கனவே… கலைந்துவிடு!

கனவுதான் உலகிலேயே அழகான பொய் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சிலர் கனவை கனவென்று உணராமலேயே இருப்பார்கள். இது வெறும் கனவு தான் என்று நீங்கள் உணர்ந்தால் அதற்கு பெயர் `லூசிட் ட்ரீம்’.

`லூசிட்’ என்றால் தெளிவான என்று அர்த்தம். 1968-ம் ஆண்டில் செலியா க்ரீன் எழுதிய லூசியா ட்ரீம்ஸ் என்ற புத்தகத்தில் இது குறித்து முழுமையாக எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் கனவு காணும்போது உங்கள் உடலில் இருந்து ஓர் ஔ கிளம்பி மேலே செல்லும்.

ஆனால் `நாம் இறக்கவில்லை’ என்று நீங்கள் உணர்ந்தால் போதும், உடனே ஔ வந்து உங்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் கண் விழித்து விடுவீர்கள். இப்படிப்பட்ட கனவு பெரும்பாலானவர்களுக்கு வருவதுண்டு.

கனவைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்து உண்டு. மனதில் ஆழ்ந்து போன விஷயங்களும், சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆன்மிகத்திலும் கனவும், அதற்கான பலனும் கூறப்பட்டுள்ளது.

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் முன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

மனதில் ஆழ்ந்து போன விஷயங்களும், சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன. ஆனால் அதையும் தாண்டி நாம் காணும் கனவின் பலன்களை அறிய ஆர்வப்படுகிறோம். நாம் கண்ட கனவுகள் அனைத்துமே அதற்கேற்ற பலன்களைத் தருகிறதா? என்றால் இல்லை என்பதே நிதர்சன உண்மை!

நம்முடைய ஆன்மிகத்திலும் கனவையும், அது எதிர்காலத்தை சொல்லும் என்று கூறப்படுகிறது. பொதுவாக எல்லாருக்குமே கனவு வருவதால், கனவைப் பற்றிய விஷயங்களில் அதிக ஆர்வமாக இருக்கிறோம். மருத்துவ உலகில் கனவைப் பற்றிய ஆய்வு எப்போதும், இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

%d bloggers like this: