Daily Archives: ஏப்ரல் 4th, 2010

மாநிலங்களும் இந்திய ஒன்றியமும்!

இன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம். தனி மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள் போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது. கடலோரமாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம். இதில் தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத், ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள் தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது.

நாடு விடுதலை அடைந்தபோது ஹைதராபாத் நிஜாம் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன்இணைக்க மறுத்தபோது அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின்இரும்பு கரத்தினால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கானாகம்யூனிஸ்ட் பேரெழுச்சியை தொடர்ந்தும் தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன்கட்டாயமாக இணைக்கப்பட்டது. காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு, தெலுங்குபேசும் மாநில கோரிக்கை காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாகஅன்று சென்னை ராஜஸ்தானத்திலிருந்து மொழிவழி மாநிலமாக 1953-இல்பிரிக்கப்பட்டது. அப்போது கர்னூல்தான் அதற்கு மாநிலம் என்ற அடிப்படையில்தெலுங்கு மொழி பேசும் மக்களை கொண்ட ஆந்திரப் பிரதேசமாக 1956-இல்ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தஹைதராபாத்தில் இருந்த நிலபிரபுக்கள் ஆந்திராவுடன் இணைபடுத்தி, தனிமாநிலமாக்க கோரினர். அதன் பின்னர், 1961 தேர்தலுக்கு பிறகு உருவானஅம்மாநில சட்டமன்ற பெரும்பான்மையும் ஆந்திரபிரதேசத்தில் இணைவதாகத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிராந்தியத்துடன் இணைப்பது, இல்லையேல் தனிமாநிலம் அமைப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைசெய்தது. அவ்வொப்பந்தங்களை மத்திய அரசு கைவிட்டது. இதனால் தெலுங்கானாமக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாகவெளியானது. பலகாலமாகவே அரசில், அரசியலில் தெலுங்கானா மக்களுக்கானமுக்கியத்துவம் குறைந்து வந்ததால் 1969-இல் தெலுங்கானா பகுதியினர்தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் கைதுசெய்யப்பட்டு கடும் அடக்குமுறைக்கு பிறகு அந்தப் போராட்டம் படிப் படியாககுறைந்து போனது. பிறகு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகரராவ் ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியை 2001-இல் உருவாக்கினார்,தெலுங்கானா என்பதே அந்த கட்சி யின் மையமான கோரிக்கை ஆனது.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் முடிவெடுக்கும்என அறிவித்த தன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங் களும் இத்தகையகோரிக்கையை எழுப்பி வருகின்றன. தமிழ கத்தை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு,கொங்கு நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை எழ ஆரம் பித்தது. உத்திரபிரதேசமாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி கோருகிறார். அதேபோல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து போடோலாந்து,உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து பிண்டேல் கண்ட், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து குடகு மாநிலம், ஒரிசாவிலிருந்துமகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ் தானிலிருந்து பூர்வாஞ்சல்,குஜராத்திலிருந்து சௌ ராஷ்டிரா எனத் தேசிய அடிப்படை யிலும், சாதி அடிப்படையிலும் தனி மாநில கோரிக்கை கள் முன் வைக்கப்படுகின்றன.

மாநிலங்கள் உருவானவிதம்

சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒன்பது பிரிட்டீஷ் மாகாணங்களும், 562சிறு மன்னராட்சி பகுதி களும் (Princity States) நிலவில்இருந்தன. சுதந்திரத்திற்கு பின் நடத்தப்பட்ட மாநில மறுசீரமைப்பின் முதல்கட்டத்தையடுத்து மாநிலங்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. அவை:

“A’ Category: உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம்.ஒரிசா, மத்திய பிரதேசம், மெட்ராஸ் தற்போதைய தமிழ்நாடு +ஆந்திரம்), பம்பாய்(தற் போதைய மகாராஷ்டிரம்+குஜராத்). இவை ஆளுனரின் ஆட்சியின் கீழ்செயல்பட்டன.

“B’ Category: PEPSU, , மத்திய இந்தியா, மைசூர் (தற்போதைய கர்நாடகம்),சௌராஷ்டிரம், ராஜஸ்தான், ஹைதராபாத், திருவிதாங்கூர், கொச்சி. இவை மாநிலத்தலைவரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

“C’ Category: அஜ்மீர், கட்ச், கூர்க், தில்லி, பிலாஸ்பூர், போபால்,திரிபுரா, இமாசலப் பிரதேசம், மணிப் பூர், விந்தியப் பிரதேசம் இவைலெப்டினட் கவர்னரால் ஆட்சி செய்யப்பட்டன.

