Daily Archives: ஏப்ரல் 5th, 2010

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு
இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

பூண்டை வேக வைத்து’ சாப்பிடுங்க!

நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம். பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும். வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும். சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள். வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம். வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும். பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் முன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.

சரும கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?

நல்ல சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தல் ஆகியவையே ஒருவரை சிறப்பாக எடுத்துக் காட்டும். இதற்கு சருமத்தை ஆரோக்கியமானதாகவும், பளபளப்பானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சிறப்பான சருமம் பெற, நாள் முழுவதும் அளிக்க வேண்டிய பிரத்யேக கவனிப்புகள் குறித்து சில டிப்ஸ்கள் இதோ…
* தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. எனவே, முறையான உடற்பயிற்சி மூலம் ஒளிரும் சருமத்தை பெறுவதோடு, கூந்தலின் ஆரோக்கியமும் மேம்படும்.
* வைட்டமின், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். கேரட் போன்ற ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறக் காய்கறிகள், புரோக்கோலி போன்ற பச்சை நிறக்காய்கறிகள், சிட்ரஸ் மற்றும் பிற பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* காலையில் முகத்தை வெதுவெதுப்பான மற்றும் மிதமான பேஸ் வாஷ் மூலம் கழுவ வேண்டும். இதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதாவது, முதலில் வெதுவெதுப்பான நீரை வைத்து முகத்தை ஈரப்படுத்திய பின், உள்ளங்கையில் பேஸ் வாஷ் ஊற்றி அதை முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். முறையாக சுத்தம் செய்த பின், வெதுவெதுப்பான நீர் வைத்து கழுவ வேண்டும்.
* அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப, பேஸ் வாஷ் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம். உதாரணமாக, எண்ணெய் வகை சருமத்தினர், எண்ணெய் கலக்காத பேஸ் வாஷையும், வறண்ட சருமத்தினர் ஆல்கஹால் கலக்காத பேஸ் வாஷையும் பயன்படுத்தலாம்.
* குளிப்பதற்கு முன், உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதன் பின், குளிக்கும் போது, மிதமான பாடி வாஷை பயன்படுத்தலாம்.
* சருமத்தை சுத்தம் செய்த பின், சன்ஸ்கிரீன் தேய்க்க வேண்டும். வெளியில் செல்லாத போதும், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. சன்ஸ்கிரீன்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கிறது.
* பகல் 11 மணியளவில் மாய்சரைசர் தடவலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலந்த மாய்சரைசர் பயன்படுத்தலாம். இத்தகைய மாய்சரைசர்கள், மாசு, சூரிய ஒளி மற்றும் புகை ஆகியவற்றால் சருமம் சேதமடைவதில் இருந்து காக்கிறது.
* தோலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு சத்து கிடைக்க, பாதாம் மற்றும் அக்குரோட் போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம்.
* மதிய வேளைகளில் வெளியில் செல்வதாக இருந்தால், மீண்டும் சன்ஸ்கிரீன் போட்ட பின் செல்வது நல்லது.
* வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புபவர்கள், வீட்டிற்கு வந்ததும், பேஸ் வாஷ் மற்றும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். தோல் வறண்டு இருப்பதாக உணர்பவர்கள், லைட்டான மாய்சரைசர் அப்ளை செய்யலாம்.
* கால்கள் சோர்வடைவதில் இருந்து புத்துணர்ச்சி பெற, மிதமான சூடுடைய நீரில் கால் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம்.
* சமையலறையில் வேலை செய்த பின், கைகளை திரவ ஹேண்ட் வாஷ்கள் மூலம் கழுவலாம்.
* இரவு நேரத்தில், வைட்டமின் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தினால், அவை முகச்சுருக்கம் ஏற்படுவதில் இருந்து தவிர்க்கும். எனினும், இத்தகைய கிரீம்களை அதில் கூறப்பட்ட அறிவியல் விதிமுறைபடி, குறிப்பாக, தோல் நிபுணர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்துவது நல்லது.

ஒளிமயமான எதிர்காலம்…

சின்னஞ்சிறு விஷயத்திலும் தன் முழுக்கவனத்தைம் செலுத்துபவனே அதிமேதையாகிறான். தான் அதிமேதை என்பதற்காக சிறிய விஷயங்களையும் கவனிக்காது அலட்சியம் செய்பவன் தோல்வியை அடைகிறான். வாழ்வின் நுட்பமான இத்தகைய சில வழிமுறைகளைத் தெரிந்து செயல்படும்போது ஒளிமயமான வாழ்வைபெறலாம்.

உண்மை ஒரு கூரிய கத்தி முனையை போன்றது. அதை உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் நம் கையையே பதம் பார்த்து விடும். உண்மையையும் சில இடங்களில் மறைத்தே ஆக வேண்டுமாயின் அதற்காகத் தயங்கக் கூடாது. அதனால், யாருக்கும் தீமை நேராவிட்டால் அவ்வாறு மறைப்பதில் தவறேதுமில்லை.

அறிவு வேறு, உத்தி வேறு

அறிவுக்கு எதைச் செய்வது என்பது மட்டுமே தெரிம். உத்திக்கு அதனை எவ்விதம் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியும். அதனால் தான், அறிவாளிகள் சிந்தனை மட்டும் செய்கிறார்கள். உத்தியைக் கையாள்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.

அறிவானது நமக்கு சில விஷயங்களில் மட்டுமே நமது தேவையை பூர்த்தி செய்யும். ஆனால், உத்தியோ நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றியைத் தேடித் தரும். துன்பங்கள், தடங்கல்கள் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது உத்தியே. இரண்டுக்கும் இடையே வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்குமான வேறுபாடு உண்டு.

புதிய சிந்தனையுடன் செயலாற்றுங்கள்

நம் வாழ்வு வளமாக மாறுவதற்கு புதிதாக சிந்தித்த விஞ்ஞானிகள் தான் காரணம். இன்றைய நவீன வசதிகளான கப்பல்கள், விமானங்கள், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், நுல்நிலையங்கள், நகரங்கள், ரசாயனக் கண்டுபிடிப்புகள், கலைச்செல்வங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து வசதியான பொருட்களுக்கும் காரணம், அவர்களின் அன்றைய சிந்தனை நிறைந்த உழைப்பே.

இளமையை பயன்படுத்துங்கள்

மழைக்காலத்தில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலத்தில் வற்றி விடுகின்றன. அதுபோன்ற இடங்களில் உள்ளவர்கள் கோடைகாலத்தில் அணைக்கட்டுகள் முலம் தங்களுக்கு தேவையான நீரைத் தேக்கி வைக்கிறார்கள். இளமை என்னும் கிணறு எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் என்று எண்ணி, இளைஞர்கள் தங்கள் ஆற்றல்களை வீண்விரயம் செய்து விடக்கூடாது. அந்த கிணறு வறட்சியடைய ஆரம்பித்ததும் தான் அவர்களுக்கு தங்களது ஆற்றலின் மதிப்புத் தெரிய வரும். நம் உடல், முளை ஆகியவற்றின் ஆற்றல் என்ற ஆறானது முதுமைபருவத்தில் வற்ற ஆரம்பித்து விடுகிறது. ஆனால், இளமையில் அதைச் சீராக செலவிட்டு வருவோமாயின், கோடைக்காலத்திற்காக அணைக்கட்டுக்களில் நீரைத் தேக்கி பயன்படுத்துவது போல, முதுமையிலும் நாம் இளைஞர்கள் போன்று கம்பீர வலம் வரலாம்.

நல்ல புத்தகங்களே நல்ல நண்பன்

நண்பர்களின்றி தனித்து இருபவர்களுக்கு புத்தகமே நிஜமான நண்பன். உங்கள் ஆற்றலை தேவையான காரியங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில், வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பயனுள்ள பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்யுங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை, சுருங்கச் சொல்லி விளங்க வையுங்கள்.

ஒருவனுக்கு எப்போது கடமை உணர்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதே அவனது வாழ்க்கை பாதையும் மென்மையாக மாறுகிறது. கடமையிலிருந்து அணுவளவேனும் அடிபிறழாது நின்று அவன் தன்னுடைய துன்பங்களையெல்லாம் விரட்டுகிறான். அவனது நல்ல எண்ணங்களால் மேலான உரிமைகள் எல்லாம் தாமாகவே அவனை வந்தடைகின்றன.

