாரண கேக்குகளில் 54 முதல் 62 பாயின்ட் வரை இந்த ரசாயனம் உள்ளது. சில வகை கேக்குகளில் அதிகபட்சமாக 80 தொடக்கூடிய அளவில் இது உள்ளது.
சோயா மில்க், ஆப்பிள் ஜூஸ், கேரட் ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், திராட்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றில் 41 முதல் 52 வரை தான் ‘க்ளைசேமிக்’ உள்ளது.
ரொட்டிகளில், கோதுமை உட்பட தானிய வகை பிரட்களில் 48 பாயின்ட் அளவில் தான் ‘க்ளைசேமிக்’ உள்ளது. மற்ற பிரட் களில் அதிக பாயின்ட் தான் உள்ளது.
அரிசி, பார்லி கஞ்சி போன்றவற்றில் மிகக் குறைவாகத்தான் இந்த ரசாயனம் உள்ளது. அதிலும், இனிப்பு தயிரில் குறைவு தான்.

மொட்டை போட்டால் முடி வேகமாக வளருமா?

தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பாரப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை `பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டுக்கும் மேலாகி விட்டது. இன்றைய பேஷன், பிஞ்சுக் குழந்தைகளுக்கு கூட, `கலரிங்’ போடுவது தான்.

ஒருவரின் தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.

மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்’ தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது.

லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.

விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லவில்லை.

தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரபி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரபி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வது தான்.

தரமான “ஹேர் டை’ வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், பாதிப்பு தலைமுடிக்குத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தரக்குறைவான “ஹேர் டை’யில், `பாரா பெனிலின் டயாமின்’ என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கபடுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

மருதாணி தான் `ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் உள்ள சிவப்பு சாயம் தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கபடுகிறது. பாக்கெட் `ஹென்னா’வில் கலப்படம் காணபடுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தபடுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் `ஹென்னா’ பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.

அடிக்கடி தலை வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக்கொடிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில் பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.

மலர்களும் மருந்தாகும்

இலுப்பைப் பூ
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

ஆவாரம் பூ
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

அகத்திப்பூ
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

நெல்லிப்பூ
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

தாழம்பூ
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருஞ்செம்பை பூ
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.