“D’ Category: : அந்தமான் நிகோபார் தீவுகள். மத்திய அரசின் நேரடி நிர்வாகம்.

மாநில மறுசீரமைப்பு கமிஷன்

* இரண்டாம் கட்ட மாநில சீரமைப்பு வட்டாரக் கூறுகள், மொழி, கலாச்சாரம்மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.

* மொழியடிப்படையில் மாநிலங்களை புனர் நிர்மாணம் செய்யவேண்டும் எனும்கோரிக்கை பற்றி ஆராய் வதற்காக அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டஎஸ்.கே. தர் கமிஷனும், காங்கிரசின் ஜெ.வி.பி. கமிட்டியும் (நேரு, படேல்,பட்டாபி சீதாராமைய்யா) மொழி வழிப் பிரிவினைக்கு உடன்படவில்லை.

* ஆனால் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காக ஒரு தனி மாநிலம் உருவாக்கியேஆகவேண்டும் என்னும் கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுஎனும் தெலுங்கர் மரண மடைந்ததையடுத்து 1953, அக்டோபர் ஒன்றாம் தேதிஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. (தெலுங்கானாப் பகுதிகளும்சேர்க்கப்பட்ட புதிய ஆந்திரப்பிரதேசம் 1956, நவம்பர் ஒன்றாம் தேதிஉருவானது)

ஆந்திரப்பிரதேசமே இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்

* இதையடுத்து மேலும் பல மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்என்னும் கோரிக்கை வலுத்தபோது 1953-இல் ஸயீத் ஹஸன் அலி தலைமையில் ஒருகமிஷன் நியமிக்கப்பட்டது.

* 1956, செப்டம்பர் 30-இல் கமிஷன் தனது அறிக் கையை தாக்கல் செய்தது.இந்தியா 16 மாநிலங்கள் மற்றும் மூன்று ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும் என அது பரிந்துரைத்தது. இதன் பெரும்பகுதியை ஏற்றுக்கொண்ட மத்தியஅரசு 15 மாநிலங்கள், ஏழு மத்திய ஆட்சிப் பகுதிகள் அமைய ஒத்துக் கொண்டது.

* இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மாநில மறு சீரமைப்பு சட்டத்தை(1956) நிறைவேற்றிய பாராளுமன்றம் 14 மாநிலங்கள், ஆறு மத்திய ஆட்சிப்பகுதிகளை உருவாக்கியது.

பல்வேறு மாநிலங்கள்

* மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்கள்ஏற்படுத்தப்பட்ட ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மாநிலப் பாகுபாட்டில் பல்வேறுமாற்றங்கள் நிகழ்ந்தன.

* 1957 – அசாமின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு சர்ழ்ற்ட் ஊஹள்ற் எழ்ர்ய்ற்ண்ங்ழ் ஆஞ்ங்ய்ஸ்ரீஹ் என மாற்றம் செய்யப் பட்டது.

* 1961, மே-1 – பம்பாய் மாகாணம் குஜராத், மகா ராஷ்டிரம் என இரண்டாக பிரிக்கப் பட்டது.

* 1961 டிசம்பர் 16- போர்த்துக்கீசிய காலனிகளான கோவா, டாமன், டையூ அன்னியசக்திகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய ஆட்சிப்பகுதிகளாக இந்தியன்யூனியனில் இணைக்கப்பட்டன.

* 1963 டிசம்பர் 1 – நாகா மலைப்பகுதி “நாகாலாந்து’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு (1961) தனி மாநிலமானது.

* 1966 நவம்பர் 1 – பஞ்சாப் மாகாணம் பஞ்சாப் மற்றும் ஹரியானா என்னும் இரண்டு மாநிலங் களாகப் பிரிக்கப்பட்டன.

* 1971 ஜனவரி 2 – பஞ்சாப் மாநிலத்தின் சில மலைப் பகுதிகள் இமாசலப் பிரதேசத்திற்குள் உட்படுத்தப் பட்டு அது தனி மாநிலமாக்கப்பட்டது.

* 1972 – மணிப்பூர் ஒரு முழு மாநிலமானது.

* 1972 ஜனவரி 21 – அசாம் மாநிலத்திற்குள்ளேயே ஒரு தன்னாட்சி மாநில அந்தஸ்துடன் மேகாலயா மாநிலம் அமைக்கப்பட்டது.