அழகான தோலுக்கு ஆகாசக்கருடன்

பெரும்பாலான தோல் நோய்களுக்கு சுகாதாரமின்மையே காரணமாக அமைகின்றது. நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள், பூச்சிக்கடி, காயங்கள், மருந்துகள் ஆகியவற்றினாலும், உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை, மலப்பாதை, பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் மூலமாகவும் தோல் பாதிக்கப்படுகின்றது. தோலில் தொல்லை ஏற்படும்போது அரிப்பு, தடிப்பு, எரிச்சல், நிறமாற்றம், வறட்சி, நீர்வடிதல், சலம் கோர்த்தல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு தோல் நோயாக மாற ஆரம்பிக்கின்றது.
தோல் நோயால் பாதிக்கப்படாமலிருக்க உடலையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி போன்றவைகளை எளிதில் வீட்டிற்குள் வராமல் இருக்கும் வண்ணம் வலை அமைத்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகளை நாம் வசிக்கும் இடத்திற்கும் அனுமதிப்பது தோல் நோய்கள் மட்டுமின்றி, சுவாச நோய்களும் ஏற்பட வழிவகுக்கும். தோல் நோயினால் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நோய் முற்றி பல்லாண்டுகள் சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தோலில் ஏற்படும் தொல்லைகளை துரத்தி, ஒவ்வாமையை நீக்கி, அழகான சருமத்திற்கு வழிவகுக்கும் அற்புத மூலிகை ஆகாசக்கருடன் கிழங்கு. கொரல்லோகார்பஸ் எபிஜியஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட குக்கர்பிட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடி வகையைச் சேர்ந்த கொல்லங்கோவை, பேய்சீந்தில் என்ற வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஆகாசக்கருடன் கிழங்கில் பிரையோனின் வகையைச் சார்ந்த கசப்பான வேதிச்சத்து நிறைந்துள்ளது. இது தோல் நோய்களுக்கு காரணமான பால்வினை நோய் கிருமிகளையும் வயிற்று உபாதைகளுக்கு காரணமான கிருமிகளையும் கொல்லும் தன்மையுடையதென ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஆகாசக்கருடன் கிழங்கை தோல் சீவி, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி, நன்கு காய்ந்ததும், இடித்து, பொடித்து, சலித்து வைத்துக் கொண்டு, 1 முதல் 2 கிராம் காலை மற்றும் மாலை உணவுக்குப்பின்பு தேன் அல்லது திரிகடுகு சூரணத்துடன் கலந்து சாப்பிட பலவிதமான தோல் நோய்களும் நீங்கும்.
அனைத்துவிதமான பூச்சிக்கடிகளுக்கும் முதலுதவி மருந்தாக இதை பயன்படுத்தலாம் என்பதால் இதனை திருஷ்டிக்கு உகந்ததாக ஒரு நம் பிக்கையை ஏற்படுத்தி, வீட்டு வாசலில் இந்த கிழங்கை கட்டி தொங்கவிடுவதும் நமது வழக்கமாக உள்ளது. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கிழங்கு வளர்வதால் என்றும், இளமையாக இருக்கும் இந்த கிழங்கை அவசரக் காலத்தில் பூச்சிக்கடி, ரத்தக்காயம், கழிச்சல் ஆகியவை நீங்க பயன்படுத்தலாம்.

பேரின்பம் பெற… (ஆன்மிகம்)

மனம் எதில் எல்லாமோ ஈடுபடுகிறது; அப்படி ஈடுபடும் எல்லா விஷயங்களுமே மனதை திருப்தி செய்து விடுகிறதா என்று பார்த்தால், அதுதான் இல்லை. இதை விட இன்பமானது இன்னொன்று இருக்கிறதா என்று தேடுகிறது. இப்படி எத்தனை நாள் எதைத் தேடுவது? பிரச்னை தான். ஆனால், பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, பகவத் தியானத்தில் திளைத்து விட்டால், அந்த பரமாத்ம சொரூபத்தை தியானிக்க ஆரம்பித்து விட்டால், மனம் வேறு எதிலுமே செல்லாது; வேறு எதையுமே விரும்பாது. இது ஞானிகளுடைய அனுபவம். இதையே பரமானந்தம் என்கின்றனர். இந்த ஆனந்தம் எப்படி இருக்குமென்று கேட் டால் சொல்லத் தெரியாது! அனுபவித்தால் தான் தெரியும். இப்படிப்பட்ட பரமானந்தத்தை அனுபவிப்பவர்கள் மற்ற சிற்றின்பங்களை பற்றி சிந்திக்கவும் மாட்டார்கள்; அதில் ஈடுபடவும் மாட்டார்கள்.
கிணறு மட்டும் உள்ள ஊரில் இருப்பவன் கிணற்று நீரைக் கொண்டு தான் திருப்தியடைய முடியும். ஆனால், நதி நீர் உள்ள இடத்தில் இருப்பவன் நதி நீரைத் தான் விரும்புவான். அதுபோல அஞ்ஞானத்தில் உள்ளவன் உலக இன்பங்களிலேயே திருப்திபடுகிறான். ஞானியாக உள்ளவன் பேரின்பத்தையே நாடுகிறான்; பேரின்பத்திலேயே திருப்தியடைகிறான். இப்படி உலக சுகங்களை விட்டு, தியானம், தவம் மூலம் பேரின்ப நிலையை அடையவே மகான்கள் முயன்றிருக்கின்றனர். பட்டினத்தாரும், பத்ரகிரியும், சகல செல்வங்களையும், சுகங்களையும் துறந்து சன்னியாசிகளாகி, பேரின்பம் எய்தனர் என்பது சரித்திரம்.
முற்காலத்தில் அரசர்கள் எல்லாரும், பிள்ளைக்கு வயது வந்ததும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, மரவுரி தரித்து கானகம் சென்று தவம் செய்து நற்கதி பெற்றனர். அவர்களெல்லாம் சிற்றின்ப வீட்டை விட்டுப் பேரின்ப வீட்டை அடையச் சென்றனர்; அடைந்தனர்.
நாம், இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு சின்ன வீட்டில் குடியிருந்து, ஓடி, ஆடி சம்பாதித்து, எதையெல்லாமோ சாப்பிட்டு, காலங்கழிப்பதையே சுகம் என்று நினைக்கிறோம். ஆனால், பேரின்ப வீட்டின் சுகம் எப்படியிருக்கும் என்பது அனுபவப் பூர்வமாகத் தெரியாவிட்டாலும் பெரியோர், வேத சாஸ்திர புராணங்கள் சொல்வதன் மூலமாகவாவது யோசித்துப் பார்ப்பதுமில்லை; அதை அடைய முயற்சி செய்வதும் இல்லை.
முப்பத்தியிரண்டு பிளாட்கள் கொண்ட ஒரு அபார்ட்மென்ட் கட்டடத்தில் ஓரு பிளாட் வாங்கி, அந்த ஒரு பிளாட்டில் குடும்பம் நடக்கிறது; இதையே பெரிய இன்பமாக நினைக்கிறான்.
வாசலில் ஒரு பிச்சைக்காரன், ‘எட்டடி குச்சுக்குள்ளே கந்தைய்யா எத்தினி நாளிருப்பேன்?’ என்று பாடிவிட்டு, கையிலிருந்த கட்டையை டர்…ர்…ர் டர்…ர்… என்று அடிக்கிறான். ஒரு பெரியவர், உள்ளேயிருந்து வருகிறார். இவர் கிராமத்தில் பெரிய வீட்டில் வாழ்ந்தவர். டவுனில் பையன் பிளாட் வாங்கி குடித்தனம் நடத்துகிறான்; சில நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று வந்திருந்தார். இவர் வெளியில் வந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு ஐம்பது பைசா போட்டார்!
அவனைப் பார்த்து, ‘நீ சரியாக பாடவில்லை. அதனால், ஐம்பது பைசாதான்; சரியாக பாடியிருந்தால் ஒரு ரூபாய் போட்டிருப்பேன்!’ என்றார். அவனுக்குப் புரியவில்லை… ‘எப்படி பாடியிருக்க வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு பெரியவர், ‘எட்டடிக் குச்சுக்குள்ளே கந்தைய்யா… எத்தினி பேரிருப்போம் முருகைய்யா… எத்தினி பேரிருப்போம்!ன்னு பாடணும்…’ என்று பாடிக் காட்டினார். அவனுக்கும் அது சரியென்றுபட்டது. அதாவது, இந்த சிறிய வீட்டையும், இந்த அற்ப சுகத்தையுமே பெரிதாக நினையாமல், அந்த பேரின்ப வீட்டையும், பேரின்ப சுகத்தையும் அடையவே மனிதன் பாடுபட வேண்டும், அடைய வேண்டும் என்றனர்; முடியுமா பாருங்கள்.