* 1972 – திரிபுரா தனி மாநிலமானது. இது முதலில் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு (1947)

* பிற்பாடு 1956-இல் மத்திய அரசு நிர்வாகப் பகுதியானது.

* 1973-இல் மைசூர் மாகாணம், கர்நாடகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது (1956-இல் உருவாக்கப் பட்டது)

* 1974 – இந்தியாவின் ஒரு பகுதியான (டழ்ர்ற்ங்ஸ்ரீற்ர்ழ்ஹற்ங்) சிக்கிம்பிற்பாடு இந்தியாவின் ஒரு கூட்டமைப்பு மாநிலமானது. 1975 ஏப்ரல் 14 அவசரக்சட்டத்தை யடுத்து இது இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

* 1987 பிப்ரவரி 20 – சஊஎஆலி க்கு அருணாசலப் பிரதேசம் எனும் புதிய பெயர் சூட்டப்பட்டு தனி மாநிலமானது.

* 1987 பிப்ரவரி 20 – மிசோரம் தனி மாநிலமானது (இது 1972 வரை அசாமின் ஒரு மாவட்டமாக இருந்தது)

* 1987, மே 30 – கோவா தனி மாநிலமானது. (இது 1961-இல்போர்த்துக்கீசியரிடமிருந்து விடுவிக்கப் பட்டது). அதே வேளையில் டாமனும்,டையூவூம் மத்திய ஆட்சிப் பகுதியாகவே தொடர்ந்தன.

* 1991 – தில்லி தேசிய தலைநகரப் பகுதியானது.

* 2000 நவம்பர் 1 – மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது (இந்தியாவின் 26-வது மாநிலம்)

* 2000 நவம்பர் 4 – உத்திரப்பிரதேசத்தின் மலைப் பகுதிகள் அடங்கியஉத்தராஞ்சல் மாநிலம் உரு வாக்கப்பட்டது. (இந்தியாவின் 27-வது மாநிலம்)

* 2000 நவம்பர் 15 – பீகார் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. (இந்தியாவின் 28-வது மாநிலம்)

செத்து பிழைத்த குட்டி யானை!

தாயின் கருவில் இறந்து விட்டதாக கருதப்பட்டு, டாக்டர்களும் கைவிட்ட சில நிமிடங்களில் திடீரென குட்டியை பிரசவித்தது தாய் யானை; அதுவும், சுகப்பிரசவம்!
கால்நடை மருத்துவ நிபுணர்களுக்கே இதைப் பார்த்து உச்சக்கட்ட வியப்பு; ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர வனவிலங்குப்பூங்காவில் தான் இந்த அதிசயம் நடந்தது.
யானைகளுக்கு பெயர் பெற்ற ஆசியாவில் இருந்து யானைகளை தருவித்து, அவற்றை இனப்பெருக்கம் செய்வதில் ஆஸ்திரேலியா அக்கறை காட்டி வருகிறது. இதற்காக, தாய்லாந்தில் இருந்து சில யானைகளை இறக்குமதி செய்து, சிட்னி உட்பட பல நகரங்களில் உள்ள வனவிலங்கு பூங்காக்களுக்கு அனுப்பியுள்ளது.
இங்கு யானைகள் இனப்பெருக்கம் செய்யும் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
சிட்னி நகரில் உள்ள டரோங்கா வனவிலங்கு பூங்காவில் உள்ள யானைகளில் ஒன்று போர்ன்டிப். கருத்தரித்த இந்த யானை, பிரசவத்துக்கு தயாரானது; ஆனால், பிரசவ நாள் நெருங்கும் போது, அதன் வயிற்றில் குட்டி நகருவதற்கான அறிகுறியே இல்லை. டாக்டர்கள் பரிசோதித்ததில், யானையின் கருவில் குட்டி இறந்து விட்டதாக உணர்ந்தனர். அதற்கான சோதனைகளை செய்து, அதை உறுதியும் செய்தனர். டாக்டர்கள் கிளம்பிச்சென்ற சில மணி நேரத்தில், அந்த யானை பயங்கரமாக பிளிறியது.
பூங்கா ஊழியர்கள் அலறி அடித்துசென்று பார்த்தனர். தாய் யானை <உடலை முறுக்கியபடி, தன் மீது மண்ணையும், மர இலைகளையும் போட்டபடி ஆட்டம் போட்டது. ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல், தத்தளித்தபடியே இருந்தது; அதை, யாராலும் அடக்க முடியவில்லை. இந்த நிலையில் தான், மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு, திடீரென அது காலை பிளந்தபடி தரையில் சரிந்தது. எல்லாருக்கும் வியப்பு… யானை பிரசவிக்க ஆரம்பித்து.
சில நிமிடங்களில், பச்சிளம் குட்டியானை வெளிவரத்துவங்கியது. கால்கள் வர முடியாமல் சிக்கியதால், தும்பிக்கையால், அதை பிடித்து இழுக்க முயற்சித்தது.
யானை செய்வதை ஊழியர்கள் கண்காணித்தபடி இருந்தனர்; நெருங்கிச் செல்லவில்லை. குட்டியானை எந்தவித பிரச்னையும் இன்றி, சரியாக அதிகாலை 3.27 மணிக்கு ஜனித்தது; அதன் பின்னரே தாய் யானை அமைதியானது. அப்படியே குட்டியை உச்சிமோர்ந்தபடி அருகே காவல் காத்தது. உடனே, டாக்டர்களுக்கு தகவல் சொல்லி அழைக்கப்பட்டனர். பிரசவம் முடிந்ததும், ஜாக்கிரதையாக யானையிடம் இருந்து யானைக்குட்டியை பிரித்து, அதை சுத்தம் செய்து, மருத்துவப் பரிசோதனை செய்தனர். குட்டியானை எடை 116 கிலோ. சிட்னி பூங்காவில் உள்ள ஐந்து யானைகளில், முதன் முறையாக, இந்த யானை தான் குட்டி ஈன்றுள்ளது; அதுவும் அபூர்வமாக நடந்த பிரசவம்.
ஆசிய யானைகளை இனப்பெருக்கம் செய்யும் ஆஸ்திரேலியா, பார்வையாளர்களை கவருவதற்காக, பல சுற்றுலா இடங்களுக்கு அவற்றை அனுப்பி வருகிறது. சிட்னி பூங்காவில் இப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவது, இந்த அபூர்வ யானைக்குட்டி தான்.

ஓசைகளுக்கும் ஒலிகளுக்கும் ஒரு தளம்

பிரசன்டேஷன் பைல் ஒன்று தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில், நீங்கள் விரும்பும் ஒலி அல்லது ஓசை ஒன்றைத் தர விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? நான் ஒருமுறை சிறுவர்களுக்கான பிரசன்டேஷன் பைலில் கண்டாமணி சத்தம் (Gong) கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, குறிப்பிட்ட அந்த ஓசைக்கான பைல் எங்கு கிடைக்கும் என்று தேடினேன்.
இத்தகைய விருப்பங்களை நிறைவேற்றவே Soungle என்று ஒரு வெப்சைட் உள்ளது. காடு என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Jungle மற்றும் ஒலி என்பதற்கான சொல் Sound என இரண்டையும் சேர்த்து இந்த பெயரைத் தந்திருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். இந்த தளம் சென்று நான் விரும்பும் ஒலிக்காக Gong என்று டைப் செய்தேன். அந்த தளத்தில் 27 வகையான கண்டாமணி சத்தம் கிடைத்தது.
பக்கத்திலிருந்த ஒரு சிறுவன் கிளாரினட் ஒலி எப்படி இருக்கும் என்று காட்டுமாறு கூறினான். சந்தேகத்துடனேயே Clarinet என டைப் செய்து என்டர் அழுத்த 12 வகையான கிளாரினட் ஒலி கிடைத்தது. ஒற்றை ஒலி முதல் பல சேர்ந்தது வரையிலான ஒலித் தொகுப்பு வரை தரப்பட்டது.
இதனை எப்படி நாம் பயன்படுத்துவது? உங்களுக்குப் பிடித்த ஒலியைத் தேடிக் கண்டறிந்தவுடன், அந்த சாம்பிள் ஒலி அருகே டவுண்லோட் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசரின் அடிப்படையில் சேவ் அல்லது சேவ் அஸ் கிடைக்கும். பின் இந்த பைலை நீங்கள் விரும்பும் இடத்தில் பயன்படுத்தலாம்.
ஒரே வாத்தியத்தின் பல்வேறு ஒலிகளை (Notes) சேர்த்துப் பெற்றுப் பயன்படுத்துவதும் நன்றாக இருந்தது. இதிலிருந்து ஓசைக்கான பைலை எடுத்துப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, ஒருமுறை இந்த தளம் சென்று பார்த்துவிடுங்கள். இதற்கான முகவரி http://www.soungle.com

உடல் வலுப்பெற-ஓரிதழ் தாமரை

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.
நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. .
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.
இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.

உடல் வலுப்பெற

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும்.
சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.

இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும். மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.

இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.